March 10, 2012

புதிய ஐபேட்3 அறிமுகம் (வீடியோ இணைப்பு)

புதிய ஐபேட்3யை ஆப்பிள் நிறுவனத்தின் தலைவர் டிக் கும் அறிமுகப்படுத்தினார். இந்த ஐபேட் உயர் வரையறை தொலைக்காட்சியை விட நான்கு மடங்கு வேகமாகவும், 3D திறனும் கொண்டதாகும்.
இதன் மூலமாக ஐபேடில்  3D விளையாட்டுக்களை விளையாடலாம். இதில் படங்களை மிகத்தெளிவாகவும், துல்லியமாகவும் பார்க்க முடியும்.
ஆப்பிள் ஐபேட்-3 ன் சிறப்பு அம்சங்கள்:
1. 5 மெகா பிக்சல் கமெரா.
2. 2084x1536 ரெசொல்யூஷன்.
3. ரெட்டினா டிஸ்ப்ளே கொண்ட திரை.
4. 40 இன்ச் தொலைக்காட்சியைவிட துல்லியமான திரை.
5. 3D விளயாட்டுக்கள்.
6. 4G மொபைல் நெட்வொர்க்குகள்.
7. 16ஜிபி நினைவகம்.
8. இணையத்திற்கு மட்டுமேயான பிரத்யேக Wifi வசதியை கொண்டுள்ளது.
இந்த ஐபேட் எதிர்வரும் மார்ச் மாதம் 16ம் திகதி முதல் அமெரிக்கா, ஜேர்மனி, பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் கனடா ஆகிய நாடுகளில் விற்பனைக்கு வரும்.
கடந்த வருடம் அறிமுகம் செய்யப்பட்ட ஐபேட் 2-யின் அதே விலையில் ஐபேட்- 3யும் கிடைக்கும் என கூறப்படுகிறது.
கடந்த ஆண்டில் ஆப்பிள் நிறுவனம் 9.25 மில்லியன் ஐபேட்களை விற்பனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment