January 29, 2012

சமூக தளங்களிலிரு​ந்து தரவுகளை Backup செய்வதற்கு

இன்றை காலகட்டத்தில் பல்வேறு சமூக தளங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அவற்றினூடாக மிக அவசியமான தரவு, தகவல்களும் பரிமாற்றப்பட்டு வருகின்றன.
எனினும் அவற்றினூடு பரிமாற்றப்படும் தகவல்களுக்கு எந்த உத்தரவாதமும் இல்லை. அதாவது குறித்த தகவல்களை சில சந்தர்ப்பங்களில் இழக்க நேரிடலாம். 
எனவே இவ்வகையான இழப்புக்களை தவிர்ப்பதற்கு அத்தகவல்களை Backup செய்துகொள்வதற்கு எல்லோரும் விரும்புவார்கள். அவர்களுக்காகவே ஓன்லைனில் இச்சேவையை வழங்க ஒரு இணையத்தளம் உள்ளது.
Backupify என்ற குறித்த இணையத்தளத்தின் மூலம் இலவசமாகவும், கட்டணம் செலுத்தியும் இச்சேவையை பெற்றுக்கொள்ள முடியும்.
இலவச சேவை எனின் 1GB அளவும் கட்டணம் செலுத்தப்பட்ட(premium accounts) சேவை எனின் 10-50GB இடவசதியை பெற்றுக்கொள்ளலாம். அத்துடன் இங்கு பத்திற்கு மேற்பட்ட சமூக தளங்களிலிருந்து தரவு, தகவல்களை Backup செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
செயன்முறை:
1. தளத்திற்கு சென்று புதிய கணக்கொன்றை(signup) ஆரம்பிக்கவும்.
2. கணக்கை ஆரம்பித்ததும் கீழுள்ளவாறு தோன்றும் அமைப்பில் Backup செய்ய வேண்டிய சமூக தளத்தை தெரிவு செய்து add என்பதை அழுத்தவும்.
3. அப்பொழுது குறித்த சமூகத்தளத்தில் login செய்யுமாறு கேட்கும். ஆகவே login செய்து தோன்றும் சாளரத்தில் Install என்பதை அழுத்தவும்.
4. அதன் பின் உங்களின் அனுமதியை கேட்கும் எனவே Allow என்பதை தெரிவு செய்யவும்.
5. இப்பொழுது வாரம் ஒருமுறை தகவல்கள் அனைத்தும் தானாகவே Backup செய்யப்படும்.
6. Backup செய்யப்படும் தரவுகளை மின்னஞ்சல் முகவரியை கொடுத்து நேரடியாக மின்னஞ்சலிலிருந்து தரவிறக்கம் செய்யலாம். அதற்கு கீழே படத்தில் காட்டியவாறு configure என்பதை அழுத்தவும்.
குறிப்பு: premium accounts பயனர்கள் ஆரம்பத்தில் கட்டணம் செலுத்தாது 30 நாட்கள்வரை இலவசமாக பயன்படுத்த முடியும். முப்பது நாட்டகளின் முடிவில் இச்சேவை உங்களுக்கு பிடித்திருந்தால் கட்டணம் செலுத்தி புதுப்பித்துக்கொள்ள முடியும்.

No comments:

Post a Comment