March 12, 2012

தேவைக்கு ஏற்ப ரீசைக்கிள் பின்னின் அளவினை மாற்றுவதற்கு

நமது கணணியில் உள்ள டிரைவின் அளவிற்கு ஏற்ப நாம் ரீசைக்கிள் பின்னை அமைத்துக் கொள்ளலாம்.
இதனை தெரிவு செய்ய ரீ-சைக்கிள் பின்னை ரைட் கிளிக் செய்து Properties தெரிவு செய்து கொள்ளுங்கள். உங்களுக்கு ஓபன் ஆகும் விண்டோவில் Global தெரிவு செய்யவும்.
எல்லா டிரைவ்விற்கும் ஒரே அளவிளான ரீ -சைக்கிள் பின் வைக்க வேண்டும் என்றால் Use one settings for all drives எதிரில் உள்ள ரேடியோ பட்டனை தெரிவு செய்யுங்கள். உங்களுக்கு தேவையான டிரைவிற்கு ஏற்ப அளவினை தெரிவு செய்ய Configuare drives independently எதிரில் உள்ள ரேடியோ பட்டனை கிளிக் செய்யுங்கள்.
பின் ஓபன் ஆகும் விண்டோவில் உங்களது கணணியில் உள்ள டிரைவ்கள் இருக்கும். தேவையான டிரைவ்வை தெரிவு செய்து தேவையான அளவினை ஸ்லைடர் மூலம் நிர்ணயிக்கலாம்.
இறுதியாக Apply செய்து Ok கொடுக்கவும். நாம் பொதுவாக ரீ-சைக்கிள் பின் அனைத்து டிரைவ்விற்கும் சேர்த்து ஒன்றாக இருக்கும் என நினைத்துக் கொண்டிருப்போம். ஆனால் அதிலும் ஒவ்வொரு டிரைவ்விற்கு ஏற்ப அளவினை நாமே அமைத்துக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment