February 11, 2012

ஐபாட்களிலும் ஸ்கை ட்ரைவ்களை பயன்படுத்த​லாம்

வளர்ந்துவரும் தொழில்நுட்பத்தில் க்ளவுட் கொம்பியூட்டிங், ஸ்கை ட்ரைவ் என்பன முக்கிய இடத்தை பிடித்துள்ளன. அதாவது நமக்கு தேவையான தரவுகளை நமது கணணியிலல்லாது பிறிதொரு சேர்வரில் சேமித்து வைத்தலை ஸ்கை ட்ரைவ்வில் சேமித்தல் எனப்படும்.
இனிவருங்காலங்களில் 16GB அல்லது 64GB உடைய உங்கள் ஐபாட்களை குறித்த ஸ்ரோறேஜ் அளவுடன் மட்டுப்படுத்தாது இந்த ஸ்கை ட்ரைவ் வசதியை பயன்படுத்தி மேலும் 25GB இனால் அதிகரிக்க முடியும்.
இது தற்பொழுது மைக்ரோசொப்ட் நிறுவனத்தினால் இலவசமாக வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. அதாவது உங்களுக்கு என்று ஒரு பயனர் பெயர், கடவுச்சொல் என்பற்றை உருவாக்கு உங்களுடைய ஐபாட் மூலம் உள்நுளைவதனூடாக உங்களுக்குரிய மேலதிகமான 25GB ஸ்ரோறேஜ் ஐ பெற்றுக்கொள்ள முடியும்.
இவ்வசதி மூலம் உங்கள் ஐபாட்டிலிருந்து படங்கள், வீடியோக்களை ஸ்கை ட்ரைவில் பதிவேற்றம் செய்ய முடிவதுடன், வேண்டிய நேரங்களில் தேவையான இடங்களிலிருந்து அவற்றை பார்த்து மகிழவோ அல்லது தரவிறக்கிக் கொள்ளவோ முடியும். இதற்காக உங்கள் ஐபாட்டில் Wi-Fi அல்லது 3G வசதி இருப்பது அவசியமாகும்.

No comments:

Post a Comment