April 17, 2012

இணையத்தில் எவ்வளவு நேரம் செலவிட்டீர்கள் என்பதை அறிந்து கொள்வதற்கு

இன்றைய காலகட்டத்தில் இணையத்தில் காலை முதல் மாலை வரை நேரத்தை செலவழிப்பவர்களே அதிகம்.
ஒவ்வொருவரும் தங்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு குறிப்பிட்ட இணையத்தளங்களில் தங்கள் நேரத்தை செலவு செய்கின்றனர்.
இவ்வாறு ஒரு நாளைக்கு இணையத்தில் எவ்வளவு நேரத்தை எந்தெந்த தளங்களில் உபயோகப்படுத்துகிறீர்கள் என்பதை புள்ளி விவரங்களோடு உங்களுக்கு தெரிவிக்க ஒரு பயனுள்ள குரோம் நீட்சி உள்ளது.
இதற்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து குரோமில் நிறுவிக் கொள்ளுங்கள். சிறிது நேரம் கழித்து அந்த நீட்சியின் மீது க்ளிக் செய்தால் நீங்கள் எந்தெந்த தளத்தில் எவ்வளவு நேரத்தை செலவழித்தீர்கள் என்ற முழு பட்டியலும் உங்களுக்கு தளத்தின் முகவரியோடு சேர்ந்து வரும்.
Today என்பதில் இன்றைய அறிக்கையும் Total என்பதில் மொத்த செலவான நேரங்களையும் புள்ளி விவரங்களோடு தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment