
இவை தேவைப்படாதவர்கள், இது எதற்கு ஸ்டார்ட் மெனுவில்? என்று கவலைப்படுவார்கள். கேம்ஸ் வேண்டுமென்றால் ஆல் புரோகிராம்ஸ் சென்று தேவையானதைத் தேர்ந்தெடுத்து இயக்கலாமே! என்று எண்ணுவார்கள். எனவே ஸ்டார்ட் மெனுவில் இருந்து இவற்றை நீக்கும் வழிகளை இங்கு காணலாம்.
ஸ்டார்ட் மெனு சென்று சர்ச் பாக்ஸில் AllUsersProfile-> MicrosoftWindowsStart Menu என டைப் செய்து என்டர் தட்டவும். இப்போது ஸ்டார்ட் மெனுவில் உள்ளவை லோட் செய்யப்படும்.
இந்த இடத்தில் தான் விண்டோஸ் 7 அனைத்து பயனாளர்களுக்குமான புரோகிராம்களின் ஷார்ட்கட் அமைப்பினைப் பதிந்து வைக்கிறது.
விண்டோஸ் 7 உங்களிடம் இந்த ஷார்ட்கட் கீகளை ஒருவருக்கா அல்லது அனைத்து பயனாளர்களுக்கும் வைத்துக் கொள்ளவா? என்று கேட்கும்.
விண்டோஸ் கேம்ஸ்களுக்கான ஷார்ட்கட் அனைவருக்குமாக வைக்கப்பட்டிருக்கும். பின்னர் என்டர் தட்டியவுடன் விண்டோஸ் எக்ஸ்புளோரர் திறக்கப்படும். இதில் Programs என்ற கோப்பறையில் டபுள் கிளிக் செய்திடவும்.
All Programs என்பதன் கீழ் உள்ள அனைத்து புரோகிராம்களும் பட்டியலிடப்படும். இதில் Games என்ற கோப்பறைக்குச் செல்லவும். அதில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் Cut என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
பின்னர் இந்த கோப்பறையை டெஸ்க்டாப் அல்லது டெஸ்க்டாப் உள்ளாக ஏதேனும் ஒரு போல்டருக்குள் வைக்கவும். இனி கேம்ஸ் கோப்பறை விண்டோஸ் 7 ஸ்டார்ட் மெனுவில் இனிமேல் கிடைக்காது.

No comments:
Post a Comment