January 30, 2012

பென்டிரைவை சோதிப்பதற்கு

இன்றைய கணணி உலகத்தில் USB கருவிகளான பென்டிரைவ், மெமரி கார்டு போன்றவை தகவல்களை சேமித்து வைத்துக் கொள்ள பயன்படுத்தப்படுகின்றன.
இவை குறிப்பிட்ட காலம் செயல்பட்ட பின் தானாகவே இயக்கத்தை நிறுத்திக் கொள்கின்றன.
சிலருக்கோ தாங்கள் வாங்கிய பென்டிரைவ் தரமானதா அல்லது போலியானதா என்று கூட கண்டறியத் தெரியாது. அதே போல தற்போது நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் பென்டிரைவ் பழுதாயிருக்கிறதா என்றும் கண்டுபிடிக்க முடியாது.
பென்டிரைவ் மற்றும் ஏனைய USB கருவிகளின் தரத்தைச் சோதிக்க ChkFlsh என்ற இலவச மென்பொருள் இணையத்தில் கிடைக்கிறது.
இதன் மூலம் Read Speed, Write Speed, Sector wise Errors போன்ற விடயங்களை சோதித்து அறியலாம். இதனால் நமது பென்டிரைவ் தரமாக உள்ளதா என்றும் தெரிந்து கொள்ளலாம்.
இதற்கு முதலில் இந்த மென்பொருளைத் தரவிறக்கியவுடன் ChkFlsh என்ற கோப்பை கிளிக் செய்யவும். பின்னர் உங்கள் பென்டிரைவை கணணியில் செருகவும். பென்டிரைவில் உள்ள தகவல்களை அழித்து விட்டு சோதிக்கப் பயன்படுத்துவது நலமானது. இதில் 3 வகையான Access Type கள் இருக்கின்றன.
Use Temporary file என்பதைக் கிளிக் செய்தால் Write and Read சோதனையைச் செய்ய முடியும்.
உங்கள் பென்டிரைவில் ஏதேனும் தகவல்கள் இருந்து Read Test மட்டுமே மேற்கொள்ள வேண்டும் எனில் As Logical Drive என்பதைக் கிளிக் செய்து கொள்ளவும்.

Test Length என்பதில் One Full Cycle என்பதைத் தெரிவு செய்யவும். பின்னர் Start கொடுத்தால் பென்டிரைவ் சோதிக்கப்படும்.
ஒவ்வொரு கோப்பு செக்டார்களாக(File Sector)களாக சோதிக்கப்பட்டு வரும். இறுதியில் ஒவ்வொரு செக்டாரும் பச்சை வண்ணத்தில் காண்பிக்கப்பட்டால் உங்கள் பென்டிரைவில் எந்த பிரச்னையும் இல்லை என்று அர்த்தம். இத்துடன் இந்த பென் டிரைவின் வேகம் மற்றும் பிழைகள் இருந்தாலும் காண்பிக்கப்படும்.

முகம் தெரியாதவர்​களுடனான ஓன்லைன் வீடியோ சட்டிங்கிற்​கு சிறந்த தளங்கள்

நவீன காலத்தில் ஓன்லைன் வீடியோ சட்டிங் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், பிரபல்யமானதாகவும் காணப்படுகின்றது.
இதுவரை காலமும் உங்கள் நண்பர்களுடன் பேஸ்புக்கிலும், ஸ்கைப் போன்றவற்றிலும் வீடியோ சட்டிங் செய்து சலிப்பு ஏற்பட்டிருக்கும்.
எனவே அறிமுகம் இல்லாத புதிய நபர்களுடன் வீடியோ சட்டிங் செய்ய விரும்புவீர்கள். அதற்கான  வசதியை சில இணையத்தளங்கள் தருகின்றன. அவற்றைப்பற்றி இங்கு பார்ப்போம்.
1. Omegle: இத்தளமானது 2009ம் ஆண்டு 18 வயதுடைய இளைஞனால் உருவாக்கப்பட்டது. இங்கு சட் செய்யும் போது எந்தவிதமான பதிவுகளும் மேற்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. தளத்திற்கு விஜயம் செய்ததும் ஒருவருடன் சட் செய்வதற்கான இணைப்பு ஏற்படுத்தப்படும்.
2. ChatRoulette: இது ரஷ்யாவை சேர்ந்த பாடசாலை மாணவன் ஒருவனால் உருவாக்கப்பட்ட தளமாகும். இத்தளத்தை பயன்படுத்துவதற்கு வயது வரையறைகள் இல்லை. ஆனால் சட் செய்யும் முன்பு தங்களை பதிவு செய்தல் அவசியமாகும்.
3. Rounds: ஏனைய தளங்களை விட இங்கு அதிகளவு வசதிகள் காணப்படுகின்றன. அதாவது சட் செய்வதை தவிர  ஓன்லைன் கேம், Mp3 பாடல்களை கேட்டல், youtube வீடியோக்களை பார்க்க கூடியவாறு இருத்தல் போன்ற வசதிகள் காணப்படுகின்றன. இத்தளத்தின் மூலம் 18 வயதிற்கு மேற்பட்டவர்களே சட் செய்ய முடியும்.

January 29, 2012

பிக்னிக் தளம் மூடப்படுகிறது

கூகுள் நிறுவனம் பல இணையத்தளங்களை தன்னகத்தே இணைத்துக் கொண்டுள்ளது. சமீபத்தில் கூகுள் பிளசை பிரபலப்படுத்தும் நோக்கில் கூகுள் பஸ் இணையத்தளம் மூடப்பட்டது.
அந்த வரிசையில் ஓன்லைனில் புகைப்படங்களை எடிட் செய்ய உதவும் தளமான picnik மூடப்பட்டு, கூகுள் பிளசோடு இணைகிறது.
எனவே இனிமேல் எவ்வித சிரமமும் இல்லாமல் கூகுளிலேயே புகைப்படங்களை எடிட் செய்து கொள்ளலாம்.
இந்த தளம் மூலம் கூகுளில் வரவுள்ள சில வசதிகள்,
1. வெட்டுதல்(Crop), அளவை குறைத்தல்(Resize), திருப்புதல்(Rotate) போன்றவைகளை செய்து கொள்ளலாம்.
2. புகைப்படங்களுக்கு அழகான எபெக்ட்ஸ், விதவிதமான Frames சேர்க்கலாம்.

சமூக தளங்களிலிரு​ந்து தரவுகளை Backup செய்வதற்கு

இன்றை காலகட்டத்தில் பல்வேறு சமூக தளங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அவற்றினூடாக மிக அவசியமான தரவு, தகவல்களும் பரிமாற்றப்பட்டு வருகின்றன.
எனினும் அவற்றினூடு பரிமாற்றப்படும் தகவல்களுக்கு எந்த உத்தரவாதமும் இல்லை. அதாவது குறித்த தகவல்களை சில சந்தர்ப்பங்களில் இழக்க நேரிடலாம். 
எனவே இவ்வகையான இழப்புக்களை தவிர்ப்பதற்கு அத்தகவல்களை Backup செய்துகொள்வதற்கு எல்லோரும் விரும்புவார்கள். அவர்களுக்காகவே ஓன்லைனில் இச்சேவையை வழங்க ஒரு இணையத்தளம் உள்ளது.
Backupify என்ற குறித்த இணையத்தளத்தின் மூலம் இலவசமாகவும், கட்டணம் செலுத்தியும் இச்சேவையை பெற்றுக்கொள்ள முடியும்.
இலவச சேவை எனின் 1GB அளவும் கட்டணம் செலுத்தப்பட்ட(premium accounts) சேவை எனின் 10-50GB இடவசதியை பெற்றுக்கொள்ளலாம். அத்துடன் இங்கு பத்திற்கு மேற்பட்ட சமூக தளங்களிலிருந்து தரவு, தகவல்களை Backup செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
செயன்முறை:
1. தளத்திற்கு சென்று புதிய கணக்கொன்றை(signup) ஆரம்பிக்கவும்.
2. கணக்கை ஆரம்பித்ததும் கீழுள்ளவாறு தோன்றும் அமைப்பில் Backup செய்ய வேண்டிய சமூக தளத்தை தெரிவு செய்து add என்பதை அழுத்தவும்.
3. அப்பொழுது குறித்த சமூகத்தளத்தில் login செய்யுமாறு கேட்கும். ஆகவே login செய்து தோன்றும் சாளரத்தில் Install என்பதை அழுத்தவும்.
4. அதன் பின் உங்களின் அனுமதியை கேட்கும் எனவே Allow என்பதை தெரிவு செய்யவும்.
5. இப்பொழுது வாரம் ஒருமுறை தகவல்கள் அனைத்தும் தானாகவே Backup செய்யப்படும்.
6. Backup செய்யப்படும் தரவுகளை மின்னஞ்சல் முகவரியை கொடுத்து நேரடியாக மின்னஞ்சலிலிருந்து தரவிறக்கம் செய்யலாம். அதற்கு கீழே படத்தில் காட்டியவாறு configure என்பதை அழுத்தவும்.
குறிப்பு: premium accounts பயனர்கள் ஆரம்பத்தில் கட்டணம் செலுத்தாது 30 நாட்கள்வரை இலவசமாக பயன்படுத்த முடியும். முப்பது நாட்டகளின் முடிவில் இச்சேவை உங்களுக்கு பிடித்திருந்தால் கட்டணம் செலுத்தி புதுப்பித்துக்கொள்ள முடியும்.

பேஸ்புக்கில் களமிறங்கும் Angry Birds விளையாட்டு

கணணி விளையாட்டு பிரியர்கள் அனைவருக்கும் பிடித்தமான விளையாட்டு என்றால் அது Angry Birds விளையாட்டு தான்.
இதில் பல்வேறு தொகுப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டு விட்டன. உலகம் முழுவதிலும் 500 மில்லியன் முறை இந்த விளையாட்டு தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.
முதன் முதலில் கைபேசிக்காக வடிவமைக்கப்பட்டு பின்னர் கணணிகளுக்கும் வந்தது. இதனையடுத்து சமூக தளமான கூகுள் பிளசில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த விளையாட்டு தற்போது பேஸ்புக்கிலும் வரவிருக்கிறது.
இதனை பெற Angry Birds விளையாட்டின் Angry Birds Facebook Page சென்று Like செய்தால் இந்த விளையாட்டு வெளிவந்தவுடன் அதற்கான அழைப்பு உங்களுக்கு அனுப்பப்படும்.
எதிர்வரும் பிப்ரவரி மாதம் 14ம் திகதி முதல் இந்த விளையாட்டை பேஸ்புக் தளத்திலும் விளையாடி மகிழலாம்.

சொனி நிறுவனத்தி​ன் B170 "வோக்மன்" அறிமுகம்


1980ம், 1990ம் ஆண்டளவில் "வோக்மன்" என்ற சொல்லை  கேட்டால் நினைவுக்கு வருவது "கசட்" பயன்படுத்தப்படும் அளவில்  சற்று பெரிய சாதனம் ஆகும்.
ஆனால் தொழில்நுட்ப வளர்ச்சியில் இன்று அது உள்ளங்கையில் அடங்கும் அளவிற்கு மிகவும் குறுகி வருகின்றது.
அதற்கிணங்க சொனி நிறுவனமானது 28கிராம் அளவில் B170 என்ற புதிய வோக்மனை அறிமுகம் செய்துள்ளது.
இதில் mp3 போர்மட்டில் பாடல்களை சேமிக்க முடிவதுடன் 2GB, 4GB அளவில் கிடைப்பதுடன் 2GBல் அண்ணளவாக 440 பாடல்களையும், 4GBல் 990 பாடல்களையும் சேமிக்க முடியும்.

ஓவியக் கலைஞர்களுக்கு உதவும் பயனுள்ள மென்பொருள்

கணணியில் ஓவியம் வரைவதற்கு பல்வேறு மென்பொருள்கள் உள்ளன. ஆனால் ஓவியம் வரைவதற்கென்றே பிரத்யோகமாக கிடைக்கக்கூடிய மென்பொருள்களில் ஒன்று ஸ்மூத் டிரா (Smooth Draw) ஆகும்.
இந்த மென்பொருள் இலவசமாக கிடைக்கின்றது. இதனை பதிவிறக்கம் செய்து கணணியில் நிறுவிக் கொள்ளவும்.
இதில் பேனா (Pen), பென்சில் (Pencil), வாட்டர் கலர் (Water Colour), ஏர் ஸ்பிரே (Air Spray) எனப் பல்வேறு விதமான பிரஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
போட்டோஷாப் போன்ற முன்னணி மென்பொருள்களில் உள்ள பிளர் (Blur), சார்ப்னஸ்(Sharpness), பர்ன்(Burn), ஸ்மட்ஜ்(Smudge) டூல்களும் லேயர் (Layar) வசதியும் இதில் உள்ளது.
எளிய தோற்றமும், எவரும் புரிந்து கொள்ளும் விதமாகவும் வடிவமைக்கப்பட்ட இம்மென்பொருளில் வரைந்த படங்களை JPEG, PNG, TIFF, BMP, GIFF உட்பட முன்னணி படக் கோப்பு வடிவங்களாக சேமிக்கமுடியும்.

January 26, 2012

பேஸ்புக்கில் Slideshow படங்களை உருவாக்க

பேஸ்புக்கை பயன்படுத்தும் ஒவ்வொருவரும் வெவ்வேறு முறைகளில் தமது அன்றாட நடவடிக்கைகளை பகிர விரும்புவார்கள். அதனடிப்படையில் தினந்தோறும் பலவிதமான அம்சங்கள் சேர்க்கப்பட்டு வருகின்றன.
அதேபோல் பேஸ்புக்கில் படங்களை பகிருவதற்கு பல்வேறு வழிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதில் விசேடமான முறையாக Slideshow காணப்படுகின்றது.
இவ்வாறு சிறந்த முறையில் Slideshowக்களை உருவாக்குவதற்கு Magix Slideshow Maker என்ற மென்பொருளை பயன்படுத்த முடியும். இதில் நூற்றுக்கணக்கான effects, transitions, music, sound காணப்படுகின்றமை விசேட அம்சமாகும்.
இம்மென்பொருளை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட Slideshow வை வீடியோவாக மாற்றி பேஸ்புக் தளத்தில் பகிர முடியும். தவிர YouTube, Flickr போன்ற தளங்களிலும் நேரடியாக பதிவேற்ற முடியும்.

மொழிகளை புரிந்து கொள்ளும் டால்பின்கள்

டால்பின் மீன்கள் தங்களுக்குள் விடயங்களை பரிமாறிக் கொள்ளும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.
தற்போது டால்பின் மீன்களுக்கு மொழிகளை கற்றுக் கொள்ளும் திறனும் உண்டு என்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர்.
டால்பின் குறித்து ஆய்வு மேற்கொண்ட பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கடலியல் ஆய்வாளர்கள் கூறுகையில், டால்பினுக்கு மனிதன் பேசும் மொழியை ஆய்வாளர்கள் சொல்லி கொடுத்தனர். அப்போது டால்பின்கள் அந்த மொழியை புரிந்து கொண்டு அது போலவே பேச முயற்சித்தது.
அதுமட்டுமல்லாமல் விஞ்ஞானிகள் பேசுவதை புரிந்து கொண்டு அதற்கு ஏற்றார் போல நடந்தும் கொண்டன. எனவே டால்பினுக்கு உரிய பயிற்சி அளித்தால் அவை மற்ற மொழிகளை புரிந்து கொள்ளும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

மடிக்கணணியின் வெப்பத்தை கையாள்வதற்கான வழிமுறைகள்

கடந்த சில ஆண்டுகளாக மடிக்கணணிகளில் ஏற்படும் வெப்பம் குறித்த கவலை இவற்றைப் பயன்படுத்துவோரிடையே அதிகரித்து வருகிறது.
மடிக்கணணியின் பயன்பாடு அதிகரிப்பினால் இந்த கவலைக்கான காரணங்களையும், தீர்வுகளையும் பலரும் கண்டறிந்து வருகின்றனர்.
சில இடங்களில் மடிக்கணணிகள் கூடுதல் வெப்பத்தினால் தீ பிடித்த தகவல்களும் மக்களை அதிர்ச்சி அடையச் செய்தன. டெல், சோனி, ஏசர் போன்ற நிறுவனங்கள் தாங்கள் விற்பனை செய்த மடிக்கணணிகளில் உள்ள பேட்டரிகள் அதிக வெப்பத்தை விரைவில் அடைந்ததனால், அவற்றை வாங்கிக் கொண்டு புதிய பேட்டரிகளைத் தந்த நிகழ்வுகளும் ஏற்பட்டன.
மோசமான பேட்டரிகளைத் தவிர்த்து மடிக்கணணிகள் வெப்பம் அதிகமாக வெளிப்படுத்துவதற்கு வேறு சில காரணங்களும் உள்ளன. நாம் பயன்படுத்தும் அனைத்து எலக்ட்ரானிக் பொருட்களுமே அவை இயங்கத் தொடங்கியவுடன் வெப்பத்தை வெளியிடுகின்றன.
ஒரு டிவிடி பிளேயர் இயங்கிய சில நிமிடங்கள் கழித்து, அதில் கைகளை வைத்துப் பார்த்தால், இந்த வெப்பத்தின் தன்மையை அறியலாம்.
டெஸ்க்டொப் கணணிகளைக் காட்டிலும், மடிக்கணணிகள் இடம் மிகக் குறைவு. இதனால் அதில் வைக்கப்பட்டுள்ள வெப்பத்தை வெளிப்படுத்தும் எலக்ட்ரானிக் பொருட்கள் சிறிய இடத்தில் நெருக்கமாக வைக்கப்பட வேண்டிய சூழ்நிலையில் அமைகின்றன. நெருக்கமாக இருப்பதனால் இவற்றிலிருந்து வெளிப்படும் வெப்பம் வெளியேற மிகக் குறைந்த இடமே கிடைக்கிறது.
அடுத்த பிரச்னை இயக்க திறன். மடிக்கணணிகளில் அதிக வேகத்தில் இயங்கும் கூடுதல் திறன் கொண்ட எலக்ட்ரானிக் பொருட்கள் பொருத்தப்படுகின்றன. பதியப்படும் இயங்குதளங்களும் அவை வேகமாக இயங்க, இந்த எலக்ட்ரானிக் பொருட்களை கூடுதலாக இயக்குகின்றன. இதனால் அதிக வெப்பம் உருவாகிறது.
மடிக்கணணிகள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கும் இது தெரியும். அதனால் தான், வெப்பத்தினை வெளியேற்றும் வகையில் சிறிய விசிறிகள், ஹீட் ஸிங்க் எனப்படும் தகடுகளைப் பயன்படுத்துகின்றனர்.
ஆனால் இவற்றால் முழுமையாக வெப்பத்தினை வெளியேற்ற முடியவில்லை. விசிறிகள் காலப் போக்கில் வேகம் குறைந்து இயங்குவதால், வெப்பம் வெளியாவதில் பிரச்னை ஏற்படுகிறது.
பொதுவாக மடிக்கணணியில் வன்தட்டில் பிரச்னை ஏற்பட இந்த வெப்பம் அடிப்படை காரணமாக உள்ளது. எனவே இந்த வெப்பத்தினை வெளியேற்றுவதிலும், அதனை குளிரவைப்பதிலும் கவனம் செலுத்தினால் பல பிரச்னைகள் ஏற்படுவதனை முன்கூட்டியே தடுக்கலாம்.
விசிறிகள் சோதனை: மடிக்கணணியில் வெப்பம் உருவாகிறது என்று தெரிந்தால் உடனே திறந்து இயக்கத்தின் போது அதில் பொருத்தப்பட்டிருக்கும் அனைத்து விசிறிகளும் சரியாக அதன் அதிக பட்ச வேகத்தில் இயங்குகின்றனவா எனச் சோதிக்க வேண்டும். பெரும்பாலும் இவற்றை நாம் திறந்து பார்க்க இயலாது.
காற்று துளைகளின் சுத்தம்: வெப்பம் வெளியேறுவதற்காக அமைக்கப்பட்டிருக் கும் காற்று துளைகளை அடிக்கடி கவனிக்க வேண்டும். இவற்றில் தூசு படிந்து அடைத்துக் கொண்டிருந்தால், வெப்பம் விரைவாக வெளியேற்றப்பட மாட்டாது. எனவே சுத்தம் செய்வது அவசியம்.
பயாஸ் சோதனை: நம் பயாஸ் செட்டிங்ஸ் மாற்றி அமைப்பதன் மூலம் வெப்பம் உருவாவதனை அறியலாம். இந்த அமைப்பு எப்படி இருக்க வேண்டும் அல்லது எப்படி இதனை மாற்றலாம் என்பதற்கு உங்கள் மடிக்கணணி தயரித்த நிறுவனத்தின் இணைய தளம் சென்று பார்க்கவும். சில நிறுவனங்கள் இந்த பயாஸ் அமைப்பினையும் அப்டேட் செய்து புரோகிராம்களை வெளியிட்டி ருப்பார்கள்.
பொதுவான சில பழக்கவழக்கங்களையும் நாம் மேற்கொண்டால் வெப்பம் உருவாவதனைத் தடுக்கலாம்.
வெப்பமான, சூரிய ஒளிபடும் இடத்தில் வைத்து மடிக்கணணியை இயக்கக்கூடாது. அதே போல மூடப்பட்ட கார், சிறிய அறை ஆகியவற்றில் இயக்கக் கூடாது. ரேடியேட்டர்கள், வெப்பம் வெளியேறும் இடங்கள் அருகே கணணியை வைத்திருக்கக்கூடாது.
இதை மடிக்கணணி என அழைத்தாலும் நம் தொடைகளின் மீது வைத்து இயக்குவது கூடாது. இதனால் வெப்பம் வெளியேறும் வழிகள் தடைபடும். நம் உடலையும் இந்த வெப்பம் தாக்கும். மெத்தைகள், துணிவிரிப்புகள் ஆகியவற்றின் மீது இவற்றை வைத்து இயக்குவதும் தவறு.
மடிக்கணணியில் வெப்பம் உருவாவதனைத் தடுக்க முடியாது. எனவே வெப்பம் எளிதில் விரைவாக வெளியேற்றப்படும் வழிகளை நாம் நம் பழக்கத்தின் மூலம் தடுக்காமல் இயங்க வேண்டும்.
மேலும் கூடுதல் துணை சாதனங்களைப் பயன்படுத்துவதன் மூலம் வெப்பத்தினை வெளியேற்றுவதனை விரைவுபடுத்தலாம். இந்த வழிகளை மேற்கொண்டால் வெப்பமானது கணணியின் மற்ற பாகங்களைத் தாக்குவதனைத் தடுக்கலாம்.

