February 17, 2012

பேஸ்புக்கின் புதிய Photo Viewer-ஐ மாற்றுவதற்கு

சமூக தளங்களுக்குள் போட்டி போடும் கூகுள் பிளஸ் மற்றும் பேஸ்புக் பயனாளர்களுக்கு புதுப்புது வசதிகளை அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கின்றது.
தற்போது பேஸ்புக் தளத்தில் புதிய Photo Viewer-ஐ அறிமுகப்படுத்தி உள்ளனர். இப்பொழுது பேஸ்புக்கில் ஏதாவது ஒரு புகைப்படத்தை ஓபன் செய்தால் சைட்பாருடன் கூடிய Pop-up விண்டோவில் புதிய Photo Viewer ஓபன் ஆகும்.
Lightbox வசதியில் புகைப்படம் ஓபன் ஆவதால் திறக்க அதிக நேரம் எடுத்து கொள்வதாலும், பழையதை பார்த்து பழகி போனவர்களுக்கு புதிய வசதி பிடிக்காததாலும் இந்த புதிய Photo Viewer-ஐ செயலிழக்க செய்யலாம்.
1. இதற்கு முதலில் பேஸ்புக்கில் ஒரு புகைப்படத்தை ஓபன் செய்யுங்கள். அந்த புகைப்படம் பாப்-அப் விண்டோவில் புதிய photo Viewer தோற்றத்தில் ஓபன் ஆகி இருக்கும்.
இப்பொழுது அந்த இணைய பக்கத்தை பக்கத்தை Refresh அல்லது கீபோர்டில் F5 கொடுக்கவும். அந்த இணைய பக்கம் refresh ஆகி பழைய Classic Photo Viewer-ல் ஓபன் ஆகி இருப்பதை காணலாம்.
2. புதிய Photo Viewer-ல் புகைப்படம் ஓபன் ஆகியதும் பிரவுசர் URL ல் உள்ள &theatre என்பதை அழித்து கீபோர்டில் Enter அழுத்துங்கள், பழைய தோற்றத்தில் புகைப்படம் ஓபன் ஆவதை காணலாம்.
3. மேலே உள்ள இரண்டையும் விட இது சுலபமான வழி. பேஸ்புக்கில் ஏதாவது ஒரு புகைப்படத்தை ஓபன் செய்வதற்கு முன் உங்கள் கீபோர்டின் Ctrl கீயை அழுத்தி கொண்டு அந்த புகைப்படம் மீது கிளிக் செய்யுங்கள். அந்த புகைப்படம் தனி டேபில் பழைய Classic Photo Viewer-ல் ஓபன் ஆகும்.

No comments:

Post a Comment