May 19, 2012

அப்பிளின் ஐ.ஓ.எஸ் குறைபாடுகளால் ஐபோன், ஐபேட்கள் மற்றும் கணணி பாதிக்கப்படலாம் என எச்சரிக்கை

அப்பிளின் ஐ.ஓ.எஸ். இயங்குதளத்தில் பாதுகாப்புக் குறைபாடுகள் காணப்படுவதனால் கூடியவிரைவில் மெல்வெயார்களின் பாதிப்புக்குள்ளாகக் கூடிய சாத்தியம் நிலவுவதாக கணணி பாதுகாப்பு மென்பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனமான கெஸ்பர்ஸ்கை எச்சரிக்கைவிடுத்துள்ளது.
இதன் மூலம் இயங்கும் ஐபோன் மற்றும் ஐபேட்கள் பாதிக்கப்படுமெனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இன்னும் ஒரு வருடத்திற்குள் இப் பாதிப்பு ஏற்படலாமென கெஸ்பர்ஸ்கை எதிர்வுகூறியுள்ளது.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள கெஸ்பர்ஸ்கை நிறுவனத்தின் பிரதான தொழில்நுட்ப அதிகாரியான நிகொலாய் கிரிபனிகோவ் இது தொடர்பில் அவதானமாக இருக்கும்படி அப்பிள் நிறுவனத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஐபோன் சாதனங்கள் மெல்வெயார்களினால் பாதிக்கப்படுவது அரிதானதெனவும், jail-break செய்யப்படும் ஐபோன்களே அதிகமாகப் பாதிக்கப்பட்டுவந்ததாகவும் நிகொலாய் தெரிவித்துள்ளார். எனினும் தற்போதைய நிலைமை அவ்வாறில்லையெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுவாக அண்ட்ரோய்ட் இயங்குதளங்களே அதிகமாக மெல்வெயாரினால் பாதிக்கப்பட்டு வந்தது. குறிப்பாக 2011 ஆம் ஆண்டு அதன் முன்னைய ஆண்டினை விட 400% அதிகமாக அண்ட்ரோய்ட் சாதனங்கள் மெல்வெயாரினால் பாதிப்புக்குள்ளானது.
அண்ட்ரோய்ட் மூலம் இயங்கும் கையடக்கத்தொலைபேசிகளைப் போல ஐபோன்களும் தற்போது அதிகமாக விற்பனையாகிவருவதால் தற்போது ஹெக்கர்கள் அதனை நோக்கித் தமது கவனத்தினை திசைத்திருப்பியுள்ளதாகத் தெரிகின்றது.
ஐபோன்கள் மட்டுமன்றி மெக் கணனிகளும் தற்போது அதிகமாக மெல்வெயார்களின் தாக்குதலுக்குள்ளாகி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 10 -12 வருடங்களுக்கு முன்னர் மைக்ரோசொப்டின் கணனிகள் எவ்வாறு தொடர்ச்சியாகப் பாதிக்கப்பட்டதோ அத்தகைய பாதிப்பினையே தற்போது அப்பிளும் முகங்கொடுக்க நேர்ந்துள்ளதாக அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
எனவே அப்பிள் தனது உற்பத்திகளின் பாதுகாப்புத் தொடர்பில் அதிககவனம் செலுத்தவேண்டுமென அவர்கள் எச்சரிக்கின்றனர்.

பென்டிரைவில் பாதுகாப்பான Safely Remove வசதி

யு.எஸ்.பி டிரைவ்களை பயன்படுத்தும் போது, அவசரத்தில் Safely Remove கொடுக்காமல் மறந்து விடுகிறோம். 
இதனால் பென்டிரைவ் போன்ற யு.எஸ்.பி டிரைவ்கள் பழுதடைய வாய்ப்பு அதிகம். Safely Remove கொடுக்காமல், அதே நேரம் பென்டிரைவிற்கு எந்தவித பிரச்னையும் வராமல் தடுக்கலாம்.
இதற்கு,
1. முதலில் உங்கள் பென்டிரைவ் அல்லது வேறு ஏதேனும் USB Device ஒன்றை உங்கள் கணணியில் செருகவும்.
2. இப்போது My Computer மீது ரைட் கிளிக் செய்து Manage என்பதை கிளிக் செய்யவும். இப்போது புதிய விண்டோ ஒன்று வரும், அதில் இடது புறத்தில் Device Manager என்பதை தெரிவு செய்யவும்.
3. இப்போது உங்கள் கணணியில் உள்ள Device கள் அனைத்தும் அதில் காண்பிக்கப்படும். அதில் Disk Drives -இல் உங்கள் Pen Drive/ USB Device பெயரை கண்டுபிடிக்கவும். அதன் மீது Double Click செய்யவும்.
4. இப்போது வரும் புதிய விண்டோவில் Policies என்ற Tab-ல் "Quick removal (default)" என்பதை தெரிவு செய்யவும்.
அவ்வளவு தான், இனிமேல் நீங்கள் Safely Remove என்பதை கொடுக்க தேவையில்லை.

கூகுள் மொழி பெயர்ப்பு குறித்த சில தகவல்கள்

கூகுள் தன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் பலவிதமான வசதிகளில், அதன் மொழி பெயர்க்கும் வசதியும் ஒன்று.
மிகத் துல்லியமாக மொழி பெயர்க்காவிட்டாலும், பொருள் புரிந்து கொள்ளும் வகையில் இதன் மொழி பெயர்ப்பு உள்ளதாக, உலகமெங்கும் உள்ள பல மொழி வாடிக்கையாளர்கள் கூறி உள்ளனர்.
ஓராண்டில் உலகெங்கும் உள்ள மொழி பெயர்ப்பாளர்கள் மேற்கொள்ளும் மொழி பெயர்ப்பினைக் காட்டிலும், ஒரே நாளில் கூகுள் ட்ரான்ஸ்லேட் மொழி பெயர்ப்பது அதிகம் என கூகுள் அறிவித்துள்ளது.
ஒரு மாதத்தில் 20 கோடிக்கும் அதிகமானோர் இந்த வசதியைப் பயன்படுத்துகின்றனர். சராசரியாக, பத்து லட்சம் நூல்களில் நாம் சந்திக்கக் கூடிய சொற்களுக்கு இணையாக, கூகுள் ட்ரான்ஸ்லேட் சாதனம் ஒரு நாளில் மொழி பெயர்க்கிறது.
இந்த வகையில் பார்த்தால் நம் பூமியில், கூகுள் ட்ரான்ஸ்லேட் மூலம் தான் அதிக அளவில் மொழி பெயர்ப்பு மேற்கொள்ளப்படுகிறது எனலாம்.
2001ஆம் ஆண்டு கூகுள் ட்ரான்ஸ்லேட் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. தொடக்கத்தில் ஆங்கிலத்திலிருந்து எட்டு மொழிகளுக்கு மொழி பெயர்க்கும் வசதி தரப்பட்டது. அதன் பின்னர், மொழி பெயர்ப்பில் வேகம் மற்றும் துல்லியம் தரும் வகையில் தன் சேவையினை மேம்படுத்தியது கூகுள்.
பின்னர் படிப்படியாக கூடுதலான மொழிகள் இணைக்கப்பட்டன. இன்று 64 மொழிகளில் கூகுள் ட்ரான்ஸ்லேட் மொழி பெயர்க்கிறது. இவற்றில் அஸர்பெய்ஜான், ஐஸ்லாண்டிக், ஸ்வாஹிலி, பெங்காலி, பாஸ்க் மற்றும் வெல்ஷ் ஆகியவையும் அடங்கும். ஒரு வாக்கியத்தை ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் மொழி பெயர்த்துத் தரும் திறனை கூகுள் உருவாக்கியுள்ளது.
இதனைப் பயன்படுத்துபவர்கள் பெரும்பாலும் தாங்கள் பயணத்தில் இருக்கையில் மேற்கொள்கிறார்கள். 92% மேலான மொழி பெயர்ப்பு பணிகள் அமெரிக்காவிற்கு வெளியே தான் மேற்கொள்ளப்படுகிறது.
இந்த வசதி மொபைல் போன்களில் டெக்ஸ்ட் மொழி பெயர்ப்புக்கும் தரப்பட்டுள்ளது. குரோம் பிரவுசர் வழி எந்த ஓர் இணைய தளத்தினையும் மொழி பெயர்த்துக் காணலாம்.
கூகுள் ட்ரான்ஸ்லேட் மூலம் ஓரளவிற்கே மொழி பெயர்க்க இயலும். முழுமையான பொருள் மாற்றம் கிடைக்காது. அது மனிதர்களால் மட்டுமே முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜிமெயிலில் இணைக்கப்பட்​டுள்ள கோப்புக்களை கூகுள் ட்ரைவில் சேமிப்பதற்​கு

கூகுளின் ஜிமெயிலில் இணைக்கப்படும் கோப்புக்களை அதே நிறுவனம் வழங்கும் ஒன்லைன் சேமிப்பகமான கூகுள் ட்ரைவில் நேரடியாக சேமிக்க முடியும்.
இந்த வசதியை ஏற்படுத்திக் கொள்வதற்கு Gmail Attachments To Drive (https://chrome.google.com/webstore/detail/epoohehjbaenldfbahgcegdmlogakgin) எனும் நீட்சியை கூகுள் குரோம் உலாவியில் நிறுவ வேண்டும்.
அதன் பின் உங்கள் பயனர் கணக்கினுள் உள்நுளைந்து மின்னஞ்சலில் இணைக்கப்பட்டுள்ள pdf,docx  போன்ற பல்வேறு கோப்புக்களில் காணப்படும் Save to Drive என்பதை அழுத்தினால் போதும், அந்தக் கோப்பானது உங்கள் கூகுள் ட்ரைவில் சேமிக்கப்பட்டுவிடும்.

ஜூனில் இணையத்தின் அடுத்த பரிணாமமான IPV6 அறிமுகம் (வீடியோ இணைப்பு)

எதிர்வரும் ஜூன் மாதம் 6ஆம் திகதி, இணையத்தின் புதிய தொழிநுட்பமான IPV6(Internet Protocol Version 6) அறிமுகம் செய்யப்படுகிறது.
ஒவ்வொரு வீட்டிற்கும், அலுவலகத்திற்கும் எப்படி ஒரு விலாசம் இருக்குமோ, அது போன்று தான் ஒவ்வொரு இணையத்திற்கும் ஒரு விலாசம் உண்டு. இதனை IP Address என்று அழைப்பர்.
இதன் மூலம் நீங்கள் டைப் செய்யும் இணைய முகவரி சரியான சர்வருக்கு அழைத்துச் செல்லப்படும்.
உதாரணத்திற்கு நீங்கள் www.facebook.com என்று உங்கள் கணணியில் டைப் செய்தால், உடனே இந்த இணைய முகவரி சரியான சர்வருக்கு அழைத்து செல்லப்படும். இதற்கு உதவுவது தான் இந்த இன்டர்நெட் புரோட்டோகால்.
இதுவரையிலும் இதற்கு நாம் IPV4-ஐ தான் பயன்படுத்திக் கொண்டிருந்தோம். இது 4-32 Bit Techonology, 430 Unique Address மட்டுமே இருக்க முடியும்.
Sample IPV4 address - 70.33.247.68.
எனவே IPV4 முடிவடையும் தருவாயில் உள்ளதால், இதனை கருத்தில் கொண்டு IETF(Internet Engineering Task Force), புதுவித அம்சங்களுடன் கூடிய IPV6-ஐ அறிமுகம் செய்ய உள்ளது.
இது 128 Bit Techonology, பல லட்சக் கணக்கில் Unique Address களை பெற முடியும். மேலும் IPV4-ல் இருந்த முக்கிய பிரச்னையான NAT(Network Address Translation) இதில் இருக்காது. இதனால் பல நபர்கள் ஒரே IP Address-ஐ பயன்படுத்த முடியும்.
Sample IPV6 address - 2001:db8:ffff:1:201:02ff:fe03:0405
மேலும் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்தால் உங்களது நெட்வொர்க் IPV6 தயாரா என்பதை தெரிந்து கொள்ளலாம்.

ஐ போன்களின் வடிவத்தில் உருவாக்கப்​பட்டுள்ள Sony Xperia GX கைப்பேசிகள்

சோனி நிறுவனமானது ஐ போன்களின் வடிவில் உருவாக்கப்பட்டுள்ள உலகத்தரம் வாய்ந்த Xperia GX கைப்பேசிகள் தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
13.2 மெகா பிக்சல்கள் கொண்ட கமெராவை உள்ளடக்கிய இக்கைப்பேசியின் கீழ்ப்பகுதியில் சோனி நிறுவனத்தின் இலட்சினை பொறிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் இக்கைப்பேசி ஜப்பானின் தூய தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளமையை வாடிக்கையாளர்கள் உறுதிப்படுத்த முடியும் என்பதுடன் இக்கைப்பேசிகள் மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Upload File: பேஸ்புக்கின் புத்தம் புதிய வசதி

சமூக வலைத்தளங்களில் முன்னணியில் இருக்கும் பேஸ்புக், தற்போது பயனாளர்களுக்காக புதிய வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது.
இந்த வசதியின் மூலம் உங்களிடம் உள்ள கோப்புகளை மற்ற தளங்களின் உதவி இல்லாமல் நேரடியாக பதிவேற்றம் செய்து பகிர்ந்து கொள்ளலாம்.
உதாரணமாக உங்களிடம் ஒரு பிடிஎப் கோப்பு இருக்கிறது என வைத்து கொள்வோம், இதற்கு முன்னர் மற்ற தளங்களில் பதிவேற்றம் செய்து அந்த லிங்கை தான் பேஸ்புக்கில் பகிர முடியும். இனி அப்படி செய்ய தேவையில்லை நேரடியாக பேஸ்புக்கிலேயே பகிர்ந்து கொள்ளலாம்.
25MB வரை அளவுடைய கோப்புகளை இதில் பதிவேற்றம் செய்ய முடியும். மற்றும் இதில் ஓடியோ மற்றும் exe கோப்புகளை தவிர்த்து பெரும்பாலான வகை கோப்புகளை பதிவேற்றம் செய்து உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ள முடியும்.

உலாவியில் தவறாக அழித்த புக் மார்க் கோப்புகளை திரும்ப பெறுவதற்கு

இன்டர்நெட் உலாவியில் புக்மார்க்குகள் முக்கிய இடம் வகிக்கின்றன. நாம் அடிக்கடி செல்ல விரும்பும், முக்கிய தளம் எனக் கருதும் தளங்களுக்கான முகவரிகளைக் குறித்து வைப்பதே புக்மார்க்.
ஒவ்வொரு முறையும், தள முகவரியினை டைப் செய்திடாமல் இந்த புக்மார்க்குகளில் கிளிக் செய்து தளத்தினைப் பெறலாம். இவ்வளவு முக்கிய புக்மார்க்குகளைத் தவறுதலாக அழித்துவிட்டால் என்ன செய்வது? திரும்பப் பெறும் வழிகள் எவை? இங்கு பார்க்கலாம்.
குரோம் மற்றும் பயர்பொக்ஸ் உலாவியில் அழிக்கப்பட்ட, நீக்கப்பட்ட, புக்மார்க்குகளைத் திரும்பப் பெறும் வழிகள் தரப்பட்டுள்ளன. குரோம் உலாவியில் இது சற்று கடினமான வழியாக அமைக்கப்பட்டுள்ளது.
புக்மார்க்குகளுக்கான பக் அப் கோப்பு சிறிய, மறைத்து வைக்கப்பட்ட கோப்பாக குரோம் உலாவியில் உள்ளது. இதனை நாமாகத்தான் தேடிக் கொண்டு வர வேண்டும். இந்த கோப்பு அடிக்கடி இதன் மேலாகவே எழுதப்படுகிறது.
பயர்பொக்ஸ் உலாவியில் இது மிக எளிது. பயர்பொக்ஸ் புக்மார்க் மேனேஜர் பிரிவில், அழிக்கப்பட்ட புக்மார்க்கினை உடனடியாக மீட்க ஒரு “undo” வசதி தரப்பட்டுள்ளது. உலாவியும் தானாக, குறிப்பிட்ட கால இடைவெளியில் புக்மார்க்குகளை பக் அப் செய்கிறது.
இந்த பக் அப் கோப்பை பல நாட்கள் பயர்பொக்ஸ் வைத்துக் காக்கிறது. இதனை எப்போது வேண்டுமானாலும், நாம் எளிதாக எடுத்துக் கொள்ளலாம். மறைக்கப்பட்ட கோப்பறைகளை தேடி அலைந்து தோண்டி எடுக்கும் வேலை எல்லாம் இதில் இல்லை.
குரோம் உலாவியின் புக்மார்க் மேனேஜரில் “undo” ஆப்ஷன் இல்லை. இதில் உள்ள export ஆப்ஷனைப் பயன்படுத்தி ஏற்கனவே இதன் பக் அப்பினை நீங்கள் தயாரித்து வைத்திருந்தால், அவற்றை import செய்து மீண்டும் பெறலாம். ஆனால் இந்த பக் அப்பிற்குப் பின்னால் ஏற்படுத்திய புக்மார்க்குகள் கிடைக்காது.
குரோம் உலாவி உங்கள் புக்மார்க் கோப்பினை ஒரே ஒரு பக் அப் கோப்பாக பராமரிக்கிறது. ஒவ்வொரு முறை குரோம் உலாவியை இயக்கும் போதும் அது, அந்த பக் அப் கோப்பை மீண்டும் எழுதிக் கொள்கிறது.
எனவே புக்மார்க் கோப்பு உள்ள போல்டரை அழித்துவிட்டால், குரோம் உலாவியை மூடக் கூடாது. மீண்டும் இயக்கக் கூடாது. அப்படி இயக்கினால், பக் அப் கோப்புகள் புக்மார்க்குகள் அழிக்கப்பட்ட நிலையில் எதுவும் திரும்பக் கிடைக்காது. அப்படியானால் என்ன செய்யலாம்? இங்கு பார்க்கலாம்.
விண்டோஸ் எக்ஸ்புளோரரைத் திறக்கவும். அதன் அட்ரஸ் பாரில் கீழ்க்காணும் முகவரியை டைப் செய்திடவும். இதில் NAME என்ற இடத்தில், உங்களின் விண்டோஸ் யூசர் அக்கவுண்ட் பெயரை எழுதவும்.
C:UsersNAMEAppDataLocalGoogleChromeUser DataDefault இந்த போல்டரில் இரண்டு புக்மார்க் கோப்பு இருக்கும். அவை Bookmarks and Bookmarks.bak. இதில் இரண்டாவதாகத் தரப்பட்டுள்ளது (Bookmarks.bak) அண்மைக் காலத்திய பக் அப் கோப்பு. நீங்கள் இறுதியாக குரோம் பிரவுசரைத் திறந்த போது, பிரவுசரால் உருவாக்கப்பட்ட பேக் அப் பைல்.
இந்த போல்டரில் .bak என்ற எக்ஸ்டன்ஷன் பெயருடன் எந்த பைலும் இல்லாமல், Bookmarks என்ற பெயரில் இரண்டு கோப்புகள் இருந்தால், பைல்களுக்கான துணைப் பெயர் மறைக்கப்படும் வகையில் செட் செய்யப்பட்டுள்ளது என்று பொருள்.
இந்தக் குழப்பத்தினை நீக்க, rganize மெனுவில் கிளிக் செய்திடவும். இதில் “Folder and search options.” என்ற பிரிவினைத் தேர்ந்தெடுக்கவும். போல்டர் ஆப்ஷன்ஸ் விண்டோவில், View டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு “Hide extensions for known file types” என்ற வரியில் உள்ள பாக்ஸில் டிக் அடையாளத்தை எடுத்து விடவும்.
இப்போது, மேலே கூறப்பட்ட இரண்டு புக்மார்க் பைல்களில் இறுதியாக உருவாக்கப்பட்ட பக் அப் கோப்பு அதற்கான எக்ஸ்டன்ஷன் பெயருடன் காட்டப்படும். இந்த பக் அப் கோப்பை மீட்டுக் கொண்டு வர, குரோம் உலாவியின் அனைத்து விண்டோக்களையும் மூடவும். குரோம் உலாவி மூடப்பட்ட நிலையில், Bookmarks கோப்பை அழிக்கவும்.
Bookmarks.bak என்ற கோப்பை Bookmarks என பெயர் மாற்றம் செய்திடவும். இனி மீண்டும் குரோம் உலாவியை இயக்கினால், நீங்கள் அழித்த புக்மார்க் கோப்பை காணலாம். நீங்கள் இறுதியாக குரோம் உலாவியை திறந்து இயக்கிய போது உருவாக்கிய புக்மார்க்குகள் மட்டும் அங்கு கிடைக்காது.

May 17, 2012

புதிதாக கணணி வாங்கும் போது கவனிக்க வேண்டியவைகள்

புதிதாக கணணி, மடிக்கணணி வாங்கும் நபர்களுக்கு எந்த மாதிரி வாங்கலாம் என்ற குழப்பம் இருக்கும்.
அவ்வாறான நேரத்தில் நாம் கீழ்க்கண்டவற்றை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
1. Processor: இது தான் உங்கள் கணணியின் மூளை போன்றது. நீங்கள் செய்யும் அத்தனை விடயங்களையும் இயக்குவது இது தான். இது இல்லை என்றால் எதுவுமே இல்லை. புதியதாக கணணி வாங்கும் நண்பர்கள், இதில் முக்கியமாக கவனம் செலுத்த வேண்டும்.
தற்போதைய நிலையில் எது புதியதாக வந்து உள்ளது என்று பார்த்து வாங்குதல் நலம். இப்போதைக்கு(மே 2012), நீங்கள் வாங்கும் கணணியில் Processor Intel Core 2 Duo என்பதை கடைசியாக கொள்ளலாம். Pentium(1,2,3,4) வரிசை என்றால் தவிர்க்க முயலவும். அவை கொஞ்சம் பழையவை. சமீபத்திய ஒன்று Core i 7.
அத்தோடு இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு அம்சம் Processor Speed. இதைப் பொறுத்தே உங்கள் உங்கள் கணணியின் செயல்பாடு அமையும். இது குறைந்த பட்சம் 2.2 GHz என்ற அளவில் இருக்க வேண்டும்.
2. RAM: உங்கள் கணணியின் இருதயம் என்றால் அது இது தான். Processor சொல்லும் வேலைகளை என்ன வேகத்தில் முடிக்க வேண்டும் என்று தீர்மானிப்பதும் இதுவே.
எனவே இது மிகச் சிறந்த அளவில் இருந்தால் மட்டுமே உங்களால் வேகமாக இயங்க முடியும். இல்லை என்றால் SETC Bus கள் போல மெதுவாக தான் உங்கள் கணணி இயங்கும்.
தற்போதைய நிலையில்(மே 2012) 4GB RAM என்பது சரியான ஒன்று. 2GB என்பது மெதுவான கணணிக்கு என்று மாறிவிட்டது. ஆனாலும் ஏற்கனவே கணினி உள்ளவர்கள் 2GB-யை பயன்படுத்தலாம்.
அதற்கும் குறைவாக இருந்தால் மாற்ற முயற்சித்தல் நலம். Photoshop போன்ற பணிகளில் ஈடுபடுவோர் 8GB RAM உள்ள கணணி வாங்குதல் நலம்.
அதே போல DDR என்ற ஒன்றை சொல்லி தருவார்கள் புதியதாக வாங்கும் நண்பர்கள் DDR 3 தெரிவு செய்யலாம். DDR 2 கூட நல்லதே.
மேலும் புதிதாக கணணி வாங்கும் போது Processor மற்றும் RAM போன்றவற்றை ஒப்பிட்டு பார்த்து வாங்க வேண்டும். Core 2 Duo என்றால் 4GB RAM போதும், I-7 என்றால் 8GB RAM சரியாக இருக்கும்.
மிகக் குறைந்த அளவு என்றால் 2 GB-க்கு கீழே மட்டும் புதியவர்கள் செல்ல வேண்டாம்.
3. Hard Disk or HDD: உங்கள் தகவல்கள் அனைத்தையும் சேமித்து வைக்கும் இதன் பணி அளப்பரியது. புதியதாக கணணி வாங்கும் நண்பர்கள் குறைந்த பட்சம் 320GB HDD வாங்கவும்.. தகவல்கள் அதிகம் சேகரிக்க குறைந்த பட்சம் இது தேவை. அதிக பட்சம் எவ்வளவு என்பதை தெரிவு செய்வது உங்கள் விருப்பம்.
4. DVD R/W Drive DVD Drive: உங்கள் கணணியில் வன்தட்டு எனப்படும் CD, DVD களை இயக்க உதவுகிறது. இதற்கு Configuration என்று ஒன்றும் சொல்ல இயலாது. ஆனால் கேபிள் மட்டும் SATA எனப்படும் 4-Pin உள்ளதா என்று கேட்டுக் கொள்ளவும். இன்றும் 23-pin உள்ளவற்றை தள்ளி விடும் ஆட்கள் உள்ளார்கள்.
5 . Mouse/Kayboard: உங்கள் வேலைகளை நீங்கள் இவை இரண்டையும் பயன்படுத்தியே செய்கிறீர்கள். மௌஸ் இப்போது எல்லா இடத்திலும் optical வகைதான் வருகிறது அதில் பிரச்சினை இல்லை. Keyboard உங்கள் விருப்பம்.
6. Graphics Card: இது Gaming, Graphic Design போன்றவற்றில் அதிக ஈடுபாடு உள்ளவர்களுக்கு பயன்படும். இதை 1GB தெரிவு செய்யலாம்.
7. Monitor: கணணி என்றால் 17 Inch என்பதை மிகக் குறைவாக கொள்ளலாம். மடிக்கணணி உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப தெரிவு செய்யலாம்.
8. Pen Drive: பல ஆயிரம் போட்டு கணணி வாங்கும் பலரும், இதில் தவறு செய்வார்கள். 2GB Pen Drive வாங்கிட்டு வந்துட்டு பத்தாமே போயிடுச்சே என்று யோசிப்பார்கள். எனவே பென் டிரைவ் வாங்கும் போது தற்போதைய நிலையில் 16GB வாங்கலாம். இதனை வாங்கும் போது நல்ல நிறுவனத்தின் பென் டிரைவ் ஆக வாங்கவும்.

May 16, 2012

குறித்த கணணியில் பேஸ்புக் இணையத்தளத்தை தடை செய்வதற்கு

பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக் அதன் பயனாளர்களுக்கு சில வழிகளில் நன்மை தருகின்ற போதிலும், வேறு விதத்தில் தீமை விளைவிக்கக் கூடியதாக உள்ளது.
எனவே பாடசாலைகள் போன்ற இடங்களிலும் இத்தளத்தை முடக்குவது கட்டாயமானதாக காணப்படலாம்.
இவ்வாறு பேஸ்புக் தளத்தை முடக்குவதற்கு FB Limiter எனும் மென்பொருள் காணப்படுகின்றது.
இம்மென்பொருளைத் தரவிறக்கம் செய்து குறித்த கணணியில் நிறுவிய பின் ஒரே ஒரு கிளிக் மூலம் பேஸ்புக் தளத்தை முடக்க முடியும்.
இது தவிர கடவுச்சொற்களைக் கொடுத்து முடக்கும் வசதியும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஒரு நிமிடத்தில் இணையத்தில் என்னவெல்லாம் நடக்கின்றது? (வீடியோ இணைப்பு)

ஒரு நிமிடத்தில் இணையத்தில் என்ன நடைபெறுகின்றது என்பதை விளக்குகின்றது இன்டல் நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த வீடியோ காட்சி.
அவற்றில் சில, ஒரு நிமிடத்தில் 30 மணித்தியாலங்கள் ஓடக்கூடிய வீடியோக்கள் யூடியூப்பில் ஏற்றப்படுகின்றது,
அதே ஒரு நிமிடத்தில் 100000 டுவிட்டுக்கள் வெளியாகின்றது. 47000 அப்ளிகேஷன்கள் தரவிறக்கம் செய்யப்படுகின்றது.
230,000 டிவிடி டேட்டா ட்ரான்ஸ்பர் அளவு, உலக இaணைய பயன்பாடு நடக்கின்றது.

பேஸ்புக்கில் புத்தம் புதிய வசதி அறிமுகம்

பல மில்லியன் மக்களின் மனங்களை வென்ற சமூக இணையத்தளமான பேஸ்புக் தொடர்ந்து முன்னிலையில் காணப்படுகின்றது.
இந்த முதலிடத்தை தக்கவைத்து மேலும் அதிகளவான பயனர்களை தன்னகப்படுத்தும் முயற்சியில் இடைவிடாது செயற்பட்டு பல வசதிகளை பயனர்களுக்காக அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கின்றது.
அதன் அடிப்படையில் கோப்புகளை பரிமாற்றும் வசதியினை தற்போது மேம்படுத்தி வழங்க முன்வந்துள்ளது.
அதாவது இதுவரை காலமும் தனித்தனியாகவே கோப்புக்களை பரிமாற்றக்கூடிய வசதி காணப்பட்டது. ஆனால் தற்போது கோப்புக்களை கூட்டாக பரிமாற்றக்கூடிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் மூலம் 25 MB அளவுடைய கோப்புக்களை தரவேற்றம் செய்து நண்பர்களிடையே பரிமாற்றம் செய்து கொள்ள முடியும்.
எனினும் பாதுகாப்புக் கருதி சில வகையான கோப்புக்களை மட்டுமே இவ்வாறு தரவேற்றம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Gmail Meter: ஜிமெயில் குறித்த புள்ளி விபரங்களை அறிந்து கொள்வதற்கு

மின்னஞ்சல் பயன்படுத்தும் அனைவருக்கும் மிகப்பெரிய உதவியாய் இருப்பது ஜிமெயில் ஆகும்.
ஒவ்வொருவரும் எப்படிக் கையாள்கிறார்கள் என்பது அவரவர் விருப்பம் மற்றும் செயல்திறனைப் பொருத்ததாகும்.
பலர் பதிலே அனுப்பாமல் தனக்கு வரும் மின்னஞ்சல்களை மட்டும் படிப்பவராக இருக்கலாம். சிலர் ஒரு மின்னஞ்சலை பலருக்கு அனுப்பலாம். ஒரு சிலர் அனுப்பிய மின்னஞ்சலுக்கு மட்டும் தொடர்ந்து மாற்றி மாற்றி பதில் அனுப்பிய வண்ணம் சிலர் செயல்பட்டிருப்பார்கள்.
சில மின்னஞ்சல்கள் நேரடியாக நமக்கு வந்திருக்கும். சில கொப்பி ஆகவோ, சில மறைக்கப்பட்ட கொப்பியாகவோ கிடைத்திருக்கும். சிலவற்றை நாம் மிக முக்கியம் எனக் குறித்து வைத்திருப்போம். இந்த விபரங்களை எப்படி அறிவது? நிச்சயம் கஷ்டம் தான்.
ஆனால் இதற்கென மீட்டர் ஒன்றை கூகுள் வழங்குகிறது. இதனை எப்படி செயல்படுத்துவது எனப் பார்க்கலாம்.
Gmail Meter என அழைக்கப்படும் இந்த வசதி ஒரு Google Apps Script ஆகும். இதனை இன்ஸ்டால் செய்துவிட்டால், நீங்கள் ஜிமெயில் வசதியை எப்படிக் கையாள்கிறீர்கள் என்ற புள்ளிவிபரத்தினை அறிந்து கொள்ளலாம்.
இந்த புள்ளி விபரங்கள் மூலம் நம்மைப் பற்றிய சில அரிய தகவல்கள் நமக்குக் கிடைக்கும். இந்த ஸ்கிரிப்டை இன்ஸ்டால் செய்வது கஷ்டமான காரியம் அல்ல. படிப்படியாகச் சில வழிகளை மேற்கொள்ள வேண்டும்.
முதலில் கூகுள் டாக்ஸ் திறந்து ஒரு புதிய ஸ்ப்ரெட் ஷீட் உருவாக்கவும். இதற்கு ஒரு பெயர் தரவும். பின்னர் இதில் Tools | Script Gallery சென்று ஸ்கிரிப்ட் கேலரியைப் பெறவும்.
இங்கு Gmail Meter என்பதைத் தேடிக் கண்டறியவும். அதன்பின் இன்ஸ்டால் பட்டனில் கிளிக் செய்திடவும்.
இன்ஸ்டலேஷன் போது, சில கேள்விகள் கேட்கப்படும். இதனைப் பயன்படுத்தும் உரிமை குறித்து தகவல்கள் கேட்டுப் பதியப்படும். இவற்றுக்கு அனுமதி அளித்த பின்னர், ஜிமெயில் மீட்டர் நிறுவப்படும்.
இந்த வசதி இன்ஸ்டால் செய்யப்பட்டவுடன், Gmail Meter என்ற புதிய மெனு காட்டப்படும். இந்த மெனுவில் கிளிக் செய்து Get a Report என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இதில் Monthly Report மற்றும் Custom Report என இரண்டு ஆப்ஷன்கள் தரப்படும்.

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 10ன் இடைமுகம்(IE 10 Interface) குறித்த தகவல்கள்

மைக்ரோசாப்ட் நிறுவனம் தன்னுடைய அடுத்த இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 10ல், புதிய இடைமுகம்(Interface) ஒன்றை வழங்குகிறது. இது குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
விண்டோஸ் 8 பயன்படுத்த இருவகை இடைமுகம் கிடைக்கின்றன. வழக்கமான தொடு திரை இல்லாத பயன்பாடு மற்றும் தொடுதிரை பயன்பாடு. இவை இரண்டிலும் டைல் ஐகான்கள் பயன்படுத்தப்படுகின்றன.
டெஸ்க்டாப் திரையில் தெளிவாக இவை காட்டப்படும். கும்பலாக குழப்பம் ஏற்படுத்தும் வகையில் இருக்காது. மைக்ரோசாப்ட் அங்கீகரிக்கும் சாப்ட்வேர் தொகுப்புகளை இன்ஸ்டால் செய்வதும், அவற்றை நீக்குவதும் மிக எளிதாக மேற்கொள்ள விண்டோஸ் 8 உதவிடும்.
மெட்ரோ இடைமுகத்தை விரும்பாதவர்கள், வழக்கம் போல டெஸ்க்டாப் தோற்றத்தை வைத்துக் கொண்டு பயன்படுத்தலாம்.
ஆனால் தற்போது விண்டோஸ் 8 பயன்படுத்திப் பார்த்த பயனாளர்கள் அனைவரும் மெட்ரோ இடைமுகப் பயன்பாட்டினையே அதிகம் விரும்புவதாகக் கருத்து தெரிவித்துள்ளனர். இதனாலேயே இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 10ல் இதனுடன் இணைந்த வகை இடைமுகம் தரப்படுகிறது.
இதுவரை தரப்பட்ட கண்ட்ரோல் பட்டன்கள், டூல்பார் மற்றும் ஸ்குரோல் பார்கள் பயன்படுத்தாத போது, திரையில் தெரியாத வகையில் அமைந்திருக்கும்.
இதுவே இதில் தரப்பட இருக்கும் மிகப் பெரிய மாற்றமாகும். எனவே வழக்கமான இணைய தேடல் என்பது, ஏறத்தாழ முழுத் திரைக் காட்சியாக அமையும். இப்போது எப்11 கீ அழுத்திப் பெறும் முழுத் திரைக் காட்சியாகவே இது இருக்கும்.
வழக்கமாக இன்டர்நெட் எக்ஸ்புளோரர் திறந்தவுடன், நாம் அமைத்துள்ள ஹோம் பேஜ் கிடைக்கும் அல்லது காலியான ஒரு பக்கம் கிடைக்கும்.
புதிய இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் இரண்டு பிரிவு டைல்ஸ் அமைப்பு கிடைக்கும். ஒரு பிரிவில் பயனாளர் அடிக்கடி பயன்படுத்தும் தளத்திற்கான லிங்க் இருக்கும்.
அடுத்த பிரிவில் பயனாளர் தேர்ந்தெடுத்த தளங்களின் தொடர்புக்கான பட்டன்கள் இருக்கும். இது ஏறத்தாழ தற்போதைய புக்மார்க்குகளைப் போன்றது. பயனாளர் இந்த தளங்களைப் பின்(“pin”) செய்திட வேண்டியதிருக்கும்.
ஒரே நேரத்தில் பல இணைய தளங்களைத் திறப்பது, புதிய இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் ஒரு புதிய அனுபவமாக இருக்கும். இதுவரை திரையின் மேல் பகுதியில், ஒவ்வொரு தளத்திற்குமான அடையாளம் டெக்ஸ்ட்டாகக் காட்டப்பட்டு இருந்தது. இனி ஒவ்வொரு இணைய தளமும் ஒரு சிறிய தளப் படமாகக் காட்டப்படும்.
இவை திரையின் கீழாக இடம் பெறும். பயனாளர்கள் இந்த தளத்திற்கான சிறிய படங்களில் கிளிக் செய்து தாங்கள் விரும்பும் இணைய தளங்களைப் பார்வையிடலாம். இது ஏறத்தாழ ஐ-பேட் சாதனத்தில் தரப்படும் வசதியினை ஒத்ததாகும்.
ஒரு டச் ஸ்கிரீன் திரையில் இணைய உலா மேற்கொள்ளத் தேவையான அனைத்தும் மிக எடுப்பாக காட்டப்படும் வகையில் புதிய இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 10 கிடைக்க இருக்கிறது.
ஆனால் பயனாளர்கள் இன்னும் பழைய பாரம்பரிய இன்டர்நெட் எக்ஸ்புளோரரைத் தான் அதிகம் பயன்படுத்துவார்கள் என மைக்ரோசாப்ட் எதிர்பார்க்கிறது. மாற்றத்திற்கு உடனே மசிய மாட்டார்கள் என்று எண்ணுகிறது.

ஜிமெயிலில் தேவையற்ற நண்பர்களை Block செய்வதற்கு

ஜிமெயில் பயன்படுத்தும் நண்பர்கள் அனைவருக்கும் மிகப் பெரிய உதவியாய் இருப்பது சாட் வசதி, அதே சில சமயம் பிரச்னை தரும் ஒன்றாக மாறிவிடும்.
இதற்கு காரணம் யார் என்று தெரியாத நபர்கள் பலர் சாட்டில் வந்து சேர்வது, தொந்தரவை தரும். இவர்கள் வருவதற்கு முன்னரே தடுக்கும் வசதியும் உள்ளது.
உங்கள் Chat-இல் Automatic ஆக நண்பர்கள் சேர்வதை தடுக்க,
முதலில் உங்கள் ஜிமெயில் கணக்கில் நுழைந்து செட்டிங்க்ஸ் பகுதிக்கு செல்லவும்.
அதில் Chat என்ற Tab-ஐ தெரிவு செய்யவும். இப்போது வரும் பக்கத்தில் Auto-add suggested contacts என்ற பகுதியில், இரண்டாவது Option-ஐ தெரிவு செய்து Save செய்து விடவும்.
இனி ஒருவர் உங்கள் Chat லிஸ்ட்க்குள் வரவேண்டும் என்றால், கண்டிப்பாய் நீங்கள் அவரது Request- ஐ Approve செய்தாக வேண்டாம். இதன் மூலம் தேவை இல்லாதவர்கள் உங்கள் Chat சேர்வதை தவிர்க்கலாம்.
உங்கள் Chat List-இல் உள்ள தேவையற்றவர்களை நீக்குவதற்கு,
உங்கள் சாட் லிஸ்ட்டில் நிறைய தேவை இல்லாத நபர்கள் இருந்தாலோ அல்லது சிலரை நீங்கள் வேண்டாம் என்று நினைத்தாலோ அவர்களை உங்கள் சாட் லிஸ்ட்டில் இருந்து நீக்கலாம்.
எந்த நபரை நீங்கள் நீக்க விரும்புகிறீர்களோ அவரது பெயருக்கு நேரே உங்கள் Mouse Cursor - ஐ கொண்டு செல்லவும். இப்போது ஒரு சிறிய பகுதி தோன்றும். அதில் More என்பதை தெரிவு செய்யவும்.
இப்போது வரும் மெனுவில் Block என்பதை கொடுத்து விடவும். அவ்வளவே இனி அந்த நபர் உங்கள் Chat List - இல் வர மாட்டார்.

அன்ரோயிட் இயங்குதளத்திற்கான கூகுள் மேப்பின் புதிய பதிப்பு வெளியீடு

தேடுபொறி, இயங்குதளம், ஒன்லைன் சேமிப்பு என பல வசதிகளை வழங்கும் கூகுள் நிறுவனமானது தனது அன்ரோயிட் இயங்குதளங்களில் செயற்படும் கைப்பேசிகளுக்கான கூகுள் மேப்பிற்காக புதிய பதிப்பான 6.7 ஐ வெளியிட்டுள்ளது.
மேம்படுத்தப்பட்ட இக்கூகுள் மேப்பில் பழைய பதிப்பினை விடவும் பல புதிய அம்சங்கள் உள்ளடக்கப்பட்டுள்மை குறிப்பிடத்தக்கது.

விண்டோஸ் 8 இயங்குதளம் குறித்து அதிகாரபூர்வ தகவலை வெளியிட்டது மைக்ரோசாப்ட்

மைக்ரோசாப்ட் நிறுவனம் தான் பெருமையுடன் அடுத்து அறிமுகப்படுத்த இருக்கும் விண்டோஸ் 8 இயங்கு தளம் குறித்த முதல் அதிகாரபூர்வ தகவலை வெளியிட்டுள்ளது.
முதலில் இயங்கு தளம் சார்ந்து புரோகிராம் வடிவமைப்பவர்களுக்கு வழங்கப்பட்டது.
பின்னர் நுகர்வோருக்கான சோதனைப் பதிப்பு வெளியானது. தற்போது இதன் பெயர் மற்றும் பதிப்புகள் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த புதிய இயங்கு தளத்தின் பெயர் விண்டோஸ் 8 ஆகத் தான் இருக்கும். இதில் மாற்றம் எதுவும் இல்லை. அடுத்ததாக, இயங்கு தளம் ஒன்றின் பல்வேறு வகை பதிப்புகளை வெளியிடுவது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் வழக்கம்.
இதனால் மக்கள் எதனை விடுத்து, எதனைப் பெறுவது என்பதில் குழப்பம் அடைவார்கள். தற்போது அந்தக் குழப்பத்திற்கு இடம் அளிக்க விரும்பாமல், மொத்தம் மூன்றே மூன்று பதிப்புகள் மட்டுமே வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. X86/64 ப்ராசசர் அடிப்படையில் இயங்க விண்டோஸ் 8 மற்றும் விண்டோஸ் 8 ப்ரோ வழங்கப்படுகிறது.
விண்டோஸ் 8 அதிகமான நுகர்வோர் விரும்பித் தேர்ந்தெடுக்கும் வகையில் இருக்கும். இது விண்டோஸ் 7 ஹோம் பிரிமியம் பதிப்பின் இடத்தில் இடம் பெறும். இதில் மேம்படுத்தப்பட்ட விண்டோஸ் எக்ஸ்புளோரர், டாஸ்க் மானேஜர் மற்றும் கூடுதலான மானிட்டர்களைப் பயன்படுத்தும் வசதி ஆகியவை இதில் இருக்கும்.
மேலும் மொழிகளுக்கிடையே மாற்றிக் கொள்வது இந்த இயங்கு தளத்தில் மிகவும் எளிதாகவும் வேகமாகவும் இருக்கும். இந்த வசதி முன்பு அதிகப் பணம் செலுத்தி வாங்கக் கூடிய இயங்கு தளத்தில் மட்டுமே தரப்பட்டது.
விண்டோஸ் 8 ப்ரோ சிஸ்டம் வர்த்தக, தொழில்நுட்ப வல்லுநர்களுக்கானது. இதில் சுருக்கிய பார்மட்டில் அமைக்க பிட் லாக்கர்(BitLocker) என்கிரிப்ஷன் வசதி, கணிப்பொறி இயக்கத்தினை அமைத்துச் சரி பார்க்கும் வசதி, விர்ச்சுவல் ஹார்ட் டிஸ்க்கிலிருந்து பூட் செய்திடக் கூடிய வசதி, பெர்சனல் கம்ப்யூட்டர் வடிவமைப்பு மற்றும் செயல்முறை நிர்வாகம், விண்டோஸ் இணைய தள இணைப்பு ஆகியவை கிடைக்கும்.
தற்போது இந்த வசதிகள் யாவும் Windows 7 Ultimate and Enterprise சிஸ்டத்தில் மட்டுமே கிடைக்கும். இந்த இயங்கு தளத்திற்கு மட்டும் மீடியா பேக் (‘Windows Media Pack’) என அழைக்கப்படும் விண்டோஸ் மீடியா சென்டர் இயக்கம் ஒரு கூடுதல் தொகுப்பாகக் கிடைக்கும்.
இந்த இரண்டும் தனியாகவும், பெர்சனல் கணணிகளில் அவற்றை விற்பனை செய்திடும் நிறுவனங்களால் பதியப்பட்டும் கிடைக்கும். இவை தவிர வேறு வகை சிஸ்டம் கிடைக்காது. ஆனால் சீனா மற்றும் வளர்ந்து வரும் சில நாடுகளில் மட்டும், அந்த நாட்டு மொழியில் விண்டோஸ் 8 சிஸ்டம் வழங்கப்படும் எனவும் அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஏ.ஆர்.எம். சிப்களில் இயங்கக் கூடிய விண்டோஸ் 8 சிஸ்டத்தினை மைக்ரோ சாப்ட் விண் ஆர்.டி. (Windows Runtime (WinRT)) என அழைக்கிறது. இது பெர்சனல் கம்ப்யூட்டர் மற்றும் டேப்ளட் பிசிக்களுக்கானதாக இருக்கும்.
விண்டோஸ் 8 இயங்கு தளத்தின் விலை குறித்து மைக்ரோசாப்ட் எதுவும் தெரிவிக்கவில்லை.

விரைவில் வருகின்றது Facebook App Center

பேஸ்புக் அப்ளிகேஷன்கள் குறித்து, அதன் பாவனையாளர்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும், தற்போது பேஸ்புக் புதிதாக Facebook App Center-ஐ உருவாக்க உள்ளது.
அப்ளிகேசன்கள் மற்றும் கேம்ஸ்களை விற்பனை செய்வதற்கு ஏற்கனவே கூகுள், ஆப்பிள், நோக்கியா போன்ற செல்போன் நிறுவனங்கள் கடைகள்(stores) திறந்துவிட்டது.
தற்போது பேஸ்புக் நிறுவனமும் Facebook App Center என்ற பெயரில் கடை திறக்கப் போகிறது.
ஏற்கனவே கடைகளை திறந்திருக்கும் கூகுள்(ஆன்ட்ராய்ட்), ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் தனக்கென்ற தனி இயங்குதளங்களை வைத்திருக்கின்றன.
அதனால் அவற்றுக்கான பிரத்யேகமான அப்ளிகேசன்கள் மற்றும் விளையாட்டுக்களை விற்பனை செய்து வருகின்றன. அதில் இலவசமாகவும் கிடைக்கின்றன. ஆனால் பேஸ்புக் என்பது சமூக வலையமைப்பு தளமாகும். அதற்கென்று தனி இயங்குதளம் கிடையாது.
உண்மையில் Facebook App Center என்பது கணணி, ஆன்ட்ராய், ஐபோன் மென்பொருள்களை காட்சிப்பொருளாக(Showcase) வைக்க போகிறது. அதாவது ஆண்ட்ராய்ட், ஐபோன்களுக்கான சமூக அப்ளிகேசன்களை(Social Apps) தேடுவதற்கான தளமாக இது அமையுமென பேஸ்புக் நிறுவனம் கூறுகிறது.
அதுவும் பேஸ்புக் மூலம் உள்நுழையும்(Facebook Login Button) வசதியை கொண்ட அப்ளிகேசன்கள் மற்றும் விளையாட்டுக்களை மட்டுமே காட்சிப்படுத்தப் போகிறது. இதனால் பேஸ்புக் தளமும் வளர்ச்சி அடையும்.
மேலும் இயங்குதளம் சாராத, எந்த இயங்குதளத்திலும் பயன்படுத்தக் கூடிய அப்ளிகேசன்களை விற்பனைக்கு வைக்க போகிறது.

விண்டோஸ் 8 ஷார்ட் கட் கீகள்

கணணி பாவனையாளர்கள் மத்தியில் விண்டோஸ் 8 பிரபல்யமடைந்து வருகின்றது, இதற்கான ஷார்ட் கட் கீகள் கீழே தரப்பட்டுள்ளன.
விண்டோஸ் கீ: தொடக்க நிலையில் உள்ள மெட்ரோ ஸ்டார்ட் ஸ்கிரீன் மற்றும் இறுதியாகப் பயன்படுத்திய அப்ளிகேஷன் புரோகிராம்கள் ஆகிய இரண்டையும் இந்த கீ அழுத்துவதன் மூலம் மாற்றி மாற்றிப் பெறலாம்.
விண் கீ + C: சார்ம்ஸ் பாரினைத் (charms bar) தரும்.
விண் கீ +Tab: மெட்ரோ டாஸ்க் பார் கிடைக்கும்.
விண் கீ + I: செட்டிங்ஸ் சார்ம் அணுகலாம்.
விண் கீ + H: ஷேர் சார்ம் கிடைக்கும்.
விண் கீ + K: டிவைசஸ் சார்ம் பெறலாம்.
விண் கீ + Q: அப்ளிகேஷன் தேடலுக்கான சர்ச் திரை கிடைக்கும்.
விண் கீ + F: பைல்களைத் தேடுவதற்கான தேடல் திரை கிடைக்கும்.
விண் கீ + W: செட்டிங்ஸ் மாற்றுவதற்கான தேடல் திரை காட்டப்படும்.
விண் கீ + P: செகண்ட் ஸ்கிரீன் பார் கிடைக்கும்.
விண் கீ + Z: மெட்ரோ இயங்குகையில் அப்ளிகேஷன் பார் பெற.
விண் கீ + X: விண்டோஸ் டூல் மெனு பார்க்க.
விண் கீ +O: ஸ்கிரீன் இயக்க மாற்றத்தை வரையறை செய்திட.
விண் கீ + .: ஸ்கிரீன் பிரித்தலை வலது பக்கமாகக் கொண்டு செல்ல.
விண் கீ +Shift + .: ஸ்கிரீன் பிரித்தலை இடது புறமாகக் கொண்டு செல்ல.
விண் கீ +V: இயக்கத்தில் இருக்கிற அனைத்து டோஸ்ட்ஸ் மற்றும் அறிவிப்புகளைக்(Toasts/Notifications) கொண்டு வர.
விண் கீ +: இயக்கத்தில் இருக்கிற அனைத்து டோஸ்ட்ஸ் மற்றும் அறிவிப்புகளைப்(Toasts/Notifications) இறுதி நிகழ்விலிருந்து கொண்டு வர.
விண் கீ + PrtScn: அப்போதைய திரைத் தோற்றத்தினை ஒரு பதிவாக எடுத்து, தானாகவே Pictures folderல் பதிந்து சேமித்து வைக்க. இந்த படங்கள் Screenshot (#) என்ற பெயரில் பைல்களாகப் பதியப்படும். அடைப்புக்குறிகளுக்குள் வரிசை எண் தரப்பட்டிருக்கும்.
விண் கீ + Enter : Narrator இயக்கப்படும்.
விண் கீ + E: கம்ப்யூட்டர்(மை கம்ப்யூட்டர்) போல்டர் திறக்கப்படும்.
விண் கீ + R: ரன் டயலாக் பாக்ஸ் காட்டப்படும்.
விண் கீ + U: Ease of Access Center திறக்கப்படும்.
விண் கீ + Ctrl + F: Find Computers டயலாக் பாக்ஸ் திறக்கப்டும்.
விண் கீ + Pause/Break: System பேஜ் காட்டப்படும்.
விண் கீ +1..10: டாஸ்க் பாரில் பின் செய்து வைத்துள்ள புரோகிராம்களை, விண் கீ + உடன் தரப்படும் எண்ணுக்கேற்ப வரிசையிலிருந்து காட்டப்படும். அல்லது இயக்கத் தில் இருக்கும் புரோகிராம்களை, டாஸ்க் பாரில் பின் செய்த வரிசைப்படி எடுத்துக் காட்டும்.
விண் கீ + Shift + 1..10: டாஸ்க்பாரில் பின் செய்து வைக்கப்பட்டுள்ள புரோகிராம் வரிசையிலிருந்து இதில் தரப்பட்டுள்ள எண்ணுக்கேற்ப, புரோகிராமின் புதிய இயக்கம் ஒன்றைத் திறக்கும்.
விண் கீ + Alt + 1..10: டாஸ்க் பாரில் உள்ள ஜம்ப் லிஸ்ட் பட்டியலில் பின் செய்து வைக்கப்பட்டுள்ள புரோகிராம்களில், கொடுக்கப்படும் எண் படி புரோகிராம் தேர்ந்தெடுக்கப்பட்டு இயக்கப்படும்.
விண் கீ + B: நோட்டிபிகேஷன் ஏரியாவில் முதல் புரோகிராமைத் தேர்ந்தெடுக்கும். பின்னர் அம்புக் குறிகளை அழுத்தினால் அதற்கேற்ப சுழற்சி முறையில் காட்டும். எந்த புரோகிராம் வேண்டுமோ அது காட்டப்படுகையில் என்டர் தட்ட, அந்த இயக்கம் காட்டப்படும்.
விண் கீ + T: டாஸ்க் பாரில் உள்ள புரோகிராம்களைச் சுழற்சி முறையில் தொட்டுச் செல்லும்.
விண் கீ + M: இயக்கத்தில் உள்ள அனைத்து விண்டோக்களும் மினிமைஸ் செய்யப்படும்.
விண் கீ + Shift + M: மினிமைஸ் செய்யப்பட்ட அனைத்து விண்டோக்களும் திரைக்கு வரும்.
விண் கீ + D: டெஸ்க்டாப் காட்டப்படும்/ மறைக்கப்படும் (அதாவது திறக்கப்பட்டுள்ள விண்டோக்கள் மினிமைஸ் மற்றும் மீள் இயக்கத்திற்குக் கொண்டு வரப்படும்)
விண் கீ + L: கம்ப்யூட்டர் லாக் செய்யப்படும்.
விண் கீ + Up Arrow: அப்போதைய விண்டோ மேக்ஸிமைஸ் செய்யப்படும்.
விண் கீ + Down Arrow: அப்போதைய விண்டோ மினிமைஸ் செய்யப்படும்/ மீளக் கொண்டு வரப்படும்.
விண் கீ + Home: அப்போதைய விண்டோ தவிர மற்றவை யாவும் மினிமைஸ் செய்யப் படும்.
விண் கீ + Left Arrow: ஸ்கிரீன் இடது பக்கமாக விண்டோ டைல் செய்யப்படும்.
விண் கீ + Right Arrow: ஸ்கிரீன் வலது பக்கமாக விண்டோ டைல் செய்யப்படும்.
விண் கீ + Shift + Up Arrow: அப்போதைய விண்டோவினை மேலிருந்து கீழாக விரிக்கும்.
விண் கீ + Left/Right Arrow: அப்போதைய விண்டோவினை ஒரு மானிட்டரிலிருந்து அடுத்த மானிட்டருக்கு நகர்த்தும்.
விண் கீ + F1: Windows Help and Support இயக்கப்படும்.
விண் கீ இணைப்பில்லாத மற்ற ஷார்ட்கட் கீ தொகுப்புகள்
Page Up: முந்தைய மெட்ரோ ஸ்கிரீன் காட்சி யைக் காட்டும்.
Page Down: பிந்தைய மெட்ரோ ஸ்கிரீன் காட்சியைக் காட்டும்.
Esc: அப்ளிகேஷன் இயக்க முடிவு (charm) முடிக்கப்படும்.
Ctrl + Esc: இறுதியாக அணுகிய அப்ளிகேஷன் புரோகிராம் மற்றும் மெட்ரோ ஸ்டார்ட் ஸ்கிரீன் ஆகியவற்றை அடுத்தடுத்து காட்டும்.
Ctrl + Mouse scroll wheel: மெட்ரோ ஸ்கிரீனில் Semantic Zoom இயக்கத்தினைக் கொண்டு வரும்.

பேஸ்புக்கில் தேவையற்ற Appsகளை நீக்குவதற்கு

தொடர்ச்சியாக பேஸ்புக் பயன்படுத்துபவர்கள் ஏராளமான பேஸ்புக் Appsகளுக்கு பேஸ்புக்கில் உங்கள் விபரங்களை பயன்படுத்துவதற்கென அனுமதி வழங்கியிருப்பீர்கள்.
இதில் சில இணையத்தளங்களில் பேஸ்புக் பயனர் பெயர், கடவுச் சொல் கொண்டு லொகின் செய்தும் இருக்கலாம்.
பேஸ்புக்கில் பிரைவசி தொடர்பில் அக்கறை கொண்டவராயின் இவ்வாறு அனுமதி அளித்த அப்பிளிகேஷன்களை அறிந்து அவற்றில் தேவையற்ற மற்றும் பழைய Appsகளை நீக்கிவிடுவது சிறந்ததாகும்.
இதைச் செய்வதற்கு,
1. பேஸ்புக்கில் லொகின் செய்த பின்னர் உங்கள் பெயருக்கு கீழே இருக்கும் drop-down மெனுவில் "Privacy Settings." ஐ தெரிவு செய்யுங்கள்.
2. அதில் Apps and Websites சென்ற பின்னர் Edit Settings ஐ அழுத்துங்கள்.
3. Apps You Use இல் கிளிக் செய்த பின்னர் "Edit Settings" அழுத்தினால் application settings செல்ல முடியும்.
4. அங்கே பட்டியலிடப்படும் application களில் பழைய மற்றும் தேவையற்றதை X அடையாளத்தை கிளிக் செய்வதன் மூலம் நீக்கிவிடலாம்.
பேஸ்புக் பாதுகாப்பு நடவடிக்கையாக மேலுள்ள படிமுறையை செய்வதன் மூலம் உங்கள் தனிப்பட்ட தகவல்கள் தேவையற்றவர்களுக்கு கிடைப்பதிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும்.

ஜூனில் இணையத்தின் அடுத்த பரிணாமமான IPV6 அறிமுகம் (வீடியோ இணைப்பு)

எதிர்வரும் ஜூன் மாதம் 6ஆம் திகதி, இணையத்தின் புதிய தொழிநுட்பமான IPV6(Internet Protocol Version 6) அறிமுகம் செய்யப்படுகிறது.
ஒவ்வொரு வீட்டிற்கும், அலுவலகத்திற்கும் எப்படி ஒரு விலாசம் இருக்குமோ, அது போன்று தான் ஒவ்வொரு இணையத்திற்கும் ஒரு விலாசம் உண்டு. இதனை IP Address என்று அழைப்பர்.
இதன் மூலம் நீங்கள் டைப் செய்யும் இணைய முகவரி சரியான சர்வருக்கு அழைத்துச் செல்லப்படும்.
உதாரணத்திற்கு நீங்கள் www.facebook.com என்று உங்கள் கணணியில் டைப் செய்தால், உடனே இந்த இணைய முகவரி சரியான சர்வருக்கு அழைத்து செல்லப்படும். இதற்கு உதவுவது தான் இந்த இன்டர்நெட் புரோட்டோகால்.
இதுவரையிலும் இதற்கு நாம் IPV4-ஐ தான் பயன்படுத்திக் கொண்டிருந்தோம். இது 4-32 Bit Techonology, 430 Unique Address மட்டுமே இருக்க முடியும்.
Sample IPV4 address - 70.33.247.68.
எனவே IPV4 முடிவடையும் தருவாயில் உள்ளதால், இதனை கருத்தில் கொண்டு IETF(Internet Engineering Task Force), புதுவித அம்சங்களுடன் கூடிய IPV6-ஐ அறிமுகம் செய்ய உள்ளது.
இது 128 Bit Techonology, பல லட்சக் கணக்கில் Unique Address களை பெற முடியும். மேலும் IPV4-ல் இருந்த முக்கிய பிரச்னையான NAT(Network Address Translation) இதில் இருக்காது. இதனால் பல நபர்கள் ஒரே IP Address-ஐ பயன்படுத்த முடியும்.
Sample IPV6 address - 2001:db8:ffff:1:201:02ff:fe03:0405
மேலும் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்தால் உங்களது நெட்வொர்க் IPV6 தயாரா என்பதை தெரிந்து கொள்ளலாம்.

புது வசதிகளுடன் கூடிய மைக்ரோமேக்ஸ் ஏ85 போன்கள் அறிமுகம்

மைக்ரோமேக்ஸ் ஏ85 Dual Core Chip கொண்டு வடிவமைக்கப்பட்ட முதல் போனாக விற்பனைக்கு வந்துள்ளது.
இது வழக்கமாக மைக்ரோமோக்ஸ் போனின் தோற்றத்தில் இல்லாமல், புதியதொரு தோற்றத்தில் வடிவமைக்கப்பட்ட போனாக உள்ளது.
இதற்கு அழகு சேர்க்கும் வகையில், 3.8 அங்குல கெபாசிடிவ் தொடுதிரை உள்ளது. இதன் திரை 480x800 பிக்ஸெல் திறன் கொண்டது.
திரைக்கு அருகாமையிலேயே முன்பக்க கமெரா மற்றும் பல சென்சார்கள் தரப்பட்டுள்ளன. இதன் மைக்ரோ எஸ்.டி கார்டினை எளிதாக மாற்றலாம்.
‘Gesture Control’ எனப்படும் அசைவுகள் மூலம் சில செயல்பாடுகளை மேற்கொள்ளலாம், மாற்றலாம். மியூசிக் பிளேயர், ரேடியோ, வீடியோ பிளேயர் என அனைத்தும் சற்று சிறப்புகளோடு தரப்பட்டுள்ளன.
இந்த போன் 4 பேண்ட் அலைவரிசையில் 3G HSDPA and HSUPA சப்போர்ட் தருகிறது. இத்துடன் Wifi மற்றும் Bluetooth கிடைக்கின்றன. இணைய இணைப்பில் செயல்படுத்த பல அப்ளிகேஷன்கள் பதிந்து கிடைக்கின்றன.
திறன் கொண்ட பேட்டரி 7 மணி நேரத்திற்கும் மேலாக மின் சக்தி அளிக்கிறது.