December 4, 2011

கூகுள் பிளஸில் இருந்து டிவிட் செய்வதற்கு

 ஒவ்வொரு முறையும் நாம் கூகுள் பிளஸ் மற்றும் டிவிட்டரில் தனித்தனியாக தான் செய்திகளை பதிவு செய்கிறோம்.
ஆனால் இனி கூகுள் பிளஸ் பயனாளர்கள் கூகுள் பிளஸ்ல் இருந்தே எளிதாக டிவிட் செய்யலாம். நமக்கு உதவுவதற்காக ஒரு நீட்சி உள்ளது.
நண்பர்கள் வட்டத்தை சேர்ப்பதிலும் மதிப்பு கூட்டு சேவைகள் கொடுப்பதிலும் கூகுள் பிளஸ் தற்போது பல புதுமைகளை செய்து வருகிறது. அந்த வகையில் இனி கூகுள் பிளஸ்-ல் இருந்தே எளிதாக டிவிட் செய்ய ஒரு நீட்சி வந்துள்ளது.
இத்தளத்திற்கு சென்று Get Google + Tweet என்ற பொத்தானை சொடுக்கி நம் உலாவியில் எளிதாக நிறுவலாம். இனி நம் உலாவியில் கூகுள் பிளஸ் திறந்தால் முகப்பில் டிவிட்டர் ஐகான் இருக்கும்.
இதை சொடுக்கி நாம் எளிதாக டிவிட் செய்யலாம், ஒரே நேரத்தில் டிவிட் செய்யப்படும் நம் செய்திகள் டிவிட்டர் மற்ற்றும் கூகுள் பிளஸ்-லும் tweet செய்யப்பட்டிருக்கும்.
இந்த நீட்சியை நிறுவதன் மூலம் கூகுள் பிளஸ் பயனாளர்கள் இனி எளிதாக டிவிட் செய்யலாம், இண்டெர்நெட் எக்ஸ்புளரோரர், மொசில்லா பயர்பொக்ஸ் மற்றும் கூகுள் குரோம் உலாவிகளுக்கும் துணைபுரிகிறது.
இணையதள மு
                                          இணையதள முகவரி

No comments:

Post a Comment