
இந்த செயல்பாடு Libraries, Contacts, Favourites மற்றும் டெஸ்க்டொப்பில் உள்ள அனைத்து கோப்புகளையும் பக்கப் எடுக்கிறது. மாறா நிலையில் ஒவ்வொரு ஒரு மணி நேரத்திற்கும் ஒரு முறை அனைத்தையும் ஸ்கேன் செய்கிறது.
கோப்புகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்களை தனி ட்ரைவில் எழுதி வைக்கிறது.
இந்த இடத்திலிருந்து பயனாளர்கள் தங்களின் கோப்புகளுக்கான பக்கப் கொப்பிகளை பெறலாம். ஒரு குறிப்பிட்ட கோப்பு சில நாட்களுக்கு முன்னதாக ஒரு நாளில் இருந்த நிலையில் பெற விரும்பினால் இந்த ட்ரைவிலிருந்து பெறலாம்.
கோப்பு ஒன்று கெட்டுப் போய்விட்டால் முந்தைய நிலையிலிருந்தும் File History மூலம் அதனைப் பெறலாம்.
இந்த வசதியைப் பெற விண்டோஸ் எக்ஸ்புளோரர் மூலமாகச் செல்ல வேண்டும். குறிப்பிட்ட இடம் சென்று அல்லது கோப்பிற்கு சென்று எக்ஸ்புளோரர் ரிப்பனில் History பட்டனை அழுத்த வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட லைப்ரேரி, போல்டர் அல்லது தனி கோப்பின் முந்தைய History முழுவதும் காட்டப்படும்.
நமக்குத் தேவையான நிலையில் அந்த கோப்பை எடுத்து கொள்ளலாம். நாம் பெற விரும்பும் கோப்பு, காட்டப்படும் பட்டியலில் எது எனத் தெரியாவிட்டால் கோப்பின் பெயர், மாற்றப்பட்ட முக்கிய சொற்கள், நாள் குறித்து தேடியும் அறியலாம் அல்லது கோப்பின் பிரிவியூ காட்சி பெற்று தேவையான காட்சியை கிளிக் செய்து கோப்பை பெறலாம்.
மேலும் மவுஸை கிளிக் செய்தும் பெறலாம், டச் ஸ்கிரீனைச் சற்று தட்டியும் பெறலாம். ஏற்கனவே விண்டோஸ் 7 சிஸ்டத்தில் Backup and Restore என ஒரு செயல்பாடு இருந்து வருகிறது.
இந்த செயல்பாடு தான் சற்று மேம்படுத்தப்பட்டு பைல் ஹிஸ்டரி என இப்போது விண்டோஸ் 8 சிஸ்டத்தில் கிடைக்கிறது. இந்த தகவல்கள் Building Windows 8 blog என்ற மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் வலைமனையில் தரப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment