December 25, 2012

மைக்ரோசாப்டின் Windows Live Mesh சேவை மூடப்படுகிறது

கோப்புகளை ஒருங்கிணைத்து பாதுகாத்து தேக்கி வைக்கும் சேவையினை, கடந்த 2008ஆம் ஆண்டில் Windows Live Mesh என்ற பெயரில் மைக்ரோசாப்ட் தொடங்கியது.
இது Live Mesh, Windows Live Sync and Windows Live Folder Share எனவும் பெயர் சூட்டப்பட்டிருந்தது. ஒரு கால கட்டத்தில், இந்த சேவையினை கோடிக்கணக்கானவர்கள் பயன்படுத்துவதாக மைக்ரோசாப்ட் அறிவித்திருந்தது.
கோப்புகளை நம் சாதனங்களில் இல்லாமல் ரிமோட் இயக்கத்தில் சேமித்து, தேவைப்படும் போது எடுத்துப் பயன்படுத்தக் கொடுத்த வசதிகளில் Windows Live Mesh முதலிடம் பெற்றிருந்தது.
ஆனால் பின்னர் மைக்ரோசாப்ட் பல்வேறு வசதிகளை அளிக்க முற்படுகையில், Sky Drive என்ற இன்னொரு கட்டமைப்பினை ஏற்படுத்தியது. Live Mesh மூலம் தந்து வந்த வசதிகளை இன்னும் கூடுதல் எளிமையுடன் தர முடியும் என்று மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது.
தற்போது Live Mesh வசதிகள் அனைத்தையும் Sky Drive-ல் தருவதனால், அதன் வாடிக்கையாளர்கள் அனைவரையும் Sky Drive-ற்கு மாறும்படி கேட்டுக் கொண்டுள்ளது.
எனவே வரும் பிப்ரவரி 13ஆம் திகதி முதல் Live Mesh வசதிகள் முற்றிலுமாக நிறுத்தப்படும் எனவும்,எந்த வித சப்போர்ட்டும் தரப்பட மாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment