May 31, 2013

மிக எளிமையாக Paypal கணக்கு துவங்குவது எப்படி?


PayPal-processing-credit-card
Sign up for PayPal and start accepting credit card payments instantly.
இது வரை இந்தியர்கள் Paypal கணக்கு துவங்குவது என்பது மிகவும் கடினமான வேலையாக இருந்தது. உங்களுக்கு Paypal கணக்கு இருக்க உங்களிடம் CreditCard இருக்க வேண்டும் என்பது ஒரு அடிப்படைத் தேவையாக இருந்தது.
இனிமேல் CreditCard  தேவையில்லை.  இந்தியர்கள் அதிகமாக Paypal பயன்படுத்துவதை உணர்ந்த அந்த நிறுவனம் புதிய கணக்குகளை துவங்குவதை எளிமையாக்கியுள்ளது.
இந்த தொடுப்பை க்லிக் செய்யவும் CLICK HERE
STEP 1: Signup Today எனும் லிங்கை க்லிக் செய்யவும்.
STEP 2:  “Business” எனும் மூன்றாவது பிரிவில் உள்ள “Get Started” எனும் buttonஐ க்லிக் செய்யவும்.
Business கணக்கில் தான் உங்களால் பிறரிடம் இருந்து அவர்களின் CreditCard வழியாக வரும் பணத்தைப் பெற முடியும்.
நீங்கள் பிற முறையான “Personal” “Premier” வகையான கணக்குகளையும் ஆரம்பிக்கலாம்.
STEP 3: பின்வரும் படிவத்தைப் பூர்த்தி செய்யவும்.
STEP 4: தங்களின் மின்னஞ்சளுக்கு ஒரு verification link  அனுப்பப்படும்.
STEP 5: பிறகு உங்களின் paypal கணக்கில் login செய்யவும்.
STEP 6: இது தான் மிகவும் முக்கியமான படி., Status: Unverified Get verified   இதில் “Get Verified” என்பதை க்லிக் செய்யவும்.
Paypal லில் Verified செய்யப்பட்ட கணக்கு இருந்தால் தான் உங்களால் பணத்தை $500 க்கு மேல் பரிவர்த்னை செய்ய இயலும்.
STEP 7: “Add Bank Account” எனும் பகுதியில் சென்று பின்வரும் விவரங்களைக் கொடுக்கவும்.
Account Number:
Account Holder Name:  உங்களின் paypal கணக்கில் இருக்கும் பெயரும், வங்கிக் கணக்கில் இருக்கும் பெயரும் ஒரே பெரியராக இருக்க வேண்டும்.
NEFT IFSC Code: இது உங்களின் வங்கி காசோலை புத்தகத்தில் அச்சிடப்பட்டு இருக்கும் அல்லது., இந்தத் தளத்தில் இந்தியாவில் இருக்கும் அனைத்து வங்கிக் கிளைகளின் IFSC எண்கள் உள்ளது.
http://bankifsccode.com/
http://www.indian-banks.info/
STEP 8: பிறகு “Add Bank Account” எனும் button ஐ க்லிக் செய்யவும்.
STEP 9:  Paypal நிறுவனம் உங்களின் வங்கி கணக்கிற்கு 2  பணப் பரிவர்த்னைகளை நிகழ்த்தும்.  அந்தப் பரிவர்த்னைகளின் பண மதிப்பு என்ன என்பதை  2-3 நாட்கள் கழித்து உங்களின் வங்கிக் கணக்கில் பார்க்கவும். பொதுவாக அந்தப் பண மதிப்பு 1.47 Rs. போன்று மூன்று இலக்க மதிப்பில் இருக்கும். அந்த மதிப்பை நீங்கள் உங்களின் Paypal கணக்கில் உள்ள “Confirm Bank” எனும் பகுதியில் சென்று கொடுக்கவேண்டும்.
அவ்வளவுதான், நீங்கள் இனி இணையம் வழியாக யாரிடமும் எந்த நாட்டில் இருந்தம் பணத்தைப் பெறலாம். அந்தப் பணத்தை எளிதாக உங்களின் வங்கிக் கணக்கிற்கு மாற்றலாம்.
உங்களின் சந்தேகங்களை இங்கே கேட்கவும், நான் உங்களுக்கு பதில்களைத் தருவேன்.

கணினியின் மெமரியை அதிகரிக்க Free Memory Improve Master இலவச மென்பொருள்

கணினியின் வேகத்தை நிர்ணயிப்பதில் RAM முக்கிய பங்கு வகிக்கிறது.  கணினியில் ஒரே நேரத்தில் நாம் பல எண்ணற்ற வேலைகளை செய்து கொண்டு இருப்போம். ஒரு பக்கம் அலுவலக வேலை பார்ப்போம், இன்னொரு  பக்கம் நம்முடைய வலைப்பதிவை பார்த்துக் கொண்டிருப்போம். அவ்வாறு செய்து கொண்டு இருக்கும் போது கணினியின் memory அதிகமாக உபயோகப்படுத்தப்படும். அதனால் கணினியும் வேகம் குறைந்து காணப்படும். இதனை எவ்வாறு சரி செய்வது என்று இப்போது பார்ப்போம்.
http://www.box.com/shared/05v35tvo0q இந்த link-ல் சென்று மென்பொருளை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். அதனை கணினியில் install செய்து விட்டால் போதும் கணினியில் நீங்கள் எத்தனை programme ஒரே நேரத்தில் இயங்கினாலும் அதன் memory-யை கட்டுப்படுத்தி கணினியின் வேகத்தை குறையாமல் பார்த்து கொள்ளும்.
Download செய்தவுடன் நமக்கு வந்திருக்கும் free-mim என்ற Setup file வந்திருக்கும். அதை இரண்டு முறை click செய்து மென்பொருளை Install செய்து கொள்ளுங்கள். மென்பொருளை Install செய்ததும் உங்களுக்கு கீழே இருப்பதை போல window வரும்
மேலே குறிப்பிட்டு காட்டி இருக்கும் இடத்தில் இந்த மென்பொருளின் வசதிகள் இருக்கும். இதில் ஐந்து  வகையான பிரிவுகள்  நமக்கு தெரியும்.
  • Information Overview
  • Memory Optimization
  • System Tuneup
  • Process Management
  • Configuration and Settings - என்ற பிரிவுகள் காணப்படும்.
Information Overview : 
 இந்த button click செய்தவுடன் நமக்கு கீழே உள்ளதைப் போல window வரும்.
இந்தப் பிரிவில் கணினி இப்பொழுது எவ்வளவு memory உபயோகப்படுத்தபடுகிறது என்ற விவரம் இதில் நமக்கு தெரியும். இந்த window-வில் உங்களுக்கு கீழே Good என்ற இது போல செய்தி வந்தால் உங்களுடைய கணினி போதிய அளவு memory காலியாக உள்ளது என்று அர்த்தம்.
Memory Optimization 
இந்தப் பிரிவில் சென்றால் உங்களுக்கு கீழே இருப்பதைப் போல window வரும்.
  • இந்த window-வில் Fast Free, Deep Compress என்ற இரு வசதிகள் இருக்கும் இவை இரண்டுமே நம் கணினியின் memory-ஐ கட்டுப்படுத்த உதவும் வசதிகளாகும்.
  • இதில் உள்ள Fast Free என்பதை click செய்தால் கீழே இருப்பதைப் போல ஒரு message window வரும்.
  • அதில் கணினி இதற்கு முன்னர் எவ்வளவு மெமரியை உபயோகித்தது. இப்பொழுது இந்த மென்பொருள் எவ்வளவு மெமரியை கட்டுப்படுத்தி உள்ளது என்ற விவரம் வரும்.
  • இதை நீங்கள் ஒவ்வொரு முறையும் செய்ய வேண்டியதில்லை ஒவ்வொரு பத்து நிமிடங்களுக்கும் அது தானாகவே இயங்கி கணினியின் மெமரியை கட்டுபடுத்தும்.
  • இடைவெளி நேரத்தை மாற்ற விரும்பினால் அதற்கு Auto Free every என்ற இடத்தில் உங்களுடைய நேரத்தை தேர்வு செய்து Save செய்துவிடுங்கள்.
அடுத்து உள்ள மூன்று பிரிவுகளும் மென்பொருளின் அமைப்பை சரிசெய்வதர்க்கும் கணினியில் எந்த file-கள் எவ்வளவு மெமரியை உபயோகித்துக் கொள்கிறது போன்ற தகவல்கள் கொண்டிருக்கும்.

இணையம் உங்களின் மூளையை என்ன செய்கிறது?

நம்மில் பலருக்கும் இணையம் பயன்படுத்துவது ஒரு அன்றாடச் செயல்.  ஒரு காலத்தில் YouTube / Orkut / YahooChat என்று இருந்த இணையம் பற்பல புதிய முறை தகவல் தொடர்பு வழிகளை ஏற்படுத்தி உள்ளது.
இணையத்தின் பல சேவைகள் நம் சிந்தனையை திசை திருப்பும் விசயங்களாகவே உள்ளன. கவனம் சிதறாமல் ஒரு செயலை இணைய உதவியுடன் செய்வது வர வர மிகக் கடினமாகவே இருக்கிறது.
Facebook , Twitter , Email ஆகியவற்றை ஒரு நாளில் இவ்வளவு நேரம் தான் பயன்படுத்த வேண்டும் என நம்மில் பலராலும் நேர நிர்ணயம் செய்ய இயலவில்லை.
கணினி முன் தவம் இருப்பதை விட்டு பல புதிய விசயங்களை நிகழுலகில் கற்கும் போது நம் மூளைக்குள் பல புதிய நியுரான் இணைப்புகள் ஏற்படுமாம்.