April 5, 2012

விண்டோஸ் 8ல் படங்களை பயன்படுத்தி கடவுச்சொல் அமைப்பதற்கு

விண்டோஸ் 7 இருந்து முற்றிலும் மாறுபட்ட மெட்ரோ (Metro) பயனர் இடைமுகத்தை கொண்டு வெளியிடப்பட்டுள்ள இயங்குதளமான விண்டோஸ் 8 ஆனது பல சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.
அத்துடன் படங்களை பயன்படுத்தி கடவுச்சொல் அமைக்கும் விசேட சிறப்பம்சத்தையும் கொண்டுள்ளது.
செயற்படுத்துவதற்கு பின்வரும் முறைகளை கையாள்க,
1. Charms bar விண்டோவை ஓப்பின் செய்து settings என்பதை தெரிவு செய்யவும்.
2. தோன்றும் விண்டோவில் காணப்படும் Users தெரிவில் select Create Picture Password என்பதை அழுத்தவும்.
3. தற்போது கடவுச்சொல்லாக பயன்படுத்தவேண்டிய படத்தை தெரிவுசெய்து Use This Picture என்பதை அழுத்தவும்.
4. அதன் பின் கடவுச்சொல்லின் வலிமையை அதிகரிக்கும் முகமாக சிறிய வட்டம், பெரிய வட்டம், நேர்கோடு என்பவற்றை பயன்படுத்துவதற்கான தெரிவை மேற்கொள்ள வேண்டும், தற்போது கடவுச்சொல் வெற்றிகரமாக உருவாக்கப்பட்டிருக்கும்.
இச்செயற்பாட்டின்போது தெரிவு செய்த உருவின் அளவுகள் நினைவில் வைத்திருத்தல் அவசியமாகும்.

No comments:

Post a Comment