February 13, 2012

அறிமுகமாகும் இன்டெக்ஸின் முப்பரிமாண டுவல் சிம் போன்கள்

இந்தியாவின் செல்போன் உற்பத்திக்கு பெயர் போன நிறுவனங்களில் ஒன்றான Intex நிறுவனமானது முப்பரிமாண தொடுதிரை வசதிகொண்டதும் இரண்டு சிம்களை பயன்படுத்தக்கூடியதுமான செல்போனை அறிமுகம் செய்யவுள்ளது.
இவை மிகவும் இலகுவாக கையாளக்கூடிய நேர்த்தியான வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் கூகுள், யாகூ, பேஸ்புக் போன்ற சமூகத்தளங்களை பயன்படுத்தக்கூடிய வசதி காணப்படுவதுடன் கிரேசி பேர்ட்ஸ், புருட் நின்ஜா போன்ற பிரபல்யமான கேம்களை உள்ளடக்கியதாகவும் காணப்படுகின்றது.
இவை தவிர 4GB நினைவகம் காணப்படுவதோடு அதில் பத்து வரையான வீடியோக்கள் இலவசமாக நிறுவப்பட்டிருக்கும். இப்போனில் காணப்படும் கமெரா மூலம் செக்கனுக்கு 30 பிரேம்கள் என்ற வேகத்தில் வீடியோ பதிவு மேற்கொள்ள முடியும்.
அத்துடன் மொபைல் ட்ராக்கர் வசதியும், தானாகவே அழைப்புக்களை பதிவு செய்யும் வசதியும் காணப்படுகின்றது. மேலதிகமாக முப்பரிமாண கண்ணாடிகள் இரண்டும் இப்போனுடன் இலவசமாக வழங்கப்படும்.

No comments:

Post a Comment