December 15, 2011

கணணி பற்றிய முழு விவரங்களையும் அறிந்து கொள்வதற்கு

கணணியை பயன்படுத்தும் அனைவருக்கும் கணணியை பற்றிய முழுமையான தகவல்கள் அனைத்தும் தெரிந்திடாது.
ஒரு சிலருக்கு தன்னுடைய கணணியில் என்னென்ன வன்பொருள்கள் மற்றும் மென்பொருள்கள் இருக்கின்றன என்று தெரியாது.
ஒரு சில நேரங்களில் தன்னுடைய நண்பர்கள் அவர்களுடைய கணணியை பற்றி கேட்பார்கள் அப்போதுதான் அவசரம் அவசரமாக தன்னுடைய கணணியில் என்னென்ன இருக்கின்றன என்று ஆராய்ந்து பார்ப்போம்.
இவற்றை நாம் தெளிவாகவும் காண முடியாது. விவரங்கள் அனைத்தும் ஒரே இடத்திலும் கிடைக்காது. இதுபோன்ற சிக்கல்களை தீர்க்கவும், கணணியை பற்றிய முழுவிவரங்களையும் அறிய ஒரு இலவச மென்பொருள் உதவி செய்கிறது.
மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கணணியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த மென்பொருளை ஒப்பன் செய்யவும். இதில் தனித்தனி பகுதிகள் உள்ளன.
அதன்படி கணணியில் என்னென்ன வன்பொருள் மற்றும் மென்பொருள்கள் உள்ளன என்பதை மிகவும் தெளிவாக காண முடியும். மிகவும் துல்லியமாக கணணியின் விவரங்களை காண முடியும்.

No comments:

Post a Comment