January 3, 2012

அழிந்து வரும் நிலையில் மின்னஞ்சல் சேவைகள்

சமூக தளங்களின் வளர்ச்சியாலும், கைபேசிகளின் வளர்ச்சியாலும் மின்னஞ்சல் அனுப்புவது கணிசமாக குறைந்து வருவதாக தொழில்நுட்ப வல்லுனர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
உதாரணமாக ஏதேனும் பண்டிகை என்றால் நண்பர்கள் பட்டியலில் உள்ள அனைவருக்கும் தேடி தேடி மின்னஞ்சல் அனுப்புவதற்கு பதில் தற்பொழுது வாழ்த்தை சமூக தளத்தில் பகிர்ந்து விட்டால் போதும், அடுத்த நொடி அனைவரும் அந்த செய்தியை பார்த்து கொள்ளலாம்.
இதன் காரணமாக எதிர்காலத்தில் மின்னஞ்சல் சேவையே இருக்காது என சில தொழில்நுட்ப வல்லுனர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர். அப்படியே இருந்தாலும் அதன் உபயோகம் மிக மிக குறைவாக இருக்கும் எனவும் கூறி உள்ளனர்.
மின்னஞ்சல் குறித்த தகவல்கள்:
1. உலகில் 290 கோடி மின்னஞ்சல் கணக்குகள் உள்ளது.
2. ஒருநாளைக்கு சராசரியாக 18,800 கோடி தகவல்கள் அனுப்பப்படுகிறது. பேஸ்புக்கில் 6 கோடி தகவல்களும், ட்விட்டரில் 14 கோடி ட்வீட் பதிவேற்றம் செய்யப்படுகிறது.
3. கடந்த 2010ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 107 ட்ரில்லியன் மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டுள்ளது. ஒரு வினாடிக்கு 3,392,948 மின்னஞ்சல்கள் அனுப்பட்டுள்ளது. இது 2009ம் ஆண்டை காட்டிலும் 19% அதிகமாகும். இதில் 45% ஸ்பாம் மின்னஞ்சல்களாகும்.
4. ஸ்பாம் மின்னஞ்சல்களை உருவாக்குவதில் முதல் இடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் கொரியாவும் உள்ளது.

No comments:

Post a Comment