December 4, 2011

ரத்த சோகையை வெளிக்காட்டும் நகங்கள்

 சிலநேரங்களில் சிலரது கைவிரல் நகங்கள் வழக்கத்திற்கு மாறாக வெளுத்துப்போய் காணப்படும்.
அந்த மாற்றம் தெரிந்தால் உடனே வைத்தியரை அணுகுவது அவசியம். ரத்த சோகை இருக்கிறது என்பதற்கான அறிகுறிதான், நகத்தின் இந்த திடீர் மாற்றம்.
ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள் அளவில் குறையும் போது சின்னச் சின்ன வேலையைச் செய்வதற்கும் உடல் பலமின்றிப் போகும்.
மேலும் ரத்தத்தின் சிவப்பணுக்கள் குறைவதால் இயல்பாக நகம் இருக்க வேண்டிய நிறம் மறைந்து வெளுத்து விடும்.
இரும்புச்சத்து ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும் என்பதால், அந்த சத்து அதிகம் உள்ள ஈரல், கீரைவகைகள் மற்றும் இறைச்சியை இந்த பாதிப்பு உள்ளவர்கள் உணவுடன் சேர்த்துக் கொள்வது அவசியம் அல்லது தகுந்த வைத்தியரின் ஆலோசனையின் பேரில் குறிப்பிட்ட நாட்களுக்கு இரும்புச்சத்து மாத்திரைகளோடு, வைட்டமின் பி-12 மாத்திரைகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment