February 27, 2012

மின்னஞ்சல் மூலம் கோப்பின் போர்மட்டை மாற்றுவதற்கு

எம்.எஸ். ஆபீஸ் 2003 பதிப்பை இன்னும் தொடர்ந்து பயன்படுத்தி வருபவர்கள் தற்போது பரவலாகத் தொடங்கி இருக்கும் எம்.எஸ். ஆபீஸ் 2007, மற்றும் 2010 தொகுப்புகளில் உருவான கோப்புகள் கிடைத்தால் திறந்து பார்க்க இயலாமல் சிரமப்படுவார்கள்.
ஏனென்றால் மாறா நிலையில் இந்த புதிய தொகுப்புகள் ஆபீஸ் 2003 தொகுப்பினால் திறந்து படிக்க இயலாத பார்மட்டில் உருவாக்குகின்றன.
எடுத்துக்காட்டாக வேர்ட் 2003 தொகுப்பில் doc என்ற பார்மட்டில் டாகுமெண்ட்கள் சேவ் செய்யப்படுகின்றன. ஆனால் வேர்ட் 2007 மற்றும் 2010ல் இவை docx என்ற பார்மட்டில் சேவ் செய்யப்படுகின்றன.
இதே போல் பவர்பாய்ண்ட் மற்றும் எக்ஸெல் பைல்களும் புதிய பார்மட்டில் கிடைக்கின்றன. இவற்றை எம்.எஸ். ஆபீஸ் 2003 தொகுப்பில் திறந்து படிக்க மீண்டும் இவற்றை புதிய பதிப்பு புரோகிராம்களில் திறந்து பின்னர் Save அண் கட்டளை கொடுத்து கிடைக்கும் டயலாக் பாக்ஸில் வேர்ட் 2003 பிரிவினைத் தேர்ந்தெடுத்து அமைக்க வேண்டும்.
எம்.எஸ். ஆபீஸ் தொகுப்புகளைப் பொறுத்த வரை இன்னும் ஆபீஸ் 2003 தொகுப்பு தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவே இந்தப் பிரச்னைகளுக்கு ஆளாகின்றவர்களுக்கு உதவ இணையத்தில் பல தளங்கள் இலவசமாக இந்த பார்மட் மாற்றத்திற்கு உதவுகின்றன.
இவற்றில் மிகச் சிறப்பான முறையில் வேகமாக மாற்றித் தர www.zamzar.com என்ற தளம் உதவி புரிகிறது. இந்த தளத்தில் நுழைந்து மாற்ற வேண்டிய பைலைத் தேர்ந்தெடுத்து அப்லோட் செய்தால் பைல் பார்மட் மாற்றப்பட்டவுடன் நாம் தரும் மின்னஞ்சல் முகவரிக்கு பார்மட் மாற்றப் பட்ட பைலை டவுண்லோட் செய்திட லிங்க் கிடைக்கும். இந்த லிங்க்கில் கிளிக் செய்து, பார்மட் மாறிய பைலை டவுண்லோட் செய்து பயன்படுத்தலாம்.
இப்போது இந்த தளம் இன்னும் ஒரு வசதியைத் தருகிறது. மின்னஞ்சல் வழியாக நாம் பார்மட் மாற்ற வேண்டிய பைல்களை அனுப்பினால் அவை ஏற்றுக் கொள்ளப்பட்டு மாற்றப்பட்டு மீண்டும் மின் அஞ்சல் முகவரிக்கு, லிங்க் அனுப்பப்படுகிறது. இந்த தளம் சென்று, பைல்களை அப்லோட் செய்திடத் தேவை இல்லை.
எந்த வகை பார்மட்டினை மாற்ற வேண்டுமோ அதனை ஒட்டி இதற்கான மின்ன்னஞ்சல் முகவரி தரப்படுகிறது. எடுத்துக்காட்டாக மாற்றபட வேண்டியது டாகுமெண்ட் பைல் எனில், doc@zamzar.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பி.டி.எப். பைலை டாகுமெண்ட் பைலாக மாற்ற வேண்டும் என்றாலும், இதே முகவரிக்கு அனுப்பலாம். ஒரே மின்னஞ்சலில் பல பைல்களை அனுப்பலாம். ஒரு பைலை பல்வேறு பார்மட்டுகளில் மாற்ற வேண்டும் என்றால், மின்னஞ்சல் முகவரி கட்டத்தில் இதற்கான முகவரிகளை வரிசையாக அமைக்க வேண்டும்.
எடுத்துக்காட்டாக ஒரு பி.எம்.பி. பைலை ஜேபெக் பார்மட்டில் ஒரு பைலாகவும், ஜிப் பார்மட்டில் ஒரு பைலாகவும் மாற்ற வேண்டி இருந்தால் அந்த பி.எம்.பி. பைலை jpg@zamzar.com, gif@zamzar.com என இரு முகவரிகளை இட்டு அனுப்ப வேண்டும்.
இதில் ஒரு வரையறை உண்டு. பைல் ஒன்றின் அளவு 1 எம்பிக்குள் இருக்க வேண்டும். அதற்கு மேலாக பெரிய பைலாக இருந்தால் கட்டணம் செலுத்தி மட்டுமே பார்மட் மாற்றிப் பெற முடியும்.
iPhone, iPad, Android or Blackberry ஆகிய சாதனங்களில் மின்னஞ்சல் அனுப்பும் வசதி இருந்தால் அவை வழியாகவும் பைலை அனுப்பி மாற்றிப் பெற்றுக் கொள்ளலாம்.
இதன் மூலம் குறிப்பிட்ட வீடியோ பைல் மேலே கூறப்பட்ட சாதனங்களில் பார்க்க இயலாத பார்மட்டில் இருந்தால் மின்னஞ்சல் மூலம் அனுப்பி சாதனங்களில் பார்க்கும் வகையில் மாற்றிப் பெறலாம்.
இது குறித்து மேலும் தகவல்கள் தேவைப்படுவோர் www.zamzar.com என்ற தளத்தில் உள்ள FAQ பக்கத்தில் தேடிப் பெறலாம்.

No comments:

Post a Comment