
வீடியோ லேன் ப்ராஜக்ட் நிறுவனத்தின் மிகப் பிரபலமான இந்த புரோகிராமின் புதிய பதிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
இதில் அதிகமான எண்ணிக்கையில் புதிய வசதிகள் தரப்பட்டுள்ளன. பல பிரச்னைக்குரிய தவறுகள் திருத்தப்பட்டுள்ளன என்று இதனை வெளியிட்ட நிறுவனம் அறிவித்துள்ளது.
மற்ற வீடியோ பிளேயர் புரோகிராம்களுடன் ஒப்பிடுகையில், எந்த போர்மட்டில் உள்ள வீடியோ கோப்பையும் இயக்கும் திறன் கொண்டது வி.எல்.சி. பிளேயர்.
இந்த புதிய பதிப்பு முதலில் Twoflower என்ற குறியீட்டுப் பெயருடன் உருவாக்கப்பட்டது. தற்போது VLC 2.0 என்ற பெயருடன் வெளியாகியுள்ளது. இதில் தரப்பட்டுள்ள புதிய வசதிகள் கீழே குறிக்கப்பட்டுள்ளன.
1. புதிய மல்ட்டி கோர் சிப்களின் வேகத்திறனை அறிந்து செயல்படுகிறது. அதே போல புதிய வன்பொருள் சாதனங்களையும் புரிந்து இயங்குகிறது
2. கூடுதலாக சில போர்மட்களையும் இயக்குகிறது. குறிப்பாக தொழில் ரீதியாகத் தயாரிக்கப்படும் HD மற்றும் 10bits codecs போர்மட்களைக் கையாள்கிறது.
3. வீடியோவிற்கென புதிய வழி தரப்படுகிறது. சப் டைட்டில் நல்ல தன்மையுடன் கிடைக்கிறது.
4. புளு ரே டிஸ்க் சப்போர்ட் சோதனை முறையில் கிடைக்கிறது.
5. மேக் கணணி மற்றும் வெப் இன்டர்பேஸ்கள் திறம்பட கையாளப்படுகின்றன.
6. விண்டோஸ் பதிப்பில் தரப்படும் இடை முகத்தில்(InterFace) பல புதிய மாற்றங்கள் உள்ளன. மேக் கணணிக்கான இடைமுகம் முற்றிலும் புதிய முறையில் மாற்றப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment