November 30, 2011

"தாயே…"

தாயே…
வாழ்கை முழுவதும் போற்றப்பட வேண்டியவள் நீ.
இன்று, உன்னைக் காலம்
வரையறை எனும் சிறையில் அடைத்திருக்கிறது,
அன்னையர் தினம் என்ற பெயரில்.
10 மாதங்கள் கருவிலும்,
மிகுதி மொத்த வாழ்வில் நெஞ்சிலும்.

என்னை சுமக்கும் ஜீவன் நீ.
நீ என்னை ஈன்றெடுக்கப் பட்ட வலி போதும்.
எதையும் செய்யலாம்,
உன் அந்த வலி நொடிக்காக…
வெள்ளை அமுதம் ஊட்டி,
இரவில் கண் விழித்து,
இரக்கத்துடன் எனக்காய் வாழ்ந்த,
என் தாயே…
உனக்காக வரைகின்றேன்
என் கவியனும் ஓவியத்தை…
என் பாசத்துக்குரியவள் நீ,
என்னைப் பக்குவப் படுத்தியவளும் நீ,
என் முதல் பாடசாலை நீ,
என்னை பகுத்தறிய வைத்தவளும் நீ,
என் தென்றலும் நீ,
என் முதல் தோழியும் நீ,
என் வசந்தம் நீ,
என் முழு வாழ்கையும் நீ,
என் இருளில் துனைவிளக்கு நீ.
நான் உன் கரம்பிடித்து நடந்த காலங்கள்…
என் வாழ்வில் தெவிட்டாத கரும்புச் சாறுகள்.
மழையோடு நாம் நனைந்த என் பாடசாலை முதல் நாள்,
நீ எனக்கு கதை சொல்லிச் சோறு ஊட்டும் நாட்கள்,
நாம் ஊஞ்சல் ஆடி சிரித்து மகிழ்ந்த நாட்கள்,
நான் உன்னை விட்டுப் பிரிந்த அந்த முதல் நாள்…
கடற்கரை மணலில் நீ என்னோடு விளையாடிய இனிமையான நேரங்கள்,
உன்னை கட்டிப் பிடித்துக் கொண்டே தூங்கும் பசுமையான இரவுகள்,
வெடிச்சத்தம் கேட்டு பயத்தால் உன் மடியோடு விடிந்த பொழுதுகள்,
நான் உன் கைப் பிடித்து நடந்த தெருக்கள்…
உன் அரவனைப்புக்கள்,
நீ தந்த ஆறுதல்கள்,
என்னால் நீ சொட்டிய இன்ப ஈரத்துளிகள்,
எனக்கு ஊட்டிய ஊக்கங்கள்,
உன் எதிர்பார்புகள்,
எனக்கான உன் ஏவல்கள்,
இன்று இவை எல்லாம்
என் வாழ்வில் கடந்து விட்ட கனாக்கள்…
அழகான அன்பு,
ஆழமான பாசம்,
இனிமையான குணம்,
ஈகைக்கான மனம்,
உயர்ந்த எளிமை,
ஊமையான பணிவு,
எப்போதும் மறையாப் புன்னகை,
ஏழ்மையான நளினம்,
ஜம்புலன்களின் அடக்கம்,
ஒத்து நிற்க்கும் ஒற்றுமை,
ஓய்வில்லா முயற்சி,
ஒளடதம் போன்ற உன் கோபம்,
உன்னில் நான் படித்த 12 பாடங்கள்.
தாயே…
நீ யார் என்று யாரும் கேட்டால் என்னை,
என் கைகள் காட்டும் திசை உன்னை.
இமை கண்னை காப்பது போல என்னை
காத்து நின்றவள் நீ.
ஒரு சுமை தாங்கி போல என்
சுமையை சுமந்தவள் நீ.
என் அறியாப் பருவத்தில் உன் கருணைக் கண்டிப்பை
தட்டிக் கழித்த காலம்.
என் குரும்புச் செயலால் நீ குழம்பி நின்ற
அந்த தருணம்.
என் பேச்சு திறனால் நீ வாயடைத்து மௌனித்த
அந்த மௌனம்.
என் மழழைப் பருவத்தில் மற்றவர்களை
சங்கடத்தில் ஆழ்த்தும் அழுகையால்
நீ சங்கடப்பட்ட நேரம்.
நோய்கள் அனைத்தையும் உள்வாங்கிய என்னை
நீ சுகப்படுத்த நடத்தும்
போராட்டம்.
பள்ளிப் பருவத்தில் நீ சொல்லிக் கொடுத்த
பாடம்.
நான் தவறு செய்கின்ற போது நீ தண்டிகின்ற
நியாயம்.
என் அப்பாவையும் என்னையும் சமாதனப்படுத்த
நீ பாவிக்கும் உன் ஞானம்…
என்று உன் ஒவ்வொரு அசைவும்,
அச்சடிக்கப்பட்டு விட்டது என் நெஞ்சுக்குள்.
நான் உன்னிடம் சொல்லிய பொய்கள்,
என் அவசரத்தில் உன்னை திட்டிய தருணங்கள்,
நான் உனக்கு அழித்த ஏமாற்றங்கள்,
இவைதான் என் வாழ்வில் நானே மன்னிக்காத
மகா தவறுகள்…
உன் விருப்பு வெறுப்பை ஓரம் கட்டி,
என் விருப்பதுக்கு முதலிடம் கொடுத்தவள் நீ.
தாயே
ஆயிரம் உறவுகள் இருந்தும் என்ன??
உன்னைப் போல் வருமா?
அன்னையர் தினம் அன்று மட்டும் உனக்கு
விழா எடுக்க நான் கொடியவனல்ல..
அதே நேரம் உன்னை போற்றும் அந்த தருணத்தை
இழக்க நான் பாவியும் அல்ல…
என் இதய கூட்டுக்குள் நீ அடைக்கப்பட்டதாலோ
என்னவோ உன்னைப் பற்றிய என் கற்பனையும்
வரமறுக்கிறது என் இதயத்தை விட்டு…
வார்த்தை இல்லாமல் தடுமாறுகிறேன்
இன்று உன்னை விட்டு…
நான் செய்த தவம்,
நீ என் அன்னை என்ற வரம்.
நான் அன்று பற்றிப் பிடித்தது உன் கரம்,
இன்று நீ என்னோடு இல்லாத நேரம்,
என் நெஞ்சில் ரணம்.
இது தான் நான் கானும் அன்னையர் தினம்.
தொலைந்து விட்ட நிஜங்கள்,
என்றுமே தொலையாத நினைவுகள்,
அந்த நினைவுக்குள்ளும்
அதிகமாய் நீதான்.
தாயே…

No comments:

Post a Comment