August 6, 2012

Facebook Stories: பேஸ்புக் தளத்தின் புதிய அறிமுகம்

சமூக வலைத்தளங்கள் மத்தியில் சிகரமாகத் திகழும் பேஸ்புக் இணையத் தளமானது சம கால இடைவெளியில் அதன் பயனர்களுக்கு பல்வேறு புதிய நுட்பங்களையும், புதிய அம்சங்களையும் அறிமுகப்படுத்தி வருகின்றது.
அதன் அடிப்படையில் தற்போது Facebook Stories எனும் புதிய இணையத்தளம் ஒன்றினை விரைவில் அறிமுகப்படுத்துகின்றது.
இத்தளத்தில் பேஸ்புக் தளத்தில் பல்வேறு பயனர்களால் பகிரப்படும் சுவாரஸ்யமான செய்திகளை அல்லது கதைகளை ஒன்றிணைத்து ஒவ்வொரு மாதங்களும் வேறுபட்ட கருப்பொருட்களை உள்ளடக்கியவாறு வெளியிட தீர்மானிக்கப் பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூரோம் உலாவியின் சூழலை அழகாக மாற்றுவதற்​கு

அதிகளாவான இணையப் பாவனையாளர்களால் பயன்படுத்தப்படும் உலாவிகளில் ஒன்றான குரோம் உலாவியின் சூழலை(theme) மாற்றியமைப்பதற்கான வசதி குறித்த உலாவியில் தரப்பட்டுள்ள போதும் அதில் பயனர் விரும்பியாவாறு மாற்றங்களை ஏற்படுத்த முடியாது.
எனினும் தற்போது இவ்வசதியை ஏற்படுத்தித்தரும் Theme Creator எனும் குரோம் நீட்சி ஒன்று காணப்படுகின்றது.
இதனை தரவிறக்கம் செய்து கணனியில் நிறுவிக் கொள்வதன் மூலம் பயனர் விரும்பியவாறு தீம்களை உருவாக்கிக் கொள்ள முடியும்.
அதாவது பின்னணி படங்கள், வர்ணங்கள் போன்றவற்றை மாற்றியமைக்க முடிவதோடு frame, tab ஆகியவற்றின் நிறங்களையும் விரும்பியவாறு மாற்ற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Asha 305: நொக்கியாவி​ன் புதிய டுவல் சிம் கைப்பேசிகள்

பிரபல கைப்பேசி உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றாக விளங்கும் நொக்கியா கோப்பரேசன் Asha 305 எனும் டுவல் சிம் கைப்பேசிகளை புதிதாக அறிமுகம் செய்துள்ளது.
தொடுதிரை வசதியைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள இக்கைப்பேசிகளை பயன்படுத்தும் போது, அன்ரோயிட் இயங்குதளங்களில் செயற்படும் கைப்பேசிகளை பயன்படுத்துவதற்கு இணையான அனுபவத்தை பெறமுடியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 2 மெகாபிக்சல் கமெரா, GSM, GPRS, EDGE நெட்வேர்க் வசதி, நொக்கியா 2.0 இணைய உலாவி போன்றவற்றையும், சுயமாகவே நிலைமாறக்கூடிய காட்சிப்படுத்தல்(Display auto-rotation) போன்ற சிறப்பம்சங்களையும் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பல கணக்குகளை கையாளக்கூடி​ய அன்ரோயிட் பதிப்பு அறிமுகம்

ஏனைய இயங்குதளங்களுக்கு போட்டியாக கூகுள் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அன்ரோயிட் இயங்குதளத்தின் புதிய பதிப்பு வெளிவரவுள்ள நிலையில் சில தகவல்கள் கசிந்துள்ளன.
இந்நிலையில் Android 4.1 Jelly Bean என அழைக்கப்படும் இப்புதிய பதிப்பில் முன்யை பதிப்புக்களில் காணப்படாத பல் பயனர்கள் நுழைவுக்குரிய கணக்குகளை உருவாக்கும் வசதி விசேடமாகத் தரப்பட்டுள்ளது.
இப்புதிய வசதி காரணமாக இவ் இயங்குதளத்தை பயன்படுத்துவதற்கான கேள்வி அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த இயங்குதளங்களில் செயற்படும் சாதனங்களின் பாதுகாப்பும் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

August 5, 2012

இணையத்தின் வேகத்தை அதிகரிக்க

எந்தவொரு மென்பொருளையும் பயன்படுத்தாமல், உங்களது இணையத்தின் வேகத்தினை அதிகரிக்க முடியும்.
இதற்கு முதலில்,
1. Windows XPஆக இருந்தால்,  XP -->கிளிக் programs--> Run.
Windows 7 ஆக இருந்தால், programs---> search box---> Type Run.
2. Run விண்டோ ஓபன் ஆனதும் gpedit.msc என டைப் செய்யவும்.
3. இப்போது வரும் புதிய விண்டோக்களில் பின்வருவதை கிளிக் செய்யவும்.
--> Computer Configuration

--> Administrative Templates

--> Network

--> QoS Packet Scheduler

--> Limit Reservable Bandwidth
4. இதில் Not Configured என்பது கிளிக் செய்யப்பட்டு இருக்கும் இதனை Enable என மாற்றி, பின்னர் BandWidth என்ற இடத்தில் 20 ஐ 0 என மாற்றம் செய்யவும்.

மைக்ரோசொப்டின் மின்னஞ்சல் சேவையான ஹாட்மெயிலின் பெயர் மாற்றம்

உலக புகழ்பெற்ற மைக்ரோசொப்ட் நிறுவனம் 32.4 கோடி பேர் பயன்படுத்தும் மின்னஞ்சல் சேவையான ஹாட்மெயிலிற்கு, அவுட்லுக் என்று பெயர் மாற்றம் செய்துள்ளது.
இதுமட்டுமல்லாமல் புதிய வசதிகளையும் அறிமுகப்படுத்தி உள்ளது.
இன்று அனைவராலும் எளிதாக பயன்படுத்தப்படுவது ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் தான்.
இந்த அவுட்லுக் மின்னஞ்சல் சேவையில் ஃபேஸ்புக் சாட் வசதியினை பெறலாம்.
அத்துடன் ஃபேஸ்புக், ட்விட்டரில் இருந்து வரும் தகவல்களையும் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.
வேர்ட்ஸ், எக்ஸெல், பவர்பாய்ன்ட் போன்ற பக்கங்களில் அவுட்லுக் மூலம் எளிதாக எடிட் செய்யவோ, ஷேர் செய்யவோ முடியும்.
அவுட்லுக்கில் இணைக்கப்படும் புகைப்படங்களை ஸ்லைடு ஷோவில் பார்க்க முடியும்.
இன்னும் ஒரு முக்கிய வசதியாக ஸ்கைப் வீடியோ கால் வசதியினை இந்த மைக்ரோசாஃப்ட் அவுட்லுக்கில் பெறலாம்.
ஆனால் இந்த ஸ்கைப் வீடியோ கால் வசதியை, இன்னொரு ஸ்கைப் வீடியோ கால் வசதி கொண்டவருடன் தான் பயன்படுத்த முடியும்.
சபீர் பாட்யா மற்றும் ஜேக் ஸ்மித் ஆகிய இருவரும் 1996ஆம் ஆண்டில் உருவாக்கிய இந்த ஹாட்மெயில் சேவையினை, மைக்ரோசொப்ட் நிறுவனம் 1997ஆம் ஆண்டில் 40 கோடி டாலருக்கு வாங்கியது குறிப்பிடத்தக்கது.

கூகுள் குரோமில் ஒன்றிற்கு மேற்பட்ட பேஸ்புக் கணக்குகளில் உள்நுழைவதற்​கு

பொதுவாக ஒரே உலாவியலில் வெவ்வேறுபட்ட கணக்குகளைப் பயன்படுத்தி குறித்த ஒரு இணையத்தளத்தினுள் லாக்கின் ஆவது முடியாத காரியம் ஆகும்.
இதற்கு முதலில் லாக்கின் செய்யப்பட்ட கணக்கின் குக்கீஸ், பின்பு லாக்கின் செய்யப்படும் குக்கீஸ் என்பனவற்றிற்கு இடையில் ஏற்படும் முரண்பாடுகளே காரணம் ஆகும்.
எனினும் இப்பிரச்சினைக்குத் தீர்வுகண்டு ஒன்றிற்கு மேற்பட்ட கணக்குகளை ஒரே உலாவியில் திறக்கமுடியும். அதன் அடிப்படையில் கூகுள் குரோம் உலாவியில் ஒன்றிற்கு மேற்பட்ட பேஸ்புக் கணக்குகளில் உள்நுளைய பின்வரும் படிமுறைகளைக் கையாளவும்.
முதலில் ஒரு பேஸ்புக் கணக்கினைப் பயன்படுத்தி லாக்கின் செய்யவும். தொடர்ந்து குரோம் உலாவியின் வலது மேல் மூலையில் காணப்படும் சாவி போன்ற உருவத்தின் மீது கிளிக் செய்து New incognito window என்பதை தெரிவு செய்யவும்.
அப்போது பிரத்தியேகமான கூகுள் குரோம் விண்டோ ஒன்று தோன்றும். அதில் புதிதாக Facebook.com என்ற முகவரியை டைப் செய்து புதிய கணக்கு ஒன்றினைப் பயன்படுத்தி லாக்கின் ஆகவும்.
இதேபோன்று ஜி மெயில், யாகூ, காட்மெயில் போன்ற மின்னஞ்சல் சேவைகளிலும், டுவிட்டர் சமூகத்தளத்திலும் பல கணக்குகளைப் பயன்படுத்தி உள்நுளைய முடியும்

கோள்களை பற்றி விளக்கும் மென்பொருள் கண்டுபிடிப்பு: Spacecraft 3D

iOS சாதனங்களான iPhone, iPod Touch, iPad போன்றவற்றில் இன்ஸ்டால் செய்து பயன்படுத்தக்கூடியதும் கோள்கள் மற்றும் மண்டலங்களைப் பற்றி விளக்கும் மென்பொருள் ஒன்றினை அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையம் அறிமுகப்படுத்தியுள்ளது.
Spacecraft 3D எனப்படும் இம்மென்பொருளானது விசேட கொமராக்கள் மூலம் எடுக்கப்பட்ட விண்வெளி தொடர்பான படங்களை இணைத்து முப்பரிமாண அமைப்பைக் கொண்டுள்ளது.
மாணவர்களுக்கு பயன்தரக்கூடிய இம்மென்பொருளின் செயற்பாடானது புதிய ஆராய்ச்சிகளையும் உள்ளடக்கும் முகமாக அப்டேட் ஆகும் வசதியையும் உள்ளடக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

வைரஸ்களிடமி​ருந்து அப்பிள் கணனிகளைப் பாதுகாக்கு​ம் Norton iAntivirus மென்பொருள்

கணனிக்குள் ஊடுருவி கோப்புக்களையும், மென்பொருட்களின் செயற்பாடுகளையும் பாதிக்கச்செய்வதோடு கணனியின் வேகத்தை மந்தப்படுத்தும் வைரஸ்கள், மல்வேர்கள் போன்றவற்றிலிருந்து அப்பிள் கணனிகளைப் பாதுகாப்பதற்கென Norton iAntivirus மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
96.7MB கோப்பு அளவுடைய இம்மென்பொருள் முற்றிலும் இலவசமாகக் கிடைப்பதுடன் மிகவும் வினைத்திறனான வைரஸ் ஸ்கானிங் செயற்பாட்டையும் கொண்டுள்ளது.
மேலும் இணையத்தளங்களிலிருந்து கணனிக்குள் ஊடுருவும் வைரஸ் மல்வேர் போன்றவற்றைத் தடுக்கும் திறனையும் உள்ளடக்கியதாகக் இந்த மென்பொருள் காணப்படுகின்றது.

விண்டோஸ் கணணியில் பென் டிரைவ் மூலம் Ubuntu இயங்குதளத்தை நிறுவுவதற்கு

Ubuntu பற்றி எல்லோருக்கும் தெரிந்து இருக்கும். மிக பிரபலமான இயங்குதளமான இது Open Source Software ஆகும்.
இதனை பயன்படுத்த வேண்டும் என்று பலரும் விரும்புவர். இதனை விண்டோஸ் கணணியில் இருந்து பென் டிரைவ் மூலம் நிறுவலாம்.
இதற்கு முதலில் உங்கள் கணணியில் Ubuntu OS-இன் ISO File இருப்பதை உறுதி செய்து கொள்ளவும்.
அடுத்து உங்கள் பென் டிரைவை கணணியில் செருகி விடுங்கள். இப்போது Pen Drive Linux's USB Installer என்ற மென்பொருளை தரவிறக்கம் செய்து கொள்ளவும்.
இதை Run செய்யும் போது Step-1 இல் எந்த OS என்று கேட்கும், உங்கள் கணணியில் ஏற்கனவே நீங்கள் தரவிறக்கம் செய்துள்ள Ubuntu Version-ஐ இதில் நீங்கள் தெரிவு செய்ய வேண்டும்.
அடுத்து நீங்கள் தெரிவு செய்த OS, உங்கள் கணணியில் எங்கு உள்ளது என்று Step-2 மூலம் தெரிவு செய்ய வேண்டும்.
Step-3 யில் உங்கள் பென் டிரைவை தெரிவு செய்ய வேண்டும். [Pen Drive க்கு என்ன லெட்டர் என்று பார்த்து தெரிவு செய்யவும்]
Step- 4 தேவை இல்லை.
இப்போது Create என்பதை கிளிக் செய்யுங்கள். அடுத்து Process முடிந்த பின், நீங்கள் தரவிறக்கம் செய்த Ubuntu-வை உங்கள் Pen Drive மூலம் மூலம் நிறுவி விடலாம்.
USB மூலம் Boot ஆகவில்லை என்றால், கணணி ஆன் ஆகும் போது[Press F2 For BIOS எனும்போது ] F12 என்பதை அழுத்தவும்.
இப்போது Boot Menu வரும். அதில் USB Boot என்பதை தெரிவு செய்ய வேண்டும்.
இப்போது பென் டிரைவ் உங்கள் கணணியில் செருகி இருக்க வேண்டும். இனி இன்ஸ்டால் ஆகி விடும்.

கூகுள் குரோமின் புதிய பதிப்பை தரவிறக்கம் செய்வதற்கு

முன்னணி இணைய உலாவிகளில் ஒன்றான கூகுள் குரோம் ஆனது அதன் புதிய பதிப்பான Chrome 21 இனை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது.
இப்புதிய உலாவியானது முன்னைய பதிப்பினைக் காட்டிலும் உயர் ரெசொலூசன் உடைய காட்சிகளையும், உயர் தரம் கொண்ட எழுத்துக்கள், ஏனைய கிராபிக்ஸ் என்பனவற்றை வெளிப்படுத்தும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் முன்னர் காணப்பட்ட பல அம்சங்கள் மெருகூட்டப்பட்டு வெளியாகியிருக்கும் இப்புதிய பதிப்பானது விண்டோஸ், லினக்ஸ், அப்பிளின் மெக் இயங்குதளங்களில் செயற்படக்கூடிய வகைகளில் கிடைக்கப் பெறுகின்றது.