February 13, 2012

Sidebar உடன் கூடிய பேஸ்புக்கி​ன் புதிய போட்டோ வியூவர்

புதுமையில் புரட்சிசெய்யும் சமூக வலைத்தளமான பேஸ்புக் Sidebar உடன் கூடிய புதிய போட்டோ வியூவரை அறிமுகப்படுத்தியுள்ளது.
இறுதியாக கடந்த வருடம் இந்த போட்டோ வியூவரை (photo viewer) கிளாசிக்கல் வியூவிலிருந்து லைற்பொக்ஸ் வியூவிற்கு மெருகூட்டியிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
புதிய வியூவரானது பயனர் (user) சுலபமாக கையாளக்கூடிய வகையில் அமைக்கப்பட்டிருப்பதுடன் படங்களை சுற்றியுள்ள மேலதிக இடைவெளிகள் குறைக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன் படங்களின் கீழ்பகுதியிலேயே அமைந்திருந்த கருத்து (comment) தெரிவிக்கும் பகுதி தற்போது படத்தின் வலது பக்கத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இவ்வசதியானது கூகுள் பிளசின் போட்டோ வியூவரை போன்று அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
எனினும் இவ்வசதி உங்களுக்கு பிடித்திராவிட்டால் பழைய போட்டோ வியூவருக்கு மாற முடியும்.

No comments:

Post a Comment