December 9, 2011

ஆப்பராவை Default உலாவியாக செட் செய்வதற்கு

          1996 லிருந்து தனது சேவையை வழங்கிவரும் ஆப்பரா முதலில் விண்டோஸ் இயங்குதளத்தில் மட்டுமே இயங்கக்கூடியதாக இருந்தது.
பின் 2000 லிருந்து மற்ற இயங்குதளத்திலும் இயங்கும் வகையில் வெளிவரத் தொடங்கியது. உலாவி பயனர்களில் சுமார் 4% மக்கள் பயன்படுத்தி வரும் ஆப்பரா, உக்ரைன் போன்ற நாடுகளில் மிகவும் பிரபலமானதொரு உலாவி ஆகும்.
ஆப்பரா கைப்பேசிகளுக்கும் மினி ஆப்பரா என்ற பெயரில் கிடைக்கிறது. உலக அளவில் ஆப்பரா உலாவி பயனர்கள் எண்ணிக்கை 200 மில்லியனை தொட்டுவிட்டதாக(கைப்பேசி உலாவிகளையும் சேர்த்து) சமீபத்திய ஆய்வறிக்கை கூறுகிறது.
ஆப்பராவை default ஆக செட் செய்வதற்கு முதலில் ஆப்பராவை திறங்கள். பொதுவாக ஆப்பராவை திறக்கும் போதே, default ஆக இல்லாத நிலையில் default ஆக செட் செய்யவா என உங்களிடம் அனுமதி கேட்கும். "Yes" எனும் பட்டனை அழுத்தி இங்கேயே செட் செய்து கொள்ளலாம்.
தெரியாமல் No பட்டனை அழுத்திவிட்டால், வருத்தப்பட தேவையில்லை, ஆப்பரா மெனுவிலிருந்தே எளிதாக செட் செய்யலாம்.
இடது மேல் மூலையில் உள்ள ஆப்பரா மெனுவில் அழுத்த தெரிவுகள் தோன்றும். இதை ALT கீயை அழுத்தியும் பெறலாம்.
இதில் Settings என்பதில் கர்சரை வைக்க வலது புறம் தோன்றும் முதல் தெரிவான Preference என்பதை தேர்ந்தெடுங்கள்.
Preference விண்டோவானது CTRL + 12 அழுத்த நேரடியாகவும் தோன்றும்.
Preference விண்டோவில் Advanced பிரிவில் Programs என்பதை தேர்ந்தெடுங்கள்.
இந்த பிரிவில் உள்ள details கீயை அழுத்துங்கள்.
இங்கு உங்கள் கணணியில் உள்ள நீட்சிகளையும்(extensions) அதன் default புரோகிராம்களும் பட்டியலிடப்படும். இதில் உள்ள Select All என்பதை தேர்ந்தெடுத்து Save செய்ய அனைத்து நீட்சிகளுக்கான default அப்ளிகேஷனாக ஆப்பரா செட் செய்யப்படும். (குறிப்பு: Save All தேர்ந்தெடுக்க jpg, jpeg நீட்சிகளும் ஆப்பராவிலே திறக்கும், இதை தவிர்க்க தற்போது default ஆக உள்ள உலாவி செட் செய்யப்பட்டிருக்கும் நீட்சிகளை மட்டும்( .htm, .html போன்ற) தேர்ந்தெடுத்து Save செய்யவும்). இனி ஆப்பராவை default உலவியாக உபயோகித்து மகிழலாம்.

No comments:

Post a Comment