May 3, 2012

பயனுள்ள மென்பொருட்களின் புதிய பதிப்பை தரவிறக்கம் செய்ய


இணையத்தில் ஆயிரக்கணக்கான இலவச மென்பொருட்கள் இருப்பினும் ஒரு சில மென்பொருட்கள் தான் பயனுள்ளதாக உள்ளது.
இந்த மென்பொருட்களின் புதிய பதிப்பை இங்கு தரவிறக்கம் செய்யலாம்.
Google Chrome: இணைய உலகில் மிகப்பெரிய இடத்தை நோக்கி வளர்ந்து கொண்டு இருக்கும் உலாவி. இரண்டாம் இடத்தில் இருந்த பயர்பொக்ஸ் உலாவியை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.
இப்பொழுது இந்த உலாவியின் புதிய பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Firefox: உலகில் அதிகமாக பயன்படுத்தப்படும் உலாவிகளில் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. கூகுள் குரோம் வந்த பிறகு இதன் வளர்ச்சி விகிதம் குறைந்தாலும் எண்ணற்ற வசதிகளை கொண்டுள்ளதால் நிறைய பேரின் விருப்பத்திற்கு உரிய மென்பொருளாகும்.
CCleaner: நாளுக்கு நாள் வளர்ந்து வரும் தொழில் நுட்பதிர்க்கு ஏற்ப நம் கணணியையும் பாதுகாப்பாக வைத்து கொள்வது நல்லது.
நம் கணணியில் உள்ள தேவையில்லாத கோப்புகளை அழிக்க நம்மில் பெரும்பாலானோர் CCleaner என்ற இலவச மென்பொருளை உபயோகித்து கொண்டு இருக்கிறோம்.
கணணியில் வேண்டாத கோப்புகள், குக்கீஸ்களை மற்றும் இதர தேவையில்லாத கோப்புகளை கணணியில் இருந்து முற்றிலுமாக நீக்க உலகளவில் அனைவரும் விரும்பி உபயோகப்படுத்துவது இந்த CCleaner என்ற இலவச மென்பொருளாகும்.

No comments:

Post a Comment