
இக்கோப்பு வடிவத்தில் எளிதில் மாற்றங்களை மற்றவர்கள் ஏற்படுத்த முடியாது என்பதே பலரும் இதை பயன்படுத்துவதற்கு காரணமாகும்.
ஏனைய கோப்புக்களை PDF கோப்புக்களாக மாற்றுவதற்கு பல்வேறு மென்பொருட்கள் காணப்பட்ட போதிலும் இலவசமாகவும் எளிதாகவும் PDF கோப்புக்களை உருவாக்கும் வசதியை MS-Word Office தருகின்றது.
கீழ்வரும் படிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் MS-Word Officeன் உதவியுடன் PDF கோப்புக்களை உருவாக்க முடியும்.
1. தரப்பட்டுள்ள இணைப்பிற்கு சென்று Save As PDF and XPS(http://www.microsoft.com/download/en/confirmation.aspx?id=7) வசதியை ஏற்படுத்துவதற்கான மென்பொருளை தரவிறக்கம் செய்து நிறுவிக் கொள்ளவும்.
2. மென்பொருளை நிறுவிய பின் MS-Word Officeஐ ஓப்பன் செய்து Save as என்ற தெரிவினுள் செல்லும் போது கீழுள்ள படத்தில் காட்டியவாறு PDF and XPS எனும் வசதி காணப்படும். இவ்வசதியை பயன்படுத்துவதன் மூலம் PDF கோப்புக்களை உருவாக்க முடியும்.

No comments:
Post a Comment