January 19, 2012

AA அளவுடைய மின்கலத்தி​ல் செயற்படும் SpareOne தொலைபேசிகள்​


SpareOne எனப்படும் ஒருவகை தொலைபேசிகள் AA அளவுடைய மின்கலத்தில் செயல்படக்கூடியவாறு அமைக்கப்பட்டுள்ளன.
அதாவது நாம் சாதாரணமாக பயன்படுத்தும் தொலைபேசிகளில் இவ்வகை மின்கலங்களை இணைக்க முடியாது, ஆனால் SpareOne தொலைபேசிகள் AA அளவுடைய மின்கலத்தை இணைப்பதற்கென விசேடமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் தொடர்ச்சியாக 10 மணித்தியாலங்கள் வரை பேச முடியும் என்பதுடன் இந்த மின்கலங்கள் பாவனையின்றி இருக்கும் போது அதன் ஏற்றங்கள்(Charge) குறைவடையாது, தொடர்ச்சியாக 15 வருடங்கள் வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இவ்வகை SpareOne தொலைபேசிகள் 850/1900 MHz, 900/1800 MHz போன்ற இருவேறு GSM வலையமைப்பு பதிப்புக்களில் கிடைக்கின்றன.

SendFeedback

Share/Bookmark
 

No comments:

Post a Comment