December 31, 2011

அழகான பேஸ்புக் கவர் பேனர்களை பெறுவதற்கு

பேஸ்புக்கின் புதிய Timeline தோற்றத்தில் Cover என்ற ஒரு புதிய வசதி உள்ளது. இந்த இடத்தில் நமக்கு தேவையான ஒளிப்படத்தை வைத்து கொள்ளலாம்.
இணையத்தில் ஏராளமான ஒளிப்படங்கள் இருந்தாலும் அனைத்தும் பேஸ்புக் timeline cover ஏற்ற அளவில்(size) இருக்காது. ஆதலால் பேஸ்புக் timeline ஒளிப்படங்கள் வைப்பதற்கென்றே சில பிரத்யோகமான தளங்கள் உள்ளது.
1. 99covers: இந்த தளத்தில் மிகச் சிறந்த bannerகள் உள்ளது.
2. facebookprofilecovers: இந்த தளத்திலும் விதவிதமான அழகான பேஸ்புக் கவர் ஒளிப்படங்கள் உள்ளது.
3. timelinecoverbanner: இங்கு விதவிதமான அழகான பேஸ்புக் பேனர்கள் உள்ளது. இதில் உங்களுக்கு தேவையானதை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள் மற்றும் இதில் உள்ள bannerகளை உங்கள் விருப்பப்படி மாற்றி கொள்ளலாம்.

பேஸ்புக்கின் Chat messanger மென்பொருளை தரவிறக்கம் செய்வதற்கு

சமூக தளங்களில் முதல் இடத்தில் இருப்பது பேஸ்புக் இணையதளம். உலகம் முழுவதும் 800 மில்லியன் வாசகர்களை கொண்ட மிகப்பெரிய சமூக இணையதளம்.
இந்த தளத்தில் பல்வேறு வசதிகள் உள்ளது. இப்பொழுது இந்த நிறுவனம் புதிய Chat messanger இலவச மென்பொருள் ஒன்றை வெளிட்டுள்ளது.
Chat messanger மென்பொருள் மூலம் பேஸ்புக் தளத்திற்கு செல்லாமலே கணணியில் இருந்தே வாசகர்களிடம் அரட்டை அடிக்கலாம், உங்கள் நண்பர்கள் புதிதாக பகிர்ந்த பதிவுகளை காணலாம் மற்றும் உடனுக்குடன் notifications காணலாம்.
இந்த மென்பொருளை விண்டோஸ் 7 கணணிகளில் மட்டுமே நிறுவ முடியும். இதற்க்கு முன்னர் மூன்றாம் தர மென்பொருளே chat செய்ய இருந்தது. இப்பொழுது பேஸ்புக் நிறுவனமே இந்த மென்பொருளை வெளியிட்டது.
இதற்கு முதலில் இந்த Facebook Messenger லிங்கில் கிளிக் செய்து பேஸ்புக் தளத்திற்கு சென்று அங்கு உள்ள one-time setup என்ற லிங்கை கிளிக் செய்து மென்பொருளை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
மென்பொருள் தரவிறக்கம் ஆகி முடிந்ததும் உங்கள் கணணியில் நிறுவிக் கொள்ளுங்கள். நிறுவியவுடன் அந்த மென்பொருளை ஓபன் செய்து கொள்ளுங்கள்.
அதில் Login என்ற பட்டன் இருக்கும் அதை கிளிக் செய்து பேஸ்புக் தளத்தில் நுழைந்து கொள்ளுங்கள். அடுத்து ஒரு விண்டோ வரும், அதில் Keep me Logged in என்ற பட்டனை அழுத்தவும்.
அவ்வளவு தான் உங்கள் நண்பர்களில் ஓன்லைனில் இருப்பவர்களை இந்த மென்பொருள் காட்டும். அதில் விருப்பமானவர்களுடன் அரட்டை அடித்து மகிழலாம் மற்றும் ஒரே விண்டோவில் பல பேருடன் அரட்டை அடிக்கும் வசதியும் இதில் உள்ளது.

இணையத்தின் வேகத்தை அதிகப்படுத்துவதற்கு

இணையத்தை பயன்படுத்தும் ஏராளமானோருக்கு அதன் வேகத்தை அதிகரிப்பதற்கு எவ்வாறான நடவடிக்கைகளை கணணியில் மேற்கொள்ள வேண்டும் என்பது பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
Auslogics Internet Optimizer என்ற மென்பொருளின் மூலம் சாதரண பாவனையாளரும் கூட இணைய வேகத்தை அதிகரிப்பதற்கான ஆட்டோ ஆப்டிமைசேஷன் செயற்பாடுகளை மேற்கொள்ளலாம்.
Auslogics Internet Optimizer மென்பொருளை கணணியில் நிறுவிய பின்னர் முதலில் உங்கள் இணைய வேகத்தை தெரிவு செய்து Analyze ஐ அழுத்துங்கள்.
இதன் மூலம் இணைய வேகம் பரீசிலிக்கப்பட்டு மாற்றங்கள் செய்ய வேண்டிய செட்டிங்குகளின் விபரங்கள் திரட்டப்பட்டு பட்டியலிடப்படும்.
இதில் Manual Optimizationஐ தெரிவு செய்து விரும்பிய செட்டிங்குகளை மட்டும் மாற்றிக் கொள்ளலாம்.

கடவுச்சொல்லுடன் கூடிய மின்னஞ்சலை அனுப்புவதற்கு

மின்னஞ்சல் அனுப்ப பல்வேறு தளங்கள் உதவி செய்கிறன, அதில் மிகவும் பிரபலமான தளங்கள் யாஹு, ஜிமெயில், ஹாட்மெயில் போன்றவை ஆகும்.
இவற்றின் மூலம் அனுப்பபடும் மின்னஞ்சல்களை நாம் சாதாரணமாக ஒப்பன் செய்து பார்க்க முடியும். இதற்கு உரிய பயனர் கணக்கு மற்றும் கடவுச்சொல் இருந்தால் போதுமானது.
நாம் வேர்ட், பிடிஎப் மற்றும் ஒரு சில கோப்புகளை காப்பதற்காக கடவுச்சொல்லுடன் உருவாக்குவோம். இவ்வாறு உருவாக்கும் கோப்புகளை கடவுச்சொல் இருந்தால் மட்டுமே ஒப்பன் செய்ய முடியும்.
இதனால் அவற்றில் உள்ள தகவல்கள் திருடப்பட வாய்ப்புகள் மிகவும் குறைவு. ஆனால் கடவுச்சொல் இல்லாமல் உள்ள கோப்புகளை மிகவும் எளிமையாக மற்றவர்களால் பார்க்கவோ அல்லது திருடிவிடவோ முடியும். இதுபோல் நாம் அனுப்பும் மின்னஞ்சல் ஒவ்வொன்றுக்கும் கடவுச்சொல் இட்டால் எவ்வாறு இருக்கும்.இதற்கு LOCKBIN என்னும் தளம் உதவி செய்கிறது.
சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு செல்லவும். அங்கு தோன்றும் விண்டோவில் உங்களுடைய பெயர், உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, நீங்கள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி, கடவுச்சொல் போன்றவற்றை உள்ளிடவும்.
பின் நீங்கள் குறிப்பிட வேண்டிய செய்தியை தட்டச்சு செய்து பின் வேண்டிய கோப்பினை பதிவேற்றம் செய்து, மேலும் CAPTCHA கோடினை உள்ளிட்டு இறுதியாக ஒப்பந்த செக்பாக்சில் டிக் செய்து SUBMIT பொத்தானை அழுத்தவும். உங்களுடைய மின்னஞ்சல் நீங்கள் குறிப்பிட்ட முகவரிக்கு சென்றுவிடும்.
பின் அந்த மின்னஞ்சலை ஒப்பன் செய்யும் போது ஒரு விண்டோ ஓபன் ஆகும். அந்த கடவுச்சொல்லை உள்ளிடுவதன் மூலமாக உங்களுடைய நண்பர்கள் அந்த மின்னஞ்சலை பெற்றுக்கொள்வார்கள். இதன் மூலம் மின்னஞ்சலையும் கடவுச்சொல் கொண்டு மூட முடியும்.

கைபேசி பாவனையாளர்களுக்கு புதிய அச்சுறுத்தல்

உலகில் அதிகமானோர் உபயோகப்படுத்தும் கைபேசிகள் ஜி.எஸ்.எம்(Global System for Mobile Communications) தொழிநுட்பத்தின் மூலமே இயங்குகின்றது.
புள்ளிவிபரங்களின் படி உலகத் தொலைபேசிகளில் 80 சதவீதம் இத்தொழில்நுட்பத்தின் மூலமே இயங்குகின்றது.
இந்நிலையில் ஜேர்மனியா நாட்டு ஆராய்ச்சி அமைப்பான Security Research Labs இன் தலைவரான கார்ஸ்டன் நோஹல் ஜி.எஸ்.எம் கைபேசிகளில் காணப்படும் பாதுகாப்புப் குறைபாடு தொடர்பில் ஆய்வறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளார்.
அதன் படி ஜி.எஸ்.எம் தொழில்நுட்பத்தில் இயங்கும் அனைத்து கைபேசிகளில் பாதுகாப்புக் குறைபாடு காணப்படுவதாகவும், இதன் மூலம் எமது கைபேசிகளிலிருந்து நாம் அறியாதவகையில் அழைப்புகளை மேற்கொள்ளமுடிவதுடன், குறுந்தகவல்களையும் அனுப்பமுடியுமென நோஹல் எச்சரிகை விடுத்துள்ளார்.
அதாவது நமது கைபேசிகள் நாம் அறியாத வகையில் ஹெக்கர்களின் கைகளுக்குள் சிக்குவதாகும்.
இப்பாதுகாப்புக் குறைபாட்டின் மூலம் குறைந்த மணித்தியாலத்தில் அதிக கைபேசிகளை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர ஹெக்கர்களால் முடியுமென நோஹல் குறிப்பிட்டுள்ளார்.
பொதுவாக சி.டி.எம்.ஏ உட்பட மற்றைய வலையமைப்புகளை விட ஜி.எஸ்.எம் ஆனது பாதுகாப்பாகக் கருதப்படுகின்றது.
எனினும் தற்போது வெளியாகியுள்ள செய்தியானது பாவனையாளர்களுக்கும், சேவை வழங்குநர்களுக்கும் சற்று அதிர்ச்சியளிப்பதாகவே உள்ளது.
ஸ்மார்ட் போன்களின் விற்பனையானது தற்காலத்தில் வெகுவாக அதிகரித்துள்ளமையானது ஹெக்கர்களின் கவனத்தினை கைபேசி உலகத்தினை நோக்கித் திருப்பியுள்ளது.

யூடியூப் இணையத்தளத்தின் புதிய போட்டி

பிரபல யூடியூப் இணையத்தளம் புதிய வருடத்தில் புதிய சேவை வசதி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
தனது தளத்தில் தரவேற்றப்பட்டு மிக பிரபலமாகிவிடும் வீடியோக்களில் ஒரே வகையான இரு வீடியோக்களை போட்டிக்கு தெரிவு செய்து இவற்றில் எது சிறந்தது? எது உங்களுக்கு பிடித்திருக்கிறது? என வாக்களிக்க சொல்கிறது. வெற்றி பெறும் வீடியோக்களை வாரந்தோறும் பட்டியலிடப்போகிறது.
நகைச்சுவை, அழகு, இசை, ஆச்சரியம், நடனம் எனும் பிரதான ஐந்து வகைகளில் உள்ளடக்கப்படும் வீடியோக்களை இப்படி போட்டிக்கு தெரிவு செய்ய போவதாக யூடியூப் வலைப்பூ தெரிவித்துள்ளது.
இதன் மூலம் மற்றொன்றுடன் ஒப்பிட்டு சிறந்தவற்றை மாத்திரம் மேலும் பிரபலப்படுத்தும் வாய்ப்பு உருவாகும் எனவும், அவ்வீடியோக்களுக்கு ரசிகர்களிடம் உரிய அங்கீகாரம் கிடைக்கும் சந்தர்ப்பம் ஏற்படும் எனவும் யுடியூப் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தற்போதைய புள்ளிவிபரத்தின் படி இணைய உலகில் அதிக நபர்களால் பார்வையிடப்படும் வீடியோ இணையத்தளமாக யூடியூப் தளம் தொடர்ந்து முதலிடத்தில் நிற்கிறது. கடந்த அக்டோபர் மாதத்தில் மாத்திரம் 88.3 பில்லியன் வீடியோ காட்சிகள் யூடியூப் பக்கத்தில் பார்வையிடப்பட்டுள்ளன.
சீனாவின் Youku இணையத்தளம் 4.6 பில்லியன் தடவை பார்வையிடப்பட்டு இரண்டாவது இடத்திலும், பிரபல இசை வீடியோக்களுக்கான இணையத்தளமான Vevo 3.7 பில்லியன் தடவை பார்வையிடப்பட்டு மூன்றாவது இடத்திலும் இருக்கிறது.

ஜிமெயில் அரட்டை பெட்டியினை நீக்குவதற்கு

மின்னஞ்சல் சேவையில் முன்னணியில் இருக்கும் நிறுவனம் கூகுள் ஆகும். இதனுடைய மின்னஞ்சல் சேவை ஜிமெயில் மூலமாக இலவசமாக வழங்கப்படுகிறது.
இதில் பல்வேறு வசதிகளை நாம் பெற முடியும், உதாரணமாக நீங்கள் ஜிமெயிலில் இருந்தவாறே அரட்டை அடிப்பது, கூகுள் டாக்ஸ்யை பார்வையிடுவது, மேலும் குறுந்தகவல் அனுப்புவது போன்ற வசதிகளையும் நீங்கள் பெற முடியும்.
இதில் அரட்டை வசதி மூலம் உங்கள் நண்பர்களுடன் அரட்டை அடிக்க முடியும். இதற்கென ஜிடால்க் என்னும் தூதன்(Messenger) உள்ளது. ஜிமெயிலில் இருக்கும் போது நாம் முக்கியமான அலுவல்களை செய்து கொண்டு இருப்போம்.
அப்போது இந்த அரட்டை வசதியின் மூலமாக இணைய நண்பர்கள் உங்களை தொந்தரவு செய்யலாம், இது நம்மை எரிச்சலூட்டும், இதனை தடுக்க அரட்டை பெட்டியினை தற்காலிகமாக மூடி வைத்துக்கொள்ள முடியும். இதற்கு ஜிமெயிலிலேயே வசதி உள்ளது.
முதலில் உங்களுடைய ஜிமெயில் கணக்கில் நுழைந்து கொள்ளவும் பின் Mail Setting செல்லவும்.
அதில் Chat என்னும் டேப்பினை தெரிவு செய்யவும். பின் Chat off என்னும் ரேடியோ பொத்தானை தெரிவு செய்து Save Change என்னும் பொத்தானை அழுத்தி சேமித்துக் கொள்ளவும்
தற்போது உங்களுடைய ஜிமெயில் கணக்கு தானாகவே மறுதொடக்கம் ஆகும். தற்போது உங்களுடைய ஜிமெயிலில் அரட்டை பெட்டி மூடப்பட்டு இருக்கும். மீண்டும் இந்த அரட்டை பெட்டி தேவையெனில் Chat On என்னும் ரேடியோ பொத்தானை தெரிவு செய்து உங்கள் கணக்கை சேமித்துக் கொள்ளவும்.

இணையம் மூலம் நட்பு வளர்ப்பதற்கு

இணையத்தில் ஓன்லைனில் இலவசமாக வரைவதற்கான இடம், தூரிகை, வண்ணங்கள் இன்னும் பிறவற்றை இந்த தளம் வழங்குகிற‌து.
வரைவதற்கான ஒரு பலகையோடு இணைந்த மூன்றே கட்டங்களில் இந்த வசதியை மிக அழகாக இந்த தளம் அளிக்கிறது.
இடது பக்கத்தில் உள்ள இந்த கட்டங்களில் நடுவில் உள்ள கட்டத்தை கிளிக் செய்தால் வரைவதற்கான இணைய‌ தூரிகை அல்லது பேனா வந்து நிற்கிறது. நமக்கு தேவையான அளவுக்கு தூரிகையின் முனையை பெரிதாக்கி கொள்ளலாம். இதனுடனே அழிக்கும் வசதியும் இருக்கிறது.
மேலே உள்ள கட்டத்தல் வண்ணங்கள் இருக்கின்றன. எந்த வண்ணம் தேவையோ அதனை தெரிவு செய்து கொள்ளலாம். மூன்றாவது கட்டம் வரைந்த சித்திரத்தை சேமித்து கொள்வது உட்பட வசதியை த‌ருகிறது.
சித்திரத்தை பேஸ்புக் அல்லது டிவிட்டரில் பகிர்ந்து கொள்ளும் வசதியும் இருக்கிறது. அத்துடன் இந்த முகவரியை நண்பர்களோடு பகிர்ந்து கொண்டு அவர்களையும் வரைய சொல்லலாம்.
கணணி, டேப்லெட், ஸ்மார்ட்போன் என எதில் வேண்டுமானாலும் இதனை பயன்படுத்தலாம். நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளும் வசதியும், அவர்களோடு சேர்ந்து வரையும் வசதியுமே இந்த தளத்தின் சிற‌ப்பம்சம்.

December 29, 2011

புத்தக பிரியர்களுக்கு உதவும் பயனுள்ள இணையம்

இணையத்தில் புத்தகம் படிக்க உதவும் தளங்களை பொருத்தவரை ரீட் எனி புக் தளம் சிறப்பாக உள்ளது.
புதிய புத்தக சேவை தளமான ஹாட் ப்ரி புக்ஸ் தளத்தை இதற்கு நிகரானது என்று சொல்ல முடியாவிட்டாலும் இணையத்தில் புத்தகம் படிக்க விரும்பினால் இந்த தளத்தையும் குறித்து வைத்து கொள்ளலாம்.
20 ஆயிரம் புத்தகங்களோடு அழைக்கும் இந்த தளம் அவற்றை இ புக் வடிவில் அப்படியே படிக்க உதவுகிற‌து. வடிவமைப்பில் பெரிதாக அலங்காரம் எல்லாம் இல்லாமல் மிக எளிமையாகவே இருக்கிறது. அந்த எளிமையும் பளிச் என கவரகூடிய ரகம் அல்ல.
புத்தகங்கள் வரிசையாக அட்டை படங்களோடு பட்டியலிடப்பட்டுள்ளன. டாப் டென் புத்தகங்கள், டாப் டென் எழுத்தாள‌ர்கள் என தனித்தனியே பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றின் கீழே தனியே வகைகள் மற்றும் எழுத்தாளர்கள் என்ற அட்டவணையும் இருக்கிறது.
எந்த புத்தகத்தை கிளிக் செய்தாலும் அவற்றின் பக்கங்கள் அப்படியே நீள்கின்றன. நிச்சயமாக ரீட் எனி புக் வழங்கும் அழகான ரீடரோடு ஒப்பிட்டால் இது ஒன்றுமே இல்லை.
ரீட் எனி புக்கில் புத்தகங்களை படிக்க தனியே ரீடர் இருப்பதோடு அந்த ரீடரும் கிளிக் செய்தவுடன் பக்கத்திலேயே தோன்றும். இதனால் ஏற்படக்கூடிய வாசிப்பு அனுபவம் தொடர்ந்து படிக்க தூண்டும்.
அந்த வகையில் ஹாட் ப்ரி புக்ஸ் தளம் மிக சாதாரணமாக இருந்தாலும் இந்த தளத்திலும் அழகான ஒரு சேவை இருக்கிற‌து. எந்த புத்தகத்தை படிக்க வேண்டும் என்று தெரிந்திருந்தால் இந்த தளத்தில் அந்த புத்தகம் இருக்கிறதா என உடனே தேடிப்பார்த்து கொள்ளலாம்.
ஆனால் என்ன புத்தகத்தை படிக்கலாம் என்று தீர்மானிக்க முடியாத குழப்பம் இருந்தால் கவலையே வேண்டாம், ரேன்டம் பகுதியில் கிளிக் செய்தால் இந்த தளமாக ஒரு புத்தகத்தை தெரிவு செய்து அதன் பக்கங்களை படிக்க தருகிற‌து.
என்ன புத்தகம் வரப்போகிற‌து என்று தெரியாமல் கிளிக் செய்து விட்டால் காத்திருக்கும் போது ஏதாவது ஒரு புத்தகம் முன்வைக்கப்படுவது சுவாரஸ்யம் தானே.
சில நேரங்களில் வரிசையாக கிளிக் செய்து கொண்டே இருந்தால் அடுத்தடுத்து பல புதிய புத்தகங்களை அறிமுகம் செய்து கொள்ளலாம்.
இந்த தளம் தரும் மற்றொரு வசதி இ புக் வடிவில் படித்து கொண்டிருக்கும் போது ஏதாவது வார்த்தை புரியாவிட்டால் அதன் மீது கிளிக் செய்தால் அதற்கான அர்த்தம் வந்து நிற்கிற‌து. இந்த தளத்தில் உள்ளவை அனைத்துமே ஆங்கில புத்தகங்கள் என்னும் போது இந்த அகராதி சேவை பயனுள்ளது என்பதை சொல்ல வேண்டாம்.
புரியாத சொற்களுக்கு பொருள் தேட அங்கும் எங்கும் அலையாமல் இங்கேயே தெரிந்து கொள்ளலாம்.

ஓன்லைன் மூலம் புகைப்படங்களை எடிட் செய்வதற்கு

ஓன்லைன் மூலம் புகைப்படங்களை எடிட் செய்ய பல இணையத்தளங்கள் வந்தாலும் ஒரு சில தளங்கள் மூலம் வெகு விரைவாக பல வகையான வேலைகள் செய்ய முடியும்.
இப்படி பலவிதமான வேலைகளை ஓன்லைன் மூலம் செய்ய நமக்கு ஒரு தளம் உதவுகிறது.
நம்மிடம் இருக்கும் புகைப்படத்தை எந்த வண்ணத்தில் எந்த Style-ல் வைத்தால் நன்றாக இருக்கும் என்று பார்த்து அதன் பின் ஒரே சொடுக்கில் புகைப்படத்தை மாற்ற நமக்கு ஒரு தளம் உதவுகிறது.
இத்தளத்திற்கு சென்று Start Editing என்ற பொத்தானை சொடுக்கி இந்த வேலையை செய்ய ஆரம்பிக்கலாம். அடுத்து வரும் திரையில் Open என்பதை சொடுக்கி நம்மிடம் இருக்கும் புகைப்படத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.
அதன் பின் Touchup என்பதை சொடுக்கி படத்தின் Brightness மற்றும் color போன்றவற்றை மாற்றலாம். Effects என்பதை சொடுக்கினால், இதில் நமக்கு எந்த மாதிரியான எஃபெக்ட் தேவையோ அதை தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டியது தான். எல்லாம் மாற்றியபின் Save என்ற பொத்தானை சொடுக்கி படத்தை சேமித்துக் கொள்ளலாம்.

பயர்பொக்சில் யூடியூப் வீடியோக்கள் தெரிவதற்கு








பயர்பொக்ஸ் உலாவியில் யூடியூப் வீடியோக்கள் பார்வையிடும் போது சிலருக்கு வீடியோ பாக்ஸுக்கு பதிலாக கறுப்பு நிற பெட்டி(black box) தெரியும்.
இதற்கு பயர்பொக்ஸ் உலாவியில் Offline Storage(Cache / தற்காலிக கோப்புக்கள்) அளவு அதிகரிக்கின்றமையே காரணம்.
இதனை சரிசெய்ய பயர்பொக்சில் Offline Storage(Cache) ஐ நீக்குவதற்கு Tools > Options > Advanced > Network > Offline Storage(Cache) சென்ற பின்னர் "Clear Now" என்பதை அழுத்துங்கள்.
அதன் பின் யூடியூப் வீடியோக்கள் தெரியும்.

December 27, 2011

History Cleaner: இணைய வரலாற்றை சுத்தம் செய்வதற்கு

ஒருவரை பற்றி அறிந்து கொள்ள அவரின் வரலாறு உதவும். ஆனால் தற்பொழுது அவர்களது கணணியின் வரலாறே போதும்.
நீங்கள் எந்த தவறு செய்திருந்தாலும் உங்கள் தவறுகளை கணணியின் History காண்பித்து கொடுத்து விடும். அந்த History -யை சுத்தமாக கிளின் செய்ய இந்த சின்ன மென்பொருள் உதவுகின்றது.
2 எம்.பி கொள்ளளவு கொண்ட இந்த மென்பொருளை பதிவிறக்கம் செய்து கணணியில் நிறுவிக் கொள்ளவும்.
இதில் உள்ள Start Scan என்பதனை கிளிக் செய்ய உங்கள் கணணியில் ஹிஸ்டரி கிளின் ஆகும். இதில் உள்ள Start Cleanup என்பதனை கிளிக் செய்ய வேண்டும்.
உங்களுக்கான ஹிஸ்டரி கிளினாகி உங்கள் History காலி செய்யப்பட்டு விடும்.

இலகுவாக மென்பொருளின் Activation Keyகளை பெறுவதற்கு

இன்றைய தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் பெரும்பாலும் மென்பொருட்கள் பாவனை எங்கும் பரவி கிடக்கின்றது.
சட்டரீதியாக மென்பொருட்களை எவரும் பணம் கொடுத்து வாங்குவது கிடையாது, காரணம் இணையத்தில் பரவிகிடக்கின்ற திருட்டுகள்.
இலகுவாக எந்த மென்பொருளுக்கும் உரிய Activation Key இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். ஆனால் இந்த செயற்பாடு சட்டரீதியாக ஏற்றுக்கொள்ளபடாதவை, இருந்தும் இதை தடுக்க எந்தவொரு வழியும் தற்சமயம் கிடையாது.
1. முதலாவதாக கூகுள் இணையதளத்திற்கு செல்லுங்கள் - Google.com
2. பின்னர் கூகுள் தேடலில் “94fbr” இடைவெளிவிட்டு மென்பொருள் பெயரை எழுதுங்கள். உதாரணமாக 94fbr MSoffice 2010.
3. அதன் பிறகு கூகுள் keygen’s உரிய பட்டியலை காட்டும்.
அதில் எது வேண்டுமோ தெரிவு செய்து உங்கள் மென்பொருளை ஆக்டிவ் பண்ணுவதற்கு பயன்படுத்தி கொள்ளுங்கள்.

கோப்புகளை விரைவாக கொப்பி செய்வதற்கு

கோப்புகளை ஒரிடத்தில் இருந்து வேறு இடத்திற்கு கொப்பி செய்ய எவ்வளவோ மென்பொருள்கள் உள்ளது. ஆனால் விரைவாகவும், இலவசமாகவும் கொப்பி செய்வதற்கு இந்த சின்ன மென்பொருள் நமக்கு பயன்படுகின்றது.
இந்த மென்பொருளை தரவிறக்கி உங்கள் கணணியில் நிறுவிக் கொள்ளவும். அதன் பின் ஒரு விண்டோ ஓபன் ஆகும்.
இதில் கீழே நீங்கள் கொப்பி செய்ய விரும்பும் கோப்பறை அல்லது கோப்பை தெரிவு செய்யவும். பின்னர் அதனை எங்கிருந்து எங்கு மாற்ற விரும்புகின்றீர்களோ அந்த இடத்தை தெரிவு செய்யவும்.
இறுதியாக இதில் உள்ள Copy பட்டனை கிளிக் செய்யவும். உங்களுக்கு சில நொடிகளில் கோப்பு கொப்பி ஆகிவிடும்.

Auto Shutdown: கணணியை தானாகவே ஷெட்டவுண் செய்வதற்கு

கணணியில் பணிபுரிந்து கொண்டிருக்கும் போது ஏதோ ஒரு அவசர வேலையாக கணணியை ஷெட்டவுண் செய்திட மறந்து விடலாம்.
அவ்வாறான குறையை நிவரத்தி செய்ய குறிப்பிட்ட நேரத்தில் கணணி தானாகவே நின்றுவிட உதவும் வகையில் ஒரு சின்ன மென்பொருள் உள்ளது.
இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து கணணியில் நிறுவிக் கொள்ளவும். இதில் Shut Down, Log Off, Stand by, Hibernate என பல ரேடியோ பட்டன்கள் கொடுக்கப்பட்டிருக்கும்.
இதில் தேவையானதை தெரிவு செய்யவும், அடுத்தது எந்த நேரத்தில் கணணி நின்று விட வேண்டும் என நினைக்கின்றோமோ அந்த நேரத்தை தெரிவு செய்யவும்.
குறிப்பிட்ட நாளில் குறிபிட்ட நேரத்தில் நின்று விட வேண்டுமா அதனையும் நாம் தெரிவு செய்யலாம். இவை அனைத்தையும் தெரிவு செய்து பின்னர் இதில் உள்ள Start task கிளிக் செய்யவும். அவ்வளவுதான். இனி நீங்கள் மற்ற பணிகளை பார்க்கலாம். குறிப்பிட்ட நேரம் வந்ததும் உங்கள் கணணி தானாகவே நின்றுவிடும்.

