February 17, 2012

விண்டோசில் User Accounts படத்தினை மாற்றம் செய்வதற்கு

கணணியில் விண்டோஸ் இயக்கம் தொடங்கியவுடன், அதில் பயனாளரின் கணக்கு காட்டப்பட்டு அவர்களுக்கான படங்களும் தோன்றும். சிலர் இதில் தங்களின் புகைப்படத்தை இணைத்திருப்பார்கள்.
சிலர் எதுவும் இல்லாமல் வைத்திருப்பார்கள். ஒரு சிலர் தங்களுக்குப் பிடித்த வேறு படங்களை அமைத்திருப்பார்கள்.
விண்டோஸ் 7 இயங்குதளத்தில் User Accounts பிரிவில் சற்று நேரம் இயங்கினால், இதில் என்ன என்ன மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்று அறியலாம்.
அதில் ஒன்று கணணி பயன்படுத்துபவர்களுக்கான கணக்கில் காட்டப்படும் படங்களை மாற்றுவது. இதனை எப்படி மேற்கொள்வது என்று பார்க்கலாம்.
Start மெனு சென்று, Search கிளிக் செய்து அதில் User Accounts என டைப் செய்து என்டர் தட்டவும். இந்த தேடலுக்கான முடிவுகள் கிடைக்கும் பட்டியலில் Manage another Account என ஒரு லிங்க் கிடைக்கும். இதனைத் தெரிவு செய்தால் புதிய டயலாக் திரை காட்டப்படும்.
இதில் எந்த User Account படத்தினை மாற்ற வேண்டுமோ, அந்த Accounts-ல் டபுள் கிளிக் செய்திடவும்.
அடுத்து அக்கவுண்ட் எடிட் செய்வதற்கான வழி காட்டப்படும். இதில் Change the picture என்பதில் கிளிக் செய்திடவும். இனி இன்னொரு புதிய டயலாக் திரை காட்டப்படும்.
இதில் விண்டோஸ் 7 சிஸ்டத்துடன் வரும் மாறா நிலையில் உள்ள படங்கள் காட்டப்படும். இதிலிருந்து ஒரு படத்தினைத் தெரிவு செய்யலாம் அல்லது பிரவுஸ் செய்து நீங்கள் விரும்பும் படத்தினை அது வைக்கப்பட்டுள்ள கோப்பறையிலிருந்து தெரிவு செய்யலாம்.
தேர்ந்தெடுத்த பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி மீண்டும் விண்டோஸ் சிஸ்டத்தை இயக்கினால் மாற்றப்பட்ட படம் அதற்கான User Account-வுடன் காட்டப்படும்.

No comments:

Post a Comment