
இதனை பயன்படுத்துவதற்கான தேவை நம்மில் அநேகருக்கு இருந்திருக்காது, அவ்வாறு தேவை ஏற்படும் போது நாம் தேடி அறிந்து கொள்ள இதனைப் பயன்படுத்தலாம்.
இந்த செயல்பாடு, ஒரு செட் எண்கள் அல்லது எழுத்துக்கள் அல்லது இரண்டையும் கலந்தவற்றைக் கொண்டு எத்தனை வகையாக இணைக்கலாம் என்பதனை உடனே காட்டும். எடுத்துக்காட்டாக 26 எழுத்துக்கள் ஆங்கிலத்தில் உள்ளன.
10 எண்கள் உள்ளன. (0 முதல் 9 வரை) இவற்றைப் பயன்படுத்தி நான்கு கேரக்டர்கள் உள்ள இணைப்புகள் எத்தனை உருவாக்க முடியும். நாம் பேப்பர் பேனா எடுத்துக் கொண்டால் இன்று மட்டுமல்ல ஒரு வாரத்திற்கு மேல் ஆகலாம். எக்ஸெல் கண் சிமிட்டும் நேரத்தில் சொல்லிவிடும். அதற்கு இந்த பங்சன் உதவுகிறது.
இந்த செயல்பாட்டை செயல்படுத்த பார்முலா பார்மட் கீழ்க்கண்டவாறு அமைகிறது =COMBIN (universe, sets). இதில் universe என்பது புதிதாக அமைக்கப்படுவதற்கான டேட்டா. இங்கே 26 எழுத்துக்களும் பத்து எண்களுமாகும்.
sets என்பது ஒவ்வொரு இணப்பிலும் எத்தனை கேரக்டர் இருக்க வேண்டும் என்பதனைக் குறிக்கிறது. எனவே நாம் மேலே சொன்ன டேட்டாவிற்கு பார்முலா கீழ்க்கண்டவாறு அமைகிறது : =COMBIN(26+10,4). இதில் 58,905 இணைப்பு கேரக்டர் களை உருவாக்கலாம்.
No comments:
Post a Comment