விண்டோஸ் கணணிகளில் கடவுச்சொற்கள் கையாளப்படும் வழிமுறைகள்

ஒவ்வொருவரும் தங்களது கணணி மற்றும் அதில் பதிந்துள்ள தகவல்களின் பாதுகாப்பிற்காக கடவுச்சொல்லை அமைத்திருப்பர்.
பெரும்பாலானவகள் இந்த கடவுச்சொல்லானது மிகவும் பாதுகாப்பானது, வலிமையனது எனவும் கணணிக்கு கடவுச்சொல்லை அமைத்துவிட்டால் யாராலும் அந்த கடவுச்சொல்லை மீறி கணணியை பயன்படுத்த இயலாது என எண்ணுகின்றனர்.
ஆனால் அது உண்மையில்லை. உங்கள் கணணியின் கடவுச்சொல்லை சில வழிகள் மூலமாக கைப்பற்ற இயலும்.
முதலில் கடவுச்சொற்கள் கணணியில் எவ்வாறு கையாளப்படுகின்றன என பார்க்கலாம். Security Accounts Manager(SAM) என்பது ஒரு Registry file ஆகும். இது கணணியில் "C:WINDOWSsystem32config" என்ற இடத்தில் சேமிக்கப்படும்.
இந்த File இல் தான் LM hash, NTLM hash போன்ற மறையாக்க முறைகளில் மாற்றம் செய்யப்பட்டு சேமிக்கப்படுகிறது.
இந்த SAM File இனை திறந்து படித்து விட்டால் கடவுச்சொல் தொடர்பான விடையங்களை அறிந்துவிடலாம். ஆனால் விண்டோஸ் இயங்குதளத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் பொழுது SAM File இனை கொப்பி செய்யவோ திறக்கவோ விண்டோஸ் அனுமதிக்காது. இதை திறப்பதற்கு நாம் வேறு ஒரு இயங்குதளத்திலிருந்து கணணியை Boot செய்ய வேண்டும்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் Live booting என்பது பயன்படுகிறது. Live booting என்றால் நாம் சில மென்பொருட்களை பென்ரைவ் இல் போர்டபிளாக பதிந்து பயன்படுத்துவது போல இயங்குதளத்தை பென்ரைவில் அல்லது சிடி இல் பதிந்து அதை கணணியில் பதியாமலே பயன்படுத்துவது ஆகும்.
இந்த வேலையை செய்வதற்கென்றே உருவாக்கப்பட்டது Ophcrack என்ற மென்பொருளாகும். இதை சிடியிலோ அல்லது பென்ரைவிலோ பதிந்து பயன்படுத்த முடியும். இந்த மென்பொருளை Ophcrack  இங்கு கிளிக் செய்து தரவிறக்கம் செய்யவும்.
1. இனி நீங்கள் தரவிறக்கம் செய்த ISO file இனை சிடி யில் பதியவும்.
2. கணணியை Restart செய்து விண்டோஸ் ஆரம்பிப்பதற்கு முன் F8 key இனை அழுத்தி Boot order இல் சிடியை தெரிவு செய்து என்டர் அழுத்தவும். (F8 அழுத்துவது சில கணணிகளுக்கு கீ மாறக்கூடும் கீ முடியாவிட்டால் BIOS மெனுவில் Boot order இல் 1st Boot Drove என்பதில் சிடி இனை தெரிவு செய்திடவும்.)
3. இனி மென்பொருள் இயங்க தொடங்கிவிடும், அடுத்து தோன்றுகிற செய்தியில் Ophcrack Graphic mode என்பதை தெரிவு செய்து என்டர் அழுத்தவும்.
4. சிறிது நேரத்தில்(2-3 நிமிடம்) உங்கள் கணணியின் கடவுச்சொல் காட்டப்படும்.

December 26, 2011

2011ம் ஆண்டு சாதனை படைத்த தொழில்நுட்பங்கள்

சென்ற 2011ஆம் ஆண்டில் பல நிறுவனங்கள் அறிமுகப்படுத்திய புதிய தொழில்நுட்பங்களும், சாதனங்களும் தோல்வியைத் தழுவின.
ஆனால் சில நிறுவனங்கள் கொண்டு வந்த தொழில் நுட்பத்திற்கு சிறந்த வகையில் வெற்றியும், மக்களிடையே அந்த சாதனங்களுக்கு வரவேற்பும் இருந்தன. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.
1. ஆப்பிள் நிறுவனத்தின் சிரி(Siri): ஆப்பிள் நிறுவனம் வழங்கிய ஐபோன் 4S மக்கள் எதிர்பார்த்த பல மாற்றங்களுடன் வரவேற்பைப் பெற்றது.
வேகமாக இயங்கும் ப்ராசசர், சிறந்த அம்சங்களுடன் கூடிய கமெரா ஆகியவை இருந்தன. ஆனால் ஒரு பெரிய மாற்றத்தைத் தந்து கொண்டிருக்கும் சிரி என்னும் தொழில்நுட்பத்தினை ஆப்பிள் இந்த போனில் கொடுத்தது.
நம் ஒலி வழி தரும்(Voice Command) கட்டளைகளைப் புரிந்து கொண்டு செயல்படுத்துவதுடன் பதில் அளிக்கவும் செய்கிறது. ஆண்ட்ராய்ட் மற்றும் விண்டோ போன்களில் இந்த வகை வசதி இருந்தாலும், ஒலி வழி தருவதில் அவை பல வரையறைகளைக் கொண்டுள்ளன.
ஆனால் ஐபோன் இயற்கையான மொழி வழியை எளிதில் உணர்ந்து கொண்டு செயல்படுகிறது. ஆர்ட்டிபிசியல் இன்டலி ஜென்ஸ்(Artificial Intelligence) எனப்படும் செயற்கை நுண்ணறிவுத் திறன் இப்போது நம் பாக்கெட்டில் ஐபோன் 4S உடன் கிடைக்கிறது.
வரும் ஆண்டில் இது இன்னும் பல சாதனங்களில் கிடைக்கும். தொழில் நுட்பமும் மேம்பாடு அடையும். கணணகளில் இதனைப் பயன்படுத்துகையில் பேசியே கட்டளைகளைத் தர முடியும்.
2. சாம்சங் கேலக்ஸி போன்கள்: ஸ்மார்ட் போன்களைத் தருவதில் ஆப்பிள் நிறுவனம் மட்டுமின்றி, சாம்சங் நிறுவனமும் சில சாதனைகளை ஏற்படுத்தியது.
மிகக் குறைவான தடிமனில் ஆண்ட்ராட்ய்ட் சிஸ்டத்துடன் வடிவமைக்கப்பட்டு இவை வெளிவந்து சாதனையை ஏற்படுத்தின. இது வரும் ஆண்டிலும் தொடரும். மேலும் பல மேம்பாடுகளை அடையும்.
3. ஆப்பிள் ஐ-பேட் 2: தடிமன் குறைவாக, மிகக் குறைவான எடையில் ஐ-பேட் 2 சாதனத்தைக் கொண்டு வந்து தன்னுடைய போட்டியாளர்களைக் கதி கலங்க வைத்தது ஆப்பிள் நிறுவனம். ஏனென்றால் மற்ற நிறுவனங்கள் அப்போது தான் தங்களுடைய டேப்ளட் பிசியை எப்படி வடிவமக்கலாம் என்பது குறித்து சிந்தித்து வந்தன.
அந்த போட்டி நிறுவனங்கள் விழித்துக் கொண்டு தங்களுடைய டேப்ளட் பிசிக்களைக் கொண்டு வந்த போது ஆப்பிள் டேப்ளட் பிசி என்றால் ஐ-பேட் 2 தான் என ஒரு பிரமிப்பை ஏற்படுத்தியிருந்தது. அக்டோபர் 2011ல் இவற்றின் விற்பனை 4 கோடியை எட்டியது உலக சாதனை. இந்த ஆண்டிலும் இது தொடரும்.
4. விண்டோஸ் போன்: மைக்ரோசாப்ட் வழங்கிய விண்டோஸ் போன், ஆப்பிள் ஐ-போன் மற்றும் ஆண்ட்ராய்ட் எதிர்த்து இடம் பெறுமா என்பது ஐயம் என்றாலும், விண்டோஸ் போன் அறிமுகம், இவற்றிற்கு எதிராக, சரியான காய் நகர்த்தல் என்றே அனைவரும் கருதுகின்றனர்.
2010ல் முழுமை அடையாத ஒரு விண்டோஸ் போன் மென்பொருள் தொகுப்பினை, மைக்ரோசாப்ட் வெளியிட்டாலும் அடுத்த ஆண்டில் முழுமையான போன் ஆப்பரேட்டிங் சிஸ்டமாக விண்டோஸ் போன் சிஸ்டத்தைக் கொண்டு வந்தது.
Copy and Paste வசதி, ஒரே நேரத்தில் பல செயல்பாடுகளை இயக்கும் திறன், எச்.டி.எம்.எல். 5க்கான சப்போர்ட், முன்பக்க கமெரா சப்போர்ட் ஆகியவை இதன் சிறப்பம்சங்களாக விளங்குகின்றன.
நோக்கியா நிறுவனத்துடன் விண்டோஸ் போன் சிஸ்டத்துடன் போன்களைக் கொண்டு வர மைக்ரோசாப்ட் மேற்கொண்ட ஒப்பந்தம் இதனை இன்னும் வேகமாக மக்களிடையே கொண்டு வரும் முயற்சியானது.
மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு மொபைல் உலகில் ஒரு திருப்புமுனையை விண்டோஸ் போன் ஏற்படுத்தியது. வரும் ஆண்டில் இது ஓர் ஆதிக்க நிலையை ஏற்படுத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
5. கூகுள் ப்ளஸ்: ஒருவழியாக 2011ல் பிரச்னை இல்லாத சமுதாய தளம் ஒன்றை கூகுள், கூகுள் ப்ளஸ் என்ற பெயரில் ஏற்படுத்தியது.
சிறிது நாட்களிலேயே இதற்கு 4 கோடி வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைத்தது. இந்த வகையில் முன்னணியில் இயங்கும் தளமான பேஸ்புக் தளத்திற்கு இணையான, போட்டியான செயலாக இது அறியப்பட்டது.
ஆர்குட் போன்ற தளங்கள் தர முடியாத போட்டியை கூகுள் ப்ளஸ், பேஸ்புக் தளத்திற்கு தந்தது. வரும் ஆண்டில் இவை இரண்டு மட்டுமே இந்த வகையில் போட்டியில் இருக்கும் நிலை ஏற்படும்.
6. கூகுள் குரோம்: மெல்ல மெல்ல தன் நிலையை உறுதி செய்து இன்று, பயர்பொக்ஸ் பிரவுசருக்குப் போட்டியாக அதன் இடத்தைப் பிடிக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளது கூகுள் குரோம் பிரவுசர்.
நவம்பர் மாதம் பிரவுசர் போட்டியில் பயர்பொக்ஸைப் பின்னுக்குத் தள்ளியுள்ளது உண்மை. வரும் ஆண்டில், தன் பங்கினை மேலும் உயர்த்த பல புதிய பரிமாணங்களுடன் குரோம் பிரவுசர் வரலாம்.
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசருக்கு நிச்சயமாய், குரோம் பிரவுசர் சரியான போட்டியைத் தரும் என்று எதிர்பார்க்கலாம்.

கைபேசிக்கான அவாஸ்ட் ஆண்டிவைரஸ் மென்பொருளை தரவிறக்கம் செய்வதற்கு

அவாஸ்ட்(Avast) ஆண்டிவைரஸ் மென்பொருளை பற்றி பெரும்பாலானவர்கள் அறிந்திருப்பீர்கள். கணணிகளை வைரஸ் மற்றும் மால்வேர்களில் இருந்து பாதுகாக்க உதவும் மிகச்சிறந்த இலவச ஆன்டிவைரஸ் மென்பொருளாகும்.
கணணி உலகில் சிறந்த இடத்தை தக்க வைத்துள்ள இந்த ஆன்டிவைரஸ் மென்பொருள் இப்பொழுது கைபேசி உலகிலும் கால் வைத்துள்ளது.
முதலாவதாக பல்வேறு வசதிகளுடன் கூடிய இலவச ஆன்டிவைரஸ் மென்பொருளை ஆன்ராய்ட் கைபேசிகளுக்காக வெளியிட்டுள்ளது அவாஸ்ட் நிறுவனம்.
இந்த புதிய ஆன்ராய்ட் ஆன்டிவைரஸ் மென்பொருளில் பல்வேறு வசதிகள் உள்ளது.
மென்பொருளில் உள்ள வசதிகள்:
Antivirus Production- Real time Production, Custom Updates
Web Shield
Call / SMS filter
Anti-Theft Features - Remote Lock, Remote memory wipe, sim card change notification, Remote siren
Firewall
Application Manager
இது போன்ற மேலும் பல வசதிகள் உள்ளது அனைத்தும் இலவசமாகவே உபயோகித்து கொள்ளலாம்.
பணம் கொடுத்து வாங்கும் மென்பொருளில் இல்லாத வசதிகள் கூட இந்த ஆன்ராய்ட் அவாஸ்ட் ஆன்ட்டி வைரஸ் மென்பொருளில் உள்ளது.
இந்த மென்பொருளை Avast for android தளத்தில் சென்று தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். கணணியில் இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்யும் பொழுது உங்கள் கணணியோடு உங்கள் ஆன்ராய்ட் கைபேசி இணைக்கப்பட்டிருக்க வேண்டும் அல்லது உங்கள் மொபைலில் www.avast.com/android என்ற தளத்திற்கு சென்று தரவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளலாம்.


பேஸ்புக்கில் உங்களது விபரங்களை Hide செய்வதற்கு

இன்றைய உலகில் பேஸ்புக் இல்லாதவர்களே கிடையாது என்று சொல்லும் அளவிற்கு அதனை அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர்.
பேஸ்புக்கில் உள்ள உங்களது தொலைபேசி விபரங்களை பிறர் பார்க்காமல் இருக்கும்படி Hide பண்ணலாம்.
இதற்கு முதலில் ACCOUNT TAB - PRIVATE SETTINGS LINK கிளிக் செய்யுங்கள்.
CUSTOMIZE SETTING கிளிக் செய்யுங்கள்.
CONTACT INFORMATION கிளிக் செய்து CUSTOMIZE கிளிக் செய்யுங்கள்.
அடுத்த விண்டோவில் நீங்கள் யாருக்கு உங்கள் தொலைபேசி விபரங்களை பகிர வேண்டுமோ அப்படி செய்து கொள்ளலாம்.
ONLY ME என நீங்கள் தெரிவு செய்தால் யாரும் உங்கள் விபரங்களை பார்க்க முடியாது.

December 24, 2011

டிவிட்டரில் உலக இலக்கியம்

எமெட் ரென்சின் மற்றும் அலெக்ஸ் அகிமென் என்ற மாணவர்கள் டிவிட்டர் மற்றும் இலக்கிய ஆர்வம் இரண்டையும் இணைத்து அதனோடு இளமையின் குறும்பையும் சேர்த்து உலக இலக்கியத்தை எல்லாம் 20 குறும்பதிவுகளில் அடக்கி விட்டனர்.
உலக‌ பெருங்கவி ஷேக்ஸ்பியரில் இருந்து நாவல்களின் பேரசர் தாஸ்தவகி வரை புகழ்பெற்ற படைப்பாளிகளின் நாவல்களையும் கதைகளையும் சுருக்கி 20 குறும்பதிவுகளாக கொடுத்துள்ளனர்.
அதாவது கதை சுருக்கத்தை தருவது போல இந்த‌ இருவரும் நாவல்களின் சாரம்சத்தை டிவிட்டர் பதிவுகளாக்கினர்.
டால்ஸ்டாய் போன்ற மேதைகளின் புத்தகத்தை படிக்கும் அளவுக்கு இளையதலைமுறைக்கு பொருமை இல்லை என்று ரொம்ப நாளாக சொல்லப்பட்டு வருகிற‌து. டிவிட்டர் யுக‌த்தில் கேட்கவே வேன்டாம். இன்றைய தலைமுறையின் பொறுமை 140 எழுத்துக்கள் அளவு தான்.
எனவே பெரும் இலக்கியமாக இருந்தாலும் அது டிவிட்டர் வடிவில் கொடுக்கப்பட்டால் எல்லோரையும் கவர்ந்துவிடும்.
ஷேக்ஸ்பியர் நாயகன் ஹாம்லெட் என்ன சொல்ல வருகிறார் என்பதை அறிந்து கொள்ள பக்கம் பக்கமாக படிக்கும் பொறுமை எத்தனை பேருக்கு இருக்கும். அதையே பத்து குறும்பதிவுகளாக தந்துவிட்டால்? அதுவும் ஹாம்லெட்டே டிவீட் செய்வது போல இருந்தால் எப்ப‌டி இருக்கும்? அதை தான் இந்த இருவரும் செய்தனர்.
நாவல்களை சுருக்கியதோடு கொஞ்சம் நகைச்சுவையையும் சேர்த்து சுவையாக குறும்பதிவுகளாக்கினர். இந்த பதிவுகள் படிக்க சுவாரஸ்யமாக இருப்பதோடு படைப்புகளின் சாரம்சத்தியும் புரிய வைத்து விடுகின்றன.
இந்த இளைஞர்களின் குறும்பதிவுகள் வெளியான போது பெரும் கவனத்தைப் பெற்றன. இந்த பதிவுகள் டிவிட்டரில்லகியம் என்றும் வர்ணிக்கப்பட்டது, அதாவது டிவிட்டரேச்சர். இதே பெயரில் பென்குவின் இவற்றை புத்தக‌மாக வெளியிட்டுள்ளது.

December 23, 2011

Win Zip 16 புதிய பதிப்பை தரவிறக்கம் செய்வதற்கு

கோப்புகளை சுருக்கி பதிந்து காப்பதில் வெகு காலமாகப் பல லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களால் பயன்படுத்தப்படும் மென்பொருள் Win Zip. இதன் பதிப்பு 16 அண்மையில் வெளியாகியுள்ளது.
இந்த பதிப்பில் 64 பிட் இஞ்சின் பயன்படுத்தப்படுவதால் சுருக்கி விரிக்கும் பணி தற்போது அதிக வேகமாகவும், எளிதாகவும் மேற்கொள்ளப்படுகிறது.
சுருக்கப்பட்ட கோப்பு பெரியதாக இருந்தால் மின்னஞ்சலில் அனுப்புவது இயலாது. இதற்கு புதியதாக Zip Send என்ற வசதி தரப்பட்டுள்ளது. You Send It என்ற இணையத்தளத்தின் கூட்டுடன் 50 எம்.பி சுருக்கப்பட்ட கோப்பு அனுப்பப்படுகிறது.
நீங்கள் ஏற்கனவே Zip Send Pro தளத்தின் பயனாளர் என்றால் இந்த அளவு 2 ஜிபி வரை அனுமதிக்கப்படுகிறது. அடுத்த புதிய வசதி Zip Share.
இதன் மூலம் Zip செய்யப்பட்ட கோப்பை கிளவ்ட் கம்ப்யூட்டிங் வசதிக்கு அனுப்பி விட்டு, அதற்கான லிங்க் ஒன்றை பேஸ்புக் தளத்தில் நம் நண்பர்கள் தரவிறக்கம் செய்திட வசதியாக அனுப்பலாம்.
எதிர்காலத்தில் பயன்படுத்தக் கூடிய வகையில் Zip to Bluray என்ற ஒரு வசதி கிடைக்கிறது. இதன் மூலம் சுருக்கப்பட்ட தகவலினை 50 ஜிபி அளவில் ஒரு புளுரே டிஸ்க்கில் பதிய முடியும்.
புளுரே டிஸ்க் பயன்பாடு பரவலாகக் கிடைக்கையில் இதனை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். மொத்தத்தில் ஏற்கனவே பல வசதிகளைக் கொண்டுள்ள Win Zip புரோகிராமில் கூடுதல் பயன்பாடு பல சேர்க்கப்பட்டுள்ளது.

பென்டிரைவில் உள்ள சிக்கல்களை சரிசெய்வதற்கு

நாம் அன்றாடம் பல கணணிகளில் பலதரப்பட்ட காரணங்களுக்காக பென்டிரைவ்களை பயன்படுத்துகின்றோம்.
இதனால் வைரஸ், மால்வேர்கள் உங்களது பென்டிரைவில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். உங்களது முக்கியமான கோப்புக்களை அழித்து விடுவதுடன், கோப்புறை குறுக்குவழிகளை(folder shortcuts) உருவாக்கிவிடும்.
சில சமயங்களில் எப்படி உங்களது கோப்புக்களை மீள பெறுவது என தெரியாமல் இருக்கும். பின்வரும் வழிமுறையை பின்பற்றி இந்த பிரச்சனையை சரிசெய்து கொள்ளுங்கள்.
முதலில் Command Prompt யை திறப்பதற்க்கு Run–> சென்று அங்கே “cmd” என டைப் செய்யுங்கள்.
பின்னர் திறக்கும் திரையில் attrib -h -r -s /s /d h:*.* என டைப் செய்யுங்கள்.
மேலே காணப்படும் h என்பதற்கு பதிலாக உங்களது சரியான பென்டிரைவின் Drive Letter-ஐ கொடுங்கள்(இதை உங்களது My Computer யில் கிளிக் செய்து பார்க்கலாம்).
இனி உங்களது பென்டிரைவில் சென்று அங்கு உள்ள தேவையற்ற shortcutsகளை அழித்து விடுங்கள்.
இவ்வாறு செய்தால் உங்களது  பென்டிரைவின் கோப்புறை குறுக்குவழி(Folder Shortcut) சிக்கலை சரிசெய்து விடலாம்.

ரெகுவா புதிய பதிப்பின் சிறப்பம்சங்கள்

எதிர்பாராத விதமாக நம்மை அறியாமல் நாம் அழித்த கோப்புகளை மீட்பதில் நமக்குப் பெரிய அளவில் சிறப்பாக உதவிடும் புரோகிராம்களில் ஒன்று ரெகுவா(Recuva). இதன் புதிய பதிப்பு 1.42.544 அண்மையில் வெளியாகி உள்ளது.
இது ஓர் இலவச புரோகிராம் என்பது அனைவருக்கும் தெரியும். டைரக்டரிகளில் மற்றும் கோப்பறைகளில் இருந்து நீக்கும் கோப்புகள் மட்டுமின்றி, ரீசைக்கிள் பின்னிலிருந்து நீக்கும் கோப்புகளையும் இந்த புரோகிராம் மீட்டுத் தரும் என்பது இதன் சிறப்பு.
அத்துடன் வைரஸ் புரோகிராமின் பிழையான இயக்கம் மற்றும் கணணி கிராஷ் ஆகியவற்றால் நீக்கப்படும் கோப்புகளையும் ரெகுவா நமக்கு மீட்டுத் தரும்.
சிகிளீனர் வழங்கும் நிறுவனமான பிரிபார்ம்(Piriform) நிறுவனமே இதனையும் வழங்குகிறது. இரண்டுமே இலவசம் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.
இதனுடைய சிறப்பம்சங்களாவன:
1. மிக எளிதான இன்டர்பேஸ் வழியாக 'Scan' என்பதை கிளிக் செய்து, பின்னர் நாம் மீண்டும் பெற விரும்பும் நீக்கப்பட்ட கோப்புகளைத் தேர்ந்தெடுக்கலாம்.
2. கோப்பின் பெயர் மற்றும் வகை அடிப்படையில், மீட்கப்பட வேண்டிய கோப்புகளை வரையறை செய்திடலாம்.
3. List மற்றும் Tree வகையில் கோப்புகளைக் காணும் வசதி.
4. யு.எஸ்.பி. பிளாஷ் ட்ரைவில் இருந்து இயக்கலாம்.
5. ஆபீஸ் டாகுமெண்ட்ஸ், இமேஜஸ், வீடியோ, மியூசிக், மின்னஞ்சல் என எந்த வகை கோப்புகளையும் மீட்டுத் தரும்.
6. FAT12, FAT16, FAT32, exFAT, NTFS, NTFS5 , NTFS மற்றும் EFS ஆகிய அனைத்து வகை கோப்புகளையும் மீட்டுத் தருகிறது.
7. கணணியில் இணைத்துப் பின் தனித்து எடுக்கப்படும் மீடியா வகையான SmartMedia, Secure Digital, MemoryStick, Digital cameras, Floppy disks, Jaz Disks, Sony Memory Sticks, Compact Flash cards, Smart Media Cards, Secure Digital Cards போன்ற அனைத்து வகை மீடியாக்களில் இருந்து நீக்கப்பட்ட கோப்புகளை மீட்கிறது.
8. ஸிப் ட்ரைவ், எக்ஸ்டர்னல் ஹார்ட் ட்ரைவ் மற்றும் யு.எஸ்.பி. ஹார்ட் ட்ரைவ்களில் இருந்தும் அழிக்கப்பட்ட கோப்புகளை மீட்டுத் தருகிறது.
9. வேகமான இயக்கம், சிறிய அளவிலான கோப்பு மற்றும் நொடியில் இயங்கி முடிக்கும் சிறப்புக்களையும் கொண்டது.
புதிய பதிப்பில்:
1. JPEG மற்றும் PNG புதிய தொழில்நுட்ப முறை வடிவமைக்கப்பட்டு இணைக்கப்பட்டுள்ளது.
2. விண்டோஸ் 8 சோதனைப் பதிப்பிற்கான தொழில்நுட்பமும் சேர்க்கப்பட்டுள்ளது.
3. கீ போர்ட் நேவிகேஷனில் புதிய வசதிகள் தரப்பட்டுள்ளன.
4. பெரிய அளவிலான ட்ரைவ்களுக்கு, கூடுதல் மெமரி பயன்பாடு தரப்பட்டுள்ளது.
5. சிறிய குறைகள் பல நீக்கப்பட்டுள்ளன.

December 22, 2011

சாதனை புரிந்த விண்டோஸ் 7

மிக வேகமாக விற்பனை செய்யப்படும் இயங்குதளம் என்ற பெயரினை விண்டோஸ் 7 பெற்றுள்ளது. அறிமுகப்படுத்தப்பட்டு 9 மாதங்களில் 17 கோடியே 50 லட்சம் பேர் இதனை வாங்கியுள்ளனர்.
இந்த வேகமான விற்பனைக்குக் காரணம் என்ன? இதற்கு முன்னர் மைக்ரோசாப்ட் விண்டோஸ் இயங்குதளம் பல பதிப்புகளை வெளியிட்டுள்ளது. இருப்பினும் ஏன் விண்டோஸ் 7 மட்டும் கூடுதலாக லாபம் ஈட்டித் தரும் வகையில் விற்பனை ஆகி உள்ளது என்ற கேள்வி பலரிடமிருந்து வந்துள்ளது.
இதற்குக் காரணம் மிக வெளிப்படையான ஒன்றுதான். இந்த சிஸ்டத்தில் தான் இதற்கு முந்தைய விண்டோஸ் பதிப்புகளில் இல்லாத பல அம்சங்கள் உள்ளன.
பழைய செயல்பாடுகள் முழுமையாக மாற்றப்பட்டு மேம்படுத்தப்பட்டு தரப்பட்டுள்ளன.
புதிய செயல்பாடுகள் அதிகமான எண்ணிக்கையில் இணைக்கப்பட்டுள்ளன. எனவே தான் பெரும்பான்மையானவர்கள் இந்த இயங்குதளத்திற்கு மாறியுள்ளனர்.
விண்டோஸ் 7 சிஸ்டம் கடந்த அக்டோபர் மாதம் 22ம் திகதி வெளியானது. ஒன்பது மாதங்கள் ஓடிவிட்டன. ஒரு மாதத்திலேயே இதன் விற்பனை 15 கோடியைத் தாண்டியது.
மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளபடி, ஒவ்வொரு நொடியிலும் ஏழு விண்டோஸ் 7 இயங்குதளம் விற்பனையானது. இன்னும் இது தொடர்கிறது. நிச்சயம் இதுவரை எந்த இயங்குதளமும் எட்டாத இலக்கினை இது எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கூகுள் பிளஸ் தளத்தில் Page வசதி

கூகுள் பிளஸ் தளத்தில் Page வசதியை கூகுள் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டது. இதன் மூலம் பெரும்பாலானவர்கள் தங்கள் நிறுவனங்களுக்கும், வலைப்பூக்களுக்கும் தனியாக Page உருவாக்கலாம்.
தற்பொழுது இந்த கூகுள் பிளஸ் பக்கத்தில் ஒரு புதிய வசதியை அறிமுகப்படுத்தி உள்ளனர். உங்கள் கூகுள் பிளஸ் பக்கத்தில் நீங்கள் மட்டுமின்றி உங்கள் நண்பர்களுக்கோ அல்லது உங்கள் நிறுவனத்தின் மேலாளர்களுக்கோ அட்மின் வசதியை அளிக்கலாம்.
இதன்மூலம் குழு உறுப்பினர்களுக்கு அட்மின் வசதியை கொடுக்கலாம். எப்படி அட்மின் வசதி அளிப்பது என கீழே பார்ப்போம்.
அட்மின் வசதியை வழங்குபவருக்கு:
முதலில் கூகுள் பிளசில் நுழைந்து உங்களின் Page திறந்து கொள்ளுங்கள். அடுத்து Setting பகுதிக்கு சென்று Google Settings என்பதை கிளிக் செய்யுங்கள்.
உங்களுக்கு ஒரு விண்டோ ஓபன் ஆகும். அதில் உள்ள Managers என்பதை கிளிக் செய்யுங்கள்.
அதில் அட்மின் வசதி அளிக்க நினைக்கும் நபரின் மின்னஞ்சல் முகவரியை கொடுக்கவும்.
நீங்கள் அவரின் மின்னஞ்சல் முகவரி கொடுத்து Invite பட்டனை அழுத்தியவுடன் உங்களுக்கு ஒரு Pop-up விண்டோ வரும், அதில் Continue என்ற பட்டனை அழுத்தவும்.
உங்களின் அழைப்பு அந்த மின்னஞ்சலுக்கு செல்லும். அவ்வளவு தான் உங்களின் வேலைமுடிந்தது, இனி நீங்கள் Invite செய்த நபர் என்ன செய்யவேண்டும் என பார்க்கலாம்.
அட்மின் வசதியை பெறுபவர்களுக்கு:
அதில் உள்ள Accept என்ற பட்டனை அழுத்தவும். உங்களுக்கு இன்னொரு பகுதி ஓபன் ஆகும், அதில் இதே முகவரியில் தொடரவேண்டுமா இல்லை வேறு ஏதேனும் மின்னஞ்சல் முகவரியில் அட்மின் வசதி வேண்டுமா என கேட்கும். உங்கள் விருப்பப்படி தெரிவு செய்து கொண்டு கீழே உள்ள Continue என்ற பட்டனை அழுத்தவும்.
Continue கொடுத்தவுடன் உங்களுக்கு அடுத்த பக்கம் ஓபன் ஆகும், அதில் உங்கள் User Id, Password கொடுத்து லொகின் செய்தால் போதும் அட்மின் வசதியை நீங்கள் பெற்று கொள்ளலாம்.
Note1: கூகுள் பிளஸ் பக்கத்தின் உரிமையாளர்(Owner) நினைத்தால் எந்த நேரத்திலும் இந்த அட்மின் வசதியை நீக்க முடியும்.
Note2: இந்த முறையில் அதிகபட்சமாக 50 நபர்கள் வரை அட்மின் வசதியை வழங்கலாம்.