February 29, 2012

புரோகிராமிங் கற்றுத்தரும் இணையம்

எப்படியாவது Computer Programming மொழிகளைக் கற்று பல்வேறு வகையான திட்டங்களுக்கென புரோகிராமிங் செய்திட வேண்டும் என்பதே பல இளைஞர்களின் கனவாக உள்ளது.
வேலை வாய்ப்பு, அதிக சம்பளம், பதவி உயர்வு, வெளிநாட்டில் பணி எனப் பல ஈர்ப்புகள் இதன் அடிப்படையாய் உள்ளன.
இவை தவிர புரோகிராமிங் செயல்பாடு தரும் சவாலும் ஒரு காரணம். பலர் இதில் மனநிறைவு பெறுவதற்காகவே புரோகிராமிங் பாடங்களைக் கற்றுக் கொள்ளத் திட்டமிடுகின்றனர். இவர்களுக்காக இணையத்தில் ஓர் இலவச தளம் இயங்குகிறது.
இதன் பெயர் கோட் அகடமி(Code Academy). புரோகிராம் எழுதுவதனை கோடிங்(coding)எனக் கூறுவார்கள். எனவே அந்தப் பெயரிலேயே இந்த தளம் அமைக்கப்பட்டுள்ளது.
இதில் தரப்படும் பாட திட்டங்களுக்கென இதில் அக்கவுண்ட் திறக்கும் முன்னர், புரோகிராமிங் எப்படி இருக்கும் என நமக்கு மிக, மிக எளிதான முறையில் பயிற்சி முறையில் விளக்கப்படுகிறது.
நம் பெயரை எழுதச் சொல்லி தொடங்கும் பாடம், அப்படியே கொஞ்சம் கொஞ்சமாகநம்மை புரோகிராமிங் என்றால் இவ்வளவு எளிதானது என்று உணர வைக்கிறது.
இது இலவசம். ஒரு மின்னஞ்சல் முகவரி, பேஸ்புக் தளத்தில் அதன் தொடர்பு என ஏதாவது ஒன்று இருந்தால் போதும். பதிந்த பின்னர் தான் பாடங்கள் விறுவிறுப்பாகக் கற்றுத்தரப் படுகின்றன. பாடங்களும் கற்றுத் தரும் முறையும் மிகவும் வியப்பாக உள்ளன.
புரோகிராமிங் செய்திடும் பயிற்சியில் நமக்கு டிப்ஸ் தரப்பட்டு வழி காட்டப்படுகிறது. பாடங்களைக் கற்றுக் கொள்வதில் முன்னேற்றம் ஏற்படுகையில், நாம் பெறும் மதிப்பெண்கள், அதற்கான பதக்க அட்டைகள் காட்டப்படுவது, நம் கற்றுக் கொள்ளும் செயல்பாட்டினத் தூண்டுகிறது. ஆர்வம் இருந்தால் அனைவரும் புரோகிராமிங் கற்றுக் கொள்ளலாம்.

புகைப்படங்களை ஐகான்களாக மாற்றும் பயனுள்ள இணையத்தளம்







பல்வேறு போர்மட்டுகளில்(PNG, JPG, GIF, BMP) உள்ள புகைப்படங்களை ICO என்ற ஐகான் போர்மட்டுகளாக மாற்றுவதற்கு ஒரு இணையத்தளம் உதவி புரிகிறது.
கீழே தரப்பட்டுள்ள லிங்கில் சென்று தளத்தை ஓபன் செய்து கொள்ளவும். அதன் பின் தோன்றும் விண்டோவில் உங்களுக்கு தேவையான புகைப்படத்தை Browse என்பதை கிளிக் செய்து உங்கள் கணணியில் இருந்தோ அல்லது இணையத்தில் தேடியோ பதிவேற்றம் செய்து கொள்ளவும்.
பின் Convert Now என்பதை கிளிக் செய்தால் உங்களது புகைப்படம் ஐகானாக மாற்றப்பட்டு விடும்.
இந்த தளம் விண்டோஸ் 7 இற்கு ஏற்ற ஐகான்களாக மாற்றவும், ஏற்கனவே ஐகான்களாக இருப்பவற்றை புகைப்படங்களாக மாற்றிவிடவும் உதவி புரிகிறது.

February 27, 2012

விண்டோஸ் போன்களுக்கா​ன Skype பீட்டா பதிப்பு அறிமுகம்


குறைந்த செலவிலான தொலைதூர உரையாடல்களுக்கும், வீடியோ அழைப்பிற்கும் பிரபல்யமான Skypeஆனது தற்போது விண்டோசின் மாங்கோ போன்களிற்கும் அதன் பின்பு அறிமுகப்படுத்தப்பட்ட போன்களுக்குமான பீட்டா பதிப்பை வெளியிட்டுள்ளது.
விண்டோஸ் இயங்குதளத்தில் மிகவும் வினைத்திறனுடன் தொழிற்படக்கூடிய இந்த புதுப்பதிப்பானது Nokia Lumia 710, Lumia 800, HTC Titan, Radar, Samsung போன்ற கருவிகளிலும் செயற்படக்கூடியவாறு அமைக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.
WiFi அல்லது 3G வலையமைப்பில் செயற்படக்கூடிய இதற்கு முந்திய பதிப்பானது வீடியோ அழைப்பு, ஒலி அழைப்பு ஆகியவற்றை மட்டுப்படுத்திய அளவிலேயே வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எனினும் இந்த பீட்டா பதிப்பின் மூலம் வரையறை அற்ற வீடியோ, ஒலி அழைப்புக்களை ஏற்படுத்த முடியும்.

சிறந்த புரொஜெக்ரர் வசதியை கொண்ட புதிய சம்சுங் கலெக்ஸி போன்கள்


செல்போன் உற்பத்தி துறையில் நொக்கியாவிற்கு நிகராக புரட்சியை ஏற்படுத்திவரும் சம்சுங் நிறுவனமானது தனது புதிய வெளியீடாக புரொஜெக்ரர் வசதியை கொண்ட கலக்ஸி போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதில் காணப்படும் புரொஜெக்ரர் மூலம் 50 இன்ச் வரையான அகலத்திற்கு விம்பங்களை உருவாக்க முடியும்.
2010ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட போன்களின் புதிய பதிப்பாக உருவாக்கப்பட்டுள்ள இந்த போன்கள் அன்ரோயிட் 2.3 பதிப்புடைய இயங்குதளத்தில் தொழிற்படுவதுடன் 4 இன்ச் அளவுடைய திரையையும் கொண்டுள்ளது.
2010ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட போன்கள் 2.1 பதிப்புடைய அன்ரோயிட் இயங்குதளத்தில் தொழிற்பட்டதுடன், அதன் திரையின் அளவு 3.7 இன்ச் ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இவைதவிர 5 மெகா பிக்சல் உடைய கமெரா, 1GHz dual-core processor, 8GB உள்ளக நினைவகம், 2000mAh மின்கலம் என்பற்றை கொண்டுள்ளது.
எனினும் சம்சுங் நிறுவனமானது இதுவரையில் இந்த செல்போனிற்கான பெறுமதியை நிர்ணயிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மின்னஞ்சல் மூலம் கோப்பின் போர்மட்டை மாற்றுவதற்கு

எம்.எஸ். ஆபீஸ் 2003 பதிப்பை இன்னும் தொடர்ந்து பயன்படுத்தி வருபவர்கள் தற்போது பரவலாகத் தொடங்கி இருக்கும் எம்.எஸ். ஆபீஸ் 2007, மற்றும் 2010 தொகுப்புகளில் உருவான கோப்புகள் கிடைத்தால் திறந்து பார்க்க இயலாமல் சிரமப்படுவார்கள்.
ஏனென்றால் மாறா நிலையில் இந்த புதிய தொகுப்புகள் ஆபீஸ் 2003 தொகுப்பினால் திறந்து படிக்க இயலாத பார்மட்டில் உருவாக்குகின்றன.
எடுத்துக்காட்டாக வேர்ட் 2003 தொகுப்பில் doc என்ற பார்மட்டில் டாகுமெண்ட்கள் சேவ் செய்யப்படுகின்றன. ஆனால் வேர்ட் 2007 மற்றும் 2010ல் இவை docx என்ற பார்மட்டில் சேவ் செய்யப்படுகின்றன.
இதே போல் பவர்பாய்ண்ட் மற்றும் எக்ஸெல் பைல்களும் புதிய பார்மட்டில் கிடைக்கின்றன. இவற்றை எம்.எஸ். ஆபீஸ் 2003 தொகுப்பில் திறந்து படிக்க மீண்டும் இவற்றை புதிய பதிப்பு புரோகிராம்களில் திறந்து பின்னர் Save அண் கட்டளை கொடுத்து கிடைக்கும் டயலாக் பாக்ஸில் வேர்ட் 2003 பிரிவினைத் தேர்ந்தெடுத்து அமைக்க வேண்டும்.
எம்.எஸ். ஆபீஸ் தொகுப்புகளைப் பொறுத்த வரை இன்னும் ஆபீஸ் 2003 தொகுப்பு தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவே இந்தப் பிரச்னைகளுக்கு ஆளாகின்றவர்களுக்கு உதவ இணையத்தில் பல தளங்கள் இலவசமாக இந்த பார்மட் மாற்றத்திற்கு உதவுகின்றன.
இவற்றில் மிகச் சிறப்பான முறையில் வேகமாக மாற்றித் தர www.zamzar.com என்ற தளம் உதவி புரிகிறது. இந்த தளத்தில் நுழைந்து மாற்ற வேண்டிய பைலைத் தேர்ந்தெடுத்து அப்லோட் செய்தால் பைல் பார்மட் மாற்றப்பட்டவுடன் நாம் தரும் மின்னஞ்சல் முகவரிக்கு பார்மட் மாற்றப் பட்ட பைலை டவுண்லோட் செய்திட லிங்க் கிடைக்கும். இந்த லிங்க்கில் கிளிக் செய்து, பார்மட் மாறிய பைலை டவுண்லோட் செய்து பயன்படுத்தலாம்.
இப்போது இந்த தளம் இன்னும் ஒரு வசதியைத் தருகிறது. மின்னஞ்சல் வழியாக நாம் பார்மட் மாற்ற வேண்டிய பைல்களை அனுப்பினால் அவை ஏற்றுக் கொள்ளப்பட்டு மாற்றப்பட்டு மீண்டும் மின் அஞ்சல் முகவரிக்கு, லிங்க் அனுப்பப்படுகிறது. இந்த தளம் சென்று, பைல்களை அப்லோட் செய்திடத் தேவை இல்லை.
எந்த வகை பார்மட்டினை மாற்ற வேண்டுமோ அதனை ஒட்டி இதற்கான மின்ன்னஞ்சல் முகவரி தரப்படுகிறது. எடுத்துக்காட்டாக மாற்றபட வேண்டியது டாகுமெண்ட் பைல் எனில், doc@zamzar.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பி.டி.எப். பைலை டாகுமெண்ட் பைலாக மாற்ற வேண்டும் என்றாலும், இதே முகவரிக்கு அனுப்பலாம். ஒரே மின்னஞ்சலில் பல பைல்களை அனுப்பலாம். ஒரு பைலை பல்வேறு பார்மட்டுகளில் மாற்ற வேண்டும் என்றால், மின்னஞ்சல் முகவரி கட்டத்தில் இதற்கான முகவரிகளை வரிசையாக அமைக்க வேண்டும்.
எடுத்துக்காட்டாக ஒரு பி.எம்.பி. பைலை ஜேபெக் பார்மட்டில் ஒரு பைலாகவும், ஜிப் பார்மட்டில் ஒரு பைலாகவும் மாற்ற வேண்டி இருந்தால் அந்த பி.எம்.பி. பைலை jpg@zamzar.com, gif@zamzar.com என இரு முகவரிகளை இட்டு அனுப்ப வேண்டும்.
இதில் ஒரு வரையறை உண்டு. பைல் ஒன்றின் அளவு 1 எம்பிக்குள் இருக்க வேண்டும். அதற்கு மேலாக பெரிய பைலாக இருந்தால் கட்டணம் செலுத்தி மட்டுமே பார்மட் மாற்றிப் பெற முடியும்.
iPhone, iPad, Android or Blackberry ஆகிய சாதனங்களில் மின்னஞ்சல் அனுப்பும் வசதி இருந்தால் அவை வழியாகவும் பைலை அனுப்பி மாற்றிப் பெற்றுக் கொள்ளலாம்.
இதன் மூலம் குறிப்பிட்ட வீடியோ பைல் மேலே கூறப்பட்ட சாதனங்களில் பார்க்க இயலாத பார்மட்டில் இருந்தால் மின்னஞ்சல் மூலம் அனுப்பி சாதனங்களில் பார்க்கும் வகையில் மாற்றிப் பெறலாம்.
இது குறித்து மேலும் தகவல்கள் தேவைப்படுவோர் www.zamzar.com என்ற தளத்தில் உள்ள FAQ பக்கத்தில் தேடிப் பெறலாம்.

விண்டோஸ் 8ல் Safe Mode-ஐ ஏற்படுத்துவதற்கு

மற்ற இயங்குதளங்கள் போன்று அல்லாமல் விண்டோஸ் 8 இயங்குதளத்தில் Safe Modeஆனது Defaultஆக DISABLE செய்யப்பட்டு இருக்கும்.
உங்களுக்கு Safe Mode பயன்படுத்த வேண்டிய சந்தர்ப்பம் ஏற்படும் போது அதனை விண்டோஸ் 8ல் மேற்கொள்ளும் வழிமுறைகளை இங்கு காணலாம்.
இதற்கு முதலிலே Windows Key உடன் R ஐ( Windows+R ) அழுத்தி அல்லது START இனுள் சென்று RUNஐத் திறந்து கொள்ளுங்கள்.
பின்னர் இதனுள் msconfig என்று type செய்து ENTER பண்ணிக்கொள்ளவும். இப்போ System Configuration ஆனது திறக்கும். இதிலே BOOT ஐக் கிளிக் செய்யவும்.
இப்போது Safe boot என்பதை தெரிவு செய்து OK பண்ணவும். அதன் பின் தோன்றும் விண்டோவில் உள்ள RESTART என்பதைக் கொடுக்கவும்.
தற்போது உங்கள் கணணியானது மீள இயக்கப்பட்டு Safe Mode இனுள் காணப்படும். மீண்டும் பழைய நிலையை அடைய வேண்டுமானால் மீண்டும் அதே ஒழுங்கில் சென்று தெரிவு செய்துள்ள Safe boot என்பதை கொடுத்து சேமிக்கவும்.

டுவிட்டரை உபயோகிப்பது உடல் நலத்திற்கு உகந்ததல்ல: நிறுவனர் எச்சரிக்கை








பிரபல சமூக வலைத்தளமான டுவிட்டரிலேயே பல மணி நேரங்களை செலவழிப்பது உடல் நலத்திற்கு உகந்ததல்ல என அந்நிறுவனத்தின் இயக்குனரான பிஜ் ஸ்டோன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: தற்போது டுவிட்டரை உலகம் முழுவதும் 50 கோடி பேர் பயன்படுத்துகின்றனர்.
இதில் பல மணி நேரங்கள் அதாவது 12 மணி நேரம் வரை செலவழிக்கின்றனர். இது உடல் நலத்திற்கு உகந்ததல்ல.
இதுபோன்ற சமூக வலைத்தளம் அல்லது இணையத்தளத்தை ஒரு விஷயத்தை தெரிந்து கொள்வதற்காக, நீங்கள் விரும்பும் ஒன்றைப் பார்ப்பதற்காக, நீங்கள் விரும்புவதைக் கற்றுக் கொள்வதற்காக அணுகலாம். அதுதான் நலமான வழி என்றார். இவர் டுவிட்டரின் நிறுவனர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மைக்ரோசாப்ட் வேர்டில் Table-களை கையாள்வதற்கு

வேர்டில் டாகுமெண்ட்கள் இடையே டேபிள்களை அமைக்கும் போது அவற்றை நம் விருப்பத்திற்கேற்ப அமைத்திட பல வசதிகளும், மாடல்களும் தரப்படுகின்றன.
இவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து நாம் டேபிளை அமைக்கலாம். இந்த டேபிள்களில் உள்ள செல்களுக்கு இடையே, சிறிய இடைவெளியை ஏற்படுத்தினால், பார்ப்பதற்கு இன்னும் அழகாக இருக்கும். இதற்கு ஏற்கனவே அமைக்கப்பட்ட டெம்ப்ளேட்டுகள் உதவி செய்வதில்லை. ஆனால் இதனை அமைத்திட முடியும். அதற்கான வழிகளை இங்கு காணலாம்.
முதலில் மாற்றப்படாத, மாறா நிலையில் கிடைக்கும் டேபிள் ஒன்றை எடுத்துப் பார்க்கலாம். இந்த டேபிள் முழுவதையும் தேர்ந்தெடுத்தால் அதில் மார்ஜின், இடது பக்கமும் வலது பக்கமும் .08 அங்குலம் இருப்பதனைக் காணலாம். டேபிள் ஒன்று உருவாக்கப்படுகையில் வேர்ட் இந்த மார்ஜின் இடத்தைத் தானாக அமைத்துக் கொள்கிறது.
இந்த டேபிளைப் பெற Insert மெனு சென்று, Tables group பிரிவில் உள்ள Table என்ற பிரிவில் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவினைப் பயன்படுத்தி மூன்று நெட்டு வரிசை(columns) மற்றும் ஐந்து படுக்கை வரிசை(rows) கொண்ட டேபிளை உருவாக்கவும்.
இதில் மேலும் கீழுமாக மார்ஜின் உருவாக்க கீழே குறிப்பிட்டுள்ளபடி செயல்படவும்.
1. டேபிள் முழுவதையும் தேர்ந்தெடுக்கவும். மூவ் ஹேண்டில் எனப்படும் ஸ்வஸ்திக் சின்னம் போன்ற கர்சரை டேபிளின் இடது மேல் மூலையில் கிளிக் செய்தால், டேபிள் முழுவதும் தேர்ந்தெடுக்கப்படும்.
2. அடுத்து contextual Layout டேப்பில் கிளிக் செய்திடவும். இதில் உள்ள குரூப்பில் Cell Margins என்ற ஆப்ஷனில் கிளிக் செய்திடவும். எம்.எஸ். ஆபீஸ் 2003 பயன்படுத்துபவர்கள், டேபிள் மீது ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் Table Properties என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் Table பிரிவில் Options என்பதில் கிளிக் செய்திடுக.
3. கிடைக்கும் டயலாக் பாக்ஸில் மேல் மற்றும் கீழ்(top and bottom) பகுதிக்கான மார்ஜின் அகலத்தினை அமைத்துப் பின்னர் ஓகே கிளிக் செய்திடவும். இனி செல்களுக்கிடையே எப்படி இடைவெளி அமைப்பது எனப் பார்க்கலாம்:
1. முதலில் மேலே கூறியபடி ஸ்டெப்ஸ் 1 மற்றும் 2னை மேற்கொள்ளவும்.
2. கிடைக்கும் டயலாக் பாக்ஸில், Allow Spacing Between Cells என்பதில் கிளிக் செய்து. 0.08 என்று குறிக்கவும்.
3. பின்னர் ஓகே கிளிக் செய்திடவும்.
மேலே குறிப்பிட்ட செயல்பாடுகளினால் கிடைக்கும் டேபிள் அமைப்பு மிகவும் ஆர்வமூட்டுவதாகவும், எளிதாகவும் இருப்பதனைக் காணலாம். நாம் செய்ததெல்லாம் மாறா நிலையில் கிடைக்கும் டேபிளில் சிறிது இடம் கூடுதலாக அமைத்ததுதான்.
இன்னொரு வழியிலும் இதனை அமைக்கலாம். செல்பார்டர்களை மறையச் செய்து இதனை மேற்கொள்ளலாம். ஏற்கனவே குறிப்பிட்டபடி டேபிள் ஒன்றை உருவாக்கி, கீழே குறிப்பிட்டுள்ளபடி செயல்படவும்.
1. டேபிளைத் தேர்ந்தெடுக்கவும்.
2. contextual Design டேப்பில் கிளிக் செய்திடவும். அடுத்து Table Styles குரூப்பில், Borders கீழ்விரி மெனுவினைப் பெறவும். அதில் Borders and Shading என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
எம்.எஸ். ஆபீஸ் 2003 பயன்படுத்துபவர்கள், டேபிள் மீது ரைட் கிளிக் செய்து, Table Properties என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். Table டேப்பில் Borders and Shading என்பதில் கிளிக் செய்திடவும்.
3. கிடைக்கும் டயலாக் பாக்ஸில் வண்ணங்களுக்கான கட்டத்தில் white கலர் தேர்ந்தெடுக்கவும். அடுத்து பிரிவில் பெரிய அளவில் எழுத்தின் அளவைத் தேர்ந்தெடுக்கவும்.
வண்ணத்தினைத் தேர்ந்தெடுக்கையில் டாகுமெண்ட்டின் பின்னணி வெள்ளையாக இருந்தால், வெள்ளை வண்ணத்தினையும் வேறு வண்ணத்தில் பின்னணி இருந்தால் அந்த வண்ணத்தினையும் அமைத்திடவும். இதனால் செல் பார்டர்கள் தானாகவே மறைந்திடும்.
4. அடுத்து Shading டேப்பில் கிளிக் செய்திடவும். செல் பின்புலத்திற்கு தகுந்த வண்ணத்தினைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் ஓகே கிளிக் செய்திடவும்.
இங்கு நாம் செல்களுக்கு இடையேயான இடைவெளியை அதிகரிக்கவில்லை. அதற்குப் பதிலாக செல்களின் பார்டரின் அகலத்தினை அதிகரித்து, பின்னர் இடைவெளி அதிகப்படுத்தப்பட்டிருக்கும் தோற்றத்தைக் காட்ட அவற்றை மறைத்திருக்கிறோம்.
இது ஒரு சோதனை தான். உங்களுக்கும் இதன் மூலம் டேபிளின் கூறுகளை எப்படிக் கையாளலாம் என்பது தெரிந்திருக்கும்.

PDFZilla மென்பொருளை தரவிறக்கம் செய்வதற்கு

PDF கோப்புகளை யாராலும் எடிட் செய்ய முடியாது என்பதால் பெரும்பாலான தகவல்கள் இணையத்தில் PDF வடிவில் கிடைக்கின்றன.
இத்தகைய PDF கோப்புகளை நமக்கு வேண்டிய போர்மட்டில் மாற்றி கொள்ள இணையத்தில் ஏராளமான இலவச PDF கன்வெர்டர் மென்பொருட்கள் உள்ளன.
PDFZilla மென்பொருள் மிகச்சிறந்த கன்வெர்டர் மென்பொருளாகும். இந்த மென்பொருளை தற்போது முற்றிலும் இலவச சீரியல் கீயுடன் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
PDFZilla மென்பொருளின் சிறப்பம்சங்கள்:
இந்த மென்பொருள் மூலம் PDF கோப்புகளை DOC, TXT, BMP, JPG, GIF, TIF, HTML, SWF போன்ற வகைகளுக்கு மாற்றம் செய்து கொள்ளலாம்.
உபயோகிப்பதற்கு மிகவும் சுலபமான மென்பொருள் வெறும் மூன்று கிளிக்கில் PDF கோப்புகளை DOC கோப்புகளாக மாற்றிவிடலாம்.
சுமார் 20 மொழிகளை சப்போர்ட் செய்கிறது மற்றும் அனைத்து Unicode மொழிகளுக்கும் சப்போர்ட் செய்கிறது.
Batch mode ல் ஒரே நேரத்தில் சுமார் 1 கோடி கோப்புகளை PDF இருந்து Doc கோப்புகளாக மாற்றம் செய்ய முடியும்.
PDFZilla மென்பொருளை இலவசமாக பெற:
முதலில் இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து கணணியில் நிறுவிக் கொள்ளவும். அதன் பின் ஒரு விண்டோ ஓபன் ஆகும்.
அதில் Register என்ற லிங்கை அழுத்தி Giveaway தளத்தில் உள்ள சீரியல் கோடினை கொப்பி செய்து Register விண்டோவில் பேஸ்ட் செய்யவும்.
இதன் பிறகு OK பட்டனை அழுத்தி விட்டால் போதும் இந்த மென்பொருளை இலவசமாக உபயோகித்து கொள்ளலாம்.

February 25, 2012

விண்டோசில் கோப்பறைகளை பல்வேறு வண்ணத்தில் மாற்றுவதற்கு

விண்டோசில் உள்ள கோப்பறைகளை எளிதில் அடையாளம் கண்டறியும் வகையில் பல்வேறு விதமான வண்ணங்களில் மாற்றலாம்.
இதற்கு முதலில் Folder Colorizer என்ற லிங்கில் கிளிக் செய்து 1.28MB அளவுடையை சிறிய மென்பொருளை உங்கள் கணணியில் தரவிறக்கம் செய்து நிறுவிக் கொள்ளவும்.
இதன் பிறகு Free Activation என்ற விண்டோ வந்தால் உங்கள் மின்னஞ்சலை கொடுத்து Register செய்து கொள்ளவும். அங்கு உள்ள டிக் மார்க் எடுத்து விடவும்.
இதன் பிறகு நீங்கள் கொடுத்த மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு Verification Link அனுப்புவார்கள், அதை கிளிக் செய்து இந்த மென்பொருளை இலவசமாக ஆக்டிவேட் செய்து கொள்ளுங்கள். ஆக்டிவேட் செய்யாவிட்டாலும் இந்த மென்பொருளை உபயோகிக்க முடியும்.
கோப்பறைகளை வெவ்வேறு நிறங்களில் மாற்ற:
நீங்கள் நிறத்தை மாற்ற விரும்பும் கோப்பறை மீது ரைட் கிளிக் செய்து Colorize என்பதில் உங்களுக்கு தேவையான நிறத்தை கிளிக் செய்தால் போதும் சில வினாடிகளில் உங்களுடைய  கோப்பறை அந்த நிறத்திற்கு மாறிவிடும்.
இதிலுள்ள நிறங்கள் உங்களுக்கு பிடிக்கவில்லை எனில் Colors என்பதை கிளிக் செய்து உங்களுக்கு வேண்டிய நிறத்தை நீங்களே உருவாக்கி கொள்ளலாம்.
இது போன்று உங்களுக்கு தேவையான நிறத்தை தெரிவு செய்து கோப்பறையில் வைத்து அழகாக மாற்றலாம்.
விண்டோசில் நிறத்தை மாற்றிய கோப்பறைகளை மீண்டும் பழைய வடிவில் கொண்டு வர அந்த கோப்பறை மீது ரைட் கிளிக் செய்து Colorize! ==> Restore Original Color என்பதை கொடுத்தால் பழைய நிறம் திரும்பவும் வந்துவிடும்.

எக்ஸெல் ஷீட்டுக்கான ஷார்க்கட் கீகள்

பெரும்பாலான கணணி பயனாளர்கள் தகவல்களை சேகரித்து வைப்பதற்கு எக்ஸெல்லை பயன்படுத்துகின்றனர்.
இதை உபயோகப்படுத்துவதற்கு ஷார்ட்கட் கீகள் கீழே தரப்பட்டுள்ளன.
Control + “C”: தகவல்களை கொப்பி செய்வதற்கு.
Control + “X”: தகவல்களை கட் செய்வதற்கு.
Control + “V”: கொப்பி செய்த தகவல்களை பேஸ்ட் செய்வதற்கு. 
F2: அப்போதைய செல்லை எடிட் செய்திட. (எளிதாக எடிட் செய்திடும் வகையில் செல் ரெபரன்சஸ் அனைத்தும் வண்ணத்தில் அமைக்கலாம்)
F5: Go to.
F11:உடனடி சார்ட் கிடைக்க.
Shift + F3: பேஸ்ட் செயல்பாட்டிற்கான விஸார்ட் கிடைக்கும்.
Control + F3: பெயரை டிபைன் செய்திடலாம்.
Control + “+”: அப்போதைய தேர்வுக்கு ஏற்றபடி செல், படுக்கை மற்றும் நெட்டு வரிசையினை இடைச் செருகும்.
Control + “”: அப்போதைய தேர்வுக்கு ஏற்றபடி செல், படுக்கை மற்றும் நெட்டு வரிசையினை நீக்கும்.
Shift + Space: முழு படுக்கை வரிசையும் அப்போதைய ஏரியாவிற்காக தேர்ந்தெடுக்கப்படும். இது என்ன என்று கொடுத்துப் பார்த்து உணர்ந்து கொள்ளுங்கள்.
Control + Space: முழு நெட்டு வரிசையும் அப்போதைய ஏரியாவிற்காக தேர்ந்தெடுக்கப்படும். இது என்ன என்று கொடுத்துப் பார்த்து உணர்ந்து கொள்ளுங்கள்.
Control + “!” (அல்லது Control + Shift + “1”): எண்ணை இரண்டு தசம ஸ்தானத்தில் போர்மட் செய்திடும்.
Control + “$” (அல்லது Control + Shift + “4”): கரன்சியாக போர்மட் செய்திடும்.
Control + “%” (அல்லது Control + Shift + “5”): சதவீதத்தில் போர்மட் செய்திடும்.
Control + “/” (அல்லது Control + Shift + “7”): சயின்டிபிக் ஆக போர்மட் செய்யப்படும்.
Control + “&” (அல்லது Control + Shift + “6”):அப்போது தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதனைச் சுற்றி சிறிய பார்டர் அமைக்கப்படும்.

கூகுளில் browsing history ஐ நீக்குவதற்​கு


நாம் அன்றாடம் இணையத்தை பயன்படுத்தும் போது அதன் browsing history எமது கணணியில் பதிவு செய்யப்படும்.
அவற்றை நீக்குவதற்கு பயன்படுத்திய உலாவியினுள்(browser) சென்று நீக்குவது வழக்கம். இதேபோல் நாம் கூகுள் தேடியந்திரத்தை பயன்படுத்தி தேடும் browsing history உம் சேமிக்கப்படுகின்றது.
வரும் மார்ச் முதலம் திகதியிலிருந்து கூகுளை பயன்படுத்தும் பயனரின் கணக்கு தொடர்பான தகவல்கள் சேமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன் போது பெயர், வயது, பால் போன்ற விடயங்களும் உள்ளடக்கப்படும். இதன்காரணமாக அனாவசியமான விடயங்கள் ஏதாவது உங்களால் தேடப்பட்டிருந்தால் குறித்த திகதிக்கு முன்னதாக உங்களது browsing history ஐ நீக்க விரும்பினால் பின்வரும் படிமுறைகளை பின்பற்றவும்.
1. கூகுளின் homepageற்கு சென்று உங்களது கணக்கை பயன்படுத்தி உள்நுளைந்து account settings என்பதை அழுத்தவும்.
2. தொடர்ந்து வரும் விண்டோவில் web history என்பதை தெரிவு செய்யவும்.
3. பின் அதனைத் தொடர்ந்து வரும் விண்டோவில் Remove Web History என்பதை அழுத்தவும்.

Right Inbox: தானியங்கியாகவே ஜிமெயிலில் மின்னஞ்சல்களை அனுப்ப

சில நேரங்களில் குறிப்பிட்ட நேரத்திற்கு மின்னஞ்சல் அனுப்ப வேண்டி இருக்கும். இதற்கு வசதியாக ஜிமெயிலில் மின்னஞ்சல்களை Schedule செய்து வைத்து அனுப்பலாம்.
ஜிமெயிலில் Schedule வசதியை கொண்டு வர:
முதலில் இந்த Right Inbox தளத்திற்கு செல்லுங்கள், உங்களுடைய இணைய உலாவி(Firefox3.6+ Chrome 5.0+) புது பதிப்பாக இருப்பது நல்லது.
Right Inbox தளத்தில் உள்ள Install Now என்ற பட்டனை அழுத்தி இந்த நீட்சியை தரவிறக்கம் செய்து உங்கள் கணணியில் நிறுவிக் கொள்ளுங்கள்.
இப்பொழுது ஜிமெயிலை ஓபன் செய்யுங்கள். ஏற்க்கனவே ஓபன் செய்து இருந்தால் Refresh செய்யவும்.
அடுத்து கீழே உள்ள படங்களில் உள்ளது போல் தொடருங்கள்.
அவ்வளவு தான் உங்களுடைய ஜிமெயிலில் இந்த Schedule வசதி ஆக்டிவேட் ஆகி விடும்.
Schedule வசதியை உபயோகிப்பது எப்படி:
எப்பொழுதும் மின்னஞ்சல் அனுப்பவது போல Compose பட்டனை அழுத்தி உங்கள் செய்தி, மற்றும் அனுப்புனர் விவரங்களை கொடுத்த பின்னர் Send பட்டனுக்கு பக்கத்தில் Send Later என்ற புதிய பட்டன இருப்பதை காண்பீர்கள் அதனை கிளிக் செய்யவும். 
அதில் உங்கள் மின்னஞ்சலை அனுப்ப குறிப்பிட்ட சில நேரங்கள் கொடுக்கப்பட்டிருக்கும் அதில் உங்களுக்கு தேவையானதை கிளிக் செய்து கொள்ளுங்கள் அல்லது உங்களுக்கு தேவையான நேரம் அந்த பட்டியலில் இல்லை என்றால் கடைசியில் உள்ள at a Specific Time என்பதை கிளிக் செய்து உங்கள் மின்னஞ்சல் செல்ல வேண்டிய நேரம் மற்றும் திகதியை தெரிவு செய்து கொள்ளவும்.
சரியாக நேரம் set செய்தவுடன் கீழே உள்ள Schedule பட்டனை கிளிக் செய்து விட்டால் போதும் குறிப்பிட்ட நேரத்திற்கு உங்களுடையை மின்னஞ்சல் அவர்களுக்கு சென்று விடும்.




ஒரே கருவியில் பல செயற்பாடுக​ளை மேற்கொள்ள கூகுள் கண்ணாடிகள்



இணைய உலகில் இமையமாக நிற்கும் கூகுள் ஆனது பல அம்சங்களுடன் கூடிய மூக்குக்கண்ணாடி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
இக்கண்ணாடியில் புகைப்படமெடுக்கும் கமெரா, திரை, ஹெட்போன் என்பன காணப்படுகின்றன. எனவே இவற்றை பயன்படுத்தி புகைப்படங்களை எடுக்க முடிவதுடன், பாட்டுக்களையும் செவிமடுக்க முடியும்.
இவற்றை விட விசேட அம்சம் என்னவென்றால் இணையவசதி கொண்ட இந்த கண்ணாடியானது செல்பேசிகளுக்கு பதிலாக பயன்படுத்த முடியும் என்பதுதான்.
அதேநேரம் அதில் காணப்படும் திரையின் மூலம் எமது மின்னஞ்சல் முகவரிக்கு வரும் புதிய மின்னஞ்சல் பற்றிய தகவல்களையும் உடனுக்குடன் அறியக்கூடியவாறு உள்ளது.
கூகுளின் அன்ரோயிட் இயங்குதளத்தில் செயற்படும் இந்த கண்ணாடிகள் தற்போதுள்ள 3G வலையமைப்பிற்கும் 4G வலையமைப்பிற்கும் இசைவாக தொழிற்படக்கூடியது.
இவ்வாறான பல வசதிகளை கொண்ட கூகுள் கண்ணாடியை அணிந்து கொண்டு பாதையை சரியாக இனங்கண்டு நடக்க முடியுமா? என்ற சந்தேகம் உங்களுக்கு எழலாம்! ஆம், துல்லியமாக பாதையை அல்லது முன்னாலுள்ள பொருட்களை பார்க்கக்கூடியவாறான ஔி ஊடுபுகவிடும் கண்ணாடிகளே பயன்படுத்தப்பட்டுள்ளன.
ஸ்மார்ட் போன்களுக்கு நிகராக கருதப்படும் இந்த கண்ணாடியின் பெறுமதியானது 380 யூரோவிலும் குறைவாகவே இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.




February 23, 2012

புகைப்படங்களை அழகான ஆல்பமாக உருவாக்குவதற்கு









புகைப்படங்களை நாம் ஆல்பமாக உருவாக்க போட்டோஷாப்பில் எண்ணற்ற PSD டிசைன் கோப்புகள் உள்ளன.
ஆனால் நமது விருப்பதற்கேற்ப திருமணம், பிறந்தநாள், காலண்டர், அன்னையர் தினம், குழந்தைகள் தினம், காதலர்தினம் என விருப்பத்திற்கேற்ப ஆலபம் தயாரிக்கலாம். 15 எம்.பி. கொள்ளளவு கொண்ட இந்த மென்பொருளை பதிவிறக்கம் செய்து கணணியில் நிறுவிக் கொள்ளவும்.

பின் உங்களுக்கு ஒரு விண்டோ ஓப்பன் ஆகும். இதில் கொடுக்கப்பட்டிருக்கும் Scropbook, Greeting Card, Calendor என்பதில் எது உங்களுக்கு தேவையோ அதனை தேர்வு செய்துகொள்ளளலாம்.
Scrapbook ல் உப தலைப்புகளாக Holiday, Birthday, Family, baby, Kids, Wedding என இருக்கும். இதில் உங்களுக்கு தேவையானதை தேர்வு செய்துகொள்ளலாம்.
தேர்வு செய்யப்பட்ட விண்டோவில் நமக்கு அதிக அளவு டிசைன்கள் இருக்கும். உங்களது விருப்பத்திற்கு ஏற்றவாறு டிசைனை தேர்வு செய்து அதனை டவுண்லோடு செய்துகொள்ளலாம்.
டிசைனை தேர்வு செய்தபின்னர் நாம் நமது விருப்பபடி நாம் புகைப்படங்களை தேர்வு செய்துகொள்ளலாம்.
புகைப்படங்களை Autofill முறையிலும் தேர்வு செய்து கொள்ளலாம். ஒவ்வொரு புத்தகத்திலும் ஐந்து டிசைன்கள் இருக்கும். தேவைப்பட்டால் நாம் டிசைன்களை அதிகப்படியாக சேர்த்துக் கொள்ளலாம்.

கடைசியாக பயன்படுத்திய வேர்ட் கோப்பு திறப்பதற்கு

வேர்ட் அல்லது வேறு எந்த புரோகிராம் பயன்படுத்தினாலும் ஒருமுறை முடித்து மறுமுறை இயக்கத் தொடங்குகையில் இறுதியாகத் திறந்து பயன்படுத்திய கோப்பைத் திறந்து பயன்படுத்த எண்ணுவோம்.
File Menu சென்று பட்டியலைத் திறந்தால் அதில் முதலாவதாகக் கிடைக்கும் கோப்பு அதுவாகத்தான் இருக்கும் அல்லது My Recent Documents கோப்பு பட்டியலைப் பெற்றால், அதில் கடைசியாகப் பயன்படுத்திய  கோப்பைப் பெற்று கிளிக் செய்து பின்னர் இயக்கலாம்.
இந்த கிளிக்குகளை மிச்சம் செய்திடும் வகையில், ஒரு செட்டிங்ஸ் அமைத்தால் வேர்ட் புரோகிராம் திறக்கும் போதே இறுதியாக நாம் பயன்படுத்திய கோப்புடன் வேர்ட் இயங்கத் தொடங்கும். கீழே குறிப்பிட்டுள்ளபடி செட் செய்திடவும்.
1. Start-> Run-ஐ தெரிவு செய்யவும்.
2. இதை winword.exe /m(FileName) டைப் செய்யவும். Ex.winword.exe/mfile
3. அதன் பின் ஓகே கிளிக் செய்திடவும்.
இதனையடுத்து,
1. விண்டோஸ் எக்ஸ்புளோரரில் winword.exe என்ற கோப்பைக் கண்டறியவும். இது வழக்கமாக C:Program FilesMicrosoft OfficeOfficefolder என்ற இடத்தில் கிடைக்கும். இதில் ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில் Create Shortcut என்பதைத் தெரிவு செய்யவும்.
விண்டோஸ் ஷார்ட்கட் ஒன்றை உருவாக்கும். இது பட்டியலின் இறுதியாகக் காட்டப்படும். பின்னர், புதிய ஷார்ட்கட்டில் ரைட் கிளிக் செய்து Send To Desktop என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
2. இனி டெஸ்க்டாப்பில் புதிய ஷார்ட்கட் ஐகானைக் கண்டறியவும்.
3. இதில் ரைட் கிளிக் செய்து Properties தேர்ந்தெடுக்கவும்.
4. ஷார்ட்கட் டேப்பில், /m(File Name) என்ற ஸ்விட்சை ஸ்ட்ரிங்குடன் இணைக்கவும்.
5. ஓகே கிளிக் செய்திடவும்.
இந்த ஷார்ட்கட்டைப் பயன்படுத்தி எப்போதெல்லாம், வேர்ட் திறக்கப்படுகிறதோ இறுதியாகப் பயன்படுத்தப்பட்ட கோப்புடனேயே வேர்ட் திறக்கப்படும்.

மிகப்பெரிய அளவுடைய கோப்புக்களை சிறிதாக்கு​வதற்கு


இணையம் என்பது பல்வேறுபட்ட நடவடிக்கைகளில் மனிதனுக்கு உதவி புரிகின்றது. இதில் கோப்புகளை பரிமாற்றம் செய்வதும் முக்கிய இடத்தை வகிக்கின்றது.
எனினும் அளவில் பெரிய கோப்புக்களை பரிமாறும் போது அதிக நேரம் செலவாவது போன்ற பிரச்சினைகளையும் எதிர்நோக்கவேண்டிய சூழ்நிலை காணப்படுகின்றது.
எனவே இப்பிரச்சினையை தவிர்ப்பதற்கு கோப்புக்களின் அளவை சிறிதாக்குதல் சிறந்த வழியாக காணப்படுவதுடன் இதற்காக பல்வேறு மென்பொருட்களும் காணப்படுகின்றன.
எனினும் தற்போது அறிமுகமாகியுள்ள KGB Archiver எனும் மென்பொருள் ஏனையவற்றைவிட சிறந்ததாக கருதப்படுகின்றது. காரணம் இதன் உதவியுடன் 1GB அளவுடைய கோப்புக்களை 10MB அளவிற்கு குறைக்க முடியுமாக இருப்பதுடன் பின்வரும் சிறப்பம்சங்களையும் கொண்டுள்ளது.
1. .kgb, .zip போன்றவற்றிற்கு நிகரான கோப்புக்களை பயன்படுத்த முடிதல்.
2. யூனிகோட்டினை பயன்படுத்தக்கூடியவாறு காணப்படுதல்.
3. தானாகவே கோப்புக்களை சுருக்கும் வசதியை கொண்டிருத்தல்.
4. கடவுச்சொற்களின் மூலம் சுருக்கப்பட்ட கோப்புக்களை பாதுகாக்க முடிதல்.
இந்த மென்பொருளானது விண்டோஸ், லினக்ஸ் இயங்குத்தளங்களில் செயற்படக்கூடியது. அத்துடன் இதை நிறுவுவதற்கு கணணியில் குறைந்தது 256 MB RAM, 1.5 GHz Processor ஆகியன காணப்படுதல் வேண்டும்.

February 21, 2012

பயனர்களுக்​கான சிறந்த கடவுச்சொல் வசதியை தரும் கூகுள்


இன்றைய இணைய உலகினால் பல்வேறு நன்மைகள் இருக்கின்ற போதிலும் அவற்றுடன் போட்டி போடும் அளவிற்கு தீமைகளும் பரவிக் காணப்படுகின்றன.
அதில் ஒன்று தான் கடவுச்சொற்கள் மற்றவர்களால் திருடப்படுதல் ஆகும். இவ்வாறு கடவுச்சொல் திருடப்படுவதனால் எமது தகவல்களை தொலைத்து சங்கடத்தில் மூழ்கவேண்டிய நிலை ஏற்படுகின்றது.
தமது பயனர்கள் இவ்வாறான சங்கடங்களை தவிர்ப்பதற்கு உதவி புரிய பல நிறுவனங்கள தமது மூளையை பிளிந்த வண்ணம் உள்ளன.
அதன் அடிப்படையில் கூகுள் நிறுவனம் தற்போது ஒரு தீர்வை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது கூகுள் குரோமை பயன்படுத்தி குரோம் சம்மந்தமான விடயங்களை தேடும்போது அமைக்கப்படும் கணக்குகளிற்கான வலுவான கடவுச்சொல்லை அதனுடன் இணைந்த "பாஸ்வேர்ட் மனேஜர்" இன் உதவியுடன் நீங்கள் அமைத்துக்கொள்ள முடியும்.


அனுப்பிய மெயிலை நிறுத்துவதற்கு கூகுளின் புதிய வசதி


மெயில் சர்வர்களில், மின்னஞ்சல் செய்தி ஒன்றை அனுப்ப கட்டளை கொடுத்தவுடன் அந்த மெயில் உடனடியாக அனுப்பப்படும் நபரின் இன் பாக்ஸுக்கு அந்த மின்னஞ்சல் சென்றுவிடும்.
இணையப் பழக்கவழக்கங்களில் பல வகை மாற்றங்களைக் கொண்டு வரும் கூகுள் நிறுவனம், இதிலும் ஒரு புதிய வசதியைத் ஏற்படுத்தியுள்ளது. நாம் அனுப்பிய மெயிலைத் திரும்பப் பெற எண்ணினால், உடனடியாக அதன் சேவையை நிறுத்திவிடலாம்.
இந்த வசதியைப் பயன்படுத்த, மெயிலை அனுப்பிய சில நொடிகளில் செயல்படுத்த வேண்டும். அதிக பட்சம் 30 நொடிகளில் இதனை மேற்கொள்ள வேண்டும். இதற்கு Undo Send என்ற பட்டனை அழுத்த வேண்டும். இந்த கட்டளை, மெயிலைப் பெறுபவரின் இன் பாக்ஸில் இருந்து அழிப்பதன் மூலம் நடைபெறுவதில்லை.
மெயில்கள் வரிசையில் நிற்கும்போது அவை தடுக்கப்படுகின்றன. மீண்டும் அனுப்பியவரே, Undo Send என்பதனை நீக்கினால் தான் அந்த மெயில் அனுப்பப்படும். இதனைச் சோதனை செய்திட, நீங்களே உங்கள் இமெயில் முகவரிக்கு ஒரு மெயிலை அனுப்பி, உடனேயே கேன்சல் செய்து பார்க்கலாம். இந்த வசதி வெப் அடிப்படையில் இயங்கும் ஜிமெயில் தளத்தில் மட்டுமே கிடைக்கிறது.
இந்த வசதியைப் பெற முதலில் இதனை இயக்கிவைத்திட வேண்டும். உங்கள் ஜிமெயில் அக்கவுண்ட்டில் நுழையவும். மெயில் தளத்தின் மேலாக, வலது புறத்தில் உள்ள செட்டிங்ஸ் ஐகானில் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் Settings என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் Labs என்னும் டேப்பில் கிளிக் செய்து Undo Send என்னும் டேப் எங்குள்ளது என்று கண்டறியவும். அல்லது, சர்ச் பாக்ஸில் Undo Send என டைப் செய்து, இந்த வசதி தரப்பட்டிருக்கும் இடத்தினை அறியலாம்.
அந்த இடத்தில் உள்ள Enable என்ற பட்டனில் கிளிக் செய்து, பின்னர் Save Changes என்ற பட்டனையும் அழுத்தவும். ஜிமெயில் தளத்தில் மாறா நிலையில் இதற்கு பத்து விநாடிகள் நேரம் தான் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை 5,10,20,30 நொடிகள் என மாற்றலாம். இந்த நேரத்தினை செட் செய்திட, செட்டிங்ஸ் பக்கத்தில் Undo Send கிளிக் செய்து Send cancellation period என்பதில், நீங்கள் விரும்பும் நேரத்தினை செட் செய்திடலாம்.
இதனை செட் செய்துவிட்டால், ஒவ்வொரு முறை நீங்கள் மெயில் அனுப்பிய பின்னரும், ஒரு பாப் அப் விண்டோவில் “Your message has been sent. Undo. View message” என ஒரு செய்தி கிடைக்கும். இதில் உள்ள Undo லிங்க்கில் கிளிக் செய்தால், அப்போது அனுப்பப்பட்ட அஞ்சல் நிறுத்தப்படும்.
ஜிமெயில் வசதியை இணையதள சர்வரின் மூலம் பயன்படுத்துவோருக்கு மட்டுமே இந்த வசதி கிடைக்கும். ஜிமெயிலின் SMTP அல்லது மற்ற இமெயில் கிளையண்ட் புரோகிராம்களைப் பயன்படுத்துகையில் இந்த வசதி கிடைக்காது.
அனுப்பப்பட்ட மெயிலை நிறுத்தக் கட்டளை கொடுத்த பின்னர், ஜிமெயில் அதற்கான செயல்பாட்டில் இருக்கையில், பிரவுசர் விண்டோவினை மூடினால், அந்த செயல்பாடு மேற்கொள்ளப்படமாட்டாது. அதன் பின்னர் அந்த இமெயில் அனுப்பப்படுவதனை நிறுத்த முடியாது.

ஓடியோ கோப்புகளை மட்டும் பிரித்தெடுப்பதற்கு

நீங்கள் விரும்பும் பாடல்களில் உள்ள ஓடியோவை மட்டும் தனியாக கோப்புகளாக பிரித்தெடுக்கலாம்.
இதற்கு Helium Audio Splitter என்ற மென்பொருள் உதவி புரிகிறது. இந்த மென்பொருள் இலவசமாக கிடைக்கின்றது.
இதனை பயன்படுத்தி ஓடியோ கோப்பை மட்டும் எளிதாக பிரித்தெடுக்கலாம். இது MP3, wave, WMA, OGG வோர்பிஸ், MP4, AAC, wavpack போன்ற போர்மட்டுகளை சப்போர்ட் செய்யக்கூடியது.
இந்த மென்பொருள் விண்டோஸ், விண்டோஸ் 2000, விஸ்டோ இயங்குதளங்களில் செயல்படக்கூடியது.

February 19, 2012

2012ல் லினக்ஸ் பயன்பாடு


linux
0


சென்ற ஆண்டு பெர்சனல் டெஸ்க் டாப் கம்ப்யூட்டருக்கான ஆப்பரேட்டிங் சிஸ்டம் பிரிவில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. இதில் இயங்கும் அனைத்து நிறுவனங்களும் கொண்டு வந்த மாற்றங்கள், அறிவித்த புதிய திட்டங்கள் மக்களிடையே நிறைய எதிர்பார்ப்பினை ஏற்படுத்தின.
குறிப்பாகச் சொல்வ தென்றால், மொபைல் சாதனங்களுக்கென வடிவமைக்கப்பட்ட ஆப்பரேட்டிங் சிஸ்டங்களின் சிறப்புகளை, பெர்சனல் கம்ப்யூட்டர் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலும் கொண்டு வர பல நிறுவனங்கள் முயற்சி செய்து வெற்றியும் பெற்றன.
இதனைக் கண்ட மக்கள், கிடைக்கும் சிஸ்டத்திற்கு நாம் வளைந்து கொடுக்காமல், நாம் விரும்பும் வகையில் செயல்படக் கூடிய சிஸ்டம் இருக்குமா என்று தேடத் தொடங்கினார்கள்.
அவர்களுக்கு லினக்ஸ் கை கொடுத்தது. இந்த ஆண்டில் லினக்ஸ் சிஸ்டம் நிச்சயம் இன்னும் அதிகமாகப் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கலாம். இதற்கான காரணங்களை இங்கு காணலாம்.
1. பலவகைத் தன்மை:
லினக்ஸ் பற்றிக் குறிப்பிடுகையில், அதனை விரும்பாதவர் கள், அந்த சிஸ்டம் பல வகைகளில் துண்டு துண்டாக உள்ளது என்பார்கள். சொல்லப் போனால், அதுதான் லினக்ஸ் சிஸ்டத்தின் வலுவான சிறப்பு என்று சொல்லலாம்.
லினக்ஸ் டிஸ்ட்ரிபியூட்டர்கள் என்று சொல்லப்படுபவர்கள், பயனாளர்களின் தேவைகளை இலக்காகக் கொண்டு லினக்ஸின் வெவ்வேறு படிவங்களை வடிவமைக்கின்றனர்.
மின்ட் மற்றும் உபுண்டு (Mint / Ubuntu) போன்றவை பயன்பாட்டினை முன்னிறுத்துகின்றன. பெடோரா (Fedora) போன்றவை பாதுகாப்பி னையும், நிறுவனங்களின் தேவைகளையும் முன்னிறுத்தியுள்ளன.
2. தனிநபருக்கேற்றவை:
லினக்ஸ் சிஸ்டம் பலவகையான பதிப்புகளில் கிடைப் பதனால், நம் செயல்பாடுகளின் தன்மைக் கேற்ப நமக்கு வேண்டிய பதிப்பினைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
உபுண்டு தரும் யூனிட்டி டெஸ்க்டாப் பிடிக்க வில்லையா? மிண்ட் தரும் ஜிநோம் 3 பிடிக்கவில்லையா? இவற்றை விடுத்து மற்றவற்றை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். இவற்றை வடிவமைத்தவர் யாரும், இந்த சிஸ்டத்தினை நீங்கள் இப்படித்தான் பயன்படுத்த வேண்டும் என எந்த வரையறையும் விதிப்பதில்லை.
3. திறவூற்று பெட்டகம்:
லினக்ஸ் ஒரு திறவூற்றுப் பெட்டகம் (Open Source). ஓப்பன் சோர்ஸ் என அழைக்கப்படும் வகையினைச் சார்ந்தது. இதன் மூலக் குறியீட்டுக்கு யாரும் சொந்தம் கொண்டாடுவது இல்லை.
யார் வேண்டு மானாலும் இதனைத் தங்கள் தேவைக்கேற்ப பயன்படுத்திக் கொள்ளலாம். மிகப் பெரிய அளவிலான அப்ளிகேஷன்களின் தொகுப்பு இது என இதனைக் கூறலாம். இதனை யார் வேண்டுமானாலும் மாற்றிக் கொண்டு பயன்படுத்தலாம்.
4. இலவசம்:
லினக்ஸ் சிஸ்டத்தினைப் பெற்று பயன்படுத்த எந்தக் கட்டணமும் இல்லை. வர்த்தக ரீதியாகப் பயன்படுத்த, தொடர்ந்து தனிக் கவனத்துடன் கூடிய சப்போர்ட் தேவை என்றால் மட்டுமே கட்டணம் செலுத்த வேண்டும்.
தனி நபர்கள் மற்றும் பிற நிறுவன சப்போர்ட் வேண்டாதவர்கள் எந்தக் கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. திறவூற்றா கவும், இலவசமாகவும் இருப்பது லினக்ஸ் சிஸ்டத்தின் இரு தனி சிறப்புகளாகும்.
5. நம்பிக்கை தன்மை: இந்த சிஸ்டத்தினைச் சார்ந்து பயன்பாட்டினை தைரியமாக மேற்கொள்ளலாம். குறிப்பாக சர்வர்கள் இயக்கத்தில், லினக்ஸ் மிக அதிகமாக விரும்பப்படும் ஓர் இயக்கமாகும். லினக்ஸ் பயன்படுத்துகையில், கம்ப்யூட்டர் இயக்கம் முடங்கிப் போகுமோ என்ற கவலை இல்லாமல் இயங்கலாம்.
6. கூடுதல் வேகம்: மற்ற ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் இயங்க, ஹார்ட்வேர் தேவை மிக அதிகமாக இருக்கும். ஆனால், லினக்ஸ் இயங்க அந்த அளவிற்கு ஹார்ட்வேர் தேவை இருக்காது. அதே நேரத்தில், இயக்க செயல் வேகம் மற்றவற்றைக் காட்டிலும் கூடுதலாகவே இருக்கும்.
7. பாதுகாப்பானது: வைரஸ் மற்றும் பிற மால்வேர் தொகுப்புகள் எப்போதும் குறி வைப்பது விண்டோஸ் இயக்கத்தினைத் தான். ஏனென்றால், அதிகம் பயன் படுத்தப்படுவது விண்டோஸ் தான். ஆனால், லினக்ஸ் உலகில் இது மிக, மிகக் குறைவு. மேலும் கூடுதல் பாதுகாப்பு வழங்க பல தர்ட் பார்ட்டி புரோகிராம்கள் கிடைக்கின்றன.
8. தேடுதல்கள் தரப்படும்: லினக்ஸ் பொறுத்தவரை அது ஓப்பன் சோர்ஸ் வகையாக இருப்பதால், உலகெங்கும் அதன் ரசிகர்கள், இந்த இயக்கம் சார்ந்த பல தீர்வுகளைத் தந்த வண்ணம் உள்ளனர். பல ஆயிரக்கணக்கான உதவிக் குழுக்கள் உள்ளன. கேளுங்கள் தரப்படும், தட்டுங்கள் திறக்கப்படும் என்றபடி, எந்த பிரச்னை என்றாலும் நொடியில் உங்களுக்குத் தீர்வு இணைய வழியாகக் கிடைக்கிறது.
9. தொடர் முன்னேற்றம்: பல்வேறு குழுக்கள் லினக்ஸ் சிஸ்டம் குறித்து தொடர்ந்து இயங்கி வருவதால், இந்த குழுக்களில் உள்ள வல்லுநர்கள், லினக்ஸ் சிஸ்டத்தினைத் தொடர்ந்து மேம்படுத்தி வருகின்றனர். புதிய வசதிகள் அளிப்பதோடு, ஏதேனும் சிக்கல்கள் இருந்தால், அவை உடனடியாகச் சரி செய்யப்படுகின்றன. மாதக்கணக்கில் பேட்ச் பைல்களுக்காகக் காத்திருக்க வேண்டியதில்லை.
10. இயைந்த இயக்கம்: லினக்ஸ் மற்ற இடங்களில் இயங்கும் சிஸ்டத்துடன் இயைந்ததாகவே உள்ளது. உலகின் எந்த மூலையில் இயங்கும் லினக்ஸ் சிஸ்டத்துடன் எந்த பதிப்பும் இயைந்து இயங்கும் தன்மை உடையதாகவே உள்ளது. இதனால், எந்தப் பிரச்னையும் இன்றி, உலகளாவிய சிஸ்டம் லினக்ஸ் மூலம் நமக்குக் கிடைக்கிறது.
இந்த சிறப்புகள், லினக்ஸ் சிஸ்டத்தினை கம்ப்யூட்டர் இயக்கத்தின் உற்ற தோழனாகக் காட்டுகின்றன. இதுவே தொடர்ந்து இதன் பயனாளர்களின் எண்ணிக்கையினை உயர்த்தும் காரணமாக வும் உள்ளது. இந்த ஆண்டில் இந்த உயர்வு சற்று அதிகமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.