February 11, 2012

அப்பிளின் மூன்றாம் தலைமுறை ஐபாட்கள்

கணணி உலகில் ஜாம்பவனாக திகழும் அப்பிள் நிறுவனமானது மூன்றாம் தலைமுறை ஐபாட்களை வெளியிட எண்ணியுள்ளது.
இவை இதற்கு முன்னர் அறிமுகப்படுத்தப்பட்ட ஐபாட்களை விட மிகவும் துலங்கல் வேகம் உடையனவாகவும், வினைத்திறன் கூடியவையாகவும் அமைக்கப்பட்டுள்ளதுடன், விழித்திரை போன்ற செயற்பாட்டை உடைய தொழில்நுட்பத்தையும் இப்புதிய ஐபாட்களின் திரைகளில் அறிமுகம் செய்யப்படவுள்ளன.
இதனால் கிராபிக்ஸின் தரம் கூடுதலாக இருக்கும் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளது. இவை தவிர இப்புதிய ஐபாட்டில் வழமையை விட மிகவும் பெரிய பற்றரிகள் பயன்படுத்தப்படவுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தியோக பூர்வமாக அறிமுகப்படுத்தப்படும் திகதி அறிவிக்கப்படாத போதிலும் எதிர்வரும் மார்ச் மாதம் அளவில் விற்பனைக்கு வரவுள்ளதாக உறுதியற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான மாநாடு ஒன்றும் மார்ச் மாதத்தின் முதல் வாரங்களில் சன் பிரான்சிஸ்கோவில் இடம்பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment