December 31, 2011

ஜிமெயில் அரட்டை பெட்டியினை நீக்குவதற்கு

மின்னஞ்சல் சேவையில் முன்னணியில் இருக்கும் நிறுவனம் கூகுள் ஆகும். இதனுடைய மின்னஞ்சல் சேவை ஜிமெயில் மூலமாக இலவசமாக வழங்கப்படுகிறது.
இதில் பல்வேறு வசதிகளை நாம் பெற முடியும், உதாரணமாக நீங்கள் ஜிமெயிலில் இருந்தவாறே அரட்டை அடிப்பது, கூகுள் டாக்ஸ்யை பார்வையிடுவது, மேலும் குறுந்தகவல் அனுப்புவது போன்ற வசதிகளையும் நீங்கள் பெற முடியும்.
இதில் அரட்டை வசதி மூலம் உங்கள் நண்பர்களுடன் அரட்டை அடிக்க முடியும். இதற்கென ஜிடால்க் என்னும் தூதன்(Messenger) உள்ளது. ஜிமெயிலில் இருக்கும் போது நாம் முக்கியமான அலுவல்களை செய்து கொண்டு இருப்போம்.
அப்போது இந்த அரட்டை வசதியின் மூலமாக இணைய நண்பர்கள் உங்களை தொந்தரவு செய்யலாம், இது நம்மை எரிச்சலூட்டும், இதனை தடுக்க அரட்டை பெட்டியினை தற்காலிகமாக மூடி வைத்துக்கொள்ள முடியும். இதற்கு ஜிமெயிலிலேயே வசதி உள்ளது.
முதலில் உங்களுடைய ஜிமெயில் கணக்கில் நுழைந்து கொள்ளவும் பின் Mail Setting செல்லவும்.
அதில் Chat என்னும் டேப்பினை தெரிவு செய்யவும். பின் Chat off என்னும் ரேடியோ பொத்தானை தெரிவு செய்து Save Change என்னும் பொத்தானை அழுத்தி சேமித்துக் கொள்ளவும்
தற்போது உங்களுடைய ஜிமெயில் கணக்கு தானாகவே மறுதொடக்கம் ஆகும். தற்போது உங்களுடைய ஜிமெயிலில் அரட்டை பெட்டி மூடப்பட்டு இருக்கும். மீண்டும் இந்த அரட்டை பெட்டி தேவையெனில் Chat On என்னும் ரேடியோ பொத்தானை தெரிவு செய்து உங்கள் கணக்கை சேமித்துக் கொள்ளவும்.

No comments:

Post a Comment