April 29, 2012

கூகுள் புதிதாக வழங்கியுள்​ள Google Maps Photo Tour வசதி


இணையத்துடன் தொடர்புடைய பல்வேறுபட்ட புதிய அம்சங்களை பயனர்களுக்கு அறிமுகப்படுத்திவரும் கூகுள் தற்போது தனது Google Mapsல் Photo Tour எனும் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இவ்வாறு அறிமுகப்படுத்தியுள்ள Google Maps Photo Tour வசதியில் உலகெங்கிலும் காணப்படும் பிரபல்யமான இடங்களின் 15,000 வரையிலான படங்கள் தற்போது கொடுக்கப்பட்டுள்ளன.
இதனை பயனர்களின் முப்பரிமாண அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டும் Picasa, Panaromio அனுபவங்களை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டும் விசேட தொழில்நுட்பத்தில் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sonic PDF Creator ன் முழுமையான பதிப்பை இலவசமாகத் தரவிறக்கம் செய்ய

எழுத்து வடிவிலான கோப்புக்களை நிர்வகிக்க பல்வேறு வகையான போர்மட் காணப்பட்ட போதிலும், அதிகளவு வசதிகள் கொண்ட PDF வகைக் கோப்புக்களையே கணணிப் பாவனையாளர்கள் பயன்படுத்துகின்றனர்.
இதனால் ஏனைய கோப்புக்களை PDF வடிவத்திற்கு மாற்றுவதற்கென பல மென்பொருட்கள் காணப்படுகின்றன.
உதாரமாண MS Word ல் உள்ள கோப்பு ஒன்றை நேரடியாகவே PDF கோப்பிற்கு மாற்றும் வசதி காணப்படுகின்றது.
அதேபோல மேலதிக வசதிகளை உள்ளடக்கியதான Sonic PDF Creator மென்பொருளும் காணப்பட்ட போதிலும், இதனை ஏறத்தாழ 50 டொலர்கள் செலுத்தியே கொள்வனவு செய்ய வேண்டும்.
ஆனால் தற்போது இதன் மூன்றாவது பதிப்பினை இலவசமாக தரவிறக்கம் செய்ய முடியும். அதற்காக பின்வரும் முறைகளைக் கையாள்க.
1. தரப்பட்ட இணைப்பைப் பயன்படுத்தி பேஸ்புக் தளத்திற்கு சென்று Like செய்து மீண்டும் அப்பக்கத்தை Reload செய்க.
2. அப்போது தரவிறக்கம் செய்வதற்கான இரகசிய எண் ஒன்று தோன்றும். அதனை பிரதி செய்து அடுத்துத் தோன்றும் திரையில் Paste செய்து Download பொத்தானை அழுத்தவும்.

Sony Tablet Sன் இயங்குதளத்​திற்கான இயங்குதளத்​தை அப்டேட் செய்யலாம்

முன்னணி இலத்திரனியல் நிறுவனமான Sony நிறுவனமானது தான் அறிமுகப்படுத்திய Sony Tablet Sன் இயங்குதளத்தை தற்போது அன்ரோயிட் இயங்குதளத்தில் செயற்படுகின்றது.
அதனை Android 4.0 Ice Cream Sandwich இயங்குதளத்திற்கு அப்டேற் செய்வதற்கான வசதியை தற்போது சோனி நிறுவனம் வழங்கியுள்ளது.
Android 4.0 Ice Cream Sandwich இயங்குதளத்தில் முன்னைய இயங்கு தளத்தை விட சில புதிய வசதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன் திரையை லொக் செய்வதற்கான வசதியும் புதிதாக உள்ளடக்கப்பட்டுள்ளது.
இவ் இயங்குதளத்தை Tabletன் Settingsற்கு சென்று check for updates என்ற வசதி மூலம் அப்டேட் செய்து கொள்ளமுடியும்.

TubeDigger: இணையத்தளங்​களிலிருந்து வீடியோக்களை தரவிறக்கம் செய்ய உதவும் மென்பொருள்

இணையத்தளங்களில் பகிரப்பட்டிருக்கும் வீடியோக் கோப்புக்களை தரவிறக்கம் செய்ய ஓன்லைன் வசதிகள் காணப்பட்டு போதிலும் இவ்வசதியை சில இணையத்தளங்களே கொண்டிருக்கின்றன.
அவ்வாறான அம்சத்தைக் கொண்டிராத இணையத்தளங்களில் இருந்து வீடியோக்களை தரவிறக்கம் செய்ய கணணியில் மென்பொருட்களை நிறுவ வேண்டும்.
இதற்கென பல மென்பொருட்கள் காணப்பட்ட போதிலும் TubeDigger எனும் புதிய மென்பொருள் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் எந்தவொரு இணையத்தளத்திலிருந்தும் RTMP/FLV/MP4 ஆகிய வகைக் கோப்புக்களை தரவிறக்கம் செய்ய முடியும்.

உலாவிகளின் புதிய பதிப்புகள் வெளியீடு

கூகுள் குரோம், மொஸில்லா பயர்பொக்ஸ் உலாவிகளின் புதிய பதிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
சில மாதங்களாகவே நடைபெற்று வரும் உலாவி வெளியிடும் போட்டியில் இது ஒரு சிறப்பான நிலை என்று ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.
கூகுள் தன் குரோம் பிரவுசரின் அண்மைக் காலத்திய பதிப்பான 18 ஐ வெளியிட்டுள்ளது. இதில் எச்.டி.எம்.எல்.5 இயக்கத்திற்கான ஹார்ட்வேர் இயக்கத்திற்கான வசதி செய்யப்பட்டுள்ளது. இது விண்டோஸ் மற்றும் மேக் சிஸ்டங்களில் இயங்கும்.
இதன் மூலம் சி.பி.யுவின் வேலைப் பளு குறையும். அந்தப் பணி ஜி.பி.யு. எனப்படும் கிராபிக்ஸ் சிப்பிற்குச் சென்றுவிடும். இதில் என்ன வேடிக்கை என்றால், இந்த வசதி குரோம் உலாவியின் முந்தைய பதிப்புகளில் தரப்பட்டது.
ஆனால் சில நாட்களில் இது மாறா நிலையிலேயே முடக்கிவைக்கப்பட்டது. தற்போது வந்திருக்கும் புதிய பதிப்பில் இது இயங்கும் நிலையில் தரப்பட்டுள்ளது.
இதன் இயக்கத்திற்குத் தேவையான இணக்கமான கிராபிக்ஸ் ஹார்ட்வேர் இருக்கும் கணணிகளில் மட்டுமே இது இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் கணணியில் இது இயங்குமா எனத் தெரிந்து கொள்ள “chrome://gpu” என குரோம் பிரவுசர் யு.ஆர்.எல். விண்டோவில் டைப் செய்தால் தெரிந்து கொள்ளலாம்.
இந்த வசதி குறித்து ஏற்கனவே கூகுள் நிறுவனம் அளித்த ஒரு போட்டி மூலமாக, தகவல்களைப் பெற்றது. அவை குறை எதுவும் தெரிவிக்காததனால், இந்த பதிப்பு வெளியாகிறது.
இந்த புதிய பதிப்பில், கேம் விளையாட WebGL, ஜாவா ஸ்கிரிப்ட் பயன்படுத்தி முப்பரிமாண காட்சி எனப் பல வசதிகளும் தரப்பட்டுள்ளன. எதிர்பார்க்கப்படும் ஹார்ட்வேர் அமைப்பு இல்லை என்றாலும், இந்த உலாவி இயங்கும்.
விண்டோஸ், மேக் மற்றும் லினக்ஸ் இயங்குதளங்களுக்கான இந்த பிரவுசர் பதிப்புகள் https://www.google.com/chrome என்ற முகவரியில் உள்ள தளத்தில் கிடைக்கின்றன.
பதிலுக்கு மொஸில்லா தன் பயர்பொக்ஸ் பிரவுசரின் பதிப்பு 10 ஐ சென்ற பிப்ரவரி முதல் வாரத்தில் வெளியிட்டுள்ளது.
இது பெரும்பாலும் முந்தைய பதிப்பில் இருந்த பிழை திருத்தப் பதிப்பாகவும், ஒரு சில கூடுதல் வசதிகள் இணைக்கப்பட்டதாகவும் கிடைக்கிறது. தரப்பட்டுள்ள சில வசதிகளை இங்கு பட்டியலிடலாம்:
1. Back பட்டனை ஒருமுறை அழுத்திய பின்னரே Forward பட்டன் கிடைக்கும்.
2. வெப் அப்ளிகேஷன் புரோகிராம்களில், முழுத்திரையையும் பயன்படுத்தும் வசதி தரப்பட்டுள்ளது.
3. WebGL graphics மற்றும் CSS3 3D ஆகியவற்றிற்கான சப்போர்ட் தரப்பட்டுள்ளது.
4. பெரிய அளவிலான ஜாவா ஆப்லெட்களை இயக்கும் போதும், புக்மார்க்குகளை சீரமைக்கும்போதும், பிரவுசர் கிராஷ் ஆவதில்லை.
விண்டோஸ் இயக்கத்திற்கான பயர்பாக்ஸ் பிரவுசரின் இந்த பதிப்பைப் பெhttp://www.mozilla.org/en-US/products/download.html?product=firefox10.0&os=win&lang=enUS என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும்.

விண்டோஸ் 8ல் காணப்படும் Windows Store வசதியை செயலிழக்கச் செய்வதற்கு

மைக்ரோசொப்ட் நிறுவனத்தினால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விண்டோஸ் 8 இயங்குதளத்தில் Windows Store எனும் வசதி புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.
இவ்வசதியை தேவை ஏற்படின் செயலிழக்கச் செய்ய முடியும். அதற்கான வழிமுறைகள் கீழே தரப்படுகின்றன.
1. Windows + R ஆகிய கீக்களை அழுத்தி Run விண்டோவினை தோற்றுவித்து அதனுள் gpedit.msc என டைப் செய்து Enter செய்க.
2. தோன்றும் விண்டோவில் User ConfigurationAdministrative TemplatesWindows Components என்பதனை தேர்வு செய்க.
3. பின்னர் Windows Components இனுள் Store என்பதனுள் காணப்படும் Windows Storeமேல் double click செய்க.
4. அடுத்து தோன்றும் விண்டோவில் Enabled என்பதை தெரிவு செய்து OK செய்யவும்.

புதிய பதிப்பான Ubuntu 12.04 தரவிறக்கம் செய்ய

கணணி இயங்குதளங்களில் இலவசமாகவும், வைரஸ் பாதுகாப்பு மிகுந்ததாகவும் காணப்படும் இயங்குதளமான Ubuntuவின் புதிய பதிப்பான 12.04 Canonical அறிமுகப்படுத்தியுள்ளது.
இவ் இயங்குதளத்தில் இறுதிப் பயனருக்கான பல மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதுடன், லினக்ஸ்ஸின் 3.2.14 kernelஐ அடிப்படையாகக் கொண்டதும் Libreoffice 3.5.2ன் shipsகளை கொண்டதுமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதனை தற்போது இலவசமாகத் தரவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ள முடியும்.

Slate 8 Tabletன் வடிவமைப்பை HP நிறுவனம் வெளியிட்டது

கணணி உற்பத்தியில் உலகளாவிய ரீதியில் முன்னணி வகிக்கும் நிறுவனங்களில் ஒன்றான HP நிறுவனம் விரைவில் சந்தைப்படுத்தவிருக்கும் Slate 8 Tabletன் வடிவமைப்பை விளக்கும் படங்களை வெளியிட்டுள்ளது.
10.1 அங்குல அளவிலான திரையைக் கொண்டுள்ள இந்த Slate 8 Tabletன் மின்கலமானது எட்டு தொடக்கம் பத்து மணித்தியாலங்கள் வரை தொடர்ச்சியாக இயங்கவல்லது.
மேலும் 9.2 மில்லி மீட்டர்கள் தடிப்புடையதாக உருவாக்கப்பட்டுள்ள இந்த Tabletகளின் நிறை 1.5 பவுண்டஸ் ஆகும்.
இவற்றிற்கான உள்ளீடுகளை லைட் பென்னைப் பயன்படுத்தியும் வழங்கக் கூடியதாகக் காணப்படுவதுடன் அதிகளவு பாதுகாப்பு வசதியையும் கொண்டுள்ளது.

April 26, 2012

ஆப்பிள் நிறுவனத்தின் லாபம் அதிகரிப்பு

ஐபோன், ஐபேட்கள் அதிகளவு விற்பனையால் ஆப்பிள் நிறுவனத்தின் இரண்டாம் காலாண்டு லாபம் 11.6 பில்லியனாக அதிகரித்து இருக்கிறது.
மென்பொருள் துறையில் முன்னணி நிறுவனமாக விளக்கும் ஆப்பிள் நிறுவனம் காலத்திற்கு ஏற்றவாறு பல புதுமைகளை புகுத்தி வருகிறது.
சமீபத்திய அந்த நிறுவனத்தின் ஐபேட் மற்றும் ஐபோன்கள் உலகம் முழுக்க அதிக வரவேற்பை பெற்றுள்ளன. இதனால் அந்த நிறுவனத்தின் பங்குகள் விலையும் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.
இப்படியே உயர்ந்து கொண்டு போனால் 2014ஆம் ஆண்டில் உலகின் 1 டிரில்லியன் நிறுவனமாக ஆப்பிள் உருவெடுக்க உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் இரண்டாம் காலாண்டுக்கான நிதிநிலையை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. அதன்படி அந்த நிறுவனத்தின் லாபம் 11.6 பில்லியனாக இருக்கிறது. இதுவே கடந்த ஆண்டில் அந்த நிறுவனத்தின் லாபம் 5.98ஆக இருந்துள்ளது.
கடந்த 3 மாதங்களில் மட்டும் ஐபோன் மற்றும் ஐபேட்கள் அதிகளவு விற்பனையால் இவ்வளவு லாபம் பெற்றிருப்பதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.
மேலும் 2ம் காலாண்டில் ஆப்பிள் நிறுவனம் 35.1 மில்லியன் ஐபோன்களையும், 11.8 மில்லியன் ஐபேட்களையும் விற்பனை செய்துள்ளது.
இதன்மூலம் அந்த நிறுவனத்தின் மொத்த விற்பனை 39.18 பில்லியனாக இருக்கிறது. இது கடந்த ஆண்டை காட்டிலும் 64 சதவீதம் அதிகமாகும்.

April 25, 2012

Registry Editorஐ ஓபன் செய்வதற்கு

உங்கள் கணணியில் சில மாற்றங்களைச் செய்வதற்காக Registry Editorஐ பயன்படுத்த வேண்டியிருக்கும்.
இதனை Start சென்று RUN என்று கொடுத்தே திறந்து கொள்வோம். இவ்வாறு திறந்து கொள்ளும் போது சில சமயங்களில் Registry Editor ஆனது திறக்கப்பட முடியாமல் போகலாம், அதாவது “Registry Editing Has Been Disabled By Your Administrator” என்ற செய்தி வந்திருக்கலாம்.
அவ்வாறு வந்தால்,
முறை 01 
முதலில் UnHookExec.inf என்பதை கிளிக் செய்து பின்னர் நிறுவிப் பயன்படுத்திக் கொள்ளவும்.
முறை 02 
இங்கு Remove Restrictions Tool என்பதை கிளிக் செய்து அதனை தரவிறக்கி பயன்படுத்திக் கொள்ளவும்.
முறை 03
இங்கு EnableRegEdit.vbs என்பதை கிளிக் செய்து தரவிறக்கி, பின்னர் Double-Click செய்து திறந்த பின் Registry Editor ஐ திறந்து பார்க்கவும்.

கைத்தொலைபேசிகளில் பேஸ்புக்கை மிக வேகமாக இயக்குவதற்கு

இன்றைய உலகில் அனைவரின் வாழ்விலும் மிக முக்கிய இடம் பிடித்துள்ளது பேஸ்புக் சமூக வலைத்தளம்.
இதனை பெரும்பாலானோர் தங்களத கைத்தொலைபேசி வழியாக பயன்படுத்தி வருகின்றனர்.
அவ்வாறு உபயோகிக்கும் போது ஒவ்வொரு செயல்பாட்டிற்கும், ஒவ்வொரு வேகம் இருக்கும்.
இந்த குறையினை நீக்கி பேஸ்புக் தளத்தை வேகமாக அணுகி செயற்படுத்த ஆண்ட்ராய்டு தொலைபேசிகளில் FAST FACE BOOK APP உதவுகிறது. இதன் பீட்டா பதிப்பினை கூகுள் பிளே ஸ்டோர் மூலம் பெற முடியும்.
FAST FACE BOOK APP சிறப்பம்சங்கள்:
3 மடங்கு வேகத்தன்மை வாய்ந்தது.
குறைந்தளவு பற்றரி மற்றும் நினைவாக பயன்பாடு.
புகைப்பட தேடல், பதிவேற்றம், நண்பர்கள் தேடல், செய்திகள் அனுப்புதல், STATUS UPDATE, NOTIFICATIONS என்பவற்றை இலகுவாகவும் விரைவாகவும் அணுகும் வசதி.

Ashampoo Office 2010 மென்பொருளை லைசன்ஸ் கீயுடன் இலவசமாக தரவிறக்கம் செய்ய

தற்போது அலுவலக தேவைகளுக்கு அதிகளவானோரால் பயன்படுத்தப்படும் மென்பொருள் மைக்ரோசொப்ட் நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட MS Office ஆகும்.
எனினும் இதனது முழுமையான பதிப்பின் பயனைப் பெறுவதற்கு 120 டொலர்கள் என்ற தொகையை செலுத்தியே கொள்வனவு செய்ய வேண்டும்.
ஆனால் தற்போது இதற்கு பல்வேறுபட்ட மாற்று மென்பொருட்கள் காணப்படுகின்றன. அவற்றுள் MS Office ற்கு சிறந்த மாற்றீட்டு மென்பொருளாகக் காணப்படுவது Ashampoo Office ஆகும். எனினும் இதனையும் 60 டொலர்கள் செலுத்தியே கொள்வனவு செய்ய வேண்டும்.
எனினும் தற்போது இலவசமாக லைசன்ஸ் கீயுடன் தரவிறக்கக்கூடிய தற்காலிக வசதி ஒன்றை Ashampoo நிறுவனம் வழங்கியுள்ளது. பின்வரும் படிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் தரவிறக்கம் செய்ய முடியும்.
1. தரப்பட்டுள்ள இணைப்பிற்கு சென்று கேட்கப்பட்டுள்ளவற்றை பூர்த்தி செய்து Submit Registration என்பதை அழுத்தவும்.http://www.softmaker.de/reg/ash10_en.htm
2. தற்போது உங்கள் மின்னஞ்சல் முகவரிக்குள் உள்நுளையவும். அதனுள் SoftMaker எனும் பெயரில் இருக்கும் மின்னஞ்சலில் உங்களுக்கான லைசன்ஸ் கீ அனுப்பப்பட்டிருக்கும்.
3. அடுத்ததாக பின்வரும் இணைப்பிற்கு சென்று Ashampoo Office 2010 இனை தரவிறக்கம் செய்து கொள்ளவும்.

பேஸ்புக்கில் தொடரும் அட்டூழியங்கள்

ஆர்வத்தினைத் தூண்டும் வகையில் தகவல்களை வெளியிட்டு, அதன் மூலம் மக்களை சிக்கவைத்து, அவர்களின் தனி நபர் தகவல்களைப் பெறும் முயற்சி இப்போது சமூக இணையத்தளமான பேஸ்புக் பெயரில் நடைபெறுகிறது.
இதனை சர்வே ஸ்கேம்(Survey Scam) என அழைக்கின்றனர். “இந்த பெண் கடற்கரையில் ஆயிரம் பேருக்கு முன்னால் என்ன செய்கிறாள் என்று பாருங்கள்” என ஒரு செய்தி தரப்பட்டு ஒரு லிங்க் தரப்படுகிறது.
இதில் கிளிக் செய்தால், பேஸ்புக் போலவே வடிவமைக்கப்பட்ட ஒரு தளத்திற்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள். இதன் முகவரியை உற்றுக் கவனித்தால் மட்டுமே அது போலியானது எனத் தெரியவரும்.
இங்கு ஒரு வீடியோவிற்கான இணைப்பு இருக்கும், வீடியோ பிளேயர் காட்டப்படும். உடனே அது படிப்படியாக மறைக்கப்பட்டு, இந்த வீடியோவினைப் பார்ப்பதற்கு உங்களுக்கு உரிய வயது ஆகிவிட்டதா என்ற கேள்வி கேட்கப்பட்டு, உங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி எல்லாம் கேட்டு வாங்கப்படும்.
இதன் பின்னர் வேறு எதுவும் காட்டப்படாமல் தளம் நின்று விடும். நீங்கள் அளித்துள்ள தகவல்கள் மற்றவருக்கு விற்பனை செய்யப்படும். அவர்கள் இதனை தவறாகப் பயன்படுத்தும் வாப்புகள் ஏற்படும்.
மேலே தரப்பட்டுள்ளது போல பலவகையான செய்திகள் ஸ்கேம் ஆகப் பரவத் தொடங்கி உள்ளன. இது போன்ற ஆர்வமூட்டும் தகவல்களைக் கண்டால் சற்று எச்சரிக்கையுடன் விலகுவது நல்லது.

கணணி நடவடிக்கைக​ளைக் கண்காணிக்க உதவும் StatWin Pro 8.7

தனிப்பட்ட, வியாபாரத் துறைகளில் கணணிகளைப் பயன்படுத்தும் போது அவற்றின் பாவனை தொடர்பான தகவல்களை அறிந்து கொள்ள பல மென்பொருட்கள் பயன்படுகின்றன.
இவ்வாறு பல்வேறு மென்பொருட்கள் காணப்படுகின்ற போதிலும் StatWin Pro 8.7 மென்பொருளானது மிக எளிமையாகக் கையாளக் கூடிய பயனர் இடைமுகத்தையும், பல அம்சங்களையும் உள்ளடக்கியதாகக் காணப்படுகின்றது.
இதன் மூலம் குறித்த நேர இடைவெளி, நாள், வாரம், மாதம், வருடம் என பல்வேறுபட்ட முறைகளில் கணணியின் தொழில்பாட்டை கண்காணிக்க முடியும்.
மேலும் உள்நுளைந்த பயனர் பெயர், நேரம், நிறுவப்பட்ட மென்பொருடகள், ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள் என்பனவற்றை அறிந்து கொள்ள முடியும்.
இலவசமாகக் கிடைக்கக்கூடிய இம்மென்பொருளானது விண்டோஸ் இயங்குதளங்களில் மட்டுமே செயற்படக்கூடியது.

தரமான MP3யாக மாற்ற உதவும் மென்பொருள்

உங்களது இசை கோப்புகளை விரைவாகவும் மற்றும் எளிமையாகவும் திருத்தங்கள் செய்து தரமான MP3யாக மாற்றலாம்.
இது போர்ட்டபிள் மற்றும் இலவசமாக கிடைக்கின்றது. இந்த தரமான MP3 மாற்றியானது ஓடியோ தரம், தேவையான அளவு, பராமரித்தல் போன்றவற்றிற்கு உதவுகிறது.

ஜிமெயில் மின்னஞ்சலி​ன் சேமிப்பு வசதி 10GB ஆக அதிகரிப்பு

மின்னஞ்சல் சேவைகளில் முன்னணி வகிக்கும் நிறுவனமான ஜிமெயில் தனது பயனர்களுக்கான மின்னஞ்சல் சேமிக்கும் வசதியை 7.5GB இலிருந்து 10GB ஆக அதிகரித்துள்ளது.
Google Drive எனும் இலவச ஓன்லைன் சேமிப்பு வசதிக்கு சமாந்தரமாகவே இந்த மின்னஞ்சல் சேமிப்பு வசதி அதிகரிப்பு காணப்படுகின்றது.
எனினும் இந்த 10GB சேமிப்பு வசதியை கட்டணம் செலுத்துவதன் மூலம் 25GB ஆக அதிகரிக்க முடியும். இவ்வசதியானது நாளைய தினத்திலிருந்து நடைமுறைக்கு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் Google Drive இன் மூலம் வீடியோ, படங்கள் போன்ற கோப்புக்களுடன் Google Docs, PDF போன்ற கோப்புக்களை தரவேற்றம் செய்தல், தரவிறக்கம் செய்தல் என்பனவற்றை மேற்கொள்ள முடியும் எனவும் கூகுள் தெரிவித்துள்ளது.

April 22, 2012

பல புகைப்படங்​களின் அளவுகளை ஒரேநேரத்தி​ல் மாற்றியமைப்​பதற்கு

இன்று கிராபிக்ஸ் துறையானது பன்முகப்பட்ட துறைகளிலும் தன்னை நிலைநிறுத்தி வளர்ந்து வருகின்றது. இதில் புகைப்படங்களை எடிட் செய்தல் என்பது மிக முக்கியத்துவம் வாய்ந்தாக காணப்படுகின்றது.
இப்புகைப்படத்துறையில் படங்களின் அளவை மாற்றுவதற்கு பல மென்பொருட்கள் காணப்படுகின்றன. எனினும் அனேகமானவற்றில் ஒவ்வொரு படங்களினதும் அளவை தனித்தனியாக மாற்றும் வசதியே காணப்படுகின்றது.
இதனைத் தவிர்த்து ஒன்றிற்கு மேற்பட்ட படங்களை ஒரே நேரத்தில் இணைத்து அவற்றின் அளவை மாற்றிக்கொள்வதற்கு Hibosoft Batch Image Resizer எனும் புதிய மென்பொருள் உதவி புரிகின்றது.
இதன் கோப்பானது 9.5 MB என்ற சிறிய அளவு உடையதாக காணப்படுவதுடன் இலகுவாக 3 படிமுறைகளில் படங்களின் அளவை மாற்றியமைக்க முடியும்.

பேஸ்புக்கி​ற்கான Short cut Keyக்கள்

பிரபல சமூகவலைத்தளமான பேஸ்புக்கில் பல்வேறுபட்ட தொழிற்பாடுகளை கையாள வேண்டிய சந்தர்ப்பங்களில் சுட்டியைப் பயன்படுத்தும் போது சிரமங்களை எதிர்நோக்க வேண்டி ஏற்படலாம்.
இச்சிரமங்களைத் தவிர்ப்பதற்காக Short cut Keyக்களை பயன்படுத்த முடியும். எனினும் இச் Short cut Keyக்கள் கூகுள் குரோம், பயர்பொக்ஸ் என்பனவற்றில் வினைத்திறனாகச் செயற்படுவதுடன் இரண்டு உலாவிகளுக்கிடையிலும் Short cut Keyக்களை பிரயோகிப்பதில் சிறிய வேறுபாடு காணப்படுகின்றது.
அதாவது கூகுள் குரோமில் Alt Key பயன்படுத்தும் அதேவேளை Firefoxல் Shift+Alt Key பயன்படுத்த வேண்டும்.
குரோமிற்கான Short cut Keyக்கள்
Alt+m: New Message
Alt+0: Help Center
Alt+1: Home Page
Alt+2: Profile Page
Alt+3: Manage Friend List
Alt+4: Message List
Alt+5: Notification Page
Alt+6: Account Setting
Alt+7: Privacy Setting
Alt+8: Facebook Fan Page
Alt+9: Facebook Terms
Alt+?: Search Box
Firefoxல் பயன்படுத்தும் போது உதாரணமாக,
Shift+Alt+m: New Message என உபயோகிக்க வேண்டும்.

பி.டி.எப் கோப்புகளை கையாள்வதற்கு

பி.டி.எப் கோப்புகளை உருவாக்குவதற்கும், படிப்பதற்கும் பல அப்ளிகேஷன் புரோகிராம்கள் இலவசமாகக் கிடைக்கின்றன.
ஆனால் ஒரு பி.டி.எப் கோப்புடன் மற்றொன்றை இணைக்கவோ அல்லது அதில் உள்ள சில பகுதிகளை வெட்டிப் பிரிக்கவோ நமக்கு இலவசமாகப் புரோகிராம்கள் கிடைப்பதில்லை.
கட்டணம் செலுத்தித்தான் இந்த வசதிகளைத் தரும் புரோகிராம்களைப் பயன்படுத்த முடிகிறது. இந்நிலையில் இணையத்தில் உள்ள ஒரு தளம் நம் பக்கம் எந்த முயற்சியும் இன்றி, இந்த வேலைகளை முடித்துத் தரும் தளமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
பி.டி.எப் கோப்புகளை கையாளும் வசதிகளை இலவசமாய் அளிப்பதற்காகவே இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
பல பி.டி.எப் கோப்புகளை ஒரே கோப்பாக இணைத்துப் பயன்படுத்தினால் நன்றாகப் படிப்பதற்கு பயனுள்ள வகையில் இருக்கும் என்று எண்ணுகிறீர்களா!. இந்த தளத்தில் அதனை மேற்கொள்ளலாம். இணைக்க முடிவெடுக்கும் அனைத்து கோப்புகளின் மொத்த அளவும் 50 எம்.பிக்குள் இருக்க வேண்டும்.
இவை அனைத்தையும் ஒவ்வொன்றாக இந்த தளத்திற்கு பதிவேற்றம் செய்திட வேண்டும். இவற்றை எந்த வரிசையில் இணைக்க வேண்டும் என்பதனை, அந்த தளத்தில் வைத்தே பிரித்து அடுக்கலாம். அடுத்து merge பட்டனை அழுத்தியவுடனேயே அவை அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு ஒரே கோப்பாக மாற்றப்படும்.
இந்த கோப்பை தரவிறக்கம் செய்திட ஒரு லிங்க் உங்களுக்குத் தரப்படும். நீங்கள் விரும்பும் டைரக்டரியில் அதனை இறக்கிப் பதிந்து கொள்ளலாம். நீங்கள் அனுப்பிய கோப்புகள் அந்த தளத்தில் இருக்காது. எனவே உங்களிடம் தனியாகவும், இணைக்கப்பட்டும் கோப்புகளை உங்கள் கணணியில் வைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்த வசதி, பி.டி.எப் கோப்பு ஒன்றைப் பிரிப்பது. முதலில் பிரிக்க வேண்டிய பி.டி.எப் கோப்பை தேர்ந்தெடுத்து பதிவேற்றம் செய்திடுங்கள். இதற்கு முன் எந்த எந்த பக்கங்களைப் பிரிக்க வேண்டும் எனக் குறித்து கொள்ளுங்கள்.
பதிவேற்றம் செய்து பிரிப்பதற்கான(split) பட்டனை அழுத்தியவுடன், கிடைக்கும் டயலாக் பாக்ஸில், பிரிக்கப்பட வேண்டிய பக்கங்களின் விபரங்கள் கேட்கப்படும். இங்கு கேட்கப்படும் தகவல்களை படிப்படியாகத் தந்த பின்னர், பிரிப்பதற்கான பட்டனை அழுத்தவும்.
உங்களுக்கு ஒரு பி.டி.எப் கோப்பு கிடைத்துள்ளது. அதில் சில திருத்தங்களை மேற்கொள்ள அல்லது குறிப்புகளை இணைக்க விரும்புகிறீர்கள். ஆனால் அது கடவுச்சொல் கேட்கிறது.
என்ன செய்யலாம்? இந்த தளத்திற்கு பதிவேற்றம் செய்திடுங்கள். Unlock பிரிவிற்கான பட்டனை அழுத்துங்கள். இப்போது உங்கள் பி.டி.எப் கோப்பின் கடவுச்சொற்கை நீங்க இந்த தளம் முயற்சிக்கும்.
அப்படியும் முடியாத பட்சத்தில் விபரங்களைத் தந்து இயலவில்லை என்ற செய்தியைத் தரும். ஒரு பி.டி.எப் கோப்பை எந்த தரப்படி என்கிரிப்ட் செய்ய வேண்டுமோ அதன்படி செய்திருந்தால் கடவுச்சொல் நீக்கப்படும். வேறு வழிகளில் பாதுகாக்கப்பட்டிருந்தால், இயலாது என இந்த தளம் அறிவித்துள்ளது.
இதே போல கடவுச்சொல் இல்லாத உங்கள் கோப்புக்கு கடவுச்சொல் அளிக்கும் வசதியையும் இந்த தளம் தருகிறது.

யு.எஸ்.பி ட்ரைவ் Corrupt ஆனால்

யு.எஸ்.பி பிளாஷ் ட்ரைவ்கள் அனைத்தும் plug and play வகையைச் சேர்ந்த சாதனங்கள்.
இவை நாம் பயன்படுத்தும் பலவகையான வீடியோ கோப்பு உட்பட கோப்புகளை சேவ் செய்து மீண்டும் பெற்றுப் பயன்படுத்த வடிவமைக்கப்பட்டவை. பொதுவாக இந்த வேலையில் இவை எந்த பிரச்னையையும் தருவதில்லை.
ஆனால் கணணியில் உள்ள இதனை இணைக்கும் யு.எஸ்.பி. போர்ட்டிலிருந்து சரியாக இதனை நீக்கவில்லை என்றால் பிரச்னைகள் ஏற்படும்.
குறிப்பாக கணணி அதனைத் தேடி செயல்பாட்டில் வைத்திருக்கையில், கணணியில் இருந்து நீக்கினால் நிச்சயம் பிரச்னைகள் வர வாய்ப்புண்டு.
சில வேளைகளில் அதில் உள்ள அனைத்து தகவல்களையும் மீண்டும் பெற்று பயன்படுத்த முடியாமல் போய்விடும். அல்லது குறிப்பிட்ட கோப்பு கரப்ட் ஆகும் அல்லது பிளாஷ் ட்ரைவே பயன்படுத்த முடியாமல் போய்விடலாம்.
பெரும்பாலும் இது போன்ற சிக்கல்களைச் சந்திக்கும் பிளாஷ் ட்ரைவ்களை அவற்றை மீண்டும் போர்மட் செய்வதன் மூலம் தொடர்ந்து பயன்பாட்டிற்குக் கொண்டு வரலாம். ஆனால் இந்த வழியை மேற்கொண்டால் உங்கள் பிளாஷ் ட்ரைவில் உள்ள அனைத்து கோப்புகளும் அழிக்கப்படும்.
இந்த வேலையை மேற்கொள்ளும் முன்னர் உங்கள் கணணியில் உள்ள யு.எஸ்.பி. போர்ட் செயல்பாட்டில் சிக்கல் இருக்கிறதா எனக் கண்காணிக்கவும்.
இதற்கு கணணியில் உள்ள அனைத்து யு.எஸ்.பி போர்ட்களையும் அன் இன்ஸ்டால் மற்றும் இன்ஸ்டால் செய்திட வேண்டும். இதனை விண்டோஸ் டிவைஸ் மேனேஜர் மூலம் மேற்கொள்ளலாம்.
யு.எஸ்.பி ட்ரைவை எடுத்துவிடவும். பின்னர் கணணியில் உள்ள ஸ்டார்ட் மெனு சென்று, அதன் சர்ச் பாக்ஸில் “Device Manager” என டைப் செய்திடவும் அல்லது கண்ட்ரோல் பேனல் என டைப் செய்து கிடைக்கும் பிரிவில் டிவைஸ் மேனேஜரைப் பெறவும். இதற்கு கண்ட்ரோல் பேனல் பிரிவில் Hardware and Sound என்பதில் கிளிக் செய்திடவும்.
இங்கு கிடைக்கும் “Device Manager” என்ற லிங்க்கில் மீண்டும் கிளிக் செய்திடவும். உங்களுடைய யு.எஸ்.பி.போர்ட்களைக் கண்டறிய “Universal Serial Bus” என்று இருப்பதை மவுஸ் கிளிக் மூலம் விரிக்கவும். இதில் கிடைக்கும் பல வரிகளில், முதலாவதாக உள்ளதைத் தேர்ந்தெடுத்து, ரைட் கிளிக் செய்திடவும்.
கிடைக்கும் மெனுவில் “Uninstall” என்பதனைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடவும். பின்னர் ஓகே கிளிக் செய்திடவும். இப்படியே மற்ற யு.எஸ்.பி. சார்ந்த வரிகளிலும் இச்செயலை மேற்கொள்ளவும். இப்போது கணணியில் உள்ள அனைத்து யு.எஸ்.பி.போர்ட்களும் அன் இன்ஸ்டால் ஆகி இருக்கும்.
இவை அனைத்தையும் மீண்டும் தானாக ரீ இன்ஸ்டால் ஆக மீண்டும் செயல்பாட்டிற்குக் கொண்டு வர டிவைஸ் மேனேஜர் மேலாக உள்ள, Scan For Hardware Changes என்ற பெயரில் உள்ள புளூ கலர் ஐகானில் கிளிக் செய்திடவும். இதன் பின்னர் உங்கள் யு.எஸ்.பி. ட்ரைவினை ஏதேனும் ஒரு யு.எஸ்.பி. ட்ரைவில் இணைத்துச் செயல்படுத்திப் பார்க்கவும்.
இன்னும் தொடர்ந்து உங்கள் யு.எஸ்.பி. ட்ரைவ் செயல்படவில்லை என்றால், ட்ரைவினை போர்மட் செய்வதுதான் அடுத்த வழி. ஸ்டார்ட் மெனுவில் “Computer” என்ற பட்டனை அழுத்தவும். “Devices With Removable Storage” என்ற தலைப்பின் கீழாக, உங்கள் ட்ரைவின் பெயரைத் தேடிக் கண்டறியவும்.
இதில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் “Format” என்பதைத் தேர்ந்தெடுத்து செயல்படுத்தவும். போர்மட் செய்து முடித்த பின்னர், ரைட் கிளிக் செய்து “Eject” என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்து வெளியேறவும்.
“Format Options” என்ற பிரிவில் என்ற “Quick Format” பாக்ஸின் முன் டிக் அடையாளம் இருந்தால் அதனை எடுத்து விடவும். இந்த வகை போர்மட்டில், யு.எஸ்.பி. ட்ரைவ் மிக வேகமாக போர்மட் செய்யப்பட்டாலும், கரப்ட் ஆன ட்ரைவினை இந்த வகையில் சீராக போர்மட் செய்திட முடியுமா என்பது சந்தேகமே. வழக்கமான முறையில் ட்ரைவினை போர்மட் செய்த பின்னர், ட்ரைவினை போர்ட்டிலிருந்து எடுத்து விடவும்.
விண்டோஸ் 7 சிஸ்டம், பாதுகாப்பாக ட்ரைவினை போர்ட்டிலிருந்து நீக்க வசதியைக் கொண்டுள்ளது.இதன் மூலம் ட்ரைவில் பதிந்துள்ள தகவல் அழிக்கப்படுவதும், ட்ரைவ் கரப்ட் ஆவதும் தடுக்கப்படுகிறது.
இதற்கு ட்ரைவ் போர்ட்டில் இணைக்கப்பட்டிருக்கையில், டாஸ்க் பாரில் உள்ள “Safely Remove Hardware and Eject Media” என்ற ஐகானில் கிளிக் செய்திடவும். இந்த ஐகான் டாஸ்க் பாரில் வலது கீழாக இருக்கும்.
இதில் தரப்பட்டுள்ள “Eject” என்ற ஆப்ஷனில் கிளிக் செய்தால், கணணிக்கும் ட்ரைவிற்கும் உள்ள இணைப்பு நிறுத்தப்படும். தகவல் பரிமாறிக் கொள்ளும் செயல் நடைபெறாது. இதனை உறுதிப்படுத்திக் கொண்டு, பொறுமையாக ட்ரைவினை நீக்கவும்.

MS Office 2015 இனை இலவசமாக மேம்படுத்துவதற்கு

மைக்ரோசொப்ட் நிறுவனமானது தற்போது பாவனையில் உள்ள MS Office 2010 ன் மேம்படுத்திய பதிப்பான MS Office 2015 இனை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது.
எனவே அறிமுகப்படுத்தும் சந்தர்ப்பத்தில் MS Office 2010 இனை லைசன்ஸ் கீயுடன் பாவிப்பவர்கள் இலவசமாக MS Office 2015 ஆக மேம்படுத்திக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெட்ரோ பயனர் இடைமுகத்துடனும், MS Office 2010 இலிருந்து பல்வேறுபட்ட மாற்றங்களுடனும் உருவாக்கப்பட்டுள்ள இம்மென்பொருள் வெளியீடு தொடர்பாக மைக்ரோசொப் நிறுவனத்தில் இடம்பெற்ற மாநாட்டில் எதிர்வரும் 12 தொடக்கம் 18 வரையான மாதங்களுக்குள் வெளியிடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஓடியோ மற்றும் வீடியோக்களை கன்வெர்ட் செய்வதற்கு

நாம் பொதுவாக ஓடியோ மற்றும் வீடியோக்களை கன்வெர்ட் செய்வதற்கு சில மென்பொருட்களை நிறுவி பயன்படுத்துவோம்.
ஆனால் இதனை VLC Media Player லிலேயே மேற்கொள்ளலாம்.
VLC Media Player-யை ஓபன் செய்து கொண்டு அதில் Mediaவில் Convert->Save என்பதை கிளிக் செய்யவும். அதில் File என்ற டேப்பில் உங்கள் Audio/Video File ஐ open செய்து Audio/Video வை தெரிவு செய்து Convert/Save என்பதனை Click செய்யுங்கள்.
அதன் பின் Stream output என்ற விண்டோ ஓபனாகும், அதில் Encapsulation டேப்ஐ Click செய்து உங்களுக்கு தேவையான போர்மட்டை தெரிவு செய்து Save என்பதை Click செய்யுங்கள்.
அவ்வளவு தான் உங்களது ஓடியோ மற்றும் வீடியோ கோப்புகள் நீங்கள் தெரிவு செய்த போர்மட்டுக்கு மாறிவிடும்.

விண்டோஸ் 7ல் குறிப்புகள் எடுத்து வைப்பதற்கு

உங்களது கணணி மொனிட்டரில் குறிப்புகளை எழுதி வைப்பதற்கு விண்டோஸ் 7 இயங்குதளம் புதிய கூடுதல் வசதியை தருகிறது.
இதற்கு பெரும்பாலும் அனைவரும் வேறு சில மென்பொருட்களையே பயன்படுத்தி வந்தனர்.
தற்போது உங்களது கணணியிலேயே ஸ்டிக்கி நோட்ஸ் வசதி கிடைப்பதால் எளிதாக இதனைப் பயன்படுத்தலாம்.
கணணியில் அப்ளிகேஷன் புரோகிராம்களில் இயங்கிக் கொண்டே, தொலைபேசியில் பேசுவது, இணையத்தில் தேடல் மேற்கொள்ளுதல், பேக்ஸ் அனுப்புவது போன்ற பணிகளை மேற்கொள்பவர்களுக்கு இந்த வசதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
மிகப் பெரிய அளவில் இது ஒரு வசதி இல்லை என்றாலும் இதனை ஒருமுறை பயன்படுத்தியவர்கள், பெரும்பாலும் இதனை நாடுகின்றனர் என்பதே இதன் சிறப்பு. இங்கு இந்த ஸ்டிக்கி நோட்ஸ் குறித்து பார்க்கலாம்.
கணணியிலேயே இதனை ஒருங்கிணைத்துக் கொடுப்பதால் இயக்கத்திற்கு இதனைக் கொண்டு வருவது எளிது. ஸ்டார்ட் சர்ச் பாக்ஸில் sticky என டைப் செய்திடவும்.
இதன் மூலம் ஸ்டிக்கி நோட்ஸ் சிறிய புரோகிராமினை இயக்கத்திற்குக் கொண்டு வரலாம். மிக விரைவாகவும் இதனைக் கையாளலாம். இயக்கத்திற்குக் கொண்டு வந்தவுடன், ஒரு காலியாக ஸ்டிக்கி நோட், டெஸ்க்டொப்பில் காட்டப்படும்.
இதனை டெஸ்க்டொப்பில் எங்கு வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். பின்னர் இதில் உங்கள் நோட்ஸை டைப் செய்திடலாம்.
டைப் செய்திடுகையில், அதன் தேவைக்கேற்ப இந்த நோட் விரிவடையும். இதன் எல்லையை அடைந்தவுடன் சுருளும் தோற்றத்தைப் பெறும். இருப்பினும் இதன் அளவை நாம் விரும்பும் வகையில் அமைத்துக் கொள்ளலாம்.
இந்த ஸ்டிக்கி நோட்டின் வண்ணத்தையும் மாற்றலாம். இதற்கு ஸ்டிக்கி நோட்டின் உள்ளாக, ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் வண்ணத்தை மாற்றலாம்.
புதிய ஸ்டிக்கி நோட் ஒன்று உருவாக்க, பழையதில் மேலாக இடது மூலையில் உள்ள நோட்டில் காணப்படும் + அடையாளத்தில் கிளிக் செய்திட வேண்டும். அல்லது [Ctrl]+[N] என்ற கீகளை அழுத்த வேண்டும்.
நோட் ஒன்றை அழிக்க, மேல் வலது மூலையில் உள்ள எக்ஸ்(“+ button”) பட்டனில் கிளிக் செய்தால் போதும். அல்லது என்ற [Ctrl]+[D] கீகளை அழுத்த வேண்டும்.
ஸ்டிக்கி நோட் இயக்கத்தைத் தொடங்கியவுடன், டாஸ்க் பாரில் இதற்கான பட்டன் தோன்றுவதனைக் காணலாம். இதில் கிளிக் செய்வதன் மூலம் அனைத்து ஸ்டிக்கி நோட்களையும், மினிமைஸ் செய்து வைக்கலாம்.
அதே போல இதன் மீது கிளிக் செய்தால் அவை இயக்கப்பட்டு திரையில் தோன்றும். நோட் ஒன்றை உருவாக்கியவுடன், அது தானாகவே சேவ் செய்யப்படும். அதாவது எங்கே எழுதி வைத்தது மீண்டும் கிடைக்காதோ என்ற பயமின்றி அதனை மூடலாம்.
நோட்டினை மூடி வைக்க ரைட் கிளிக் செய்து Close Window கட்டளையைத் தேர்வு செய்து கிளிக் செய்திடலாம். மீண்டும் ஸ்டிக்கி நோட் கட்டளையை இயக்குகையில், அனைத்து ஸ்டிக்கி நோட்களும் திரையில் தோன்றும்.
ஸ்டிக்கி நோட் தோன்றுகையில், அதன் மாறா நிலையில் உள்ள எழுத்து வகையில் இருக்கும். இதனையும் நீங்கள் விரும்பும் எழுத்து வகையில் மாற்றிக் கொள்ளலாம். ஒவ்வொரு வகை ஸ்டிக்கி நோட்டிற்கும், ஒரு எழுத்து வகையினைக் கையாளலாம். எழுத்தை மாற்ற, எந்த ஒரு முறையான வழியும் இதில் தரப்படவில்லை.
எனவே நீங்கள் மாற விரும்பும் எழுத்தில் அமைக்கப்பட்ட ஒரு சொல்லினை இதில் கொப்பி செய்தால், அந்த எழுத்திலேயே தொடர்ந்து ஸ்டிக்கி நோட் அமைக்கலாம். நீங்கள் எந்த எழுத்தில் நோட் அமைக்கிறீர்களோ, அந்த எழுத்தே, மாறா நிலையில் உள்ள எழுத்தாக அமைந்திடும். தொடர்ந்து அதனையே பயன்படுத்தி டைப் செய்துவிடலாம்.
நோட்டில் டைப் செய்த டெக்ஸ்ட்டை, வழக்கம் போல மற்ற வேர்ட் ப்ராசசர்களில் போர்மட் செய்வது போல, அழுத்தம், சாய் வெழுத்து, அடிக்கோடு, இடது, வலது, சமமான இன்டென்ட், எழுத்து அளவினைப் பெரிதாக்குதல், சிறிதாக்குதல் என அனைத்து வேலைகளையும் மேற்கொள்ளலாம். அதே ஷார்ட் கட் கீகளைப் பயன்படுத்தலாம். (Ctrl+B,Ctrl+I,Ctrl+T, Ctrl+U etc.,)
நோட் ஒன்றை அழிக்கையில், அது உங்களுக்கு எச்சரிக்கை செய்தியை வழங்கும். அழித்துவிடவா மீண்டும் கிடைக்காது? என்ற கேள்வியைத் தரும். சில வேளைகளில், இந்த செய்தி எல்லாம் எனக்கு வேண்டாம் என்ற விருப்பபாட்டை நாம் தேர்ந்தெடுப்போம்.
அப்படிப்பட்டவர்களுக்கு ஓர் எச்சரிக்கை. அழிக்கப்படும் ஸ்டிக்கி நோட், அவ்வளவுதான். ரீசைக்கிள் பின்னுக்கெல்லாம் எடுத்துச் செல்லப்படாது. அழித்துவிட்டால் மீண்டும் கிடைக்காது.
இந்த ஸ்டிக்கி நோட் சேவ் செய்யப்பட்டு உங்களுக்கு வேண்டும் என்றால் சேவ் செய்து கொள்ளலாம். StickyNotes.snt என்ற பெயரில் இது சேவ் செய்யப்படும். இதனை C:Users{username}AppDataRoamingMicro softSticky Notes என்ற கோப்பறையில் காணலாம்.

ஐபோன் மற்றும் அன்ட்ரொய்ட் கைபேசிகளில் குறிப்புகளை எடுத்து வைப்பதற்கு


ஐபோன் மற்றும் அன்ட்ரொய்ட் கைபேசியை பயன்படுத்துபவர்கள் சில விடயங்களை மறந்து விடாமல் இருப்பதற்காக குறிப்பெடுத்து வைக்க விரும்புவீர்கள்.
இதற்கென சந்தையில் ஏராளமான மென்பொருட்கள் இருக்கின்ற போதும் பயன்படுத்த இலகுவான வடிவமைப்புடனும், அதிக வசதிகளையும் கொண்ட மென்பொருட்களே முதல் இடம் வகிக்கின்றன.
இதில் பதிவு செய்து கொண்டால் 100 MB அளவுக்கு இலவசமாக குறித்து வைக்கும் தகவல்களை CLOUD இல் சேமித்து தேவையான டிவைஸ்களில் பெற்றுக் கொள்ள முடிகின்றது.

புவி நாளில் அறிமுகப்படு​த்தப்பட்ட LG Optimus Elite smartphone

கைப்பேசி உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் ஒன்றான LG புவி நாளான இன்றைய தினத்தில் தனது புதிய LG Optimus Elite smartphoneகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
இவை அன்ரோயிட் 2.3 இயங்குதளத்தைக் கொண்டிருப்பதுடன் 3.5 அங்குல தொடுதிரை வசதியையும் உள்ளடக்கியதாக காணப்படுகின்றது.
மேலும் 5 மெகாபிக்சல்கள் உடைய கமெரா, 800 MHz processor ஆகிய சிறப்பம்சங்களும் உள்ளடங்கியுள்ளன. இதன் பெறுமதியானது 30 அமெரிக்க டொலர்களாகக் காணப்படுவதுடன் இரண்டு வருடத்திற்கான சேவை வழங்குதற்கான ஒப்பந்தத்தையும் உள்ளடக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உலாவியாகவும் செயல்படக்கூடிய தேடியந்திரம்

ஸ்லிக் என்று புதிதாக அறிமுகமாகி உள்ள தேடியந்திரம், வெறும் தேடியந்திரமாக மட்டுமல்லாமல், அதுவே உலாவியாகவும் செயல்படக் கூடியவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.
21ஆம் நூற்றாண்டில் தேடலை எடுத்து செல்வதாக கூறிக்கொள்ளும் ஸ்லிக் உலகின் முதல் தேடல் உலாவி என்று அழைத்து கொள்கிறது.
வழக்கமாக என்ன செய்வீர்கள் கூகுள் போன்ற தேடியந்திரத்தில் நுழைந்து குறிச்சொல்லை டைப் செய்து தேடுவீர்கள். அதன் பிறகு எந்த தேடல் முடிவை பார்க்க வேண்டுமே அதில் கிள்க் செய்தால் தனியே இன்னொரு இணைய பக்கம் தோன்றும். அடுத்த முடிவு தேவை என்றால் மீண்டும் ஒரு கிளிக், மீண்டும் ஒரு விண்டோ ஓபன் ஆகும். இவ்வாறு தான் நாம் தகவல்களை தேடுகிறோம்.
இப்படி ஒவ்வொரு இணையதளமாக தனியே விஜயம் செய்வத‌ற்கு பதில் எந்த பக்கத்தில் தேடுகிறோமோ அதே பக்கத்திலேயே புதிய இணைய பக்கத்தை பார்த்து விடலாம்.
தேடல் முடிவுகளில் எதன் மீது கிளிக் செய்தாலும் அதற்கான இணையத்தளம் அதே பக்கத்தில் அருகில் தோன்றுகிறது. ஆகவே தேடல் பக்கத்தில் இருந்து வெளியேறாமலே தேடல் முடிவுகளை பார்க்கலாம்.
அதே போல தேவைப்பட்டால் ஒரே பக்கத்தில் பல வகையான முடிவுகளையும் பார்க்க முடியும். அதாவது இடது பக்கத்தில் தேடல் முடிவுகள், வலது பக்கத்தில் டிவிட்டர் பதிவுகள் என பார்க்கலாம்.
மேலும் நாம் திறந்த எல்லா இணையத்தளங்களையும் ஒரே நேரத்தில் பார்க்கலாம். இணையத்தள‌ங்களை நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளலாம். நம‌க்கான இணைப்புகளையும் தனியே உருவாக்கி கொள்ளலாம்.

April 19, 2012

தடை செய்யப்பட்ட இணையத்தளங்களை பார்ப்பதற்கு

முடக்கப்பட்ட அல்லது தடை செய்யப்பட்ட இணையத்தளங்களை எளிதாக பார்க்கலாம். இதற்கு ஒரு தளம் உதவி புரிகிறது.
ஆனால் தடை செய்யப்பட்ட அனைத்து தளங்களையும் பார்க்க முடியாது.
அன் டைனி தளம் என்ன செய்கிறது என்றால் இணைய முகவரிகளின் சுருக்கங்கள் முடக்கப்பட்டால் அவற்றின் பின்னே உள்ள மூல முகவரிக்கு சொந்தமான தளங்களை பார்வையிட உதவுகிறது.
டிவிட்டரில் இணைப்புகளை பகிர்ந்து கொள்ளும் போது, அதன் வரம்பு கருதி இணையத்தள முகவரிகளை சுருக்கி பகிர்ந்து கொள்ளும் பழக்கம் பிரபலமாக உள்ளது அல்லவா? டிவிட்டர் பயனாளிகள் பலரும் இந்த இணைய முகவரி சுருக்கங்களை பயன்படுத்துகின்றனர்.
சில நேரங்களில் குறும்பதிவுகள் தணிக்கைக்கு ஆளாகும் போது இந்த இணைப்புகள் முடக்கப்பட்டு விடும். இதனால் இணைப்பில் சுட்டிக் காட்டப்பட்டுள்ள தளத்தை பார்க்க முடியாமல் போகலாம்.
இது போன்ற நேரங்களில் முடக்கப்பட்ட அந்த இணைப்பின் பின்னே உள்ள மூல இணையத்தளத்தை தடையின்றி பார்க்க உதவுவது தான் அன் டைனியின் பணி.