
ஒரு உலாவியின்(Browser) மூலம் பல யாகூ பக்கங்களை ஓப்பின் செய்ய முடியுமாயினும் ஒரே சந்தர்ப்பத்தில் பல கணக்குகளை பயன்படுத்தி உள்நுழைய முடியாது.
அதையும் மீறி பல கணக்குகளை பயன்படுத்தி ஒரே சந்தர்ப்பத்தில் உள்நுழைய வேண்டுமாயின் ஒன்றிற்கு மேற்பட்ட உலாவிகளை பயன்படுத்த வேண்டும் அல்லது விசேட மென்பொருட்களை பயன்படுத்த வேண்டும்.
எனினும் அவ்வாறு வேறு மென்பொருட்களை பயன்படுத்தாமலும் பல உள்நுளைவுகளை மேற்கொள்ள முடியும். அதற்கு கீழ்வரும் படிமுறைகளை பின்பற்றுக.
1. Start என்பதற்கு சென்று Run விண்டோவை ஐ ஓப்பின் செய்து அதில் regedit என்பதை தட்டச்சு செய்து Enterஐ அழுத்தவும்.
2. அதன்பின் தோன்றும் விண்டோவில் HKEY_CURRENT_USER -->Software --> yahoo --> pager --> Test என்பதை தெரிவு செய்யவும்.
3. அந்த விண்டோவின் வலது பக்கத்தில் double click செய்து new Dword valueஐ உருவாக்கி பின் அதனை Plurel என Rename செய்யவும்.
4. அதன் பின் அதன் மேல் double click செய்து value ஐ 1 என மாற்றவும்.
No comments:
Post a Comment