December 13, 2011

பிளாக்பெரி நிறுவனத்தின் இலவச அப்ளிகேஷன்கள்

ரீசர்ச் இன் மோஷன் நிறுவனம் அதன் பிளாக்பெரி கைபேசி வாடிக்கையாளர்களுக்கு 100 டொலர் மதிப்புள்ள அப்ளிகேஷன்களை இலவசமாக பதிவிறக்கிக் கொள்ளும் வசதியை வழங்கியுள்ளது.
இது குறித்து இந்நிறுவனத்தின் இந்திய பிரிவின் தலைவர்(கூட்டு திட்டங்கள்) அன்னி மேத்யூ, மேலாளர்(சாதனங்கள் பிரிவு) ரன்ஜன் மோசஸ் ஆகியோர் கூறியதாவது: கடந்த சில நாட்களுக்கு முன் இந்தியா, ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள், ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பிளாக்பெரி கைபேசி சேவை பாதிக்கப்பட்டது.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏற்பட்ட இந்த பாதிப்பு மூன்று நாட்களுக்கு நீடித்தது. தற்போது மீண்டும் தொலைதொடர்பு சேவை இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.
நெருக்கடியான நேரத்தில், பொறுமை காத்த பிளாக்பெரி வாடிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக விளையாட்டு, வர்த்தகம் என பல்வேறு துறைகள் சார்ந்த அப்ளிகேஷன்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன.
டிசம்பர் இறுதி வரை இந்த சலுகையை பயன்படுத்திக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment