
ஓர் உணவு விடுதிக்குச் செல்லும் போது உங்களது தொலைபேசி சிணுங்கி ஒத்த ஈடுபாட்டுடன் உள்ள ஒருவர் எங்கு இருப்பார் என்று தெரிவித்தால் எப்படியிருக்கும்.
இது கற்பனையல்ல. உங்களுக்குப் பொருத்தமானவர்கள் எங்கு கூடுவார்கள் என்பதைத் தெரிவிக்கும் தொலைபேசிகள் விரைவில் அனைவரின் கையிலும் கிடைக்கும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
இது இந்து சாஸ்திரவியலின் சமஸ்கிரதச் சொல்லான ஜோதிடம் என்பதிலிருந்து உருவான Jyotish என்று அழைக்கப்படுகின்றது. இந்த மென்பொருள் பத்து மீற்றர்களுக்குள் உள்ள wi-fi மற்றும் Bluetooth தொடர்புகளைத் தடந்தொடர்வதினால் ஒருவரின் நகர்வுகளை வரைபடமாக்குகின்றது.
இறுதியில் இது அவர்களது அடையாளத்தையும் சமூகப் பக்கங்களின் விபரங்களையும் கொண்டு ஒருவருக்குப் பொருத்தமான நபரை அல்லது தொழில் உதவியாளரைத் தெரிவுசெய்ய உதவும் என்கின்றனர்.
இந்த மென்பொருள் போயிங் விஞ்ஞானிகளால் அவர்களது பாரிய விமானத் தொழிற்சாலைகளில் வேலைசெய்பவர்களின் நகர்வுகளைக் கண்காணிப்பதற்காக உருவாக்கப்பட்டது.
இதில் 79 பேரில் அவர்களது விருப்பத்திற்கிணங்க இப்பரிசோதனையை Android தொலைபேசிகளில் செய்துபார்த்தனர். இது ஒருவரது Facebook நகர்வுகளைக் கண்டுபிடித்து ஏனையவர்களிடம் கூறியது.
ஆனால் இதில் தனிப்பட்ட இரகசியங்கள் எதற்கும் குந்தகம் வராது என்பதை பிரபல பல்கலைக்கழக கணணி விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
No comments:
Post a Comment