VLC மீடியா பிளேயரில் அறியப்படாத சில வசதிகள்

கணணியில் வீடியோக்களை பார்ப்பதற்கு பல்வேறு மென்பொருட்கள் காணப்பட்ட போதிலும் அதிகளவானர்களினால் பயன்படுத்தப்படும் மென்பொருள் VLC மீடியா பிளேயர் ஆகும்.
எனினும் இதில் பல்வேறு அம்சங்கள் வெளிப்படையாக இல்லாமல் மறைந்தே காணப்படுகின்றன. இதில் Add Watermarks, Video Converter, Free Online Radio போன்ற வசதிகள் இருப்பதை அறிந்திருப்பீர்கள்.
இருந்தும் இவற்றை விட Display On Desktop, Video Effects, Hotkeys ஆகியவையும் காணப்படுகின்றன.
1. Display On Desktop: இப்பயனுள்ள வசதி மூலம் நீங்கள் வீடியோவை பார்த்துக்கொண்டிருக்கும் நேரத்தில் உங்களுடைய வேறு வேலைகளையும் செய்ய முடியும்.
உதாரணமாக MS Paint/ MS Office ல் வேலை செய்துகொண்டே வீடியோவையும் பார்த்து ரசிக்க முடியும். இதனை செயற்படுத்துதவற்கு மெனுபாரில் காணப்படும் Video என்பதில் உள்ள Display On Desktop என்பதை தெரிவு செய்ய வேண்டும்.
2. Video Effects: வீடியோக்களுக்கு விதம் விதமாக எபெக்ட் கொடுப்பதற்கு வீடியோ எடிட்டிங் மென்பொருட்களை பயன்படுத்துவார்கள். VLC மீடியா பிளேயரை ஆனால் பயன்படுத்தி வீடியோவை பார்த்துக்கொண்டிருக்கும்போதே சிலவகையான எபெக்ட்களை கொடுக்க முடியும். Tools மெனுவிலுள்ள Effects and Filter என்ற அம்சத்தை தெரிவு செய்வதன் மூலம் வீடியோக்களுக்கு எபெக்ட் கொடுக்க முடியும்.
3. Hotkeys: VLC மீடியா பிளேயரில் எந்தவொரு செயற்பாட்டை மேற்கொள்ளும் போதும் மவுசை பயன்படுத்துதல் அவசியமானது. ஆனால் இச்சிரமத்தை தவிர்ப்பதற்காக நீங்கள் விரும்பியவாறு Shortcut key அமைத்து பயன்படுத்த முடியும். Tools மெனுவில் Preferences , Hotkeys ஐ தெரிவு செய்து Shortcut keyகளை அமைத்துக்கொள்ள முடியும்.

January 25, 2012

Bootable விண்டோஸ் யு.எஸ்.பி(USB)-ஐ உருவாக்குவ​தற்கு

கணணிகள் இயங்குவதற்கு இயங்குதளம்(Operating System) அவசியமாகும். Hard Disk-ல் நிறுவப்படும் இவ்இயங்குதளம் சில சந்தர்ப்பங்களில் கோளாறுகள் காரணமாக இயங்க மறுக்கும்.
முக்கியமான தருணங்களில் ஏதாவது கோப்புக்களை குறித்த கணணியிலிருந்து பெறவேண்டுமெனில் திண்டாட வேண்டியிருக்கும்.
இதனைத் தவிர்ப்பதற்கு Bootable விண்டோஸ் யு.எஸ்.பி-யை உருவாக்கி வைப்பதன் மூலம் அதனை பயன்படுத்தி கணணியை இயக்கி அத்தகைய தருணங்களில் ஏற்படும் சங்கடங்களை தவிர்த்துக் கொள்ளலாம். சரி இப்பொழுது Bootable விண்டோஸ் யு.எஸ்.பி-யை உருவாக்குவது எப்படி என பார்ப்போம்.
தேவையானவை
1. Windows 7 or Vista ISO.
2. 4GB கொள்ளளவையுடைய Pen drive(4GB கொள்ளளவையுடைய Pen drive எனின் Windows XP பயன்படுத்த முடியும்).
செயன்முறை
1. Pen drive-ஐ கணணியுடன் இணைத்துக் கொள்ளுங்கள்.
2. Pen driveல் ஏதாவது முக்கியமான தரவுகள் காணப்படின் அவற்றை Backup எடுத்துக் கொள்ளவும். (காரணம் - இச்செயன்முறையின்போது பென்டிரைவ் ஆனது போர்மேட் ஆகிவிடும்).
3. தற்பொழுது கூகுள் தேடுபொறியை பயன்படுத்தி WinToFlash tool எனும் மென்பொருளை தரவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ளவும்.
4. பின் அம்மென்பொருளை இயக்கி Windows 7, Vista, அல்லது XP DVD கோப்புக்களை தேர்ந்தெடுக்கவும்.
5. இப்பொழுது Click Create button -ஐ அழுத்தினால் சில நிமிடங்களில் Bootable விண்டோஸ் யு.எஸ்.பி உருவாக்கப்பட்டு விடும்.

Facebook-ல் பகிரப்படும் படங்களுக்கு வண்ண வண்ண "எபெக்ட்" கொடுக்க

எமது வாழ்வின் உன்னதமான தருணங்களை நண்பர்களுடன் பகிர்வதற்கு பிரபல சமூகத்தளமாக Facebook-ஐ பயன்படுத்துகின்றோம்.
இதன் மூலம் புகைப்படங்களையும் பகிர முடியும் என்பது அறிந்த விடயம். அதேபோல் அப்புகைப்படங்களுக்கு விதம் விதமான Effect வழங்கிய பின் நண்பர்களுடன் பகிர முடியும்.
இதற்காக பல இணையத்தளங்கள் உள்ளன. ஆனால் அது சற்று சிரமமான விடயமாகும். காரணம் பகிர வேண்டிய புகைப்படத்ததை குறித்த தளங்களுக்கு Upload செய்து பின் Effect வழங்கியதை தொடர்நது Download செய்து மீண்டும் பேஸ்புக் தளத்தில் Upload செய்ய வேண்டும்.
இச்சிரமத்தை தவிர்த்து நேரடியாகவே பேஸ்புக்கில் Upload செய்யப்பட்டுள்ள புகைப்படங்களுக்கு Effect கொடுக்கும் வசதியை Mess My Photo என்ற இணையத்தளம் வழங்குகின்றது.
எவ்வாறு Effect கொடுப்பது என்று பார்ப்போம்.
1. இந்த இணைப்பில் அழுத்தி Mess My Photo தளத்திற்கு செல்லவும்.
2. தளத்திலுள்ள FB Select என்பதை அழுத்தவும்.
3. நீங்கள் முதல் தடவை இவ்வசதியை பயன்படுத்துவதனால் அனுமதி கேட்கும் எனவே Install என்பதை அழுத்தி, தொடர்ந்து Allow என்பதை அழுத்தவும்.
4. அடுத்தாக உங்கள் பேஸ்புக்கில் உள்ள எல்லா புகைப்படங்களும் காண்பிக்கும் ஒரு Window தோன்றும். அதில் நீங்கள் Effect கொடுக்க விரும்பும் படத்தை தேர்ந்தெடுக்கவும்.
5. தொடர்ந்து நீங்கள் விரும்பும் Effect ஒன்றை தேர்வு செய்து Apply என்பதை அழுத்தவும்.
6. இப்பொழுது படத்தை பேஸ்புக்கில் Save செய்வதற்காக FB Save என்பதை அழுத்தவும்.
தற்போது இந்த புதிய படமானது உங்களது பேஸ்புக் கணக்கில் சேமிக்கப்பட்டிருக்கும். இனி அந்த படத்தை உங்கள் நண்பர்களுடன் பரிமாறலாம்.

Pdf கோப்புக்களை Doc ஆக மாற்ற சிறந்த 5 தளங்கள்

கணணி உலகமானது இன்று "Cloud Computing" என்ற ஓன்லைன் முறையை நோக்கி நகர்ந்து வருகின்றது.
இதனால் மென்பொருட்களை கணணியில் நிறுவி செய்யப்பட்ட வேலைகள் அனைத்தையும் இன்று ஓன்லைனில் செய்யும் வசதி கிடைத்துள்ளது.
அதற்கிணங்க Pdf கோப்புக்களை Doc கோப்புக்களாக மாற்றுவதற்கும் நாம் ஓன்லைன் தளங்களை பயன்படுத்த முடியும்.
அதற்காக தெரிவுசெய்யப்பட்ட சிறந்த ஐந்து தளங்களே இவை
1. FreePDFtoWord: இத்தளத்தில் Pdf கோப்புக்களை மட்டும் Doc கோப்புக்களாக மாற்ற முடிவதுடன், paragraph,  tables போர்மட்களை எமக்கு விரும்பியவாறு மாற்றமுடியும், தேவையேற்படின் இணைக்கப்பட்டுள்ள படங்கள அகற்றிய பின் Doc கோப்பாக மாற்றவும் முடியும்.
2. PDFtoWordConverter: இத்தளத்தம் ஓன்லைனில் கோப்புக்களை மாற்றும் வசதியை கொண்டிருப்பதுடன் சோதனைப்பதிப்பு மென்பொருளையும் கொண்டிருக்கின்றது. அத்துடன் இங்கு Pdf கோப்புக்களை Doc,Text, Image, HTML போன்ற கோப்புக்களாகவும் மாற்ற முடியும்.
3. PDFOnline: இங்கு உங்களது மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கோப்புக்களை மாற்ற முடிவதுடன் மாற்றிய கோப்புக்களை தேவையான சந்தர்ப்பங்களில் மின்னஞ்சலுக்கு சென்று தரவிறக்கிக்கொள்ள முடியும். அத்துடன் இதன் சோதனைப்பதிப்பு மென்பொருளையும் பயன்படுத்திக்கொள்ள  முடியும்.
4. PDFtoWord: இங்கு Pdf  கோப்புக்களை Doc, Rtf கோப்புக்களாக மாற்றமுடியும். இத்தளத்திலும் மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தவேண்டும் என்பதுடன் சோதனைப்பதிப்பு மென்பொருளும் கிடைக்கின்றது.
5. ZamZar: இலவசமாக Pdf  கோப்புக்களை Doc   மாற்றுவதற்குரிய மிகச்சிறந்த தளமாக இது கருதப்படுகின்றது. எந்தவிதமான பதிவுகளையும் இத்தளத்தில் மேற்கொள்ள வேண்டியதில்லை எனினும் மின்னஞ்சல் முகவரி வழங்கவேண்டியது அவசியம்.

