January 19, 2012

jZip: கோப்புகளை சுருக்குவதற்கு

வன்தட்டின் நினைவகத்தை கருத்தில் கொண்டும், எளிதாகப் பதிந்து எடுத்துச் செல்லவும், இணைய வழி பரிமாறிக் கொள்ளவும் நாம் கோப்புகளை சுருக்கி அமைக்கும் வழியை மேற்கொள்கிறோம்.
இதற்கு பலரும் பயன்படுத்துவது விண்ஸிப் புரோகிராம். ஆனாலும் இணையத்தில் விண்ஸிப் போல பல இலவச புரோகிராம்கள் நமக்குக் கிடைக்கின்றன.
கோப்புகளை சுருக்கி அமைப்பதில் Zip துணைப் பெயர் கொண்டு அமைக்கப்படும் கோப்புகளே அதிகம். இது 1989ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது.
காலப்போக்கில் விண்டோஸ் மற்றும் மேக் இயங்குதளங்களில் கோப்புகளைச் சுருக்கி அமைப்பதற்கும், ஏற்கனவே சுருக்கி வைக்கப்பட்ட கோப்புகளில் புதிய கோப்புகளை இணைக்கவும் வசதிகளைத் தரும் புரோகிராம்கள் சிஸ்டத்துடன் இணைத்தே தரப்பட்டன.
சிஸ்டங்களுடன் தரப்படும் இந்த வசதியில் சில கட்டுப்பாடுகள் இருந்ததனாலேயே விண்ஸிப் போன்ற புரோகிராம்கள் விருப்பப் புரோகிராம்களாக அமைந்தன. நவீன வசதிகளுடன் அவ்வப்போது மேம்படுத்தப்பட்டு இந்த புரோகிராம்கள் தரப்பட்டாலும், இவை பலர் அறியாமலேயே இருக்கின்றன.
ஜே ஸிப்(jZip): இந்த புரோகிராம் கோப்புகளைச் சுருக்க உதவுகிறது. ஸிப் துணைப் பெயர் கொண்ட கோப்பு மட்டுமின்றி, TAR, GZip, 7-Zip, RAR மற்றும் ISO ஆகிய துணைப் பெயர் கொண்ட கோப்புகளையும் இந்த புரோகிராம் கையாள்கிறது.
கோப்புகளை மிக மிகக் குறைந்த அளவில் சுருக்கித் தருவது இதன் சிறப்பு. பல இயங்குதளங்களில் பயன்படும் வகையில் இந்த புரோகிராம் கிடைக்கிறது.

No comments:

Post a Comment