March 15, 2012

Sony நிறுவனத்தி​ன் Xperia sola துல்லியமான தொடுதிரை வசதிகொண்ட போன்கள்

இலத்திரனியல் பொருட்களை உற்பத்திசெய்து உலக மக்களின் நம்பிக்கையை வென்ற சொனி நிறுவனமாது Sony Xperia sola என்ற புதிய தொடுதிரை வசதிகொண்ட ஸமார்ட் போன்களை உற்பத்திசெய்துள்ளது.
இக் கைபேசியின் தொடுதிரையானது மிகத்துல்லியமான உணர்திறன் உடையது. அதாவது சாதாரண விரல்களைப்பயன்படுத்தி தொடுதிரையை இயக்குவது போன்று கையுறைகளை அணிந்து கொண்டும் மிக எளிதாக கையாளலாம்.
அடுத்த மாதத்திற்கு முன்னர் அறிமுகப்படுத்தப்படவுள்ள இந்த கைபேசி 2G,3G வசதியை கொண்டிருப்பதுடன் 5 மெகாபிக்சல் கமெரா, 8GBஉள்ளக நினைவகத்தையும், 512MB பிரதான நினைவகத்தையும் கொண்டுள்ளது.
இவற்றுடன் Wi-Fi 802.11 b/g/n, DLNA, Wi-Fi hotspot ஆகிய வசதிகளை உள்ளடக்கியதாக காணப்படுகின்றது. இவை Android OS, v2.3 இயங்குதளத்தை கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment