November 30, 2011

கோப்பு பகிர்தலை எளிமையாக்கும் டோரன்ட் நுட்பம்

ணையத்தில் உலவுபவர்களுக்கு நல்ல பரிட்சயமான வார்த்தை 'டோரன்ட்'. பெரும்பாலான வீடியோ பகிர்ந்து கொள்ளும் தளங்களில் கோப்புகளை டோரன்ட் வடிவில் வழங்குவதை நீங்கள் கண்டிருக்கலாம். அந்த கோப்புகளை தரவிறக்கினால் அவை மிகச்சிறிய அளவிலேயே இருக்கும்.

அதனை திறக்கும் போது வீடியோ ஓட வில்லையே என்று பலர் திகைப்பதுண்டு. டோரன்ட் மூலம் வீடியோக்களை / பெரிய கோப்புகளை தரவிறக்குவது எப்படி? என்று இணைய புதியவர்கள் பின்னூட்டத்திலும், ஈமெயில் மூலமாகவும் நீண்ட நாட்களாகவே கேட்டு வருகிறார்கள். அதனைப் பற்றி மற்ற பதிவர்களின் சுட்டிகளுடன் இந்த இடுகையில் பார்ப்போம்.

டோரன்ட் என்பது உங்களிடம் உள்ள கோப்புகளை உன்லகெங்கும் மற்றவர்களிடையே பகிர்ந்து கொள்ளும் வசதி. சாதாரணமாக தளங்களில் இருந்து கோப்புகளை தரவிறக்கும் போது அந்த கோப்புகளை ஏற்தாவது ஒரு இணைய வழங்கியில் (Web Server) சேமித்து வைத்து இருப்பார்கள். அங்கிருந்து நீங்கள் அவற்றை பெறுவீர்கள்.

ஆனால் டோரன்ட்களில் உலகெங்கும் நீங்கள் தரவிறக்கும் கோப்புகளை கொண்டுள்ள கணினிகள் இணைய இணைப்பில் இருக்கும் போது இணைக்கப் பட்டிருக்கும். நீங்கள் மற்றவர் கணினியில் இருந்து அந்த கோப்பினை தரவிறக்கி கொண்டிருப்பீர்கள். உங்கள் கணினியில் உள்ள அந்த கோப்பின் பகுதிகள் மற்றவர்கள் தரவிறக்க உங்கள் கணினியில் இருந்து அனுப்பப் பட்டு கொண்டிருக்கும்.

இந்த அருமையான தொழிநுட்பம் மூலம் அதிக செலவு பிடிக்கும் இணைய வழங்கியின் தேவை இன்றி பயனர்களே தங்கள் கணினிகளை கோப்பினை மற்றவருக்கு பகிரும் வழங்கி ஆகவும், தரவிறக்கும் பயனராகவும் பயன்படுத்தி கொள்ள முடிகிறது. 



No comments:

Post a Comment