குழந்தை அழுதால் தெரிவிக்கும் மென்பொருள்



குழந்தைகளை கவனிக்க யாருமே இல்லாத பட்சத்தில் குழந்தை அழுதால் அறியத்தருவதற்கு ஒரு மென்பொருள் உள்ளது. இதன் பெயர் CRY GUARD.
இந்த மென்பொருளை ஒரு கைபேசியில் நிறுவிக் கொண்டு மற்றொரு கைபேசியின் நம்பரை கொடுக்க வேண்டும். மென்பொருள் நிறுவிய கைபேசியை குழந்தையின் அருகில் வைத்து விடுங்கள்.
மற்றொரு கைபேசி உங்களிடம் இருக்க வேண்டும். உங்களது குழந்தை அழுதாலோ அல்லது சிறு அசைவுகள் ஏற்பட்டாலோ உங்களுடைய கைபேசிக்கு அழைப்பு வரும்.

விண்டோஸ் 7ல் மறைந்துள்ள Themes, Wallpapers ஐ பயன்படுத்து​வதற்கு

இன்று அதிகளவான பயனர்களால் பயன்படுத்தப்படும் இயங்குதளமாக விண்டோஸ் 7 காணப்படுகின்றது. இவ் இயங்குதளத்தில் நாம் அறியாத பல அம்சங்கள் மறைந்து காணப்படுகின்றன.
அதேபோல் கணணியின் பின்னணி, அமைப்பை மாற்றுவதற்கு பயன்படும் Themes, Wallpapers போன்றன காணப்படுகின்றன. 
இருந்தும் குறிப்பிட்ட அளவு வசதியே வெளிப்படையாக இருக்கின்றது. ஆனால் சில நாடுகளை பிரதிநித்துவப்படுத்தும் மேலதிக Themes, Wallpapers என்பன காணப்படுகின்றன. அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை பார்ப்போம்.
1. Start menuற்கு சென்று அங்கு காணப்படும் search எனும் பகுதிக்கு சென்று C:WindowsGlobalizationMCT என தட்டச்சு செய்து Enter keyயை அழுத்தவும்.
2. தோன்றும் சாளரத்தில் MCT-AU, MCT-CA, MCT-GB, MCT-US, MCT-ZA  ஆகிய பெயர்களில் Folder காணப்படும். அதில் விதவிதமான Themes, Wallpapers காணப்படும். அவற்றை பயன்படுத்தி உங்கள் கணணியின் பின்னணி, அமைப்பை ஆகியவற்றை மாற்ற முடியும்.
அதாவது,
MCT-AU - அவுஸ்திரேலியா சம்மந்தமான Themes, Wallpapersகளை கொண்டுள்ளது.
MCT-CA - கனடா சம்மந்தமான Themes, Wallpapersகளை கொண்டுள்ளது.
MCT-GB - பிரித்தானியா சம்மந்தமான Themes, Wallpapersகளை கொண்டுள்ளது.
MCT-US - ஐக்கிய அமெரிக்கா சம்மந்தமான Themes, Wallpapersகளை கொண்டுள்ளது.
MCT-ZA - தென்னாபிரிக்கா சம்மந்தமான Themes, Wallpapersகளை கொண்டுள்ளது.

யூடியூப் வீடியோக்களை தரவிறக்கம் செய்வதற்கு

பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் மென்பொருள்கள் உதவியுடன் யூடியூப் வீடியோக்களை MP3, MP4 வடிவில் தரவிறக்கம் செய்யலாம்.
இருப்பினும் மிக எளிதாக ஒரே சொடுக்கில் யூடியூப் வீடியோக்களை தரவிறக்கம் செய்வற்கு ஒரு வழி உள்ளது.
YTBYCLICK என்ற டூல்பார் மூலம் யூடியூப் தளத்தில் இருந்து வீடியோக்களை தரவிறக்கம் செய்யலாம். இதனை குரோம், இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர், பயர்பொக்ஸ் போன்ற உலாவிகளில் நிறுவ முடியும்.
தெரிவு செய்யப்பட்ட வீடியோக்களை தரவிறக்கம் செய்ய டூல்பாரில் உள்ள ICON களை கிளிக் செய்தால் போதும், உங்களுக்கு புதிய பக்கத்தில் நீங்கள் தெரிவு செய்த வீடியோ தரவிறக்கத் தொடங்கும்.

புற்றுநோயை கண்டறியும் ஸ்மார்ட் போன்கள்

மனிதனில் ஏற்படும் புற்றுநோயை ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தி கண்டறிய முடியும் என கொரிய நாட்டு ஆராச்சியாளர்கள் குழுவொன்று தெரிவித்துள்ளது.
அதாவது ஜேர்மன் நாட்டு பத்திரிகை ஒன்றில் வரையப்பட்டிருந்த பயனுள்ள வேதியல்(Angewandte Chemie) எனும் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தவாறு தொடுதிரை தொழில்நுட்பத்தை(Touch Screen) புற்றுநோயை கண்டறிவதற்கு பயன்படுத்த முடியும் என்று  கூறியுள்ளனர்.
இதற்காக தொடுதிரை கொண்ட ஸ்மார்ட் போன்கள், PDA மற்றும் தொடுதிரை தொழில்நுட்பத்தைக்கொண்ட ஏனைய இலத்திரனியல் சாதனங்களையும் இதற்காக பயன்படுத்தமுடியும் என்று தெரிவித்துள்ளனர்.
இத்தொழில்நுட்பமானது உடலிலுள்ள புரதம், DNA(பரம்பரை அலகு மூலக்கூறு) என்பவற்றிலிருக்கும் இலத்திரன் ஏற்றங்களுக்கு இசைவாக  செயற்படுவதால் இவ்வாறு புற்றுநோயை கண்டறிய சாதகமாக பயன்படுத்த முடியும் என்பதில் தமக்கு 100 சதவீத நம்பிக்கை இருப்பதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

விண்டோஸ் 7ற்குரிய தீம்களை இலவசமாக பதிவிறக்கம் செய்ய

நீங்கள் பயன்படுத்தும் கணணியினை தீம்களை(Theme) பயன்படுத்தி விதவிதமான தோற்றத்தில் வடிவமைக்கலாம் என்பது யாவரும் அறிந்தவிடயம்.
இருந்தும் விண்டோஸ் 7 உடன் வரும் தீம்கள் குறிப்பிட்ட அளவே காணப்படுகின்றன. இதனால் அந்த தீம்களை அடிக்கடி மாற்றி உங்களுக்கு சலித்திருக்கும்.
உங்கள் சலிப்பை போக்குவதற்காக Microsoft நிறுவனம் புதிய பல தீம்களை இலவசமாக தரவிறக்கும் வசதியை ஏற்படுத்தியுள்ளது.
கீழுள்ள இணைப்பில் அழுத்துவதன் மூலம் குறித்த தளத்திற்கு சென்று உங்களுக்கு விருப்பமான ஒன்றை தெரிவு செய்து Download என்ற இணைப்பை அழுத்துவதன் மூலம் கணணியில் சேமித்து பின் வழமையான முறையில் உங்கள் கணணியின் தோற்றத்தை மாற்றிக் கொள்ளலாம்.

January 19, 2012

jZip: கோப்புகளை சுருக்குவதற்கு

வன்தட்டின் நினைவகத்தை கருத்தில் கொண்டும், எளிதாகப் பதிந்து எடுத்துச் செல்லவும், இணைய வழி பரிமாறிக் கொள்ளவும் நாம் கோப்புகளை சுருக்கி அமைக்கும் வழியை மேற்கொள்கிறோம்.
இதற்கு பலரும் பயன்படுத்துவது விண்ஸிப் புரோகிராம். ஆனாலும் இணையத்தில் விண்ஸிப் போல பல இலவச புரோகிராம்கள் நமக்குக் கிடைக்கின்றன.
கோப்புகளை சுருக்கி அமைப்பதில் Zip துணைப் பெயர் கொண்டு அமைக்கப்படும் கோப்புகளே அதிகம். இது 1989ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது.
காலப்போக்கில் விண்டோஸ் மற்றும் மேக் இயங்குதளங்களில் கோப்புகளைச் சுருக்கி அமைப்பதற்கும், ஏற்கனவே சுருக்கி வைக்கப்பட்ட கோப்புகளில் புதிய கோப்புகளை இணைக்கவும் வசதிகளைத் தரும் புரோகிராம்கள் சிஸ்டத்துடன் இணைத்தே தரப்பட்டன.
சிஸ்டங்களுடன் தரப்படும் இந்த வசதியில் சில கட்டுப்பாடுகள் இருந்ததனாலேயே விண்ஸிப் போன்ற புரோகிராம்கள் விருப்பப் புரோகிராம்களாக அமைந்தன. நவீன வசதிகளுடன் அவ்வப்போது மேம்படுத்தப்பட்டு இந்த புரோகிராம்கள் தரப்பட்டாலும், இவை பலர் அறியாமலேயே இருக்கின்றன.
ஜே ஸிப்(jZip): இந்த புரோகிராம் கோப்புகளைச் சுருக்க உதவுகிறது. ஸிப் துணைப் பெயர் கொண்ட கோப்பு மட்டுமின்றி, TAR, GZip, 7-Zip, RAR மற்றும் ISO ஆகிய துணைப் பெயர் கொண்ட கோப்புகளையும் இந்த புரோகிராம் கையாள்கிறது.
கோப்புகளை மிக மிகக் குறைந்த அளவில் சுருக்கித் தருவது இதன் சிறப்பு. பல இயங்குதளங்களில் பயன்படும் வகையில் இந்த புரோகிராம் கிடைக்கிறது.

செவ்வாய் கிரகத்தில் இருந்து பாறைகள் பூமியின் மீது விழுகின்றது என்ற அதிர்ச்சித் தகவலை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.
இதற்கு உதாரணமாக சமீபத்தில் மொராக்கோவில் 15 பவுண்ட் எடை உள்ள பாறைகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. அவற்றை ஆய்வு செய்த போது அவை ஜூலை மாதம் செவ்வாய் கிரத்தில் இருந்து விழுந்தவை என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இது 5வது முறையாக பூமியில் விழுந்துள்ளது. விண்கல் நிபுணர்கள் மற்றும் நாசா விஞ்ஞானிகள் அடங்கிய குழு இந்த பாறைகளை சோதனை செய்து, இவை செவ்வாய்கிரகத்தில் இருந்து வந்தவை தான் என உறுதி செய்தனர்.
செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ்வதற்கு சாத்தியம் உள்ளதா என்பது குறித்து ஆராய்ச்சி நடந்துவரும் வேளையில் பாறைகள் பூமியில் விழுவது முக்கிய திருப்பமாகும்.




Share/Bookmark
 

பணிகளை திட்டமிட்டுக் காட்ட ஓர் இணையம்

எதையும் திட்டமிட்டு செய்ய வேண்டும் என்ற விருப்பம் உள்ளவர்களளுக்கு இந்த இணையம் சிறந்த முறையில் பயன்படும். செய்ய வேண்டியவற்றை பட்டியல் போட்டு வைத்து கொள்ளவதற்கு இணையதளங்கள் இருக்கின்றன.
நினைத்தவற்றை தள்ளிப்போடாமல் முடிக்க நினைவூட்டும் சேவைகளும் இருக்கின்றன. கொஞ்சம் விரிவாக வரைபடம் போட்டு எல்லாவற்றையும் திட்டமிடவும் இணையதளங்கள் இருக்கின்றன.
இப்போது இந்த பட்டியலில் புதிதாக மை சிம்பில் சர்பேஸ் தளம் சேர்ந்துள்ளது. இது வரையான திட்டமிடல் தளங்களை விட எளிமையான ஆனால் அதே நேரத்தில் மேம்பட்ட சேவையை வழங்குவதாக இந்த தளம் சொல்கிறது.
பட்டியல் போடும் தளங்களும் போதாது, குறித்து வைக்கும் சேவைகளும் முழுமையாக கைகொடுக்காது என்று சொல்லுபவர்களுக்கு இந்த இரண்டும் ஒருங்கிணைந்த வசதியை அளித்து திட்டமிட உதவுகின்றது.
எளிமையான இணைய பலகையை வழங்குவதன் மூலம் எல்லாவற்றையும் குறித்து வைத்து அதனடிப்படையில் செயல்களை திட்டமிட இந்த தளம் வழி செய்கிறது. அறைகுறையாக திட்டமிடலில் துவங்கி முழுமையாக திட்டமிட உதவுவது. இந்த இணைய பலகையின் சிறப்பியல்பு என்றும் சொல்லப்படுகிறது. அறைகுறையாக திட்டமிடுவது என்றால் என்ன செய்யப்போகிறோம் என்பது முன்கூட்டியே முழுவதும் தெரியாத நிலையை குறிக்கும்.
திட்டமிட முயன்றவர்களுக்கு இந்த சங்கடம் நன்றாகவே புரியும். ஒரு விஷயத்தை செய்ய வேண்டும் என்ற முடிவோடு திட்டமிட துவங்கியவுடன் எல்லாமே மறந்து போனது போல ஒரு உணர்வு ஏற்படும். வரிசையாக என்ன என்ன செய்ய வேண்டும் என்று பட்டியல் போடவோ அல்லது குறித்து வைக்கவோ முற்பட்டால் அடுத்த செயல் எது என்று தெரியாமல் குழப்பமாக இருக்கும்.
ஆக திட்டமிடுவதற்கு முன்பாக முதலில் எப்படி திட்டமிட வேண்டும் என்பதை திட்டமிட்டு கொள்ள வேண்டும். இல்லை என்றால் பாதியிலேயே தடம் மாறி உற்சாகமும் மறைந்து போய்விடும். ஆனால் ‘சிம்பில் சர்பேஸ்’ இணைய பலகை இந்த பிரச்சனைக்கு அழகான தீர்வை தருகிறது.இதில் ஒவ்வொன்றாக செயல்களை குறித்து கொள்ளலாம்.எப்போது வேண்டுமானாலும் அதில் மாற்றங்களை செய்யலாம்.புதிய செயல்களை சேர்க்கலாம்.எல்லாவற்றையும் மாற்றை ஒருங்கிணைக்கலாம்.எல்லாமே மிகவும் எளிதானவை.
எதையும் திறந்த மனதோடு அணுக வேண்டும் என்று சொல்லப்படுவது உண்டல்லவா?அதே போல இணையவாசிகள் திட்டமிடுதலை துவக்க விரும்பினால் அழகான வெள்ளை பலகை வந்து நிற்கிறது.
இந்த பலகையில் எதை வேண்டுமானாலும் குறித்து வைக்கலாம்.முதல் பார்வைக்கு வெறுமையாக தோன்றினாலும் இந்த பலகையின் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். புதிதாக ஒன்றை குறித்து வைக்க வேண்டும் என்றால் ஏதாவது ஓரிடத்தில் இரட்டை கிளி செய்தால் போதும் சின்னதாக ஒரு கட்டம் தோன்றும் .அதற்கு ஒரு தலைப்பு கொடுத்த் சேமித்து கொண்டு அதன் கீழ் குறிப்புகளை இடம் பெற வைக்கலாம். அதிலேயே மீண்டும் வலது பக்கமாக கிளிக் செய்தால் வண்ணத்தை மாற்றுவது, இணைய முகவரியை இணைப்பது,மேல் அல்லது கீழே புதிய விஷயங்களை சேர்ப்பது என பல வித உப வசதிகள் இருக்கின்றன.
ஏதாவது ஒரு தலைப்பில் மனதில் உள்ளவற்றை குறித்து வைத்து விட்டு அந்த பக்கத்தை அப்படியே சேமித்து கொள்ளலாம். இந்த பக்கத்தை கோடு போட்டார் போல எந்த இடத்தில் வேண்டுமானாலும் பிரித்து கொள்ளலாம்.கோட்டை மேலும் கீழாக அல்லது பக்கவாட்டில் எப்படி வேண்டுமானாலும் நகர்த்தி கொள்ளலாம்.அந்த இடங்களில் இரட்டை கிளிக் செய்து புதிய தலைப்பில் குறிப்புகளை இடம் பெற வைக்கலாம்.
அதே போல அட்டவனைகளையும் விருப்பம் போல அமைத்து கொள்ளலாம்.எதை வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் திருத்தி கொள்ளலாம்,புதிய விவரங்களை சேர்த்து கொள்ளலாம்.ஓரிடத்தில் இருந்து வேறொரு இடத்திற்கு கொண்டு செல்லலாம்.
எல்லாமே மிகவும் சுலபமானது. ஆக எப்போது தோன்றுகிறதோ அப்போதெல்லாம் இந்த பலகையில் தகவல்களை சேர்த்து திட்டமிடுதலை ஒருங்கிணைத்து கொள்ளலாம். இந்த பலகையை சேமித்து வைத்து இமெயில் மூலம் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளலாம். புதிய பலகையை உருவாக்கி ஒன்றோடு ஒன்று இணைப்பு கொடுத்து ஒருங்கிணைக்கலாம்.

விரைவில் அறிமுகமாகும் தூக்கத்தை எடைபோடும் ஐ போன்கள்

எதிர்காலத்தில் வர இருக்கும் ஐ போன், ஜ பாட், ஐ பொட் ஆகியன அதன் பயனர்களின் தூக்கத்தை எடைபோட்டு அவர்களின் தூக்கத்தை மெருகூட்டக் கூடியனவாக இருக்கும் என்று கூறப்படுகின்றது.
இதுவரை காலமும் தூக்கத்தில் இருந்து குறித்த நேரத்தில் விழிப்படைவதற்காக தொலைபேசிகளிலுள்ள "Alarm Clock" எனும் வசதி பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் இனிவரும் காலங்களில் தூக்கத்தில் ஏற்படும் அசௌகரியங்களை நீக்கி சிறந்த தூக்கத்திற்கு திட்டமிட உதவும் "Sleep Clock" எனும் வசதி உட்புகுத்தப்பட இருக்கின்றது.
தொலைபேசியின் முற்பகுதியிலுள்ள சென்சார் மென்மையான தூக்கம், ஆழமான தூக்கம் என தூங்குபவரின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும், தூங்கும் முறைகளையும் தொலைபேசியிலுள்ள பதிவு செய்யும் கருவிக்கு அனுப்பும்.
அப்பதிவு கருவியில் பதிவு செய்யப்பட்ட தூங்கும் நேரங்களை (மணித்தியாலங்கள்) நாள், வாரம், மாதம் எனும் அடிப்படையில் ஒழுங்கு செய்யவும் முடியும் என்பது விசேட அம்சமாகும். இத்தகவல்களின் அடிப்படையில் தூக்கத்தில் ஏற்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்து நிம்மதியான தூக்கத்தை பெறமுடியும்.
ஆரம்ப கட்டமாக ஐ போன்களில் இவ்வசதி உட்புகுத்தப்பட்டு எதிர்வரும் மார்ச் மாதமளவில் விற்பனைக்கு வருகின்றது. இதன் ஆரம்பகட்ட பெறுமதி 199.95 அமெரிக்க டொலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரே நேரத்தில் பல்வேறு யூடியூப் வீடியோக்களை நிறுத்துவதற்கு

சில சமயங்களில் ஒரே நேரத்தில் பல்வேறு விதமான யூடியூப் வீடியோக்களை திறந்து வைத்து பார்த்துக் கொண்டிருப்பீர்கள்.
அவ்வாறு செய்யும் பட்சத்தில் அவை அனைத்தும் உடனடியாக செயற்பட தொடங்கிவிடும். அவற்றை ஒவ்வொன்றாக திறந்து நிறுத்தி விட்டால் தான் ஒவ்வொரு வீடியோவாக தொந்தரவில்லாமல் பார்க்க முடியும்.
இந்த பிரச்சனையை Firefox add-on மூலம் தீர்க்கலாம். இதனை நிறுவியதும் யூடியூப் வீடியோவிற்கு பதிலாக Play button தெரியும், அதை அழுத்தி வீடியோக்களை ஒவ்வொன்றாக பார்வையிடலாம்.