March 3, 2012

உங்களது பென் டிரைவின் தரத்தை சோதிப்பதற்கு

இன்றைய கணணி உலகத்தில் தகவல்களை சேமித்து வைத்துக் கொள்வதற்கு USB கருவிகளான பென் டிரைவ், மெமரி கார்டு போன்றவை அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன.
இவை குறிப்பிட்ட காலம் செயல்பட்ட பின் தானாகவே இயக்கத்தை நிறுத்திக் கொள்கின்றன. சிலருக்கோ தாங்கள் வாங்கிய பென் டிரைவ் தரமானதா அல்லது போலியானதா என்று கண்டறியத் தெரியாது.
அதே போன்று தற்போது நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் பென் டிரைவ் பழுதாயிருக்கிறதா என்றும் கண்டுபிடிக்க முடியாது.
பென் டிரைவ் மற்றும் ஏனைய USB கருவிகளின் தரத்தைச் சோதிக்க ChkFlsh என்ற இலவச மென்பொருள் இணையத்தில் கிடைக்கிறது. இதனால் நமது பென் டிரைவ் தரமாக உள்ளதா என்றும் தெரிந்து கொள்ளலாம்.
பென் டிரைவை சோதிப்பதற்கு முதலில் இந்த மென்பொருளைத் தரவிறக்கி ChkFlsh என்ற கோப்பை கிளிக் செய்யவும்.
பின்னர் உங்கள் பென் டிரைவை கணணியில் சொருகவும். பென் டிரைவில் உள்ள தகவல்களை அழித்து விட்டு சோதிக்கப் பயன்படுத்துவது நலமானது.
இதில் 3 வகையான Access Typeகள் இருக்கின்றன. Use Temporary file என்பதைக் கிளிக் செய்வதன் மூலம் Write and Read சோதனையைச் செய்ய முடியும்.
உங்கள் பென் டிரைவில் ஏதேனும் தகவல்கள் இருந்து Read Test மட்டுமே மேற்கொள்ள வேண்டும் எனில் As Logical Drive என்பதைக் கிளிக் செய்து கொள்ளவும்.
Test Length என்பதில் One Full Cycle என்பதைத் தெரிவு செய்யவும். பின்னர் Start கொடுத்தால் பென் டிரைவ் சோதிக்கப்படும்.
இறுதியல் பச்சை வண்ணத்தில் காண்பிக்கப்பட்டால் உங்களது பென் டிரைவில் எவ்வித பிரச்னையும் இல்லை என அறிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment