
நீங்கள் சுற்றுலா செல்லும் போது எடுத்த புகைப்படங்கள், வாழ்த்து அட்டைகள், அழகான இயற்கை காட்சிகள் என ஒவ்வொருவரும் விதவிதமான புகைப்படங்களை உங்கள் நண்பர்களுடன் பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்கிறீர்கள்.
இவைகள் அனைத்தையும் ஒன்றாக இணைத்து அட்டகாசமான பேக்ரவுண்ட் மியுசிக்குடன் கூடிய வீடியோவாக உருவாக்கலாம்.
இதற்கு முதலில் http://www.timelinemoviemaker.com/ தளத்திற்கு செல்லவும். அதன் பின் தோன்றும் விண்டோவில் Make your Movie என்ற பட்டனை அழுத்தவும்.
இந்த பட்டனை அழுத்தியவுடன் பேஸ்புக் permission கேட்கும் Allow கொடுக்கவும்.
பிறகு உங்களுடைய Timeline movie தயாராகும். உங்களுடைய கணக்கில் உள்ள புகைப்படங்களை ஒட்டுமொத்தமாக சேர்த்து வீடியோ தயாரிக்கும்.
உங்கள் கணக்கில் குறிப்பிட்ட அளவு புகைப்படங்கள் இல்லை என்றால் புகைப்படத்தை சேருங்கள் என்ற அறிவிப்பை வெளியிடும்.
முடிவில் உங்களுடைய வீடியோ தயாராகிவிடும். இந்த வீடியோவில் உள்ள பின்னணி இசையை உங்கள் விருப்பத்திற்கு மாற்றி கொள்ளலாம்.
இப்பொழுது உங்களுக்கு பிடித்த மாதிரி வீடியோவாக உருவாக்கியதும் Share என்ற பட்டனை அழுத்தி அந்த வீடியோவை உங்கள் கணக்கில் பகிருங்கள்.
No comments:
Post a Comment