March 3, 2012

ஜிமெயிலின் Sidebar ல் கூகுள் காலண்டர், கூகுள் டொக்ஸ் போன்றவற்றை இணைப்பதற்கு

மின்னஞ்சல் வசதிகளை வழங்குவதில் பிரபல்யமான ஜிமெயில் அவற்றுடன் பயனுடைய வேறு பல வசதிகளையும் வழங்குகின்றது.
இதன் அடிப்டையில் கூகுளின் அம்சங்களான கூகுள் காலண்டர், கூகுள் டொக்ஸ் ஆகியவற்றையும் இணைத்து பயன்படுத்தும் வசதியையும் ஜிமெயிலில் தரப்பட்டுள்ளது.
மறைந்திருக்கும் வசதிகளை செயற்படுத்துவதற்கு கீழ்வரும் படிமுறைகளை பின்பற்றுக.
1. ஜிமெயிலுக்கான உங்கள் பயனர் பெயர், கடவுச்சொல் கொடுத்து லொகின் செய்யவும்.
2. அங்கு காணப்படும் Gmail Account என்பதில் Mail Settingsஐ திறக்கவும்.
3. Mail Settings என்பதில் காணப்படும் Labs என்பதனை தெரிவு செய்யவும்.
4. தற்போது குறித்த விண்டோவின் கீழ்ப்பகுதிக்கு செல்லும் போது Google Calendar Gadget, Google Docs Gadget ஆகிய இரண்டும் காணப்படும்.
5. அதற்கு நேரே காணப்படும் பட்டன்களில்  Enable என்பதை தெரிவு செய்து Save Changesஐ தெரிவு செய்யவும்.
6. இப்போது உங்கள் ஜிமெயிலின் Sidebarல் கூகுள் காலண்டர், கூகுள் டொக்ஸ் ஆகியவை இணைக்கப்பட்டிருக்கும். தற்போது உங்கள் கணக்கினை ஒருமுறை  Refresh செய்துவிட்டு புதிய நிகழ்ச்சிகளை சேர்த்துக் கொள்ள முடியும் அத்துடன் கோப்புக்களையும் சேர்க்க முடியும்.

No comments:

Post a Comment