December 25, 2012

கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு புதிய பதிப்பாக வெளிவரும் Angry Birds

உலகளாவிய ரீதியில் கணனி விளையாட்டு பிரியர்களை கட்டிப்போட்ட விளையாட்டுக்களில் Angry Birds ஆனது மிகவும் முக்கிய இடத்தினைப் பெறுகின்றது.
இக்கணனி விளையாட்டானது காலத்திற்கு காலம் மென்மேலும் மெருகூட்டப்பட்டு புதிதாக வெளியிடப்படுவதுண்டு.
இதன் அடிப்படையில் தற்போது கிறிஸ்மஸ் தினத்தினை முன்னிட்டு அதன் புதிய Level - கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் 25ம் திகதியை இலக்காகக் கொண்டு 25 Level - கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
அதாவது இந்த Level - கள் நாள் ஒன்றிற்கு ஒன்று வீதம் அதிகரித்து 25ம் திகதி 25 Level - களை அடைந்துவிடும். மேலும் இப்புதிய பதிப்பில் 3 இரகசியமான Level - கள் காணப்படுவதுடன் ஒரு போனஸ் Level - இனையும் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இக்கணனி விளையாட்டினை Android சாதனங்களுக்காக Google Play Store - இலிருந்தும், iOS சாதனங்களுக்காக Apple App Store - இருந்தும் தரவிறக்கம் செய்ய முடியும்.

வைரஸ் தாக்கத்திலிருந்து கணனிகளைப் பாதுகாக்க ஒரு இலவசமான மென்பொருள்

இணையப்பாவனை மற்றும் பென்டிரைவ் பாவனை மூலம் வைரஸ் தாக்கங்களுக்கு உள்ளாகும் கணினிகளை பாதுகாப்பதற்கென PC Tools AntiVirus எனும் புதிய மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
முற்றிலும் இலவசமான இந்த மென்பொருளானது Antivirus மற்றும் Antispyware ஆக தொழிற்படக்கூடியவாறு உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன் Viruses, Worms, Trojan போன்றவற்றிடமிருந்தும் மின்னஞ்சல்கள் மூலமாக பரவக்கூடிய வைரஸ் செய்நிரல்களிலிருந்தும் கணினிகளை பாதுகாக்கக்கூடியதாக காணப்படுகின்றது.
மேலும் நிகழ்நேர (Real Time) பாதுகாப்பைக் தரக்கூடிய இம்மென்பொருளிற்கான Update - களும் தொடர்ச்சியாக கிடைக்கின்றன.

புத்தம் புதிய அம்சங்களுடன் கூடிய VLC Media Player

வீடியோ மற்றும் ஆடியோ கோப்புக்களை செயற்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும் Media Player மென்பொருட்களுள் சிறந்ததாக கருதப்படுவது VLC Media Player ஆகும்.
தற்போது இம்மென்பொருளின் புதிய பதிப்பான VLC media player 2.0.5 விண்டோஸ் 8 இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு ஏனைய அனைத்து இயங்குதளங்களிற்குமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி VideoLAN மற்றும் VLC development குழு ஆகியன இணைந்து உருவாக்கிய இந்த புதிய பதிப்பானது Windows 8, Mac OS, Ubuntu ஆகியவற்றில் செயற்படக்கூடியதாகக் காணப்படுகின்றது.
இப்பதிப்பில் MPEG2 கோப்பின் வீடியோ மற்றும் ஆடியோவில் காணப்பட்ட Encoding தொடர்பாக காணப்பட்ட தவறுகள், MKV கோப்புக்கான மேம்படுத்தல் ஆகியவை இடம்பெற்றுள்ளதுடன் Mac OS இற்கான புதிய பயனர் இடைமுகம் மற்றும் விண்டோஸ் 8 இற்கான மெட்ரோ இடைமுகம் உள்ளடங்கலாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
தரவிறக்கச் சுட்டி

இணையத்தளம் உருவாக்கும் வசதியை தற்போது அறிமுகப்படு​த்துகின்றது Google Drive

இன்றைய காலகட்டத்தில் எண்ணங்களை வெளிப்படுத்துவதற்கும், செய்திகளை உடனுக்குடன் வெளியிடுவதற்கும் மற்றும் வியாபார நோக்கத்திற்காகவும் இணையத்தளங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக காணப்படுகின்றன.
எனினும் சுய எண்ணங்களை வெளிப்படுத்துதல் மற்றும் இணையத்தளம் உருவாக்கும் முறைகளை கற்றுக்கொள்ளல் போன்ற நடவடிக்கைகளுக்காக இலவசமாக இணையத்தளங்களை உருவாக்கும் வசதிகளை கொடுக்கும் தளங்கள் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றன.
இவற்றின் வரிசையில் தற்போது ஒன்லைன் சேமிப்பு வசதியினை வழங்கிவரும் Google Drive ஆனது எளிமையான இணையத்தளம் ஒன்றினை உருவாக்கி தரவேற்றிக் கொள்ளக்கூடிய வசதியை அறிமுகப்படுத்துகின்றது.
JavaScript மொழிக்கும் ஒத்திசைவாக காணப்படக்கூடிய இப்புதிய வசதியினைப் பெற்றுக் கொள்வதற்கு Google Drive கணக்கு ஒன்று இருந்தால் போதுமானது.

Skype-இல் தோன்றும் விளம்பரங்களை நிறுத்துவதற்கு

உலகில் அதிகளவானவர்களால் பயன்படுத்தப்பட்டுவரும் இலவச வீடியோ அழைப்பு சேவையான Skype - இல் விளம்பரங்களை தோற்றுவிக்கும் வசதி அண்மைக்காலத்தில் இச்சேவையை வழங்கும் நிறுவனத்தினால் ஏற்படுத்தப்பட்டிருந்தது.
இதனால் கணினிகளில் நிறுவப்பட்டிருக்கும் Skype மென்பொருளினூடாக அவ்விளம்பரங்கள் தொடர்ச்சியாக தோன்றிய வண்ணமே இருக்கும்.
இவ்வாறு தோன்றும் விளம்பரங்களை நிறுத்த வேண்டுமெனின் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்கும் Skype மென்பொருளினை இயக்கி அதில் காணப்படும் Skype மெனுவிற்கு சென்று Privacy என்பதை கிளிக் செய்யவும்.
தொடர்ந்து தோன்றும் பக்கத்தில் Allow Microsoft Target ads என்பதற்கு நேரே காணப்படும் சரி அடையாளத்தை நீக்கிவிடவும்.

மைக்ரோசாப்டின் Windows Live Mesh சேவை மூடப்படுகிறது

கோப்புகளை ஒருங்கிணைத்து பாதுகாத்து தேக்கி வைக்கும் சேவையினை, கடந்த 2008ஆம் ஆண்டில் Windows Live Mesh என்ற பெயரில் மைக்ரோசாப்ட் தொடங்கியது.
இது Live Mesh, Windows Live Sync and Windows Live Folder Share எனவும் பெயர் சூட்டப்பட்டிருந்தது. ஒரு கால கட்டத்தில், இந்த சேவையினை கோடிக்கணக்கானவர்கள் பயன்படுத்துவதாக மைக்ரோசாப்ட் அறிவித்திருந்தது.
கோப்புகளை நம் சாதனங்களில் இல்லாமல் ரிமோட் இயக்கத்தில் சேமித்து, தேவைப்படும் போது எடுத்துப் பயன்படுத்தக் கொடுத்த வசதிகளில் Windows Live Mesh முதலிடம் பெற்றிருந்தது.
ஆனால் பின்னர் மைக்ரோசாப்ட் பல்வேறு வசதிகளை அளிக்க முற்படுகையில், Sky Drive என்ற இன்னொரு கட்டமைப்பினை ஏற்படுத்தியது. Live Mesh மூலம் தந்து வந்த வசதிகளை இன்னும் கூடுதல் எளிமையுடன் தர முடியும் என்று மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது.
தற்போது Live Mesh வசதிகள் அனைத்தையும் Sky Drive-ல் தருவதனால், அதன் வாடிக்கையாளர்கள் அனைவரையும் Sky Drive-ற்கு மாறும்படி கேட்டுக் கொண்டுள்ளது.
எனவே வரும் பிப்ரவரி 13ஆம் திகதி முதல் Live Mesh வசதிகள் முற்றிலுமாக நிறுத்தப்படும் எனவும்,எந்த வித சப்போர்ட்டும் தரப்பட மாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கணனிகளை பாதுகாக்க அறிமுகமாகின்றது Avira Antivirus 2013

தற்போது பல்கிப்பெருகிவரும் கணனி வைரஸ் மற்றும் மல்வேர் தாக்கங்களிலிருந்து கணனிகளை பாதுகாப்பதற்கு பல்வேறு அன்டிவைரஸ் மென்பொருட்கள் காணப்படுகின்றன.
எனினும் இவற்றில் இலவசமானதாகக் கிடைக்கக்கூடியதாகவும், நிகழ்நேர (real-time) பாதுகாப்பு உடையதாகவும் காணப்படுபவை மிகவும் சொற்ப அளவே. அவற்றில் உலகளாவிய ரீதியில் 130 மில்லியன் கணனி பாவனையாளர்களால் பயன்படுத்தப்படும் Avira அன்டிவைரஸ் மென்பொருளும் சிறந்ததாக காணப்படுகின்றது.
தற்போது இம்மென்பொருள் Avira Antivirus 2013 எனும் பெயருடன் Viruses, Worms, Trojans, Rootkits, Wdware, மற்றும் Spyware போன்றவற்றிலிருந்து கணனிகளை பாதுகாக்கும் பொருட்டு மேம்படுத்தப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இது Windows 7 (32-bit or 64-bit) , Vista (32-bit or 64-bit), Windows XP SP3 (32-bit), Windows XP SP2 (64-bit) போன்ற இயங்குதளங்களில் செயற்படக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது. 


தரவிறக்கச் சுட்டி