January 19, 2012

விரைவில் அறிமுகமாகும் தூக்கத்தை எடைபோடும் ஐ போன்கள்

எதிர்காலத்தில் வர இருக்கும் ஐ போன், ஜ பாட், ஐ பொட் ஆகியன அதன் பயனர்களின் தூக்கத்தை எடைபோட்டு அவர்களின் தூக்கத்தை மெருகூட்டக் கூடியனவாக இருக்கும் என்று கூறப்படுகின்றது.
இதுவரை காலமும் தூக்கத்தில் இருந்து குறித்த நேரத்தில் விழிப்படைவதற்காக தொலைபேசிகளிலுள்ள "Alarm Clock" எனும் வசதி பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் இனிவரும் காலங்களில் தூக்கத்தில் ஏற்படும் அசௌகரியங்களை நீக்கி சிறந்த தூக்கத்திற்கு திட்டமிட உதவும் "Sleep Clock" எனும் வசதி உட்புகுத்தப்பட இருக்கின்றது.
தொலைபேசியின் முற்பகுதியிலுள்ள சென்சார் மென்மையான தூக்கம், ஆழமான தூக்கம் என தூங்குபவரின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும், தூங்கும் முறைகளையும் தொலைபேசியிலுள்ள பதிவு செய்யும் கருவிக்கு அனுப்பும்.
அப்பதிவு கருவியில் பதிவு செய்யப்பட்ட தூங்கும் நேரங்களை (மணித்தியாலங்கள்) நாள், வாரம், மாதம் எனும் அடிப்படையில் ஒழுங்கு செய்யவும் முடியும் என்பது விசேட அம்சமாகும். இத்தகவல்களின் அடிப்படையில் தூக்கத்தில் ஏற்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்து நிம்மதியான தூக்கத்தை பெறமுடியும்.
ஆரம்ப கட்டமாக ஐ போன்களில் இவ்வசதி உட்புகுத்தப்பட்டு எதிர்வரும் மார்ச் மாதமளவில் விற்பனைக்கு வருகின்றது. இதன் ஆரம்பகட்ட பெறுமதி 199.95 அமெரிக்க டொலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment