January 6, 2012

கணணி நன்றாக இயங்குவதற்கு

கணணி நன்றாக இயங்க நாம் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பாதுகாப்பு குறித்த பல்வேறு தகவல்கள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டே இருக்கின்றன.
1. உங்களுடைய இயங்குதளம் அப் டேட்டட் ஆக இருக்க வேண்டும். புதிய இயங்குதளத்திற்கு மாற வேண்டும் என்பதில்லை. பயன்படுத்தும் இயங்குதளத்திற்கான அண்மைக் காலத்திய அப்டேட்டட் கோப்புகள் இறக்கப்பட்டு பதியப்பட்டிருக்க வேண்டும்.
2. நீங்கள் உருவாக்கிய தகவல்கள் பாதுகாப்பாக இருக்க சிறப்பான ஆண்டி வைரஸ் இருக்க வேண்டும். அதுவும் அவ்வப்போது அப்டேட்டட் ஆக இருக்க வேண்டும்.
3. தேவையில்லாமல் கணணி பூட் ஆகும் போதே தொடங்கி பின்னணியில் இயங்கும் புரோகிராம்கள் உங்கள் கணணி பணியை மந்தப்படுத்தும், தாமதப்படுத்தும். எனவே தேவையற்ற புரோகிராம்கள் இருந்தால் நீக்கி விடுங்கள்.
4. பயர்வால் ஒன்று அவசியம் வேண்டும். விண்டோஸ் இயக்கத்துடன் வரும் பயர்வால் கூட போதும்.
5. டூல் பார்களை அவ்வப்போது ட்யூன் செய்திட வேண்டும். தேவைப்படும் டூல் பார்களை மட்டும் இயங்க வைத்திட வேண்டும். தேவையற்ற டூல் பார்களை மூடிவிட்டால் ராம் மெமரியில் இடம் கிடைக்கும். கணணியும் வேகமாக இயங்கும்.
6. அடுத்தது தான் மிக முக்கியம். இந்த செயல்பாடு மேலே சொல்லப்பட்ட அனைத்தையும் உள்ளடக்கியதாகும். மாதம் ஒரு முறையாவது கணணியில் முழுமையான பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment