February 4, 2012

மென்பொருள் செய்தி Dropbox-ன் புதிய பதிப்பை தரவிறக்கம் செய்வதற்கு



ஒன்றுக்கு மேற்பட்ட கணணிகளில் கோப்புக்களை கையாள்பவர்கள் Dropbox என்ற இணைய சேவையை பயன்படுத்தியிருப்பர்.
இத்தளத்தின் மூலம் கோப்புக்களை சேமிப்பதுடன் அவற்றை தேவையான போது எடிட் செய்து மற்றுமொரு கணணியில் பெற்றுக் கொள்ளலாம்.
இதுவரை இருந்த Dropbox இல் அதிகளவு சேமிப்பகம் கிடையாது. ஆனால் இப்போது வீடியோ மற்றும் புகைப்படங்களை சேமிப்பதற்காக பரிசோதனை முயற்சியில் இறங்கியுள்ளது Dropbox.
பரிசோதனைக் காலம் என்பதால் நீங்கள் சேமிக்கும் ஒவ்வொரு 500 MB புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு மேலதிகமாக மற்றுமொரு 500 ஐ இலவசமாக வழங்கி வருகின்றது. 4.5 GB வரை இவ்வாறு இலவச சேமிப்பகத்தை பெற்றுக் கொள்ளலாம்.
கிழூள்ள இணைப்பில் கிடைக்கும் மென்பொருளை நிறுவியதும் SD Cardஐ கணணியில் பொருத்தியதும் Dropboxல் பதிவேற்றம் செய்வதற்கென புதிய மெனு தோன்றும். இதன் மூலம் கோப்புக்களை சேமிக்க தொடங்கலாம்.

No comments:

Post a Comment