இப்போது இதற்குப் போட்டியாக கூகுள் நிறுவனத்தின் மியூசிக் இணையமும் திறக்கப்பட்டுள்ளது. இந்த இணையம் கூகுள் மியூசிக் என அழைக்கப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனத்தைப் பொறுத்தவரை அதன் மியூசிக் கோப்புகளுக்கென லட்சக்கணக்கில் அதனையே சார்ந்திருக்கும் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர்.
ஆனால் ஆப்பிள் நிறுவனம் எனக்கு வேண்டாம் என்று எண்ணுபவர்களுக்கு இப்போது கூகுள் மியூசிக் ஸ்டோர்ஸ் ஒரு இடத்தை அளிக்கிறது.
முதலில் தன்னுடைய கூகுள் ப்ளஸ் தளத்துடன், கூகுள் மியூசிக் தளத்தினையும் இணைக்க கூகுள் திட்டமிட்டிருந்தது. ஆனால் இப்போது தனியே இதனை வடிவமைத்துள்ளது.
கூகுள் சர்ச், கூகுள் ப்ளஸ், கூகுள் மேப்ஸ் போன்ற தேடுதல் தளங்களுடன் இந்த கூகுள் மியூசிக் ஸ்டோர்ஸ் தளமும் இணைக்கப்படும். தேடல்களில் பாடல்கள் சார்ந்த தகவல்கள் தேடப்பட்டால் மியூசிக் கோப்புகள் குறித்த தகவல்களும் காட்டப்படும்.
எடுத்துக்காட்டாக ஒரு குறிப்பிட்ட இசைக்குழு குறித்த அல்லது பாடல்கள் குறித்த தகவல்களைத் தேடினால், கூகுள் மியூசிக் ஸ்டோர்ஸ் தளத்தில் அவை பதியப்பட்டிருக்கும்
பாடல்கள் கிடைக்கும் பட்சத்தில் அந்த தளத்தில் இருந்து அந்த பாடல் தரவிறக்கம் செய்யப்படும் அளவிற்கு இணைப்பும் தரப்படும்.
இதனால் கூகுளின் மற்ற சேவைகளுடன் மியூசிக் ஸ்டோர்ஸ் சேவையும் இணைந்தே கிடைக்கும். இதன் மூலம் ஆப்பிள் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களைத் தன் தளத்திற்கு இழுத்துவிடலாம் என்று கூகுள் எண்ணுகிறது.
No comments:
Post a Comment