
இதனால் மென்பொருட்களை கணணியில் நிறுவி செய்யப்பட்ட வேலைகள் அனைத்தையும் இன்று ஓன்லைனில் செய்யும் வசதி கிடைத்துள்ளது.
அதற்கிணங்க Pdf கோப்புக்களை Doc கோப்புக்களாக மாற்றுவதற்கும் நாம் ஓன்லைன் தளங்களை பயன்படுத்த முடியும்.
அதற்காக தெரிவுசெய்யப்பட்ட சிறந்த ஐந்து தளங்களே இவை
1. FreePDFtoWord: இத்தளத்தில் Pdf கோப்புக்களை மட்டும் Doc கோப்புக்களாக மாற்ற முடிவதுடன், paragraph, tables போர்மட்களை எமக்கு விரும்பியவாறு மாற்றமுடியும், தேவையேற்படின் இணைக்கப்பட்டுள்ள படங்கள அகற்றிய பின் Doc கோப்பாக மாற்றவும் முடியும்.
2. PDFtoWordConverter: இத்தளத்தம் ஓன்லைனில் கோப்புக்களை மாற்றும் வசதியை கொண்டிருப்பதுடன் சோதனைப்பதிப்பு மென்பொருளையும் கொண்டிருக்கின்றது. அத்துடன் இங்கு Pdf கோப்புக்களை Doc,Text, Image, HTML போன்ற கோப்புக்களாகவும் மாற்ற முடியும்.
3. PDFOnline: இங்கு உங்களது மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கோப்புக்களை மாற்ற முடிவதுடன் மாற்றிய கோப்புக்களை தேவையான சந்தர்ப்பங்களில் மின்னஞ்சலுக்கு சென்று தரவிறக்கிக்கொள்ள முடியும். அத்துடன் இதன் சோதனைப்பதிப்பு மென்பொருளையும் பயன்படுத்திக்கொள்ள முடியும்.
4. PDFtoWord: இங்கு Pdf கோப்புக்களை Doc, Rtf கோப்புக்களாக மாற்றமுடியும். இத்தளத்திலும் மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தவேண்டும் என்பதுடன் சோதனைப்பதிப்பு மென்பொருளும் கிடைக்கின்றது.
5. ZamZar: இலவசமாக Pdf கோப்புக்களை Doc மாற்றுவதற்குரிய மிகச்சிறந்த தளமாக இது கருதப்படுகின்றது. எந்தவிதமான பதிவுகளையும் இத்தளத்தில் மேற்கொள்ள வேண்டியதில்லை எனினும் மின்னஞ்சல் முகவரி வழங்கவேண்டியது அவசியம்.
No comments:
Post a Comment