September 28, 2012

ஒன்லைனில் பொருட்களை வாங்குவதற்கு உதவும் பயனுள்ள இணையங்கள்

எலக்ட்ரானிக் சாதனங்களை ஒன்லைன் வலைத்தளங்களில் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு உதவியாக சில முன்னணி தளங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
Flipkart:
MP3 Player, விளையாட்டு சார்ந்த எலக்ட்ரானிக் சாதனங்கள், Mobile Accessories போன்றவற்றை இந்த Flipkart வலைத்தளத்தில் வாங்கலாம்.
இந்த வலைத்தளத்தில் எலக்ட்ரானிக் சாதனங்களை இருந்த இடத்தில் இருந்தே மிக எளிதாக வாங்க முடியும்.
ஒன்லைனில் வாங்க வேண்டும் என்பதை விட அனைவரின் முக்கிய கவலையும் அதன் விலை பற்றி தான். அந்த வகையில் இந்த வலைத்தளத்தில் குறைந்த விலையில் பெற முடியும்.
ebay:
ebay வலைத்தளமும் ஒன்லைனில் பொருட்கள் வாங்க சிறந்த இடம் என்று கூறலாம். கணனிகள், மியூசிக் மின்னணு சாதனங்கள் போன்றவற்றை இந்த வலைத்தளத்தில் எளிதாக பெறலாம்.
அந்த வகையில் இதில் புத்தகங்கள், கலை பொருட்கள் என்று விரும்பியதை இருக்கும் இடத்திற்கே வரவலைக்கலாம்.
Saholic.com:
Saholic.com மக்கள் மத்தியில் அதிகம் பிரசித்தி பெற்ற வலைத்தளம் தான்.
Smart Phones, Mobile Phones, Laptops, Cameras, Accessories, Tablets என்று ஏராளமான எலக்ட்ரானிக் சாதனங்களை வாங்கி குவிக்கலாம்.
சிறந்த பொருட்களை இந்த வலைத்தளத்தில் சிறந்த விலையில் வாங்க முடியும். சில சமயம் தள்ளுபடியில் இலவச பொருட்களுடனும் வாங்கலாம்.
Snapdeal.com:
Snapdeal.com வலைத்தளத்தில் எளிதாக தொலைக்காட்சி, டேப்லட்கள், கமெராக்கள், கணனிகள், இசைப் பேழைகள், கைப்பேசிகள் போன்றவற்றை எளிதாக பெறலாம்.

Sony Xperia கைப்பேசிகள் பற்றி ஒரு பார்வை

இலத்திரனியல் சாதன உற்பத்தியில் உலக மக்களின் நன்நம்பிக்கையை வென்ற நிறுவனமான சோனியின் தயாரிப்பில் உருவான Sony Xperia பல்வேறு நவீன தொழில்நுட்பங்களுடன் அறிமுகமாகியுள்ளது.
720 x 1280 Pixels-வுடன் முற்றிலும் தொடுதிரை வசதியுடையதாக அமைக்கப்பட்ட இக்கைப்பேசிகள் அதிசிறந்த ஒலிநயம் கொண்டதாகக் காணப்படுகின்றது.
இவற்றுடன் துல்லியமான புகைப்படங்களை எடுக்கக்கூடிய 13 Mexa Pixels உடைய கமெராவினையும் உள்ளடக்கியுள்ளதுடன் பின்வரும் சிறப்பம்சங்களையும் தம்மகத்தே கொண்டுள்ளன.
Quad-band GSM /GPRS/EDGE support
3G with 42.2 Mbps HSDPA and 5.76 Mbps HSUPA
4.55" 16M-color capacitive LED-backlit LCD touchscreen of 720p resolution (720 x 1280 pixels) with Sony Mobile BRAVIA engine; Scratch-resistant glass
Android OS v4.0.4 Ice Cream Sandwich
Dual-core 1.5 GHz Krait CPU, 1 GB RAM, Adreno 225 GPU, Qualcomm Snapdragon MSM8260A chipset
13 MP autofocus camera with LED flash and geotagging, Multi Angle shot
1080p video recording @ 30fps with continuous autofocus and stereo sound
1.3 MP front-facing camera, 720p video recording
Wi-Fi b/g/n and DLNA
GPS with A-GPS, GLONASS
16GB of built-in storage, microSD card slot
microUSB port with MHL and USB-host support
Stereo Bluetooth v3.1
Standard 3.5 mm audio jack
Stereo FM radio with RDS
Voice dialing
Deep Facebook integration
PlayStation Certified, access to the PS Store
Accelerometer and proximity sensor
NFC connectivity

September 6, 2012

பேஸ்புக் சட்டிங்கில் அழகிய அனிமேசன்களை​ப் பயன்படுத்து​வதற்கு

பேஸ்புக் சமூக இணையத்தளத்தில் நண்பர்களுடன் சட்டிங்கில் ஈடுபடும் போது தனியாக எழுத்துக்களை மட்டுமே பயன்படுத்தி வந்த உங்களுக்கு தற்போது சட்டிங்கின் சுவாரஸ்யத்தை அதிகரிப்பதற்கான வழி பிறந்துள்ளது.
அதாவது சில சங்கேத(codes) குறிகளைப் பயன்படுத்துவதன் மூலம் அனிமேசன்களுடன் கூடிய அழகிய உருவங்களைப் பயன்படுத்தி சட்டிங் செய்ய முடியும்.
இதற்கு கீழே தரப்பட்டுள்ள சங்கேதக்குறிகளை பிரதி செய்து பேஸ்புக் தளத்தில் சட்டிங் செய்வதற்கு என தரப்பட்டுள்ள பகுதியில் paste செய்து enter key இனை அழுத்தல் வேண்டும்.
சங்கேதக் குறியீடுகள் சில
1.
….*.¸.*’
….*.[[336842623036575]] [[336842623036575]] [[126216480723638]] *’
.*.[[336842623036575]] [[336842623036575]] [[126216480723638]] *’
….[[336842623036575]] [[336842623036575]] [[126216480723638]]
…*.[[336842623036575]] [[336842623036575]] [[126216480723638]] .`*.¸¸
…….||///.
……..||//.
……….
……….|/..[[363460793698354]]
………..V….
2.
(¯`v´¯)
.`·.¸.·´ [[126216480723638]]
¸.·´¸.·´¨) ¸.·*¨)
(¸.·´ (¸.·´ .·´ ¸

.[[312004515520386]] / [[239173782833076]] [[312004372187067]] [[312004515520386]]
..[[312004515520386]] / [[363460793698354]] [[363460793698354]] /¦ [[312004515520386]]
.[[312004515520386]] _| |__| |_ [[312004515520386]]
3. ¦.(¯` [[312004515520386]] ´¯)´´¯`•°*”˜˜”*°•. [[126216480723638]]
¦.`*.¸.*.•°*”˜˜”*°•.[[126216480723638]]
¦.•°*”˜˜”*°•.[[126216480723638]] * ¸ [[336842623036575]] [[363460793698354]]
[[312615488792622]] your message [[312615488792622]]

4. ___.[[216423528416706]] ? [[216423528416706]] ______.[[216423528416706]] [[216423528416706]]
__.[[216423528416706]] ______ [[216423528416706]] __ [[216423528416706]] __ [[216423528416706]]
__.[[216423528416706]] ____ [[126216480723638]] POUR [[126216480723638]] ..[[216423528416706]]
___.[[216423528416706]].. TOI .. ............[[216423528416706]]
_____ [[216423528416706]] __(^_^)____ [[216423528416706]]
_______ [[216423528416706]] _______ [[216423528416706]]
_________.[[363460793698354]] [[216423528416706]] [[]]

போலி கணக்காளரின் பட்டியலை வெளியிட்டுள்ளது பேஸ்புக் நிறுவனம்

பேஸ்புக் நிறுவனத்தின் பங்குகள் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளதால், விதிமுறைகளின் படி தன் தளத்தில் இயங்குபவர்கள் குறித்த தகவல்களை பேஸ்புக் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
உலக அளவில், மாதந்தோறும் இதனை 95 கோடியே 50 லட்சம் பேர் பயன்படுத்துகின்றனர். இவர்களில் 8.7% பேர் போலியானவர்கள் அல்லது பொய்யான அக்கவுண்ட் வைத்துள்ளனர். எனவே இவர்களின் எண்ணிக்கை 8 கோடியே 30 லட்சம் ஆகும்.
இந்த பொய்யான அக்கவுண்ட்கள் மூன்று வகைப்படும். முதலாவதாக ஒருவரே ஒன்றுக்கு மேற்பட்ட அக்கவுண்ட் வைத்திருத்தல். ஒரு சிலர் தங்களின் வசதிக்காகவும், என்ன செய்கிறோம் என்று அறியாமலும், தங்களுக்கு ஒரே பெயரிலும், அல்லது வேறு வேறு பெயரிலும் அக்கவுண்ட்களை உருவாக்குகின்றனர்.
இது பேஸ்புக் நிறுவனத்தின் விதிமுறைகளுக்கு முரணானதாகும். நாங்கள் எவ்வளவு முயற்சி எடுத்தாலும், இது போல ஒருவரிடமிருந்து ஒன்றுக்கு மேற்பட்ட அக்கவுண்ட்டினைத் தடுக்க முடியவில்லை என்று பேஸ்புக் தெரிவித்துள்ளது.
அடுத்து 2.4% அக்கவுண்ட்கள் எந்த வகை என பகுத்தறிய முடியாதவையாக உள்ளது. சிலர் தங்கள் நிறுவனத்திற்காக என தனி மனித அக்கவுண்ட்களை உருவாக்கி இயக்குகின்றனர்.
சிலர் தங்கள் செல்லப் பிராணிகளுக்காகத் தங்கள் பெயரில் அல்லது கற்பனைப் பெயரில் அக்கவுண்ட்களை உருவாக்குகின்றனர். இவற்றை எந்த வகையில் பகுத்து வைப்பது என்பதனை எளிதில் முடிவு செய்திட முடிவதில்லை.
அடுத்ததாக, விரும்பத்தகாத அக்கவுண்ட்கள் 1.5% உள்ளன. இவை பேஸ்புக் நிறுவனம் விரும்பாத, தடை செய்திடும் பணிகளுக்கெனவே பொய்யான அக்கவுண்ட்களாக உருவாக்கப்பட்டு இயக்கப்படுகின்றன. எடுத்துக் காட்டாக, ஸ்பேம் மெயில்களை அனுப்புவதற்காக சில அக்கவுண்ட்கள் இயங்குகின்றன.

அப்பிள் அறிமுகப்படு​த்தும் புதிய iPad Mini

தற்போது அதிகரித்து வரும் டேப்லெட் பாவனை காரணமாக, நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டு நவீன வசதிகள் கொண்ட புதிய டேப்லெட்டுகளை அறிமுகம் செய்கின்றன.
இந்நிலையில் சாதாரண அளவினை விடவும் சிறிய அளவுகொண்ட iPad Mini எனும் புதிய டேப்லெட் இனை அப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது.
ஏழு அங்குல தொடுதிரைவசதியுடன் கூடிய இந்த டேப்லெட் ஆனது எதிர்வரும் அக்டோபர் மாதமளவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
iPhone 5 கைப்பேசி அறிமுகப்படுத்துவதற்கான உத்தியோக பூர்வ அறிவிப்பை அப்பிள் நிறுவனம் வெளியிட்டு நிலையில் கணனிப் பாவனையாளர்கள் மத்தியில் இந்த டேப்லெட்டும் பலத்த எதிர்பார்ப்புக்களை உருவாக்கியுள்ளது.

File History: விண்டோஸ் 8ல் மேம்படுத்தப்பட்ட வசதி

தற்போது சோதனை பதிப்பாக நுகர்வோருக்கு தரப்பட்டுள்ள விண்டோஸ் 8 சிஸ்டத்தில் உள்ள File History என்ற புதிய வசதி அனைவரின் கவனத்தை கவர்வதாக உள்ளது.
இந்த செயல்பாடு Libraries, Contacts, Favourites மற்றும் டெஸ்க்டொப்பில் உள்ள அனைத்து கோப்புகளையும் பக்கப் எடுக்கிறது. மாறா நிலையில் ஒவ்வொரு ஒரு மணி நேரத்திற்கும் ஒரு முறை அனைத்தையும் ஸ்கேன் செய்கிறது.
கோப்புகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்களை தனி ட்ரைவில் எழுதி வைக்கிறது.
இந்த இடத்திலிருந்து பயனாளர்கள் தங்களின் கோப்புகளுக்கான பக்கப் கொப்பிகளை பெறலாம். ஒரு குறிப்பிட்ட கோப்பு சில நாட்களுக்கு முன்னதாக ஒரு நாளில் இருந்த நிலையில் பெற விரும்பினால் இந்த ட்ரைவிலிருந்து பெறலாம்.
கோப்பு ஒன்று கெட்டுப் போய்விட்டால் முந்தைய நிலையிலிருந்தும் File History மூலம் அதனைப் பெறலாம்.
இந்த வசதியைப் பெற விண்டோஸ் எக்ஸ்புளோரர் மூலமாகச் செல்ல வேண்டும். குறிப்பிட்ட இடம் சென்று அல்லது கோப்பிற்கு சென்று எக்ஸ்புளோரர் ரிப்பனில் History பட்டனை அழுத்த வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட லைப்ரேரி, போல்டர் அல்லது தனி கோப்பின் முந்தைய History முழுவதும் காட்டப்படும்.
நமக்குத் தேவையான நிலையில் அந்த கோப்பை எடுத்து கொள்ளலாம். நாம் பெற விரும்பும் கோப்பு, காட்டப்படும் பட்டியலில் எது எனத் தெரியாவிட்டால் கோப்பின் பெயர், மாற்றப்பட்ட முக்கிய சொற்கள், நாள் குறித்து தேடியும் அறியலாம் அல்லது கோப்பின் பிரிவியூ காட்சி பெற்று தேவையான காட்சியை கிளிக் செய்து கோப்பை பெறலாம்.
மேலும் மவுஸை கிளிக் செய்தும் பெறலாம், டச் ஸ்கிரீனைச் சற்று தட்டியும் பெறலாம். ஏற்கனவே விண்டோஸ் 7 சிஸ்டத்தில் Backup and Restore என ஒரு செயல்பாடு இருந்து வருகிறது.
இந்த செயல்பாடு தான் சற்று மேம்படுத்தப்பட்டு பைல் ஹிஸ்டரி என இப்போது விண்டோஸ் 8 சிஸ்டத்தில் கிடைக்கிறது. இந்த தகவல்கள் Building Windows 8 blog என்ற மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் வலைமனையில் தரப்பட்டுள்ளன.